சனி, 15 பிப்ரவரி, 2014

தலித் அல்லாத சமூகங்களின் பேரவைக் கூட்டத்தில் ந.இறைவன் பேச்சு

தலித் அல்லாத சமூகங்களின் பேரவைக் கூட்டம் சேலம் வாசவி அரங்கில் 16.10.2013 அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ந.இறைவன் பேசியது.

இந்த கூட்டத்தின் தலைவர் நகைமுகன் அவர்களே, ஒருங்கிணைப்பாளர் பொங்கலூர் மணிகண்டன் அவர்களே, பெரியவர் ஆடிட்டர் பாலசுப்பிரமணியம் அவர்களே பல்வேறு சாதி சங்கத்தலைவர்களே நிர்வாகிகளே அனைவருக்கும் வணக்கம் .

நாற்பதுக்கும் மேற்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் இங்கே கூடி இருக்கிறோம். இது சாதிவெறியால் கூடிய கூட்டமல்ல. திருமாவளவன் கும்பலின் எல்லை மீறிய அராஜகங்களையும் தீண்டாமை வன்கொடுமைச் சட்ட பொய் வழக்குகளையும் சகிக்க முடியாமல் கூடியக் கூட்டம் இது.

இந்தக் கும்பலின் அராஜகங்களுக்கும் இந்தச் சட்டத்தின் கொடுமைக்கும் பலியாகாத சமுகம் எதுவும் இல்லை. அனைத்து சமூகங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நம் பெண் பிள்ளைகளைக் கடத்தி சீரழித்துப் பின்பு கட்ட பஞ்சாயத்து மூலம் லட்சங்களையும் கோடிகளையும் பேரம் பேசி கொள்ளையடித்து கொழுப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இந்தக் கும்பலால் பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து நடக்கின்றன.

வெளியில் தெரிபவை சில. தெரியாதவை பல. தீண்டாமை வன்கொடுமைச் சட்ட பொய் வழக்குகளால் ஒவ்வொரு கிராமமும் கொதித்துக் கிடக்கின்றன. இப்படி நம் மானம் மரியாதைகளை அழித்துக் கொண்டிருக்கும் இந்தக் கும்பலிடமிருந்து தற்காத்துக் கொள்ள அமைக்கப்பட்டது தான் தலித் அல்லாத சமூகங்களின் பேரவை.இத்தனை சமூகத் தலைவர்கள் இங்கே கூடியிருப்பது. அனைத்து சமூகங்களும் இவர்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாராமாகும்

வெவ்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருந்த வெவ்வேறு சமுகங்களைச் சேர்ந்த நானும் நகைமுகனும் மணிகண்டனும் ஒருங்கி ணைந்தது எதனால்?இந்த சமுக விரோதிகளின் எல்லை மிறிய அராஜகங்களால் தானே?

தருமபுரி நாகராஜ் மரணத்தால் பாதிப்படைந்த அக்குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்கு எங்களுக்கு முன்னதாகவே சென்றவர் நகைமுகன். அந்த வகையில் அவர் மீது எங்களுக்கு மரியாதை ஏற்பட்டது. அதனால் நாகராஜ் குடும்பத்திற்கு எங்கள் வேலி அறக்கட்டளை மூலம் நிதி அளிப்பதென நாங்கள் முடிவெடுத்தபோது நகைமுகனையும் கலந்து கொள்ளுமாறு அழைத்தோம். இந்த அராஜகக் கும்பலை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் பொங்கலூர் மணிகண்டனையும் அழையுங்கள் என்றார் நகைமுகன்.

அவரை அழைத்தபோது, எங்கள் சமூகத்திற்கும் மணிகண்டன் சமூகத்திற்கும் இடையிலான ஒரு பிரச்சினை குறித்து அச்சமில்லை இதழில் வெளியான கடுமையான எங்கள் விமர்சனக் கட்டுரையை அனுப்பி, எங்கள் சமுக உரிமைக்காகப் போராடும்போது நமக்கிடையிலான விமர்சங்கள் என்பது வேறு,


நம் இரு சமூகங்களின் மானம் மரியாதையைக் கேள்விக்குள்ளாக்கும் நம் பொது எதிரியை எதிர்க்க நாம் இணைந்து செயல்படுவது வேறு என்ற புரிதலோடு எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு வரமுடியுமானால் வாருங்கள் என்று தான் கடிதம் எழுதினேன்.

அந்த புரிதலோடுதான் தலித் அல்லாத சமூகங்களின் பேரவை அமைப்பின் தலைவராக நீங்கள் இருங்கள் என அவர் என்னைக் கேட்டு கொண்டதும் அதனை நான் ஏற்றுக்கொண்டதும் .

ஆனால் இப்போது அரசியலில் சேர்ந்து செயல்படுவோம் என்றும் மோடியை ஆதரிப்பது குறித்து முடிவெடுப்போம் என்றும் கூறுகிறார் மணிகண்டன்.
அரசியலில் ஒவ்வொரு சமூகத்திற்கும் வெவ்வேறு கோரிக்கைகள் இருக்கின்றன. ஒரு சமுகத்தின் கோரிக்கை இன்னொரு சமுகத்திற்கு எதிரானதாகவும் இருக்கும். அதனால் அந்த சமுகத்தால் ஏற்க முடியாததாகவும் இருக்கும்.

உதாராணமாக கொங்குவேளாளர் சமுகத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் வன்னியர் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் காங்கிரசு, திராவிடக் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவற்றில் வேட்பாளார்களாக நிறுத்தப்பட்டு எம்.எல்.ஏ., எம்பிக்கள் ஆக்கப் பட்டிருக்கிறார்கள்.

இதே போன்று முக்குலத்தோர், நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் எங்கள் பகுதிகளில் நிறுத்தி எம்எல்ஏ, எம்பிக்களாக்கி இருக்கின்றன அரசியல் கட்சிகள். ஆனால் ஒரே ஒரு வன்னியரைக் கூட எந்த அரசியல் கட்சியும் கொங்கு வேளாளர் பகுதியான ஈரோட்டிலோ, நாடார் பகுதியான கன்னியாகுமரியிலோ முக்குலத்தோர் பகுதிகளான ராமநாதபுரத்திலோ நிறுத்தி எம்எல்ஏ, எம்பி ஆக்கிய தில்லை.

இந்த அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் போராடுவதும் எங்கள் உரிமை. இந்த நியாயத்தை கொங்கு வேளாளர் சமுகம், முக்குலத்தோர் சமூகமும், நாடார் சமூகமும் ஏற்குமா?

இந்த நிலையில் அரசியலில் நாம் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட முடியும்?


தமிழக அமைச்சரவையில் சேலம் தருமபுரி மாவட்டங்களுக்கு கொங்கு வேளாளர்களை அமைச்சர்களாக்கி இருக்கிறார் ஜெயலலிதா? இந்த அநீதிகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட நாங்கள் குரல் கொடுப்பது தவிர்க்க முடியாததாகும்.


பலன் அனுபவித்துக் கொண்டிருக்கும் கொங்கு வேளாளர் சமுகம் எங்கள் உரிமைக்குரலின் நியாயத்தை ஏற்றுக்கொள்ளுமா?

தற்போதைய சட்டமன்றத்திலும் ஆளும் கட்சியான அதிமுகவிலும் மற்ற சாதிகளை விட அதிகமான எம்எல்ஏக்களை பெற்றிருப்பது வன்னியர் சமுகம் தான். இந்த அமைச்சரவையில் அதிகமான அமைச்சர்களை பெற்றிருப்பது கொங்கு வேளாளர் சமுகம். அதற்கு அடுத்த நிலையில் தான் முக்குலத்தோர் சமூகம். அதற்கும் கீழே தான் வன்னியர் சமூகம். இது அநீதி என குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் குரலில் உள்ள இந்த நியாயத்தை கொங்கு வேளாளர் சமூகமும் முக்குலத்தோர் சமூகமும் ஏற்குமா ?

எங்கள் தொகுதிகளில் கொங்கு வேளாளர் களுக்கும் முக்குலத்தோருக்கும் நாடாருக்கும் அரசியல் கட்சிகள் விருந்து வைத்தபிறகும்; யானைப் படுத்தாலும் குதிரை மட்டம் என்பார்களே அதுபோல 1952 முதல் நடந்த சட்டமன்ற தேர்தல்களின் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் வேறு எந்த சாதிகளைவிடவும் வன்னியர் சமுகம் தான் அதிகம் பெற்றது.

அப்படி இருந்தும் இதற்கான பிரதிநிதித்துவம் எங்களுக்கு யாரும் வழங்கியதில்லை. இது அநீதி இல்லையா? இது ஒடுக்குமுறை இல்லையா? இதை செய்தவர்கள் அயல் நாட்டவர்களா? தமிழ்நாட்டு சாதிகளைச் சேர்ந்த காமராசரும், அண்ணாதுரையும், கருணாநிதியும் எம்.ஜி.ராமச்சந்திரனும், ஜெயலலிதாவும் தானே.

இந்த வஞ்சகத்துக்கு எதிராக நாங்கள் போராடுவதில் உள்ள நியாயத்தை மேற்கண்ட முதல்வர்களின் சாதியைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
அடுத்ததாக மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சினை.

* 300, 400 அடிகள் உயர மேடாக இருக்கும் நிலப்பகுதிகளுக்கு ராட்சச நீரேற்று இயந்திரங்கள் மூலம் நீரேற்றி 13 லட்சம் ஏக்கர் மேட்டு நிலங்களுக்கு பாசன வசதி செய்து தந்திருக்கும் மோடியின் சாதனை மகத்தானது.

* மின்சாரத்தைக் கனவில் மட்டுமே கண்டு கொண்டிருந்த குஜராத் மாநில விவசாயிகளுக்கும்; லட்சக்கணக்கான கிராமங்களுக்கும் மின் உற்பத்தி திட்டங்களை நிறைவேற்றி தடையில்லா மின்சாரத்தை வழங்குவதோடு உபரி மின்சாரத்தை தமிழ் நாட்டுக்கும் தர முன் வந்த மோடியின் இந்த சாதனையும் மகத்தானது தான்.

* டிவி தருகிறேன் என்று சொல்லி ஒருவரும், ,கிரைண்டர் மிக்சி மின்விசிறி தருகிறேன் என்று சொல்லி ஒருவரும் தமிழ்நாட்டில் முதல்வராகும் நிலையில், இலவசங்கள் எதையும் தரமாட்டேன். ஆனால் தடையில்லா மின்சாரம் தருவேன். வேலை வாய்பைப் பெருக்குவேன் என அறிவித்து மூன்று முறை மோதல்வரான மோடியின் தைரியமும் தன்னம்பிக்கையும் மகத்தானது தான்.

இவ்வளவு திறமை மிக்க மோடியின் நிர்வாகத் திறமை குஜராத் மாநில அளவில் முடங்கிவிடாமல் இந்தியா முழுமையும் பயனடையும் வகையில், மோடியை இந்தியப் பிரதமராக பார்க்கும் எண்ணமும் விருப்பமும் எனக்கும் உண்டுதான்.

அமெரிக்க தேர்தல் முறையைப் போல பிரதமரை நேரிடையாகத் தேர்ந்தெடுக்கும் முறை இங்கே இருக்குமானால் அவருக்குத்தான் என் ஓட்டு.
பிஜேபி வென்றால் தான் அவர் பிரதமர்.

தமிழக பிஜேபி தலைமைக்கு மோடி பிரதமர் ஆவதைவிட தங்கள் சாதியினரை எப்படியாவது எம் பியாக்கிவிட வேண்டும் என்ற கவலைதானே அதிகம்.

உதாரணமாக காஞ்சிபுரம் பிஜேபி மாவட்டத் தலைவராக ஒரு நாடாரை நியமிக்கிற அந்த கட்சித் தலைமையின் சாதிப்பாசம் நாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் தருமபுரியிலோ சேலத்திலோ மற்ற தொகுதிகளிலோ பிஜேபி சார்பில் வன்னியரல்லாத ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் மோடிக்காக எங்கள் உரிமைகளை விட்டுக்கொடுத்து அந்த பிஜேபி வேட்பாளரை எங்களால் எப்படி ஆதரிக்க முடியும்?

தங்களுக்கு உரியதை விட கூடுதல் பலன்களை பெறமுடியும் என்ற நம்பிக்கை உடைய சமூகங்களும் கூடுதல் பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிற சமூகங்களும் வேண்டுமானால் மோடியை ஆதரிக்கும் முடிவை எடுக்கலாம்.

தங்களுக்கு உரியதைத் தொடர்ந்து பறிகொடுத்துக் கொண்டிருக்கும் வன்னியர் சமுகத்தை சார்ந்த என்னால் ஜெயலலிதாவை ஆதரிப்போம் மோடியை ஆதரிப்போம் என்ற நிபந்தனை அற்ற அரசியல் முடிவுகளோடு ஒத்துப்போக முடியாது.

நம் மாணவிகளைக் கடத்தி சீரழித்து கட்டப்பஞ்சாயத்து மூலமும் தீண்டாமை வன்கொடுமை சட்ட பொய் வழக்குகள் மூலமூம் நம் மானம் மரியாதையைக் கேள்விக்குறியாக்கும் - நம் சமூகங்களின் பொது எதிரிகளுக்கு எதிரான போராட்டங்களுக்காகவே இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றினேன்.


தற்போது இந்த அமைப்பின் மூலம் எடுக்க நினைக்கும் அரசியல் முடிவுகளை என்னால் ஏற்க முடியாது என்பதைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.
நன்றி!

3 கருத்துகள்:

  1. சேலம் தருமபுரி மாவட்டங்களுக்கு கொங்கு வேளாளர்களை அமைச்சர்களாக்கி இருக்கிறார் ஜெயலலிதா? இந்த அநீதிகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட நாங்கள் குரல் கொடுப்பது தவிர்க்க முடியாததாகும்.///////

    கொங்குநாட்டுக்குள் பள்ளிக்கு என்ன வேலை வேண்டிக்கிடக்கு???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேலம் தருமபுரியில் உங்களுக்கு என்ன வேலை வேண்டிக்கிடக்கு?? சங்ககிரியை தவிர்த்து எந்த ஒரு தொகுதியிலாவது உங்கள் சாதியினர் ஜெயிக்க முடியுமா? உங்க வேலை எல்லாம் சேலம் தருமபுரியில பலிக்காது .

      நீக்கு