சனி, 15 பிப்ரவரி, 2014

வன்னியருக்கு எதிரான ஊடகங்களின் ஒடுக்குமுறை பெ.பழநிச்சாமி

தருமபுரி - மரக்காணம் நிகழ்வுகளுக்குப் பிறகு கிடடத்தட்ட ஒட்டு மொத்த இதழியல் உலகமும் -தொலைக்காட்சி ஊடகங்களும் முழு தவறும் அக்கிரமங்களும் செய்தவர்கள் வன்னியர்கள் - அதற்கு வழிகோலியவர் ராமதாஸ் என்பது போலவும்; 

வன்னியர்மேல் பழிபோட்டு வன்னியர்களை ஒடுக்கி விட முடியும் என்ற கோணத்தில் செயல்படுகின்றன.

அந்த வகையில் வெகுமக்களு அதிகம் தெரிந்திராத இலக்கிய நுண்ணரசியல் இதழ்கள் என்ற முகமூடியுடன் வெளிவரும் ஆழம், உயிர் எழுத்து, காலச்சுவடு ஆகிய மூன்று (ஜூன் 2013) இதழ்கள் வாயிலாக வன்னியர்கள் மீதுஏவி விடப்பட்ட முற்போக்கு நுண்ணரசியல் பயங்கர வாதத்தையும் அவர்களுடைய நயவஞ்சகத்தையும் தோலுரித்துக் காட்டியுள்ளோம்.

முதலில் ஆழம் இதழில் ராஜாராம் அவர்களின் நான்கு முக்கிய கருத்துக்களைப் பார்ப்போம்.

1.பல்லவர்களின் ஆட்சிக் காலத்துக்குப் பின் தான் (கி.பி.375 ‡ 900) வன்னியர் தனி இனமாக உருவானது - வன்னியர்கள் தங்களை அக்னி மூலம் என்றும், பல்லவர் வழித்தோன்றல் என்றும் நாடாண்ட இனம் என்றும் கூறிக் கொள்கிறார்கள்.

அய்யா ராஜாராம் அவர்களே உங்களுக்குத் தெரிந்தது என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள். உண்மையில் இராமாயணம் மகாபாரதம் ஆகிய புராணங்களை நடந்தவையாக நான் நம்புவதன் அடிப்படையில் இராமயன காலத்திற்கு முன்பே தமிழகம் சேரநாடு (கேரளா) சோழநாடு, பாண்டிய நாடு என மூன்றாக இருந்துள்ளதாக இராமயண மூலத்தில் இருப்பதாக திரு. அ.கோபிநாத ராவ் அவர்கள் 1906ஆம் ஆண்டு வெளியிட்ட சோழவமிச சரித்திர சுருக்கத்தில் கூறியுள்ளார்.

சேரர்கள் அக்னி குலம்; சோழர்கள் சூரிய குலம்; பாண்டியர்கள் சந்திர குலம்; எனவும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வன்னியர் குறித்த முனைவர் பட்ட ஆய்வேட்டில் 2011இல் தமிழ்செல்வி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். எனவே வன்னியகுலம் என்னும் அக்நிய, சூரிய, சந்திரகுல சத்திரியர்கள் யுகங்களைக் கடந்த மூத்த அரச குடியினர். 


எங்களுக்கு உங்களுடைய வயது சான்று தேவையில்லை. அக்நிய குலம் என்பதற்கு மகாபாரத நாயகியான யாகத்தீயில் தோன்றிய திரோபதி போல் காவிரிக்கு நடுவில் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் தலத்தில் சம்பு மகரிஷியின் யாகத்தீயில் அக்னிதேவன் அம்சமாக தோன்றியவர்கள் என்றும் வடக்கில் ரி´களான விசுவாமித்திரர் வசிஷ்டர் ஆகியோர் ராஜஸ்தானத்தின் அபு மலையில் செய்வித்த யாகத்தீயில் தோன்றியவர்கள் என்பதாகும்.

மேற்கண்ட காரணத்தாலேயே பாரதத்தில் எங்குமே இல்லாத திரெளபதி வழிபாடு வன்னியரின் வடதமிழ்நாட்டில் மட்டுமே இன்றளவும் உள்ளது. அக்நியகுலம் அல்லது வன்னியகுலம் என்பது தமிழகத்தின் 300 சாதிகளில் ஒன்றல்ல. பிரதான 7 குலங்களின் தலைமையான குலமாகும்.

சூரிய தர்மம்

பொதுவாக பாரதத்தில் வருண - குல - சாதிய படிநிலைகள் தோன்றி நிலைநிறுத்தப்பட்டிருப்பதற்கு ஆரியர்களின் வருகையும் அவர்களால் சொல்லி வைக்கப்பட்ட வேதக் கோட்பாடுகளே என கூறுவர். ஆனால் உண்மையில் காரணம் அது இல்லை.

அறிவியல் ரீதியாக நோக்கினால் - ஆரியர்கள் பாரதத்திற்கு வருவதற்கு முன்னரே இங்கு வர்ணாஸ்ரம தர்மம் இருந்திருக்கிறது. அதாவது சூரியன் மற்றும் சூரியக் குடும்பத்தில் உள்ள பிரதான கோள்களான சூரியன், சந்திரன் (பூமி) செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கோள்களின் குணம், நிறம், தன்மை ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என 7 கிழமைகளைத் தோற்றுவித்துள்ளனர்.

அந்த கோள்களையும் - கிழமைகளையும் அடிப்படையாகக் கொண்டே பிரதான 7 நிறங்களையும் குணங்களாகக் கொண்ட குலங்களாக பாரதத்தில் பிரித்துள்ளது. சாதிகள் வேண்டுமானால் ஆரியர் வருகைக்குப்பின் தொழில் அடிப்படையில் பிரிந்து அதை மீறாமல் கடைபிடிக்கப் பட்டிருக்கலாம். அதை எழுத்து வடிவத்தில் ஆவணப்படுத்தியது வேண்டுமானால் ஆரியருக்கோ அல்லது குறியீடாக பிராமணருக்கோ பங்கிருக்கலாம்.

ஆவணமாக்கிய பொழுது பிராமணர்கள் தங்கள் கடவுளின் தலைப்பகுதியில் இருந்து தோன்றியவர்கள். நாங்களே முதன்மையானவர்கள் என்ற தவறான உள்நோக்கமுடைய கருத்தை நிலைநாட்டி இருக்கலாம்.

சூரியக் குடும்பத்தை பொருத்தவரையில் 7 கோள்களும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருகிறது. இதனை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் சூரியனே தலைவர் - ஆட்சியாளர்.

பூமியில் உள்ள குலங்களிலும் சூரிய குலமே முதன்மையான குலமாகும். அந்தக் குலங்களில் இருந்தே கடவுளின் அவதார புரு­ர்களும் ராமர், கிருஷ்ணர் மற்றும் எட்டுதிசை காவலர்களின் அம்சங்களாக பேரரசர்களும் தோன்றுவார்கள்.

இறை தரிசனம் பெறுவது மற்றும் கடவுளின் உபதேசங்களை கீதா உபதேசம் பெற்று அர்ஜூனனைப் போல் மக்களுக்கு உணர வைப்பது தாங்கள் இறைவனிடம் இருந்து கற்றதை தொழில் முறையில் கோயில் பணியாளர்களான பிராமணர் களுக்கு கற்றுக் கொடுப்பது இவை எல்லாம் அரச தத்துவமாகும்.

நாளடைவில் இறை சம்பந்தப்பட்ட பணிகள் மறைக்கப்பட்டு ஆட்சி செய்வது மட்டுமே அரச ­த்ரிய உரிமை என சுருக்கப்பட்டு விட்டது.

சாதியம் குறித்த நூலில் (பக்கம் - 20) சு.பொ.அகத்தியலிங்கம் அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானில் நான்கு - ஐந்து அடுக்கு சமூக முறை அமலில் இருந்தது. முதல் அடுக்கில் அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்கள்; இரண்டாம் அடுக்கில் அறிவுத்துறையினர்; மூன்றாவது அடுக்கில் விவசாயிகள் எனக் கூறுகிறார்.

ஜப்பானில் மட்டும் அல்ல வருண-குல அமைப்பு தோன்றிய பூர்வ பகுதியான தமிழகத்திலும் ­த்ரிய அரசர்களைத் தலைமையாகக் கொண்ட சமூக அமைப்புதான் நிலவி வந்துள்ளது. அதற்கு சாட்சிகள் உலகத்தில் எங்குமே இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மட்டுமே அதிகபட்ச பெருங்கற்கோயில்கள் உள்ளன. 


இன்றைக்கு சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் கம்யூட்டர் துறை சார்ந்த பொறியாளர்கள் குவிந்ததைப் போல அரசர்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் கோயில்கள் கட்டப்பட்டு சிதம்பரம், கும்பகோணம், திருவரங்கம் ஆகிய ஊர்களுக்கு பிராமணர்கள் கோயில் பணியாளர்களாக அழைத்து வரப் பட்டனர்.

ஒரு வேளை பிராமணர்கள் கோயில் பணியாளர்களாக ஆரியர்கள் ஐரோப்பிய (ஜெர்மன் - ரஷ்ய) பகுதிகளில் இருந்து வந்தார்கள் எனறால் அங்கெல்லாம் கோயில்களும் இல்லை -வருண குல அமைப்பு முறையும் இல்லை. எனவே குல முறை இங்கேயே தோன்றியது தான்.

சூரியனும் சூரிய குடும்ப கோள்களும் உள்ளவரை இந்த குல அமைப்பு மாறாது. காலத்திற்கு தகுந்காற்போல் தொழில் முறை சாதிகள் மறையலாம் உருவாகலாம். தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கருப்பு ஆட்சியும் கேரளம் மேற்கு வங்கத்தில் சுமார் அதே கால அளவுக்கு சிவப்பு ஆட்சியும் உத்திரப்பிரதேசத்தில் மாயாவதியின் நீல ஆட்சியும் நடைபெற்றன. பெரிய சமூக சாதி ஒழிப்பு மாற்றம் ஏதும் நிழ்ந்துவிட வில்லையே

2. சோழர் கால வலங்கை இடங்கை காலம் தொட்டே வன்னியர்களும் - பறையகர்களும் எதிரெதிர் அணியில் இடம் பெற்றிருந்தனர்.

ராஜாராம் அவர்களே ராமதாஸ் அவர்களுக்கும் திருமாவளவன் அவர்களுக்கும் எப்படி கூட்டணி அமைக்க வேண்டும் என தனி கடிதமாக இருவருக்கும் தெரிவித்திருக்க வேண்டிய விசயம்.

சரி வன்னியர் வலங்கையில் இருந்தனரா இடங்கையில் இருந்தனரா - அதே போல பறையர் வலங்கையில் இருந்தனரா - இடங்கையில் இருந்தனரா என்பதை உங்கள் கண்டுபிடிப்பில் சொல்ல வில்லை. இப்பொழுது UPA - NDA அணியில் மாறி மாறி கட்சிகள் சேர்வதைப் போல சாதிகள் சோழர் காலத்தில் அணி மாறவில்லையா?

தமிழகத்தில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துகள் எனும் நூலில் அரசாங்க அதிகாரிகள் உதவியுடன் வன்னியர்களும் வேளாளர், பிராமணர் முதலிய நிலச் சொந்தக்காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய 96 சாதிகளுக்கு இழைத்த அநீதியை இன்றைய பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வெள்ளாற்றங் கரையில் உள்ள ஆடுதுறை கோயில் கல்வெட்டு கூறுவதாக பேராசிரியர் நா.வானமாமலை கூறுகிறார்.

இக்கல்வெட்டுச் செய்தியை கூர்ந்து நோக்கினால் அரசர் வன்னியர் என்பதும்; மற்றும் வன்னியர்கள் வலங்கை அணியினருக்குத் தலைவர் என்பதும் புலனாகிறது. இச்சாசனம் முதற் குலோத்துங்க சோழனுடையதாக இருக்கலாம்.

ஆனால் கி.பி. 1633இல் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சேலம் அழகாபுரம் மெய்ப்போகராயக் கவுண்டர் வன்னிய பன்னாட்டார் தலைமையில் இடங்கைப் பிரிவினர் என்பதும் அவர்களுடைய விருதுகளை வலங்கையர் பறித்துக் கொண்ட தகராறில் ராசநாராயண அய்யர் இடங்கையரான வன்னியர் பிறப்பு ‡ வன்னிய புராணம் ஆகியவற்றை வெங்கடபதி நாயக்கர் தளவாய் பெத்தன்ன நாயக்கர் ஆகியோரிடம் எடுத்துக் கூறுகிறார் ஆனால் வலங்கையர் ஏற்க மறுக்கின்றனர்.

இறுதியில் காஞ்சிபுரம் பொன்னம்மன் சன்னதியில் இரு அணியினரும் எழுதி அக்னியில் இடுகின்றனர். வலங்கையரது ஓலை வெந்து விடுகிறது.

இடங்கையருக்கே பஞ்சவர்ண பாவாடை உள்ளிட்ட விருதுகள் சொந்தமாகிறது. இதன்படிப் பார்த்தால் வன்னியர் பல நாட்டுப் பிரிவுகளுக்கு தலைவர் என்றும் இடங்கை பிரிவினருக்கும் தலைவர்கள் என்பதும் புலனாகிறது (நெய்வேலிச் செப்பேடு ‡ தமிழக செப்பேடுகள் தொகுதி 1 பக்கம் 113) 400 ஆண்டுகளில் வலங்கை தலைவர் இடங்கை தலைவரானதெப்படி?

3. தமிழகம் நீண்டகாலமாகவே தமிழர்களால் ஆட்சி செய்யப் படவில்லை.

தெரிந்தோ தெரியாமலோ ராஜாராம் அவர்கள் ஒரு உண்மையை ஒப்புக்கொண்டு விட்டார். இதன் மூலம் ராஜாராம் அவர்கள் தமிழின வெறியர் என்றோ இனவாதி என்றோ முற்போக்கு வாதிகளால் பட்டம் சூட்டப் பட்டிருக்கலாம். எப்படியாயினும் விஜயநகர ஆட்சி மதுரையில் நிலைத்த பிறகு தமிழராட்சி அமையவில்லை.

ஆங்கலேயர் ஆட்சிக் காலத்திலும் அதன்பிறகு ஆட்சி அமைத்தவர்களும் பெரும்பாலும் தெலுங்கர்களே. நடுவில் சுப்பராயன், அப்புறம் காமராஜ நாடார், பக்தவச்சலம் மட்டுமே தமிழர் அதன் பலன்தான் இன்று நாடார்கள் மற்றும் கொங்கு வேளாளர்களின் ஆதிக்கம் கல்வியிலும் வியாபாரத்திலும் கொடி கட்டிப் பறக்கிறது.
தமிழ்ச்சமூகம் முதல்வராக வேண்டும் என்றால் மக்கள் எண்ணிக்கையில் அதிகம் உள்ள வன்னியருக்குத்தான் பிரதான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்படி எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் நடைமுறையில் வன்னியருக்கு எதிரான நஞ்சைத்தான் நீங்கள் கக்குகிறீர்கள்.

சட்டநாதன் குழு அறிக்கைப்படி 48 லட்சம்; அம்பாசங்கர் அறிக்கைப்படி 65 லட்சம் என வன்னியர் மக்கள் தொகை கணக்கு காட்டப்பட்டிருந்தாலும்; அந்த தொகைக்கு ஏற்ற விகிதத்தில் நான்கில் ஒரு பகுதியைக் கூட கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வன்னியர்கள் பெறவில்லை என இரண்டு அறிக்கைகளிலும்ம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த சமூக அநீதியை எதிர்த்து முற்போக்கு முகாம்கள் என்ன செய்து கொண்டிருந்தன? மக்கள் தொகையில் அதிகம் உள்ளதாலேயே வன்னியர் ஆதிக்க சாதி ஆகி விட்டனரா? ஒருவேளை நீங்கள் ஆசைப்படும் தமிழராட்சி என்பது வன்னியர் அல்லாத தமிழராட்சியா?

திராவிட இயக்கங்களின் 46 ஆண்டுகால ஆட்சியில் அவர்கள் சாதித்தது உண்மையில் பிராமண ஆதிக்கத்தை ஒழிப்பதில் அல்ல. ஜெயலலிதாவை முதல்வராக்கியது திராவிட இயக்கம்தான். நடந்தது என்னவென்றால் தமிழக முதல் பெரும்பான்மை சாதியான வன்னியரை அரசியல் அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுத்ததுதான். எனவே தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சிக்கு வர ஆழம் சார்பாக ஒரு சிறப்பிதழாவது கொண்டு வாருங்கள்.

4. காமராஜரை விடவா இங்கு நல்லதொரு ஆட்சியை அமைத்து விட முடியும் என்கிறார் ராஜாராம்.

இந்திய சமூக அமைப்புகள் கல்வியை வெகுஜனப் படுத்த வேண்டிய தருணத்தில்அந்தக் காலகட்டத்தில் யார் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள். பின்தங்கிய வட இந்திய சமூகத் தளத்தில் இன்றைக்கு நிதீஷ்குமார் பிகாரிசம்; நரேந்திரமோடி குஜராத்திசம் சிவராஜ் சிங் சவுகான் மத்தியப் பிரதேசத்திலும் செய்து வருகின்றனர். எங்கள் கருத்துப் படியே எடுத்துக் கொண்டாலும் காமராஜர் ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் கல்விக்கான எந்த திட்டமும் தீட்டவில்லை.

அவருடைய நாடார் சமூக மக்கள் பெரும் பகுதியாக இருக்கும் விருதுநகர், திருநெல்வேலி, கன்யாகுமரி மாவட்டங்களுக்காகவே திட்டமிட்டுச் செயலாற்றினார். இன்றும் வட மாவட்டங்கள் அனைத்தும் குறிப்பாக திருவண்ணாமலை ‡ விழுப்புரம் கடலூர், அரியலூர், தருமபுரி, சேலம், வேலூர் அனைத்தும் எழுத்தறிவிலும் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்திலும் மொத்தமாக கடைசியில் இருப்பதை கவனிக்கவில்லையா ஆய்வாளரே; விருதுநகர் 25 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து முதலிடத்தில் தேர்ச்சி பெறுவதே தமிழகம் முழுவதும் முன்னேறி விட்டதாக முடிவு செய்து விட்டீர்களா?

அவர் செய்த இன்னும் இரண்டு துரோக சாதனைகளை தருகிறேன் பாருங்கள். அவருடைய சமூகம் பெரும்பாலும் வாழும் பகுதிகள் பனை மரம் அதிகம் உள்ள பொட்டல் பகுதிகள். அதைப்போல வறண்ட பகுதிகளாக மாற்ற செழிப்பான நீர் வளம் மிக்க வடதமிழக மாவட்டங்களையும் சுற்றுச் சூழலை ஒடுக்க மழைப்பொழிவு ஏற்படாமல் தடுக்க ஜூலிப்ளோரா எனும் வேலிக்காத்தான் முள் மரங்களை யஹலிகாப்டர் முலம் விறகு பஞ்சத்தை தீர்க்க விதைக்கிறேன் என விதைத்து இன்றைய வறட்சியை 50 ஆண்டுகளுக்கு முன்னரே தன்னுடைய ஞானக்கண்ணால் கண்ட வஞ்சக புண்ணியவான் தான் உங்களுடைய கதாநாயகர் -
அடுத்ததாக மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட 1956இல் கேரளாவில இருந்தால் கல்வியில் கன்னியாகுமரி கடைசி மாவட்டமாக இருக்கும் அதே தமிழகத்தில் சேர்த்தால் நாடார் பெரும்பான்மையாக உள்ள கன்னியாகுமரி கல்வியில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து விடும் சென்னையை தலைமை செயலகத்தை நிரந்தரமாக தங்கள் சமூகப் பிடிக்குள் வைத்து விடலாம் என திட்டம் தீட்டியவர் அதன் மூலம் தென் மாவட்டங்களில் இருந்து சென்னையில் குடியேறிய நாடார் சமூகத்தவரிடம் சுமார் 3 லட்சம் வன்னிய வீடுகள் பறிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வருகின்றன.

முக்குலத்தோர் பகுதியான மூணாறு ஏன் தமிழகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை? வன்னியர் பகுதியான கொள்ளேகால் பெங்களூர், சித்தூர் திருப்பதி காளஹஸ்தி எல்லாம் பறிபோனது காமராஜர் செய்த துரோகத்தால்தான்.

இதுதான் காமராசருடைய நல்லாட்சியா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக