சனி, 15 பிப்ரவரி, 2014

பாலபாரதியின் மனக்கசடுகளைத் துடைத்துப் போடும் குப்பைத் தொட்டியா குமுதம் ரிப்போர்ட்டர்?

ஜூனியர் விகடனில் தமிழருவி மணியன்

நக்கீரனில் மனுஷ்ய புத்திரன் சிந்தனையாளனில்

க.முகிலன்; தமிழேந்தி; இரா.திருநாவுக்கரசு இந்தியா டுடேயில் கவின்மலர் 


புதிய தலைமுறையில் மாலன் தமிழர் கண்ணோட்டத்தில் பெ.மணியரசன்

என இவர்கள் எல்லோரும் தலித் ஆதரவு என்ற போர்வையில்; வன்னியருக்கு எதிராகக் காரணமே இல்லாமல் விஷ­ம் கக்குபவர்கள்தான்.

தருமபுரி கலவரத்தை வைத்தும்; மரக்காணம் கலவரத்தை வைத்தும்; இளவரசன் மரணத்தை வைத்தும் இவர்கள் வன்னியருக்கு எதிராகக் கக்கிய விஷ­ம் அளவு கடந்ததுதான்.

காற்றில் பரவும் வி­ஷம் என்ற தலைப்பில் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் இளவரசன் மரணம் குறித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., பாலபாரதி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.

இந்த ஒரு கட்டுரை மூலம் வன்னியருக்கு எதிராகக் காழ்ப்புணர்ச்சியோடு வி­ஷஎம் கக்குவதில் என்னை யாரும் மிஞ்ச முடியாது என நிரூபித்து; மேற்கண்டவர்களை விட உச்சத்தைத் தொட்டிருக்கிறார்.

இதிலே வேடிக்கை என்ன என்றால் தருமபுரி கலவரப் பகுதியை இவர்களில் யாரும் எட்டியே பார்த்ததில்லை என்பதுதான் கொடுமை.




இளவரசன் மரணம் குறித்து எழுத வந்த பாலபாரதி தருமபுரி கலவரம் குறித்தும் எழுதி தனது வன்னியர் எதிர்ப்பு காழ்ப் புணர்வுக்கு முழு வடிவம் கொடுத்திருக்கிறார்.

வரிக்கு வரி; எழுத்துக்கு எழுத்து பாலபாரதியின் மனக்கசடுகள் வழிந்தோடுகிறது என்றாலும் - அத்தனைக்கும் மறுப்பு எழுத வேண்டுமானால் தனி புத்தகமே போட வேண்டும் என்பதால் - கீழ்க்கண்ட நான்கு குற்றச் சாட்டுகளுக்கு மட்டும் மறுப்பு எழுத வேண்டியது அவசியமெனக் கருதுகிறோம்.

1.திவ்யாவின் தந்தை நாகராஜன் மரணத்துக்கு அவர் கூறும் காரணம்.

2.தருமபுரி கலவரத்தின்போது 30 கோடிசொத்துக்களைக் கொள்ளையடித்தார்கள் என்பது குறித்து.

3.பெண்களைக் கடத்திப் பணம் பறிக்கிறார்கள் என்ற ராமதாசின் குற்றச் சாட்டுகளை இளவரசனின் மரணம் அப்பட்டமான பொய் என்றாகிவிட்டது என்பது குறித்து.

4.இளவரசனின் மரணம் தற்கொலையே அல்லவென பொதுமக்களும் இளவரசனின் வழக்கறிஞர்களும் கூறுகிறார்கள் என்பது குறித்து.

பாலபாரதியின் முதல் குற்றச்சாட்டு 

ஆதிக்க சக்திகள் திவ்யாவின் தந்தை நாகராஜை நீயயல்லாம் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் எங்களின் சாதி மானத்தைக் கப்பலேற்றி விட்டாயே என இழித்தும் பழித்தும் பேசியதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதிலே - பாலபாரதி ஆதிக்க சக்திகள் என்று குறிப்பிடுவது வன்னியர்களைத் தான் என்பது எங்களின் சாதி மானத்தைக் கப்பலேற்றி விட்டாயே என்று எழுதுவதன் மூலம் உறுதிப்படுத்துகிறார்.

வன்னியர்கள் திட்டியதால் நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார் என நேரிடையாகச் சொல்லி விட்டுப் போக வேண்டியது தானே?

இது உண்மையா?

கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்கச் சென்றபோது அங்கிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் நந்தனும் அவரது கூட்டாளிகளும் என் கணவரைக் கேவலமாகப் பேசியதும் - கிருஷ்ணாபுரம் காவல்நிலைய துணை ஆய்வாளர் பெருமாள் அங்கிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரோடு சேர்ந்து கொண்டு - எங்க ஆளுங்களோடு சேர்ந்தா உன் பொண்ணுக்கு புள்ள பொறக்காதா... போய்யா பெரிசா புகார் கொடுக்க வந்துட்ட... மானம் போகுதுன்னு நௌச்சா போய் செத்துத் தொலை என்று திட்டியதே என் கணவர் மரணத்திற்கு காரணம்.

எனவே நந்தன் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் ஆட்களையும்; உதவி ஆய்வாளர் பெருமாளையும் கைது செய்து தண்டிக்க வேண்டுமென நாகராஜின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

தருமபுரி கள ஆய்வின்போது நாங்கள் கேட்டறிந்த உண்மையையும்; பத்திரிக்கைகளில் வெளியான செய்தியும் இதுதான். இதன் காரணமாகத்தான் அந்த காக்கிச் சட்டை பொறுக்கி பெருமாள் அப்போது தலைமறைவனான்.

இவ்வளவு உண்மைகளையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு; வனனியர்கள் - இழித்தும் பழித்தும் பேசியதுதான் நாகராஜ் மரணத்திற்கு காரணம் என பாலபாரதி எழுதுவதால் சில கேள்விகள்

நாகராஜன் மனைவி தேன்மொழிக்குத் தெரியாத உண்மை உங்களுக்குத் தெரிந்தது போல் எழுதுகிறீர்களே - நாகராஜின் மனைவி தேன்மொழியைவிடவா உங்களுக்கு நாகராஜனின் மரணத்துக்கான உண்மைக் காரணம் தெரியும்? பாலபாரதி?

அந்த தலைமறைவு காக்கிச் சட்டைப் பொறுக்கி பெருமாளும் நீங்களும் சேர்ந்து கள ஆய்வு செய்து கண்டு பிடித்த உண்மையா நீங்கள் சொல்வது?

அந்த காக்கிச்சட்டைப் பொறுக்கியைக் காப்பாற்றத்தான் இந்த புதுக்கதையை எழுதுகிறீர்களா?

அப்படியானால் அவனைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏன் வந்தது?

அவன் என்ன உங்களுக்கு அண்ணனா? தம்பியா? என்ன உறவு பாலபாரதி?

ஒரு நெஞ்சார்ந்த பொய்யை ஒரு பொதுப் பத்திரிக்கையில் எழுத உங்களுக்கு வெட்கமாக இல்லையா பாலபாரதி?

பாலபாரதியின் 2வது குற்றச்சாட்டு

நாள் முழுவதும், ஆண்டு முழுவதும் தங்கள் உயிரைக் கொடுத்து உழைத்தெடுத்த 30 கோடி சொத்துக்களை ஈவிரக்கமில்லாமல் கொள்ளை அடித்தார்கள். சாதி வெறியின் குரூரம் சாதாரணமானது அல்ல என்பதற்கு தருமபுரி கலவரம் உதாரணம்.

சாதி வெறியின் குரூரம் சாதாரணமானதல்ல என குமுதம் ரிப்போர்ட்டரில் உருகி உருகி வழியும் பாலபாரதி

சாதி வெறியின் குரூரத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களைப் பார்த்து அறுதுல் கூற தருமபுரிக்கு வந்ததே இல்லை.

கலவரம் நடந்து முடிந்தும் பத்து மாதங்கள் ஆகி விட்டன. இந்த 300 நாட்களில் ஒரு நாள் ஒதுக்கி அந்த மக்களுக்கு ஆறுதல் கூற பாலபாரதிக்கு நேரமும் இல்லை. நினைப்பும் இல்லை.

அதனால்தான் ஏசி அறையில் உட்கார்ந்தபடி; மார்க்சியம் என்னும் மாயக்கண்ணாடி வழியாக தருமபுரி சாதிவெறி குரூரத்தைப் பார்த்துப் பார்த்து உருகி உருகி உருக்குலைகிறார் பாலபாரதி.

நீங்கள் தருமபுரி கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வைக்கும் கள்ள ஒப்பாரியைக் கேட்க வெட்கமாக இருக்கிறதம்மா.

30 கோடி கொள்ளை குறித்துப் பார்ப்போம்.


நத்தம்; அண்ணாநகர்; நாயக்கன் கொட்டாய் காலனி வீடுகளில் 80 சதவீதம் வீடுகள் 10 அடிக்கு 15 அடி நீளத்தில் கட்டப்பட்ட 150 சதுர அடி தளம் போட்ட வீடுகள். ஒரே மாதிரி அமைப்பு கொண்ட அரசு கட்டிக் கொடுத்த வீடுகள்.

வீட்டுக்கு வெளியே முன்பக்கம் நிழலுக்காக போடப்பட்ட கீற்றுப் பந்தல்; பக்கவாட்டில் போடப்பட்ட கீற்றாலான சார்பு கூரைப்பகுதியில்தான் சமையல்.


இதுதான் - மேற்கண்ட 3 காலனி மக்களில் 80 சதவீதம் பேர்களின் வாழ்நிலை. தீக்கிரையானதில் பெரும்பாலும் சமையலுக்கான சார்புக் கூரையும்; நிழலுக்கான முன்பக்கப் பந்தலும் தான்.

வீட்டின் உள் பகுதியில் தீப்பிடித்த வீடுகள் என்று கணக்கிட்டால் 30க்குள் தான்.

தன் பொன்னான நேரத்தில் ஒரு நாள் ஒதுக்கி தருமபுரிக்கு வர ஒப்புக் கொண்டால் பாலபாரதியிடம் இதை நிரூபிக்க நாங்கள் இப்போதும் தயார்.

எங்கள் கணக்குக்கு நெருக்கமான ஒரு கணக்கைத்தான் ஆதிதிராவிடர் தேசிய ஆணையத் தலைவர் புனியாவும் கலவரப் பகுதியைப் பார்வையிட்டபின் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதன்படி - 


சேதமடைந்த வீடுகள் 40
பகுதி சேதமடைந்த வீடுகள் 175
மொத்தம் 215 வீடுகள்.

50 ரூபாய் பெருமானமுள்ள ஒருசிமென்ட் ஜாலி உடைந்த வீடுகள்; 10 மங்களூர் ஓடுகள் உடைந்த வீடுகள்; கீத்து கூரைகள்; கீத்துப் பந்தல்கள் எரிந்த வீடுகளைத்தான் பகுதி சேதமடைந்த வீடுகள் என்கிறார் ஆதிதிராவிடர் ஆணையத் தலைவர் புனியா.
இந்த வீடுகளுக்கு இழப்பீடாக 7 கோடியே 50 லட்சம் அரசு வழங்கியுள்ளது.

இதன் மூலம் பகுதி சேதாரம் அடைந்த வீடுகளுக்கும் கூட ஆளுக்கு 3 லட்சத்திற்கும் மேல் இழப்பீடாகக் கிடைத்திருக்கிறது. 50 ரூபாய் பெருமானமுள்ள ஜாலி உடைந்த வீட்டிற்கும்; 300 ரூபாய் பெருமானமுள்ள பந்தல் எரிந்த வீடுகளுக்கும் இந்த நஷ்ட ஈடு கிடைத்திருக்கிறது.

ஒரு பத்து ஓட்டையோ; ஒரு சிமிண்ட் ஜாலியையோ உடைத்துப் போட்டிருந்தால் நமக்கும் 3 லட்சம் இழப்பீடு கிடைத்திருக்குமே எனக் கவலையில் இருக்கிறார்கள் மூன்று காலனியிலும் உள்ள வீடு சேதாரத்திற்கு உள்ளாகாதவர்கள் என்பது தெரியுமா பாலபாரதி?

நீங்கள் சொல்லும் 30 கோடியை - பாதிக்கப் பட்டதாகக் கணக்கிடப் பட்ட 215 வீடுகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட வேண்டு மானால் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் எவ்வளவு கொள்ளை அடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கணக்குத் தெரியுமா பாலபாரதி?

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 14 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்களை கொள்ளையடித் திருந்தால்தான் 30 கோடி வரும். உங்கள் வீட்டில் கொள்ளையடித்தால் 14 லட்சம் தேறுமா பாலபாரதி?

உங்கள் வீட்டிலேயே தேறாது என்றால் - எட்டடி குடிசை என்பார்களே அது போல - 150 சதுர அடி வீட்டிற்குள் வாழும் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் 30 கோடி கொள்ளையடிக்கப்பட்டது என்றால் கேட்பவர்கள் உங்களைப் பைத்தியக்காரி என்று சொல்லிச் சிரிப்பார்கள்...

சட்டமன்றத்தில் கூட இப்படித்தான் கூறுகெட்டத் தனமாக பேசுவீர்களா பாலபாரதி?

இறுதியாக ஒரு கேள்வி. 


உங்கள் கட்டுரைக்கு சம்மந்தமே இல்லாதது என்றாலும் அவசியம் கேட்கப்பட வேண்டிய கேள்வி.

இதுவரையில் நடந்த தேர்தல்களில் - உங்கள் கட்சிக்கு அதிகமான எம்.எல்.ஏக்களை கொடுத்த சமூகம் எது தெரியுமா பாலபாரதி?

தெரியாவிட்டால் கேளுங்கள் சொல்கிறோம். தலித் சமூகம் தான். அந்த ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த - ஒரு தலித்தை - இதுவரை உங்கள் கட்சிக்கு தலைவராக்கி இருக்கிறீர்களா?

வன்னியர்களைப் பார்த்து மூச்சுக்கு முன்னுறு தரம் ஆதிக்கச் சாதி ஆதிக்கச் சாதி என உங்கள் தலைவர் ராமகிருஷ்ணனும் பாய்கிறார்; நீங்களும் பாய்கிறீர்களே


உங்கள் கட்சியில் இதுவரை தலைவர்களாக வந்திருப்பவர்கள் யார் தெரியுமா பாலபாரதி?
எங்களை விட ஆதிக்க சாதியினர்தான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கட்சியில் தலித் பிரிவுக்குத் தலைவராக்கி இருக்கிறீர்களே டில்லிபாபு எம்.எல்.ஏ., அவருக்கு தலித் பிரிவுக்குத் தலைவராகும் தகுதி மட்டும் தான் இருக்கிறதா?

உங்கள் கட்சிக்குத் தலைவராகும் தகுதி இல்லையா?

அவரை உங்கள் கட்சிக்கு தலைவராக்கிவிட்டு அப்புறம் பேசுங்கள் எங்களை ஆதிக்க சாதி அது இது என.

அதுவரை வன்னியர் ஆதிக்க சாதி ட்ரியாலோ...

வன்னியர் ஆதிக்க சாதி ட்ரியாலோ என குறவன் குறத்தி வே­ம் கட்டிக் கொண்டு ஆடுவதை நீங்களும் உங்கள் கட்சித் தலைவர் ராமகிருஷ்ணனும் நிறுத்துங்கள்.

பாலபாரதியின் மூன்றாவது குற்றச்சாட்டு.

ஒருக்களித்துக் குப்புறக் கிடந்த இளவரசனின் உடலைப் பார்த்து தற்கொலையே அல்ல என மக்கள் பேசிக் கொண்டார்கள். இளவரசன மரணம் தற்கெலை அல்ல படுகொலை எனக் கூறியதோடு பாமகவை நோக்கி விரல் நீட்டுகிறார் இளவரசனின் வழக்கறிஞர்.

இளவரசனின் மரணம் தற்கொலையே அல்ல என மக்கள் பேசிக்கொள்கிறார்கள் சரி. ஒரு வக்கீலும் பேசுகிறார். சரி இதிலே எம்.எல்.வும் கட்டுரையாளருமான உங்கள் கருத்து என்ன பாலபாரதி?

இதுகுறித்து முடிவான கருத்து எதுவும் இல்லை என்றால் நீங்கள் எதற்காக இந்தக் கட்டுரையை எழுதுகிறீர்கள்?

எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்ற கதையாக... நானும் எழுதுகிறேன் என்ற வெட்டி விளம்பரத்துக் காகத்தான் இந்தக் கட்டுரையை எழுதுகிறீர்களா?

இது வெட்கக் கேடானது பாலபாரதி.

இளவரசன் மரணமடைந்த அன்று நீங்கள் தருமபுரிக்கும் போனதில்லை.

இளவரசன் உடல் கிடந்த தண்டவாளத்துக்கு அருகிலும் போனதில்லை.

அப்புறம் எப்படி?

ஒருக்களித்துக் குப்புறக் கிடந்த இளவரசன் உடலைப் பார்த்து -  இது தற்கொலையே அல்ல என மக்கள் அங்கே பேசிக்கொண்டது உங்கள் காதில் கேட்டது?

ஓ.. உங்கள் மார்க்சிய காதுக்கு அந்த சக்தி உண்டோ?

ஒருக்களித்துக் கிடப்பது ஒரு நிலை...

குப்புறக் கிடப்பது வேறு ஒரு நிலை.

அது எப்படி இளவரசன் உடல் மட்டும் ஒருக்களித்தும் கிடந்தது குப்புறவும் கிடந்தது?

உங்கள் மார்க்சியக் கேமரா கோணத்தில் அப்படித் தெரிகிறதோ?

இது தற்கொலை அல்ல படுகொலை எனக் கூறியதோடு பாமகவை நோக்கி விரல் நீட்டுகிறார் இளவரசன் வழக்கறிஞர் என்கிறீர்களே பாலபாரதி...

அந்த வழக்கறிஞருக்குப் பெயரில்லையா? அனாமதேயமா?

அவர் பெயரை வெளியிடும் யோக்யதை இல்லை என்றால் இந்த அவதூறு செய்தியை எதற்கு எழுதுகிறீர்கள்?

பொதுவுடமைக் கட்
சியைஉழைப்பாளர்களின் ரத்தத்தில் புழுத்த புழு என்று பொதுமக்கள் பேசிக் கொண்டார்கள் என்றோ பாமக பிரமுகர் ஒருவர் பேசிக்கொண்டார் என்றோ நாங்கள் எழுதினால் உங்களுக்கு எப்படி வலிக்கும்? அப்படித்தானே உங்கள் எழுத்தைப் படிக்கிற பாமக தொண்டனுக்கு வலிக்கும்?

ஒரு சமூகப் பிரச்சனையைப் பற்றி எழுதும்போது - மொட்டை பெட்டிசன் பேர்வழி மாதிரி எழுதி எம்.எல்.ஏ பதவியை அசிங்கப் படுத்துவதை முதலில் பாலபாரதி நிறுத்த வேண்டும்.

13.7.2013 அன்று எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இளவரசன் உடலைப் பரிசோதனை செய்து - இளவரசன் மரணம் ரயில் மோதியதால் தான் ஏற்பட்டது என உறுதிப்படுத்திய பின்னும் -

14.7.2013 நாளிட்ட குமுதம் ரிப்போர்ட்டருக்கு எழுதிய கட்டுரையில் இளவரசன் மரணம் தற்கொலை அல்ல கொலை என பொய்சாட்சி மூலம் சாதிக்க முயலும உங்கள் செயல் அருவருப்பானது பாலபாரதி.

பாலபாரதியின் 4வது குற்றச்சாட்டு

வன்னியர் சமூகப் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கட்டப் பஞ்சாயத்து மூலம் காசு பறிக்கிறார்கள் என பாமக நிறுவனர் தொடர்ந்து கூறி வந்தது அப்பட்டமான பொய் என்பது இளவரசன் மரணம் மூலம் நிரூபனமாகி உள்ளது.

முதலில் ஒரு திருத்தம்:

அனைத்து சமூகப் பெண்களையும் ஏமாற்றி திருமணம செய்து கட்டப் பஞ்சாயத்து மூலம் காசு பறிக்கிறார்கள் என்பதும் உண்மை. அதனால்தான் அனைத்து சமூக சங்கங்களையும் சேர்ந்தவர்கள் ராமதாசு தலைமையில் ஒன்று திரண்டார்கள் என்பதும் உண்மை.

இந்தப் பிரச்சனை வன்னிய சமூகத்தவர்களுக்கு மட்டுமேயானது எனச் சொல்லி பிரச்சனையை திசை திருப்ப வேண்டாம். பாலபாரதியின் கொங்கு வேளாளர் சாதிப் பெண்களுக்கும் இதே பிரச்சனை என்பதால்தான் பொங்கலூர் மணிகண்டன் போராடிக் கொண்டிருக்கிறார்.

இளவரசன் திய்வா காதல் நாடகக் காதல் இல்லை என நிரூபித்திருக்கிறது இளவரசன் மரணம் என்று பாலபாரதி எழுதினால் அதில் உள் புகுந்து விவாதிக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை.

பெண்களைக் காதலிப்பதாக நாடகம் நடத்தி கடத்தி சீரழித்து விட்டு; கட்டப்பஞ்சாயத்து மூலம் பணம் பறிக்கும் நாடகக் காதல் தொடர்பாக பாமக தலைவர் கூறும ஆயிரக்கணக்கான குற்றச் சாட்டுகளையும் அப்பட்டமான பொய் என நிரூபித்து விட்டது ஒரு இளவரசனின் மரணம் என பாலபாரதி கூறுவது சிறுபிள்ளைத்தனமானது.

விளக்கத்துக்காகக் கேட்கிறோம்.

நாகராஜனின் மரணமும்; தருமபுரி கலவரமும் நடந்திருக்காவிட்டால் இளவரசன் - திவ்யா விஷயத்திலும் பணம் பறிக்கப்பட்டு கட்டப்பஞ்சாயத்து நடந்திருக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

மேலும் இந்தக் குற்றச்சாட்டை ராமதாசு மட்டுமே சொல்லவில்லையே?

ராமதாசுக்கு முன்பே ராமதாசை விட அழுத்தமாகச் சொன்னது ஜூனியர் விகடன். அதைத் தொடர்ந்து சொன்னது தினமணி.

இது ஜூனியர் விகடன் சொன்னது.

காதல் திருமணம் செய்யும் இளைஞர்கள்; அந்த பெண்ணோடு சில வாரம் குடும்பம் நடத்தி விட்டு; பிறகு பெண்ணின் பெற்றோரைப் பார்த்துப் பேசும் உள்ளூர் சாதிப் பிரமுகர்கள்; பெண்ணைப் பிரித்து ஒப்படைக்க லட்சக்கணக்கில் பணம் கேட்பார்களாம். லட்சங்கள் கைமாறினால் பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்து விடுவார்களாம்.

பணத்தை நோக்கமாக வைத்து கடந்த காலங்களில் அரங்கேறிய காதல் சம்பவங்களின் வலியும்; தருமபுரி கலவரத்திற்குக் காரணம் என்கிறார்கள்.

இது தினமணி சொன்னது.

பட்டியல் சாதியினர் திட்ட மிட்டு பிற சாதிப் பெண்களைச் சீண்டிப் பார்க்கிறார்கள். வன்கொடுமைச் சட்டப் பாதுகாப்பு இருக்கிறது என்ற தைரியத்தில்தான் இப்படி செயல்படுகிறார்கள் என்பதே மற்ற சாதியினரின் பரவலான குற்றச்சாட்டு.

இளவரசனின் தற்கொலை மரணம் - ஜூனியர் விகடன்;

தினமணி ஆகிய பத்திரிகைகள் சொல்லும் மேற்கண்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையம் அப்பட்டமான பொய் என நிரூபித்து விட்டது என்பதும் பாலபாரதியின் கருத்தா?

இந்த சமூக விரோதக் கும்பலுக்கு- தங்கள் பெண்பிள்ளைகளைப் பலிகொடுத்துவிட்டு, ஒவ்வொரு கிராமத்திலும் நித்தம் நித்தம் அணுஅணுவாக செத்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பெற்றோர்களின வலி என்ன என்பதோ எவ்வளவு கொடூரமானது என்பதோ உங்களுக்கு தெரியுமா பாலபாரதி?

தெரிந்திருந்தால் ஒரு இளவரசனின் மரணத்தைக் காரணம் காட்டி ஓராயிரம் சமூகக் குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்க முன் வந்திருக்க மாட்டீர்கள்.

காற்றிலே பரவும் வி­ம் என்ற கட்டுரையின் ஒவ்வொரு எழுத்திலும் பாலபாரதியின் மனக்கசடுகள் பொங்கி வழிந்திருக்கிறது.

இந்தக் கட்டுரையை எழுதி வெளியிட வைத்ததன் மூலம் - குமுதம் ரிப்போர்ட்டர் இதழை தன் மனக்கசடுகளைத் துடைத்துப் போடும் குப்பைத் தொட்டியாக்கி இருக்கிறார் பாலபாரதி.

பாலபாரதிக்கு ஒரு செய்தி-

வி­ஷம் வேறு எங்கிருந்தும் காற்றில் பரவவில்லை பாலபாரதி.

வி­ஷம் உங்கள் மூச்சுக் காற்றில் இருந்துதான் பரவுகிறது.
அதை எப்படி நிறுத்த முடியும் என்பது குறித்து நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக