சனி, 15 பிப்ரவரி, 2014

அக்நிய குல திலகன் வல்லாள மகாராஜன்

திருவண்ணாமலையை தலைமையிடமாக் கொண்டு வல்லாள மகாராஜன் என்பவர் 13ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்துள்ளார். 

தமிழ் மூவேந்தர்களுள் சேரர் அக்நி குலத்தவரென்றும், சோழர் சூரிய குலத்தவரென்றும், பாண்டியர் சந்திர குலத்தவர் என்றும் பழம் இலக்கியங்கள் கூறுகின்றன. அந்த வகையில் அக்நி குலத்தவரான சேரர்கள் பரசுராமன் வருகைக்குப் பிறகு பலமிழந்து கேரளப் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி வெளியேறியிருக்கின்றனர்.

அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர்.

யஹாய்சாளர்களின் முன்னோர்கள் யஹாய்சாளர் என்ற பெயருடன் அறியப்பட்ட பகுதி மைசூருக்கு அருகில் உள்ள துவார சமுத்திரம் பகுதியாகும்.

முனிபுங்கவர் என்பவர் தனது குல தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்தபொழுது புலி ஒன்று அவர் மீது பாய அங்கிருந்த சாலன் என்பவரிடம் இரும்புத்துண்டு ஒன்றனைக் கொடுத்து புலி மீது எறியச் சொன்னாராம்.

சாலன் புலி மீது எறிந்த இரும்பால் அடிபட்டு அப்புலி இறந்து விட்டதாம். சால இதைப் புலி மீது எறி என்ற வாசகமே கன்னடத்தில் யஹாய் சாளர் என மருவியிருக்கிறது இக்காரியத்தைப் பாராட்டி முனிவரின் உத்தரவுப்படி அங்கிருந்த மக்கள் அளித்த பெரும் பரிசுத் தொகையைக் கொண்டு துவார சமுத்திரத்தில் முதன் முதலில கோட்டை கட்டியி ருக்கிறார் சாலன், இதைச் செய்த காலம் கி.பி.10ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. இதோடு இன்னொரு பழம் கதையும் மேற்கண்டதைப் போலவே உள்ளது.

புறநானூற்றில் பாரியின் நண்பராகிய கபிலர் பாரி இறந்த பின் புதல்வியர் இருவரை அழைத்துக் கொண்டு இருங்கோ வேளைச் சந்தித்து “இருங்கோவேளே இவர்கள் பாரியின் மகளிர்,
யானே தந்தைத் தோழன் ஆதலால் இவர்கள் என் மகளிர்.

அந்தணன் புலவன் கொண்டு வந்தனன் நீயே வடவால் முனிவன் வேள்விக் குண்டத்தில் தோன்றித் துவாராபதியை ஆண்டு நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே
ஆண்கடன் உடைமை யிற்பாண்கடன் ஆற்றி ஒலியற் கண்ணிப் புலி கடி மா அல் யான் தர இவரை மணந்து கொள்க” - என்கிறார்.

ஆக இரண்டு செய்திகளும் ஒரே தன்மையில் இருப்பதால் யஹாய்சாளரின் முன்னோர்கள் வேள்விக் குண்டத்தில் திரெளபதியைப் போல உதித்தவர்களாயிருத்தல் வேண்டும்.

ஆகையால் இவர்கள் சேர குலத்தோடு அடையாளப் படுத்த வேண்டியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேலைச் சாளுக்கியர்களிடம் சிற்றர சாயிருந்து பின் கி.பி.1006-ல் வினயாதித்தியன் என்பவர் துவார சமுத்திரத்தில் யஹாய்சள முதல் அரசை நிறுவுகிறார். இப் பாரம்பரியத்தில் அதிகம் புகழ் யப்றவர் முதலாம் வல்லாளன் கி.பி. 1100 முதல் 1106 வரை ஆட்சி புரிந்துள்ளார்.

இவர் காலத்தில் கட்டப்பட்ட இன்றைய மைசூர் - ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹளபேடு (துவாரசமுத்திரம்) யஹாய்சளேஸ்வரர் ஆலயத்தில் அர்ஜூனன் சுயம்பரத்தில் வென்று திரெளபதியை ஏற்கும் காட்சியையும்; பாரதப் போரின் முடிவில் துச்சாதனனின் ரத்தத்தை முடியில் தேய்த்து சபதத்தை முடிப்பதையும் அருகில் இடும்பி பீமனுடன் ஆனந்த நடனமாடும் காட்சியையும் சிற்பமாக வடித்துள்ளனர்.

அச்சான்று திரெளபதியை அடையாளப் படுத்தி தங்களையும் அக்நியில் தோன்றிய வம்சத்தவர் என அறிவிக்கப்பட்டதற்கான சான்றாகும். அதற்கு அருகில் உள்ள பேளூரில் சென்ன கேசவப் பெருமாள் விஷ்ணு ஆலயம் ஒன்றும் அவர்களால் கட்டப் பட்டது. இந்த இரண்டு ஆலயங் களும் கர்னாடக மாநிலத்தில் கோயில் சிற்பக் கலைக்கு மிகவும் பெயர் பெற்றதாகும்.

முதலாம் வல்லாளனும் அவரது தம்பி பிட்டிதேவனும் ஜைன சமயத்தவராய் இருந்துள்ளனர். ராமானுஜர் பிட்டி தேவனை வைணவத்திற்கு மாற்றியுள்ளார்.

பிட்டி தேவனின் மகன் முதலாம் நரசிம்மன் 1152 -1173 வரையிலும்; இரண்டாம் வல்லாளன் 1173-1220 வரை 47 ஆண்டுகள் ஆட்சி புரிந்து சாம்ராஜ்யத்தின் நிலையை வலுப்படுத்தியிருந்தார். வடக்கில் இருந்த யாதவ தேவகிரி அரசையும் தோற்கடித்து தனது கட்டுப் பாட்டில் கொண்டு வந்தார்.

இரண்டாம் வல்லாளனின் மகன் இரண்டாம் நரசிம்மன் 1220 முதல் 1238 வரை ஆட்சி புரிந்துள்ளார். இந்தக் காலத்தில் யஹாய்சாளர்கள் சோழர்களுடன் திருமண உறவு ஏற்படுத்தியிருந்தனர். அதன் பிறகு அருடைய மகன் சோமேஸ்வரன் ஆட்சிப் பகுதி காவிரி வரை தெற்கில் விரிவடைந்து விட்டது.

ஆகையால் ராஜ்ஜியத்தை இரண்டாகப் பிரித்து 1238 ‡1267 வடபகுதியை மூன்றாம் நரசிம்மனுக்கும் தென்பகுதியை அதாவது வடதமிழகப் பகுதியை இராமநாதனுக்கும் வழங்கினார். இராமநாதன் திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் அப்பொழுது கண்ணனூர் குப்பம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு 1295 வரை ஆட்சி புரிந்துள்ளார். அவருடைய மகன் மூன்றாம் வல்லாளன் திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு 1342 வரை ஆண்டுள்ளார்.

இவர் திருவண்ணாமலையை தலைமை யிடமாகக் கருத மிக முக்கிய காரணம் ஒன்றுள்ளது. அதாவது பஞ்சபூத தலங்களுள் திருவண் ணாமலை அக்நி ஸ்தலமாகும். மேலும் சிவபெருமான் அவர்கள் விஷ்ணுவிற்கும் - பிரம்மாவிற்கும் ஏற்பட்ட போட்டியில் ஜோதி சொரூபமாக பரபிரம்மத்தில் தானே மூலம் என்பதை உணர்த்திய ஸ்தலமாகும்.
மேற்கண்ட வல்லாள மகாராஜன் பெயரில்தான் தற்பொழுது வன்னிய குல சத்திரியரால் நிர்வாகம் செய்யப் படும் வல்லாள மகாராஜன் மண்டபமும் அதோடு சேர்ந்த கடைகளும் திருவண்ணா மலையில் உள்ளன.

மூன்றாம் வல்லாளன் ஆட்சிக் காலத்தில்தான் டெல்லி சுல்தான் சார்பாக மாலிக்காபூர் எனும் தளபதி படையயடுத்து 1311-ல் துவாரசமுத்திரத்தை அழித்து செல்வங்களை கொள்ளை யடித்தான். இருந்தும் தமிழ்நாட்டுப் பகுதியில் இருந்து தொடர்ந்து இசுலாமியர் ஆதிக்கம் செய்ய விடாமல் போரிட்டு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்துப் பார்த்தார்.
இறுதியில் 1342-ல் கொல்லப்படுகிறார்.

ஆக தமிழகத்தில் முஸ்லீம் ஆதிக்கத்தை வேரறுக்க தன்னுடைய உடல், பொருள், உயிர் அனைத்தையும் அர்ப்பணம் செய்த தியாக மூர்த்தியாவார். இவருக்கு இரு மனைவிகள் மல்லம்மா, சல்லம்மா என்றிருந்தனர். இருந்தும் குழந்தை இல்லாததால் சிவபெருமானை நோக்கி யாகஞ் செய்து 32 வகை யான அறங்களை கடைபிடித்து தர்மங்களைச் செய்து வந்தார்.

இதைக் கேள்விப்பட்ட சிவபெருமான் ஒரு சிறிய திருவிளையாடலுக்குப் பிறகு சல்லம்மாவின் குழந்தையாக உருமாறினார். அதன்பிறகு வானத்தல் பார்வதி தேவியுடன் காட்சியளித்த சிவபெருமான் கர்ம காரியஞ் செய்ய குழந்தை இல்லை எனக் கவலைப்படாதே வல்லாளா நானே உனக்கு மகனாக இருந்து இறுதிக் காரியங்களை செய்கிறேன் என வாக்களித்து மறைந்தாராம். அந்த அடிப்படையில்தான் சுமார் 650 ஆண்டு காலமாக மாசி மகம் நட்சத்திரத்தில் திருவண்ணா மலையில் இருந்து 8 கி.மீ தொலை வில் உள்ள துரிஞ்சலாற்றின் கரையில் உள்ள பள்ளி கொண்டாடபட்டு என்னு மிடத்தில் கர்ம காரியங்கள் செய்து வருகிறார்.

உற்சவர் அருணாச லேஸ்வரருக்கு சம்பந்தனூரைச் சேர்ந்த வன்னியர்கள் சம்பந்தி முறையில் வரவேற்கிறார்கள். இதுவே திருவண்ணாமலையில் இருந்து ஆண்டவர்கள் வன்னியர்களே என்பதற்கான சான்றாகும்.

1 கருத்து:

  1. ரொம்ப பெரிய சான்றப்பா. எகிப்த்திய மம்மியும் பள்ளி நு எழுதியவர்கள்தானே நீங்க.

    அதெல்லாம் சரி. திருக்கை வழக்கத்தில் கம்பர் ஏன் வல்லாளன் வேளாளர் குளத்தின் உதித்தவன் என்று சொல்லியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு