வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

ஓசூரில் நடைபெற்ற வள்ளல் அதியமான் சமூக நலச்சங்க முப்பெரும் விழா

வள்ளல் அதியமான் சமூக நலச்சங்கம் சார்பில் கடந்த ஜூலை மாதம் 28.7.2013 ஞாயிற்றுக் கிழமை அன்று ஓசூர் வசந்த நகரில் அமைந்துள்ள தாயப்ப கவுண்டர் திருமண மண்டபத்தில் சமூக நலச்சங்க துவக்க விழா; கல்வி விழா; குடும்ப விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் விண்வெளி விஞ்ஞானி திருமதி ந.வளர்மதி வாசுதேவன் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்க உரை ஆற்றினார்.

இவ்விழா சமூக நலச்சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வன்னியகுல சத்ரிய மகாசங்கத் தலைவர் உ.பலராமன் (முன்னாள் எம்.எல்.ஏ) வடதமிழ்நாடு மக்கள் இயக்கத் தலைவர் ந.இறைவன், சென்னை சமூக நலச்சங்கத் தலைவர் பொறியாளர் சி.சுப்ரமணியன், நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி, வேலி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் விமுனாமூர்த்தி, திரைப்பட இணை இயக்குநர் ஜி.மாரியப்பன், பேராசியர் ச.அமிர்தலிங்கம் ஆகியோர் உரையாற்றினார்கள். மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது.

ஓசூரில் வாழும் வன்னியர் சமூக குறுந்தொழில் முனைவோர் குடும்பங்களைச் சேர்ந்தோர் பெருந்திரளாக வந்திருந்தனர்.

இந்நிகழ்ச்சி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

தலைவர் வெங்கடேஷ் உரை 


எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கும் அச்சமில்லை இதழின் ஆசிரியர் ந.இறைவன் அவர்களே, வன்னியகுல சத்ரிய மகா சங்கத்தின் தலைவர் உ.பலராமன் அவர்களே, அறிவியல் விஞ்ஞானி ந.வளர்மதி வாசுதேவன் அவர்களே, நெற்றிக்கண வார இதழ் ஆசிரியர் ஏ.எஸ்.மணி அவர்களே, டாக்டர் விமுனா மூர்த்தி அவர்களே மற்றும் பொறியாளர் சுப்ரமணியம் அவர்களே ஏனைய வன்னிய சொந்தங்களே உங்கள் அனைவரையும் வரவேற்று வணங்குகிறேன்.


மேலும் இச்சங்கத்தின் நோக்கம், வன்னிய சொந்தங்களின் ஒற்றுமை, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து உதவுதல் மற்றும் இந்திய அளவில் உயர்பதவியில் உள்ள வன்னியர்களை கண்டறிந்து வன்னிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல், ஓசூர் தொகுதியில் வன்னிய பிரதிநிதிகளை அரசியலில் வெற்றிகளை பெற வைப்பது அடுத்து மூன்று ஆண்டுகளில் வன்னியர்களுக்கான கல்வி நிறுவனத்திற்கு இடம் வாங்குதல் போன்றவை. சங்கத்தால் மேற் கொள்ளப்படும் என உறுதி கூறுகிறேன்.


நம் இனம் கல்வியில் உயர்ந்தால் மட்டுமே பொருளாதாரத்தில் உயர முடியும். எனவே வன்னியர்கள் அனைவரும் கல்வி சார்ந்த தொழில் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி அரசியல் வளர்ச்சி அடைய எங்கள் சங்கம் தொண்டாற்றும் என தெரிவித்து; உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

வணக்கம். விண்வெளி விஞ்ஞானியாக என்னால் முடிந்தது போல பொறுப்புணர்ந்து படியுங்கள் உங்களாலும் முடியும் - டாக்டர் வளர்மதி பேச்சு

அரங்கத்தில் கூடியிருக்கும் அனைத்து பெருமக்களே! மாணவச் செல்வங்களே பெரியோர்களே தாய்மார்களே அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த 5 அல்லது 10 மணித்துளிகள் என்னுடைய அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

நான் பெங்களூரில் இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசே­ன். என்ற நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறேன்.

30 வருடங்களாக என்னுடைய பணியில் தொடர்ந்து வேலை செய்து வருகின்றேன்.
நான் ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தில் இருந்து வந்தவள். என்னுடைய தகப்பனார் அரசு பணியில் வேலை செய்தவர். இதை நான் ஏன் அழுத்தமாக சொல்கிறேன் என்றால். நடுத்தர குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு வலிமை அதிகம்.

எல்லா கஷ்டங்களையும் சகிக்கும் குணம் அதிகம். அதனால் நடுத்தரக் குடும்பம் என்பதால் மனம் சோர்ந்து விட வேண்டாம். வாழ்க்கையில் வெற்றி பெற அதுவே முதல் தகுதி.

அடுத்து என்னுடைய தாய் தகப்பனார் எனக்கு கொடுத்த வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். மாத சம்பளத்தில் என் தகப்பனார் என்னை படிக்க வைத்து சரியான நேரத்தில் விடுதியில் தங்க வைத்து எனக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்தார்கள். அந்த உதவியை; அந்த சலுகையை நான் தவறாகப் பயன்படுத்தாமல் சரியாகப் பயன் படுத்தியதால் இன்று உங்கள் முன் நின்று உரையாற்றுகின்றேன்.

கொடுத்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

நான் வேலை செய்யும் நிறுவனம் செயற்கைக் கோள் தயாரிக்கிறது.
நான் போன வருடம் ஒரு செயற்கைக் கோள் செய்வதில் திட்ட இயக்குநராகப் பணிபுரிந்து அந்த செயற்கைகோள் 24 மணி நேரமும் இரவு பகலாக படம் எடுக்கும் தன்மை வாய்ந்தது. அது மட்டுமல்லாமல் மழை பனி இது போன்ற தட்ப வெப்ப பருவ மாறுதல்களில் மற்ற செயற்கை கோள் படம் எடுக்க முடியாது. நாங்கள் அனுப்பிய செயற்கைகோள் எந்த சூழலிலும் படம் எடுத்து நம் நாட்டிற்கு உதவி செய்து கொண்டிருக்கின்றது.

எனவே இங்கே இருக்கும் மாணவர்கள் கல்லூரியில் படிப்பவர் களோ; பள்ளியில் படிப்பவர்களோ ஒரு சில ரகசியங்களை சொல்ல விரும்புகின்றேன்.
வீட்டில் தாய் தகப்பன் படி என்று சொல்லி படிக்கக் கூடாது. நீங்களே படிக்க வேண்டும். அடுத்தது, கடும் உழைப்பு வேண்டும். நாளை தேர்வு என்றால் கண்விழித்து படிக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் நிறைய மார்க் எடுக்க வேண்டும் என்றால் கஷ்டப் பட்டு அனைத்து புத்தகங்களிலும் குறிப்பெடுத்து கடுமையாக படிக்க வேண்டும்.
படிக்கும்போது புரிந்து படிக்க வேண்டும். புரியாமல் படிக்கக் கூடாது.

இப்போதே மனதில் ஒரு குறிக்கோள் வைத்துக் கொள்ள வேண்டும்.

என்ன ஆக வேண்டும்;

என்ன படிக்க வேண்டும்

நான் எந்த விதத்தில் திறமைசாலியாக வர வேண்டும் என்று மனதில் குறிக்கோள் வைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய பண்புகளை கொண்டு உங்களுடைய பெற்றோருக்கு நீங்கள் பிறந்த ஊருக்கு; நீங்கள் படித்த பள்ளிக்கு உங்களுடைய தாய் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பன போன்ற குறிக்கோள் வேண்டும்.
தங்கள் பிள்ளைகளின் உயர்வுக்கு பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை என் மனதில் பட்ட சில கருத்துக்களை சொல்கின்றேன்.

பெற்றோர்கள் வீட்டில் குழந்தைகள் படிப்பதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
எந்த ஒரு அழுத்தமும் இருக்கக் கூடாது.

குழந்தைகள் படிக்கும் போது உங்களுடைய அர்ப்பணிப்பும் தேவை.

டியூ­ன் கூட்டிக் கொண்டு போக வேண்டுமா?

எந்த மாதிரி பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்பும் பெற்றோருக்கு இருக்க வேண்டும்.
அடுத்தது

குழந்தைகளுக்கு எவ்வளவு சலுகை கொடுக்க வேண்டுமோ அவ்வளவு சலுகைதான் கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் எப்போது கண்டிப்பாக இருக்க வேண்டுமோ அப்போது கண்டிப்பாக இருக்க வேண்டும்.

நீங்கள் ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். நாம் டிவி பார்த்துக் கொண்டு குழந்தைகளை டிவி பார்க்காதே என்று சொல்லக் கூடாது.

இது போன்ற பண்புகளை எல்லாம் வளர்த்துக் கொண்டால் தான் நீங்கள் எதிர்பார்த்தது போல குழந்தை நாளைய சமுதாயத்தில் நல்ல முறையில் வளர்ந்து உங்களுக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித்தரும்.

இறுதியாக நான் சொல்ல விரும்புவது; இந்த அரங்கத்தில் வீற்றிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு பொறுப்பு இருக்கின்றது. அதை தினமும் செய்து வருகின்றோம். எதிர்காலத்தில் செய்வோம் என்ற ஈடுபாட்டுடன் திறம்பட செய்தால் அனைவரும் நல்ல முறையில் பேர் பெற்று வரலாற்றில் ஒவ்வொரு இடத்திலும் முத்திரை பதிக்கலாம், இதற்கெல்லாம் முயற்சி வேண்டும்.


நான் ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து பண உதவியோ என்னுடைய முன்னோர்கள் மூலம் கல்வி உதவியோ எதுவும் இல்லாமல் - என்னால் முடிந்தது என்றால் அனைவராலும் முடியும் என்று சொல்லி அனைவரும் நம்மால் முடியும் என்று முயலுங்கள் என்று கூறி; என்னை இங்கு வரவழைக்க காரணமாய் இருந்த அனைவருக்கும் இங்கிருக்கும் அனைத்து மக்களுக்கும் என் நன்றியை சொல்லி விடைபெறுகின்றேன். வணக்கம்.

இந்த சங்கம் கல்வி நிலையங்களையும் தொழிற்பயிற்சி நிலையங்களையும் தொடங்க வேண்டும் - சோழநாடன் பேச்சு
இங்கு குழுமியிருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் வணக்கம்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் வள்ளல் அதியமான் நலச்சங்க நிர்வாகிகளுக்கும் தோழர்களுக்கும் வணக்கம். இங்கே மேடையில் வீற்றிருக்கும் எம் சமுதாய பெரியவர்களுக்கும் வணக்கம்.

இப்படிப்பட்ட மேடையில் முதல் முறையாக நான் பேசுகிறேன். இது குடும்ப விழா என்பதால் அரசியலை தவிர்த்து இவர்கள் தொடங்கி இருக்கும் இந்த சங்கம் சார்ந்து சில ஊக்கங்களை சொல்லி விடை பெற இருக்கின்றேன்.



அண்மையில் இறைவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, கர்நாடகாவில் இயங்கும் இரண்டு பெரிய அறக்கட்டளைகள் பற்றி என்னிடம் பேசினார். எனக்கும் நீண்டகாலமாக அதைப்பற்றி ஒரு சிந்தனை இருந்தது.

ஆதலால் அதைப் போல் ஒரு அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசியவர்கள் இந்த சங்கத்தினுடைய நோக்கங்கள் பற்றி சுருக்கமாக குறிப்பிட்டார்கள். வன்னியர்களுக்கு சில பெருமைகளும் உண்டு. சில சிறுமைகளும் உண்டு. பெருமைகள் என்று சொன்னால் இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பெரும்பான்மைச் சாதி. சற்றேறக்குறைய 30 சதவீதம் இருக்கிறோம். வள்ளல் அதியமான் சமூகநலச்சங்கம் என்று வைத்திருக்கிறோம். 


வள்ளல்கள் அன்று மட்டுமல்ல நம் சமுதாயத்தில் தொன்று தொட்டு வள்ளல்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். வட மாவட்டங்களில் சமூக நெறிமுறைகளையும் பண்பாட்டு நெறிமுறைகளையும் உருவாக்குபவர்களாக அதை வடிவமைப்பவர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் வன்னியர்களே.

நான் சிதம்பரம் அருகிலுள்ள ஒரு சிற்றூரில் இருந்து வந்திருக்கிறேன். எங்கள் ஊருக்கு அருகில் வாழ்ந்த ராசு படையாட்சி ஒரு பெரிய வள்ளல். எங்களுக்கு சொந்தக்காரரான சாமிக்கண்ணு படையாட்சி ஒரு பெரிய வள்ளல். இந்த சமுதாயம் பெரும்பாலும் வாழும் வட மாவட்டத்தை தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்து என்று சொல்வார்கள். தொண்டை மண்டலத்தில் பெரும் பான்மையாக வாழும் வன்னியர்களிடையே சான்றோர்கள் அதிகமாக வாழ்ந்ததனால் ஏற்பட்டது அந்த பழமொழி.

எங்க அம்மா என்னிடம் சொல்வாங்க எங்க அப்பாவுடைய குணத்தை பார்த்து; எங்க அப்பா தோளில் இருக்கும் துண்டை எடுத்து குடுத்துவிட்டு போவார். நீ இடுப்பில் இருக்கும் வேட்டியை அவிழ்த்து குடுத்துவிட்டு போய்விடுவாய் என்று. ஆனால் என்னுடைய மனைவி என் பையனிடம் சொல்வாங்க என்னைவிட தாராள குணம் அவருக்கு. அவன் உள்ளாடைய கூட கழட்டி கொடுத்து விட்டு போய்விடுவான் போல இருக்கு.

நாமெல்லாம் பெரும்பான்மை சாதி என்ற அடிப்படையில் விழிப்புணர்வு இல்லாமல் நாம் மெத்தனத்தில் இருக்கின்றோம். அழியாத விழிப்புணர்வே விடுதலைக்கான இலக்கணம். ஆதலால் நாம் விழிப்புணர்வோடு இல்லை என்றால் இன்றிருக்கும் நிலை கூட நம்மை விட்டு பறி போய்விடும்.

அறிவியலாளர் வளர்மதி அவர்கள் சொன்னார்கள். குழந்தைகள் படிக்கும்போது நாம் கூட ஒழுங்காக இருக்க வேண்டும் அவங்க படித்துக் கொண்டு இருக்கும்போது நாம் டிவி பார்க்க கூடாது என்று சொன்னார்கள். அதாவது மாணவர்கள் நன்றாகப் படிப்பதற்கான புறச் சூழலை உருவாக்குவது. புறச்சூழல் வீட்டில் மட்டும் உருவாக்கினால் போதாது. நம்முடைய சமூகத்தினுடைய அகச்சூழல் மாற வேண்டும். அந்த அகச்சூழல் மாற வேண்டும் என்றால் நாம் அனைவரும் கல்வி கற்றவர்களாக மாற வேண்டும். தொழில் முனைவோர்களாக மாற வேண்டும். அந்த கல்வி கற்றவர்களாக தொழில் முனைவோர்களாக மாறுவதற்கு நாம் கல்வி நிலையங்களையும் தொழில் பயிற்சி நிலையங்களையும் தொடங்கியாக வேண்டும். அதற்கு முன்னோடியாக இந்த வள்ளல் அதியமான் சமூக நலச்சங்கம் உதாரணமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். இதற்கான திட்டங்களில் ஈடுபடும்போது அதற்கான பங்களிப்பாக ஆலோசனைகளையும்; பொருளியல் உதவிகளையும் எங்களால் செய்ய முடியும் என்று கூறிக்கொண்டு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தோழர்கள் அனைவருக்கும் எனது நன்றியை கூறி விடைபெறுகிறேன் வணக்கம்.

இந்த சங்கம் நம் சமூகம் முன்னேற ஒரு தாயைப் போல உதவ வேண்டும்.

பொறியாளர் சி.சுப்ரமணியன் பேச்சு

அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள்.

அன்பு உறவினர்களே, அறிவு ஜீவிகளே, நான் உங்களிடம் கற்றுக்கொள்ளவும் நீங்கள் என்னிடம் என்ன பெறுவீர்கள் என்று கேட்டுக்கொள்ளவும்தான் நான் இங்கு வந்தேன்.


தான தர்மம் செய்பவர்களுக்கும் சமூக சேவை செய்பவர்களுக்கும் பாராட்டு விழா நடத்தவில்லை என்றால் அந்த சமூகத்தில் அவர்கள் தோன்றவே மாட்டார்கள்.

நமக்கு முன்னேற இருக்கிற ஒரே ஒரு வழி கல்வி. இந்த சங்கத்தை நடத்துபவர்கள் எல்லாம் பணக்காரர் கிடையாது. பெரிய பெரிய படிப்பு படித்தவர்களும் கிடையாது. நமக்கு கையில் கிடைத்து இருப்பது கல்வி என்ற ஆயதம் ஒன்றுதான். அதை நாம் நன்றாகப் பயன்படுத்துவோம். நாம் எப்படிப் படிக்க வேண்டும் என்பதை நம் அறிவியல் விஞ்ஞானி அவர்களும் சொல்லி இருக்கிறார்கள்.

அப்போது கலை நிகழ்ச்சியும் நடந்தது. ஆழ்ந்து கற்ற கல்வியையும் கலையைப் போல பயின்றால் உங்களுக்கு என்றென்றும் மறக்காது. உயர்வை தரும்.

இந்த சங்கத்தின் நோக்கங்கள் என்ன? சமுதாய சிக்கல்களை தீர்ப்பதும் கல்வியில் உயர்வு பெறுவதும் வேலைக்கான வளரச்சிகளை பெறுவதும் நோக்கம் என்கிறீர்கள். சிறந்த நோக்கம். என்னுடைய வாழ்த்துக்கள்.

படிப்புஇருந்தால் நாம் உயர்வு அடையலாம். நன்கு படித்தால்தான் நாம் நல்ல உயர்வைப் பெற முடியும்.

கல்வி கற்பது பொருளீட்டுவதற்கு மாத்திரம் அல்ல. எதாவது ஒரு கல்வி கற்றுவிட்டு அந்த கல்விக்காக போய் வேலை தேடுவது அல்ல. நம்மை நாமே உயர்த்துவதற்கு கல்வி பயன்பட வேண்டும்.

நீங்கள் உயர்ந்தால்தான் உங்கள் வாழ்வு உயரும்; ஒரு பறவை மற்றொரு பறவையின் சிறகால் பறக்க முடியாது. ஒருவன் மற்றவனுடைய காலால் ஓட முடியாது. ஒருவன் மற்றவனுடைய மூளையால் படிக்க முடியாது.

நீங்களே முயன்று நீங்களே தான் முன்னேற முடியும். நாங்கள் எல்லாம் உங்களுக்கு இந்த மனப்பான்மையை உருவாக்க முடியுமே தவிர.. உங்களுடைய முயற்சியும் உங்களுடைய பயிற்சியும்தான் உங்களை முன்னேற்ற முடியும். இங்கே சொன்னார்கள், ஒரே மாதிரி சிந்தனை இல்லாமல் பல மாதிரி சிந்தனைகள் இருக்க வேண்டும். பல வழிகளில் நாம் சிந்தித்தால்தான் பல தடங்களை நாம் பதிக்க முடியும்.

சிந்தியுங்கள் நன்கு செயல்படுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு பறவை அதனுடைய உடலின் எடையைப் போல பல மடங்கு தூக்கிக் கொண்டு பறக்கும்.

எறும்பு அதன் எடையைப் போல 50 மடங்கு தூக்கிக் கொண்டு செல்லும். 100 மடங்கு தள்ளிக் கொண்டு போகும்.

மரம் எல்லா பயன்களையும் மனிதர்களுக்கு கிடைக்க செய்யும்.

மனிதர்கள் நாம் வாழ்ந்த வாழ்க்கையை நம் திறமையை முன்னேற்றி இந்த வையகம் வாழ நாம் வாழ வேண்டும்.

ஒரு தாய் சாலையைக் கடக்கும் போது, என் கையை பிடித்துக் கொள் என்று குழந்தையிடம் சொன்னார். இல்லை அம்மா நீ என் கையை பிடித்துக் கொள் என்று அந்த குழந்தை தாயிடம் சொன்னது.

என்னடா எல்லாம் ஒன்றுதானே என்று அந்த தாய் கேட்கிறார். இல்லை அம்மா நான் உன் கையை பிடித்துக் கொண்டால் மறந்து கூட விட்டு விடுவேன். ஆனால் நீ என் கையை பிடித்துக் கொண்டால் என்னை எந்த நேரத்திலும் கைவிட மாட்டாய் என்று அந்த குழந்தை சொன்னது.

அதுபோல இந்த சங்கத்து அமைப்பாளர்கள் அனைவரும் சமுதாயத்தை எப்போதும் ஒரு தாயைப் போல இருந்து வழி காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஏழை மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றும் பொறியியல் கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டு வசதி இல்லாமல் தவித்தால் 20 பேர் வரை; வருடத்திற்கு 60 ஆயிரம் ஃபீஸ் இல்லாமல் இரண்டரை வருடங்களுக்கு அவர்களுக்கு கல்வி கிடைக்க ஏற்பாடு செய்கிறோம்.

மிகவும் ஏழையாய் இருந்தால் ஹாஸ்டல் உட்பட இலவசப் படிப்புக்கு ஏற்பாடு செய்கிறோம். அத்தகையவர்கள் பற்றிய விபரங்களைத் தெரிவியுங்கள் எனக் கேட்டுக் கொண்டு நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அம்பேத்காரைப் போல வன்னிய சமூகம் ஒரு தலைவரைத் தேடிக்கொண்டு இருக்கிறது.

டாக்டர் விமுனா மூர்த்தி பேச்சு


என்னுடைய அன்பு பாட்டாளிச் சொந்தங்களே வணக்கம்.

நான் காஞ்சியிலிருந்து வந்திருக்கிறேன். ஓசூரிலே சமூக நலச்சங்கம் ஒன்று உருவாகி இருக்கிறது. அதனுடைய தொடக்க விழா; கல்வி விழா; அதற்கும் மேலாக மிகச்சிறப்பாக குடும்ப விழா இங்கே நடைபெறுகிறது என்று அறிந்த போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.


நாம் இரண்டு கோடி என்கிறோம்; இரண்டரை கோடி என்கிறோம். அல்லது வேறு கணக்குகளை சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.



நிலைமக்கள் சால உடைத்து எனினும் - தானை தலைமக்கள் இல்வழி இல்.

நீ ஒரு கோடியா இருக்கட்டும் ரெண்டு கோடியா இருக்கட்டும் 3 கோடியா கூட இருக்கட்டும்... உனக்கு ஒரு தலைவன் இல்லை என்றால் உன்னுடைய சமூகம் முன்னேறுவதற்கு வழியே கிடையாது என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே வள்ளுவன் சொல்லிச் சென்றிருக்கிறார்.

ஆனால் தலைமையைத் தேடிக்கொண்டு இருக்கிறது இந்த சமூகம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு அம்பேத்கார் கிடைத்ததைப் போல இந்த வன்னிய மக்களுக்கு ஒரு அரும்பெரும் தலைவர் தன்னை அர்ப்பணிக்கக் கூடிய தலைவரை நீங்கள் கண்டறிந்தால் அந்த ஜார்ஜ் கோட்டை நிச்சயமாக உங்களுக்கு நாற்காலியைத் தரும்.

அதற்காக சூளுரையுங்கள்; அதற்காக உழையுங்கள்; யாரையும் பகைக்காதீர்கள்.
தினப்புரட்சி என்று ஒரு ஏடு தொடங்கப் பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியை ஏழு நாள் சாலை மறியல் போராட்டத்தில் ஒரே நாளில் 11 பேரை துப்பாக்கிச் சூட்டிலும் அதற்குப் பின்னாலே 7 பேரையும் உயிர்ப்பலி தந்ததற்குப் பின்னாலே ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது பாட்டாளி மக்கள் கட்சி. காரல் மார்க்ஸ், தந்தை பெரியார்; அண்ணல் அம்பேத்கார் மிகப்பெரிய தலைவர்களின் வழிகாட்டுதலோடு இந்த இயக்கத்தை கொண்டு செல்வதற்காகவும் இந்த உழைக்கும் மக்களை; பாட்டாளி மக்களை வழிநடத்திச் செல்வதற்காகவும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.


கவிஞர் திருச்சி தியாகராஜன் என்ற ஒரு வன்னியர் இருந்தார். திரைப்படக் கவிஞர். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? தெரியாது.

தாமரை பூத்த தடாகத்திலே என்ற பாடலை எழுதிய மிகச்சிறந்த கவிஞர். யாருக்கும் பணியாதவர் வளையாதவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலே இருந்தவர். அவர் சொல்லுவார் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலே சாதி வேறு வர்க்கம் வேறு அல்ல, இங்கே வன்னியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லாம் உழைக்கும் வர்க்கம்.


ஆக வன்னியரை நீங்கள் முன்னேற்றப் பாடுபட்டாலே நீங்கள் உழைக்கும் வர்க்கத்திற்காகப் பாடு படுகிறீர்கள். காரல்மார்க்ஸ் வழியிலே பாடுபடுகிறீர்கள்; என்று அழுத்தம் திருத்தமாக சொல்லுவார். காரல்மார்க்ஸ் சொன்ன தத்துவத்தின் இரண்டு அடிப்படை அம்சங்களையும் மூன்றாவதாக நம்மை முன்னேற்றுவதற்கான நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளாமல் இருப்பதற்கான ஒரு செய்தியை மட்டும் சொல்லிக்கொண்டு விடை பெறுகிறேன்.

ஒரு கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் பெளதீக சக்தியாக மாறும். ஒரு நல்ல கருத்தை நீங்கள் சமுதாயத்திலே தொடர்ந்து விதைத்தீர்கள் என்றால் அது ஒரு பெரும் சக்தியாக மாறி சமுதாயத்தையே மாற்றும். அதற்கு என்ன வேண்டும்? கல்வி வேண்டும். சிறந்த கருத்துக்களை விதைப்பதற்கு கல்வி வேண்டும். நம்முடைய மக்களை சிறந்த கல்வியாளர்களாக மாற்ற வேண்டும்.

அடுத்து இன்னொன்று மார்க்சிய தத்துவம். அளவு மாற்றம் குண மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு பானையிலே உள்ள தண்ணீரை நாம் சூடேற்றுகிறோம் என்றால் 10 டிகிரியில் வித்தியாசம் தெரியாது. 50 டிகிரியில் தொட்டுப் பார்த்தால் சுடும். ஆனால் 100 டிகிரி சென்டிகிரேட் என்கிற போது அது தண்ணீராக இருக்காது. நீராவியாக மாறும். ஆக இந்த சூட்டின் அளவு அதிகமாகும் போது, குண மாற்றமே நிகழ்கிறது. எனவே அன்புச் சொந்தங்களே நாம் இரண்டு பேராகச் சென்று கோரிக்கை வைத்தால் அதற்கு ஒரு தனி மரியாதைதான். 20 பேராக சென்று வேண்டுகோள் விடுத்தால் அதற்கு இன்னும் கூடுதல் மரியாதைதான் கிடைக்கும். ஆனால் 2000 பேராகத் திரண்டு நாம் ஒரு கோரிக்கையை ஒரு ஆர்ப்பாட்டம் என்று மாற்றும் போது அதற்கான வலிமையே வேறு. அளவு மாற்றம் குண மாற்றத்தை ஏற்படுத்துகிறது எனவே நீங்கள் ஒற்றுமையாக இருங்கள். ஒன்றாகக் கை கோருங்கள். உரத்துக் குரல் கொடுங்கள்.

கோடி கோடி என்று பேசிக்கொண்டிருப்பதிலே பிரயோஜனமில்லை. எல்லார் குரலும் ஒரு குரலாக ஒரு தலைவனின் பின்னால் ஒலிக்கக் கூடிய குரலாக நம்மால் மாற்ற முடியும் என்றால் நாம் மார்க்சிய வழியிலேயே அந்த ஆட்சி அதிகாரத்தைப் பெறுவோம்.


மூன்றாவதாக, செய்தித் தாளிலே ஒரு திரைப்படம் வெளியாகப் போகிறது. அந்த திரைப்படத்தின் தலைப்பு என்ன என்றால் ஓநாயும் ஆட்டுக் குட்டியும், எனக்கு அந்த கதை என்ன என்று தெரியாது. ஆனால் ஓநாயும் ஆட்டுக் குட்டியும் என்ற கதை ஒன்று நம்முடைய தமிழ் சமூகத்திலே பல ஆண்டுகளாகப் புழக்கத்திலே இருக்கிறது.



ஒரு மலை அடிவாரத்தில கிழட்டு ஓநாய் ஒன்று படுத்துக் கொண்டிருக் கிறது. அதன் அருகிலே ஒரு ஓடையில் தண்ணீர் சலசல வென்று ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த கிழட்டு ஓநாயால் ஓடிச் சென்று ஆடுகளை விரட்டிப் பிடித்து சாப்பிட முடியாது. பக்கத்திலே ஏதாவது ஆட்டுக் குட்டி வந்தால் பாய்ந்து பிடித்து சாப்பிட்டு விடும். அப்போது ஒரு தாய் ஆடு அங்கே போகிறது. அதன்பின்னே அதன் குட்டியும் போகிறது. தாய் ஆடு வேகமாக போய்விட்டது. ஓநாய்க்கு ஆசை ஆட்டுக்குட்டியை எப்படியாவது ஏமாற்றி சாப்பிட்டுவிட வேண்டும் என்று.

ஆட்டுக்குட்டிக்கோ தண்ணீர் தாகம். தூரத்தில் நின்று தண்ணீர் குடித்தது. இந்த ஓநாய் ஆட்டுக்குட்டியிடம் ஏன் வெயிலில் நின்று தண்ணீர் குடிக்கிறாய்? இதோ பார் அருமையான நிழல் அருகில் நீர் இருக்கிறது. இங்கே வந்து குடி என்றது.
அதற்கு ஆட்டுக்குட்டி நான் உன் அருகில் வந்தால் என்னை பிடித்து நீ தின்று விடுவாயே என்றது.

நீ சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் இன்றைக்கு அமாவாசை நான் சைவம் இன்றைக்கு கறி எல்லாம் சாப்பிட மாட்டேன் என்றது ஓநாய்.
நான் எப்படி நம்புவது என்று ஆட்டுக் குட்டி கேட்டது.

அப்போது ஒரு யானை அந்தப் பக்கமாக வந்தது. யானையை நான் கேட்கட்டுமா என்றது ஆட்டுக்குட்டி. கேட்டுப்பாரேன் என்றது ஓநாய். உண்மையாகவே அன்று அமாவாசைதான்.

ஆட்டுக்குட்டி யானையைப் பார்த்து இன்று அமாவாசையா என்று கேட்க, யானையும் ஆமாம் அமாவாசைதான் என்றது யானை. இன்னொன்றும் என்ன கேட்டிருக்க வேண்டும்? அமாவாசை அன்று ஓநாய் சைவமாகிவிடுமா என்று கேட்டிருக்க வேண்டும். கேட்கவில்லை. ஆஹா ஓநாய் உண்மைதான் சொல்கிறது என்று அந்த ஆட்டுக்குட்டி ஓநாய் அருகே சென்று நீர் பருகியபோது ஓநாய் பாய்ந்து பிடித்து, அடித்து, கடித்து சாப்பிட்டு விட்டது.

நாம் இப்படித்தான் ஏமாந்து கொண்டிருக்கிறோம். தீர விசாரிக்காமல் எல்லாரையும் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆகவேதான் நாம் எதையுமே தீர விசாரித்து நம் வாழ்க்கைப் பாதையிலே நடைபோட்டு முன்னேறுவோம் முன்னேறுவோம் வெற்றி பெறுவோம் நன்றி வணக்கம்.

மகாபாரதத்தில் பாண்டவர்களின் வனவாசமும் தமிழக அரசியலில்
வன்னியர்களின் வனவாசமும்

ந.இறைவன் பேச்சு
அனைத்து சொந்தங்களுக்கும் வணக்கம்.



அதியமான் சமூகநலச் சங்கம் என்று பெயர் வைத்திருக்கிறீர்களே அதற்காகவே உங்களைப் பாராட்டலாம்.

அதியமான் பெயருக்கு அப்படி என்ன சிறப்பு?

அதியமானுக்கு ஒரு நெல்லிக் கனி கிடைக்கிறது. அதை உண்பவர்கள் சாகாவரம் பெறுவார்கள் என்பது அந்தக் கனியின் சிறப்பு. அந்தக் கனியை தான் உண்ண வேண்டும் என்று நினைக்கவில்லை அதியமான். அதுவே அவனுக்கு சிறப்பு.

தான் உண்ண நினைக்காத அந்தக் கனியை - தன் பிள்ளைகள் யாருக்காவது உண்ணக் கொடுத்தானா? இல்லை.

மக்களுக்கு நீதி நெறிகளைப் போதித்து. மக்களை நன்னெறிப் படுத்தும் சான்றோரான அவ்வைக்கு கொடுத்து; அதை அவர் உண்டு; அவர் சாகாவரம் பெற்று காலாகாலத்திற்கும் மக்களை நல்வழிப்படுத்தினால் மனிதகுலம் மேம்படும் என நினைத்து அவ்வையாருக்கு கொடுத்தானே அதுதான் சிறப்பிலும் சிறப்பு.


இன்றைக்குள்ள அரசியல் தலைவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் அதியமான் பெருமை புரியும்.

இன்றைக்குள்ள அரசியல் தலைவரிடம் அப்படி ஒரு அதிசய நெல்லிக்கனி கிடைத்திருந்தால் அவர் என்ன செய்திருப்பார் என்று நினைத்துப் பார்த்தேன். அவர் தன் மகனுக்குக் கூட காட்டாமல் அவரே தின்றிருப்பார் என்று தோன்றியது.


எனக்கு அரசியல் தலைவர்களோடு பழக்கமில்லை. அவ்வளவுதான் தோன்றியது.
அரசியல் தலைவர்களோடு நெருக்கமாகப் பழகிய டாக்டர் விமுனா மூர்த்திக்கு என்ன தோன்றுகிறது என்று அறிவதற்காக அவரிடம் கேட்டதற்கு அவர் சொன்னார்.
மகனுக்கு காட்டாமல் தின்றதோடு நிறுத்தி இருக்க மாட்டார். அந்த மரம் இருந்து; அதில் மேலும் ஒரு அதிசயக்கனி பழுத்து அது வேறொரு தலைவர் கையில் கிடைத்து; அவரும் தின்று சாகாவரம் பெற்று எனக்கு போட்டியாக வாழ ஏன் அனுமதிக்க வேண்டும் என்று எண்ணி அந்த மரத்தையே வெட்டி அழித்திருப்பார் என்றார். நமது அரசியல் தலைவர்களோடு நெருங்கிப் பழகியவர் என்பதால் அவர்களின் எண்ண ஓட்டங்களை டாக்டரால் துல்லியமாக எக்ஸ்ரே எடுத்து சொல்ல முடிந்திருக்கிறது.


இன்றைய நம் தலைவர்களோடு அதியமானை ஒப்பிட்டுப் பார்த்தால்; சாகாவரமளிக்கும் அதிசய நெல்லிக்கனியை அவ்வைக்கு கொடுத்ததற்கு ஈடான கொடையுமில்லை, அதியமானுக்கு நிகரான கொடை வள்ளலும் இல்லை என்பது புரியும். அப்படிப்பட்ட அதியமானின் பெயரைத் தாங்கியுள்ள இந்த அதியமான் சமூகநலச் சங்கம் வன்னிய சமூசம் பெற்ற வரமாக நீடித்து நிலைக்க வாழ்த்துகிறேன்.

இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு நாடார் சமூகத்தில் பிறந்த வைகுந்த சாமியை அய்யா என்று அழைத்து அவருக்கு குருபூஜை நடத்துகிறது நாடார் சமூகம். அவர் நாடார் சமூகத்திற்கு போதித்தது என்ன?

கூலி வேலைக்குப் போகாதே. கூலிக்காரனாக இருந்தால் உனக்கு மரியாதை இருக்காது.
சின்னதே ஆனாலும் உன் சக்திக்கு ஏற்ப வியாபாரம் செய்.


துண்டை தோளில் போடு. இடுப்பில் கட்டாதே.

காலில் செருப்பணிந்து நட.

இது போன்ற சுயமரியாதை அறிவுரைகளைத்தான் நாடார் சமூகத்திற்கு அய்யா வைகுந்தர் போதித்தார்.

இப்படி ஒரு அய்யா நம் சமூகத்திற்கு இல்லாமலே, என் படிப்பை வைத்து மாத சம்பளம் வாங்கும் கூலி வேலைக்குப் போகமாட்டேன் என முடிவெடுத்து; சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவெடுத்த நீங்கள் தான் இந்த சமூகத்தின் ஏகலைவர்கள். உங்களைப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.


எண்ணூறுக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட குடும்ப விழா வாகவும்; மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழாவாகவும்; இந்த விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறீர்கள். இதைப் பார்ப்பது மகிழ்ச்சி. இதில் கலந்து கொள்வது அதைவிட மகிழ்ச்சி. என்றாலும்

கல்வியில் கடைக்கோடியில் இருக்கிற இந்த சமூகத்திற்கு இது போதுமா என்றால் போதாது.

இது போன்ற குடும்ப விழாக்களையும் ; சித்திரை முழுநிலா பெருவிழாக்களையும் பெரிய பொருள் செலவழித்து நடத்துவதைவிட இந்த சமூகத்தை முன்னேற்றுவதற்குப் பயன்படக் கூடிய -

பள்ளிகள் தொடக்க விழா
கல்லூரிகள் தொடக்கவிழா
என்பன போன்ற விழாக்களைத்தான் வள்ளல் அதியமான் சமூகநலச்சங்கம் நடத்த வேண்டும். அதுதான் இந்தச சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையில் மாநில வங்கி அதிகாரிகள் சங்கம் என்று ஒரு சங்கம் இருக்கிறது. அந்த சங்கம் எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிகுலே­ன் பள்ளி என்று ஒரு பள்ளியை நடத்துகிறது. சென்னையில் இருக்கும் தரமான பள்ளிகளில் அதுவும் ஒன்று. சென்னை அண்ணா நகரில் இப்பள்ளி நடக்கிறது.

ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி வருமானத்தை விட இந்தப் பள்ளியின் வருமானம் அதிகம் என்கிறார்கள்.


வங்கி ஊழியர்களால் இதுபோன்ற ஒரு பள்ளியை நடத்த முடிகிறது என்றால் - தொழில் முனைவோர்களைக் கொண்ட வள்ளல் அதியமான் சமூகநலச் சங்கத்தால் ஏன் முடியாது?

முடியும் என நம்புங்கள். முயலுங்கள் முடியும். எந்த ஒரு சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத் திற்கும் அரசியல் முன்னேற்றத் திற்கும் கல்வி வளர்ச்சி தான் முக்கியம். அதிலே நாம் பின்தங்கி இருப்பதுதான் நமது பலவீனம்.

அடுத்ததாக ஆட்சி அதிகாரம்.

தமிழ்நாட்டில் நாம்தான் நம்பர் 1 பெரும்பான்மைச் சமூகம் என்பதால் நம் கையில்தான் ஆட்சி அதிகாரம் இருந்திருக்க வேண்டும் அது பெரும்பான்மைச் சமூகத்தின் உரிமை.
வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்தால் அவர்களே தமிழ்நாட்டை ஆள்வார்கள் என்று குமுதம் எழுதியதற்கு அடிப்படைக் காரணம் நாம் பெரும்பான்மைச் சமூகம் என்பதுதான்.
நாம் பெரும்பான்மைச் சமூகம் என்ற அடிப்படையில் மட்டும் ஆட்சி உரிமை கேட்கவில்லை.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் 5000 பேர்கள் சிறை சென்ற தியாகிகள் என்றால் அதில் 2000 தியாகிகள் வன்னியர்கள். இந்திய சுதந்திரத்திற்காக அதிக சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர் அஞ்சலையம்மாள். அவருக்கு இணையான பெண் போராளி யாரும் தமிழ்நாட்டில் இல்லை.

இந்திய சுதந்திரப் போராளிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேருக்கு மட்டும் தான் மகாத்மா காந்தியடிகள் சர்தார் பட்டம் வழங்கினார். அதில் நம்மவரான ஆதிகேசவ நாயகர் ஒருவர் (மற்றவர் வேதரத்தினம் பிள்ளை) அந்த காலத்தில் வன்னியர் மகாசங்கமே இந்திய விடுதலைப் பிரச்சார சங்கமாகத் தான் செயல்பட்டிருக்கிறது.


இந்திய விடுதலைக்குப் பின் மேற்கண்ட தியாக வரலாற்றைக் கொண்ட நம் சமூகத்தை சேர்ந்த ஒருவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்திருக்க வேண்டும். அதற்குப் பிறகும் தொடர்ந்து வந்திருக்க வேண்டும்.

இன்று வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஒரு வன்னியர் கூட வர முடியவில்லையே ஏன்?

ஆட்சி அதிகாரத்தைப் பொருத்தவரையில் வன்னியர்கள் தொடர்ந்து வனவாசத்தையே அனுபவித்துக் கொண்டிருக் கிறார்களே ஏன்?

பாண்டவர்களின் வனவாசம் கூட 13 வருடங்களில் முடிந்து போனது. வன்னியர்களின் அரசியல் வனவாசம மட்டும் முடிவற்றதாகத் தொடர்கிறதே அது ஏன்? எந்த துரியோதனனின் சதி வேலை இது? எந்த சகுனியின் கள்ள ஆட்டத்தால் நமக்கு இந்த நிலை?

1940இல் காமராச நாடார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகிறார். அப்போது பிடித்தது சனி.

1954இல் முதல்வராகும் வரை 14 ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சர்வாதி காரம் கொண்ட தலைவராக இருந்தார் காமராச நாடார்.


அந்த 14 ஆண்டு காலத்திலும் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் ஒரு ஜில்லா கமிட்டி தலைவராகக் கூட வன்னியர் யாரையும் வர விடவில்லை காமராச நாடார். இதன் மூலம் வன்னியர் அரசியல் உரிமைகளை முதன் முதலில் காவு கொண்டவர் காமராச நாடார். நமது அரசியல் வனவாசத்தை இதன மூலம் துவக்கி வைத்தார்.


இந்திய விடுதலைக்குப் பின் நடந்த முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடந்தது. தமிழகத்தின் சரிபாதியான வட மாவட் டங்களில் வன்னியர் சமூகமே பெரும்பான்மையான சமூகம். அப்படி இருந்தும் 1952 பொதுத் தேர்தலில் இரண்டு சட்ட மன்ற தொகுதிகள் மட்டும் தான் வன்னியருக்கு என்று அறிவித்தார் காமராச நாடார்.


காமராச நாடாரின் வன்னிய விரோத நடவடிக்கையின் உச்சம் இது.

13 வருட வனவாசத்தை முடித்த பாண்டவர்கள் துரியோதனனிடம் போய் தங்கள் நாட்டைத் தரும்படிக் கேட்டார்கள். துரியோதனன் தர மறுத்து விட்டான். துரியோத னனை எதிர்த்து பாண்டவர்கள் போர் தொடங்கினார்கள்.

பாண்டவர்களின் குரு ஷேத்திரப் போர் அது.

13 வருடம் காமராசர் தலைமையால் அரசியல் வனவாசத்தை அனுபவித்த வன்னியர்கள்‡

1952 தேர்தலில் இரண்டே இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் போட்டியிட வன்னியருக்கு வாய்ப்பளித்த அநீதியை எதிர்த்து - வன்னியர் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தார்கள். காமராசரோ வன்னியர்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்தார்.

இதை எதிர்த்து காமராச நாடாரின் தலைமைக்கு எதிராகத் தனிக் கட்சிகளைத் தொடங்கி ராமசாமி படையாட்சியாரும்; மாணிக்கவேல் நாயகரும் தேர்தல் களத்தில் இறங்கினார்கள்.

வன்னியர்களின் குருஷேத்திரப் போர் இது.

பாண்டவர்கள் துரியோத னனை தோற்கடித்து முடிசூட்டிக் கொண்டதோடு தங்கள் வனவாசத்தையும் தொலைத்தார்கள்.

வன்னியர்கள் காமராசரின் தலைமையில் ஆட்சி அமைக்க முடியாமல் வன்னிய விரோதியான கமராசரைத் தோற்கடித்தார்கள்.

வன்னியர்களின் அரசியல் வனவாசம் தொலைந்ததா? இல்லையே ஏன்?
இந்த நேரத்தில் மீண்டும் என் நினைவுக்கு வருவது மகாபாரதத்தின் இன்னொரு காட்சிதான்

பாண்டவர்கள் முடிசூட்டிக் கொண்டவுடன்; அவர்களை அழைத்து நீங்கள் போய் உங்கள் வம்சத்தின் மூத்தவரான திருதராஷ் டிரனிடம் ஆசி வாங்குங்கள் என அறிவுரை கூறுகிறார் கிருஷ்ணன்.

பாண்டவர்கள் ஆசிவாங்கப் புறப்படுகிறார்கள். அப்போது பீமனை தனியே அழைக்கிறார் கிருஷ்ணன். துரியோதனனைக் கொன்றவன் நீ என்பதால் திருதராஷ்டிரன் உன் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார். அவர் ஆசி வழங்குகிறேன் எனக்கூறி உன்னை அணைத்தே கொன்று விடுவார்.

எனவே திருதராஷ்டிரனிடம் நீ ஆசி வாங்கும்போது நீ இரும்பு உருவம் எடுப்பாயே அந்த உருவத்தை அவர் முன் வைத்து விடடு நீ விலகி வந்து விடு என்று அறிவுரை கூறுகிறார்.

அதேபோல் திருதராஷ்டிரன் முன் தன் இரும்பு உருவத்தை நிறுத்திவிட்டு விலகி வந்து விடுகிறான் பீமன். கிருஷ்ணன் சொன்னது போல் பீமன்தான் தன் முன் நிற்பதாக நினைத்து மூர்க்கத்தோடு அணைக்கிறான் திருதராஷ்டிரன். பீமனின் அந்த இரும்பு வடிவமே உடைந்து சுக்கு நூறாகச் சிதறுகிறது

1954 இல் ராமசாமிப் படை யாட்சியாரின் ஆதரவு இருந்தால் தான் முதல்வராக முடியும் என்ற நிலையில்; ராமசாமி படையாட்சி யாரின் ஆதரவு கேட்டு தூது அனுப்புகிறார் காமராச நாடார்.

1952 இல் காமராச நாடாரை முதல்வராக விடாமல் அவரது தலைமையைத் தோற்கடித்த கோபத்தில் இருக்கிறார் காமராசர். அவர் திருந்தி; வன்னிய விரோதப் போக்கை விட்டு உன்னிடம் ஆதரவு கேட்கிறார் என்று ஆதரவு தந்து விடாதே முதல்வராக்கி விடாதே ‡ எதிர்த்து அழிக்க முடியாத உன்னை காங்கிரசில் சேர்த்து அணைத்து அழித்து விடுவார் என தடுத்தாட்கொள்ள -

பீமனைக் காக்க மகாபாரதத்தில் கிருஷ்ணன் இருந்ததைப் போல் நமக்கு ஒரு கிருஷ்ணன் இல்லை.

1952இல் எதிர்த்து பெற்ற வெற்றியை 1954இல் ஆதரித்து அழிந்தோம். வனவாசம் மேலும் கடுமையாகத் தொடர ஆரம்பித்தது.

வன்னியர் சமூகத்தின் - துரியோதனனும் காமராசரே திருதராஷ்டிரனும் காமராசரே என்பது வரலாறானது.

அரசியலில் காமராசரின் ஆதிக்கம் வீழ்ந்த பிறகும் வன்னியர் அரசியல் வனவாசம் தொலைய வில்லையே ஏன்?

அடுத்ததாக இந்த சமூகம் சகுனி கருணாநிதியிடம் போய் மாட்டிக் கொண்டதே. அப்புறம் எப்படி வனவாசம் தொலையும்?

சகுனி கள்ள ஆட்டம் ஆடியே வன்னியர் சமூகத்தை வீழ்த்திக் கொண்டிருக்கிறார்.
இந்த சகுனிக்கு முதல்வர் என்ற முகவரியைக் கொடுத்தது நாம்தான். நம்மை முதுகில் குத்தி அழித்த நமது நம்பர் 1 துரோகி இந்த சகுனிதான்.

இந்த சகுனியின் ஆட்டம் முடிவுக்கு வரும்போது வன்னிய ருக்கு விடிவு கிடைக்கலாம்.
மீண்டும் ஒரு சகுனியிடமோ; மீண்டும் ஒரு திருதராஷ் டிரனிடமோ சிக்கிக் கொள்ளாமல் விழிப்போடு இருக்க வேண்டும்.

இந்த கூட்டத்திற்கு என்னை அழைத்த தோழர்கள்; இந்த சங்கத்தில் 90 சதவீதம் பேர் பாமகவினர் கொஞ்சம் பார்த்துப் பேசுங்கள் என்றார்கள்.

இந்த வேண்டுகோள் எனக்கு மகிழ்ச்சியையும் தந்ததும் வருத்தத்தையும் தந்தது.
90 சதவீதம் பேர் பாமக ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தி என் மகிழ்ச்சிக்கு காரணம்.

பார்த்து பேசுங்கள் என்றதன் மூலம் என்னை இந்த தோழர்கள் புரிந்து கொண்டது அவ்வளவு தானா என்ற வருத்தம்.

உண்மையை பேசினால் சிலரோ; பலரோ வருத்தப் படுவார்கள் என்பதற்காக நான் மாற்றிப் பேச முடியாது. இந்த தர்மசங்கடத்தோடுதான் உங்கள் முன்னே நிற்கிறேன். நீங்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள்.

எந்தக் கட்சிக்கும்; பாமக உட்பட குருட்டுத்தனமாக கோ­ம் போடும் கூட்டமாக இருக்காதீர்கள். அப்படிப் பட்டவர்களுக்கு என் பேச்சு வருத்தத்தையோ வலியையோ கொடுக்காது.
கேள்வி கேளுங்கள்.

அப்போதுதான் நமது அரசியல் வனவாசத்திற்கு விடிவு வரும். விடுதலையும் கிடைக்கும்.

கேள்வி கேட்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்த மீண்டும் நான் மகாபாரதத்திற்குள் தான் போக வேண்டியுள்ளது.

துரியோதன் தர்மனை சூதாட அழைக்கிறான். தர்மன் உடன் படுகிறான். அவன் கூடவே இருந்த பீமன்; அர்சுனன்; நகுலன்; சகாதேவன் ஆகிய நான்கு சகோதரர்களில் யாரும் சூதாட வேண்டாம் என தர்மனை தடுக்கவில்லை.

சூதாட்டத்தில் பணயமாக தர்மன் - பணிப்பெண்களை வைக்கிறான் தோற்கிறான். தன் தேரை வைக்கிறான் தோற்கிறான்.

ஆடுமாடு குதிரைகளை வைக்கிறான் - தோற்கிறான்.
ஆடை ஆபரணங்களை ஒவ்வொன்றாய் தோற்கிறான்
நாடு நகரங்கள் என அனைத்தையும் - தோற்கிறான்.
இப்படி எல்லா உடைமை களையும் தோற்கிறான். கூடவே இருந்த சகோதர முண்டங்கள் யாருமே வாய் திறக்கவில்லை. தர்மனை எதிர்த்து வாய் திறக்க வேண்டாம். எல்லா ஆட்டங்களிலும் ஜெயிக்கிறானே சகுனி.. அவன் ஆடுவது கள்ள ஆட்டம் என்று கூடவா சொல்லக் கூடாது?

எல்லா உடைமைகளையும் வைத்து இழந்த தர்மன் 13வது ஆட்டத்தில் தன சகோதரன் சகாதேவனை வைத்து சூதாடுகிறான். இழக்கிறான்.

இதை கூட எந்த சகோதர முண்டமும் எதிர்க்கவில்லை. அடுத்து நகுலன்; பீமன்; அர்சுனன் என எல்லோரையும் வைத்து இழக்கிறான்.

17வது ஆட்டத்தில் தருமன் தன்னையே வைத்து சூதாடுகிறான். தோற்கிறான்.

18வது ஆட்டம் -

எங்கள் மனைவி துரோபதையை வைக்கிறேன் என்கிறான் தருமன். அப்போது கூட அதிர்ச்சி அடைகிறார்களே தவிர தர்மனை எதிர்த்து யாரும் பேசவில்லை. எல்லாம் முடிந்தது.

துரோபதையை சூதாட்ட சபைக்கு அழைத்துவர ஆள் அனுப்புகிறான் துரியோதனன்.
இப்போதுதான் முதல் முறையாக ஒரு கேள்வியை எழுப்புகிறாள் துரோபதை...
என்னை வைத்து இழந்தபின் தன்னை வைத்து இழந்தாரா? தன்னை வைத்து இழந்தபின் என்னை வைத்து இழந்தாரா?

அவளை இங்கே வந்து இந்த கேள்வியைக் கேட்கச் சொல் என்கிறான் ‡ வர மறுத்த துரோபதை கூந்தலை பிடித்து இழுத்து வரக் கட்டளை இடுகிறான் துரியோதனன். துரோபதி இழுத்து வரப்படுகிறாள்.

சபையோரைப் பார்த்து மேற்கண்ட கேள்வியைக் கேட்டபின் 2வது கேள்வியாக -
ஒரு மண்ணின் மகளான என்னை‡

இந்த சபையில் இருக்கும் ஒரு மன்னனின் மருமகளான என்னை-

இப்படி சூதாட்ட சபையில் நிறுத்துவதை எந்த அரச நீதி அனுமதிக்கிறது? என்கிறாள் துரோபதை. பெரியவர்கள் வெட்கத்தால் தலைகுனிந்து மெளனம் காக்கிறார்கள்.

இதன் பிறகு - இவர்கள் என் அடிமைகள். இவர்கள் ஆடையை களைந்து நிர்வாணப்படுத்துங்கள் என்கி றான் துரியோதனன்.

பாண்டவர்கள் ஆடைகளைக் களைந்து நிற்கிறார்கள். எந்த முண்டமும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. அவர்கள் நிலையைப் பார்த்து துரோபதிதான் அழுகிறாள்.

அடுத்து - துரோபதி நம் புதிய அடிமை அவளது ஆடையைக் களையுங்கள். நமது புதிய அடிமையின் அழகை இந்த உலகம் காணட்டும் என்கிறான் துரியோதனன்.
இந்த அக்கிரமத்தை எதிர்த்து தர்மன் உள்ளிட்ட எந்த தடி முண்டங்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அவையிலிருந்த பிஷ்மர் உள்ளிட்ட எந்த பெரியவர்களும் வாய் திறக்கவில்லை.
துச்சாதனன் துகில் உரிய ஆரம்பிக்கிறான்.கிருஷ்ணா என்னைக் காப்பாற்று என துரோபதி அவலக்குரல் எழுப் புகிறாள். உரிக்க உரிக்க ஆடை வந்து கொண்டே இருக்கிறது என்பது கதை.

தன் கேள்விக்கு பதில் இல்லாத நிலையில் - என் கூந்தலைப் பிடித்து இழுத்து வந்த துச்சாதனனின் ரத்தத்தில் தோய்த்து எடுத்துதான் என் கூந்தலை முடிப்பேன் என துரோபதி சபதமிடுகிறாள்.


இந்த சபதத்திற்குப் பிறகுதான் தடியன் பீமனுக்கு புத்தி வருகிறது. எங்கள் துரோபதியை அவமானப் படுத்திய துரியோ தனனைக் கொல்வேன் என சபதமிடுகிறான்.

திருதராஷ்டிரனின் மனக்கண் விழிக்கிறது. போதும் மகளே போதும என் மருமகள்களில் அறிவில் சிறந்த உன் துன்பம் புரிகிறது. இனி ஒரு சாபம் இடாதே.

இதுவரை நடந்தவற்றை தடுக்காமல் இருந்தது என் தவறு தான். அதற்காக வெட்கப் படுகிறேன். உனக்கு இழைக்கப் பட்ட கொடுமைகளுக்கு மருந்தாக மூன்று வரம் தருகிறேன். என்ன வேண்டும் கேள் என்கிறான் திருதராஷ்டிரன்.

பாண்டவர்களை அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்யுங்கள். பாண்டவர்களின் ராஜ்யத்தை திருப்பிக் கொடுங்கள். என்கிறாள் துரோபதி.

திருதராஷ்டிரன் திரெளபதி கேட்ட வரங்களைத் தருகிறான்.

மூன்றாவது வரத்தையும் கேள் என்கிறான் திருதராஷ்டிரன். போதும். சத்ரிய வம்சத்தில் பிறந்த எனக்கு பேராசை எதுவும் இல்லை. இது போதும் என்கிறாள் துரோபதை.

தர்மனின் தர்மமோ; பீமனின் கதாயுதமோ; அர்ஜூனனின் வில்லாளும் திறமையோ பாண்ட வர்களின் அடிமைத்தளையை அகற்றவில்லை.


துரோபதையின் கேள்விகளும்; சபதமுமே - பாண்டவர்களுக்கு விடுதலை யையும் இழந்த ராஜ்ஜியத்தையும் பெற்றுத் தந்தது என்றால் - எந்த ஒடுக்குமுறைக்கு எதிராகவும் கேள்வி எழுப்புவது முக்கியம் தானே


எனவே தோழர்களே- நான் முன்பே சொன்னது போல எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள். வன்னிய சமூக உரிமைகளுக்காக குரல் எழுப்புங்கள். அடக்கு முறைக்கு எதிராகப் போராடுங்கள். எதற்கும் அவர்கள் செவி சாய்க்கவில்லை என்றால் அந்தக் கட்சியை ஒழிக்க சபதமிடுங்கள்.

இதற்குமேல் நான் என்ன சொல்லப் போகிறேன். என் கட்சிக்கு வாருங்கள். நான் 2016இல் ஆட்சி அமைக்கிறேன் என்றா கூப்பிடப் போகிறேன்? எதற்கு என்னைக் கண்டு பயப் பட்டார்கள் இந்தத் தோழர்கள் என்பதுதான் எனக்குப் புரிய வில்லை.

மற்ற கட்சிகளில் இருக்கிற வன்னியர்கள் எல்லாம் பாமகவுக்கு வாருங்கள் நாம் ஆட்சி அமைப்போம் என்று டாக்டர் ராமதாஸ்தான் அழைக்கிறார்.
இப்படி அழைப்பு விடுத்த ராமதாஸ்தான் - அடுத்த சில நாளில் ஒரு பேட்டியில்
நன் சாதி வெறியன் என்கிறார்கள். நன் சாதி வெறியன் இல்லை என்கிறார். இது சரிதான்.

தலித்துகளுக்கு என்னைப் போல் யார் செய்தார்கள் என்கிறார். வன்னியர்களை விட தலித்துகளுக்கு அதிகம் செய்திருக் கிறார் என்பதும் உண்மைதான். இது முடிந்து போன ஒன்று. இதை மாற்ற முடியாது.

அடுத்து - தலித்துகளின் கல்வி வளர்ச்சிக்கு தலித்துகளின் வேலை வாய்ப்பிற்கு என் ஆயுள் உள்ள வரை பாடுபடுவேன் என்கிறார்.

இப்படி தன் ஆயுள் உள்ளவரை தலித்துகளின் வளர்ச்சிக்கு பாடுபட உறுதி பூண்டுள்ள ராமதாஸ்

மற்ற கட்சிகளில் உள்ள வன்னியர்கள் எல்லோரும் அந்தந்த கட்சிகளை விட்டு விட்டு பாமகவுக்கு வந்து 2016இல் பாமக ஆட்சியமைக்க உதவுங்கள் என்கிறாரே எதற்காக?
நமது சகோதரிகளை; நமது மகள்களைக் கடத்தி சீரழித்தபின் பிளாக்மெய்ல் செய்து கோடி கோடியாக பணம் பறிக்கி றார்களே அந்த தலித்துகளுக்கு பாமக ஆட்சிக்கு வந்தால்தான் மேலும் உதவ முடியும் என்பதற்காகவா?

மரக்காணத்தில் இரண்டு வன்னியர்களை வெட்டிக் கொன்று; எண்ணற்றவர்களை வெட்டி ஊனப்படுத்தினார்களே அந்த தலித்துகளை பாமக ஆட்சியின் மூலம் மேலும் வலுப்படுத்தவா?

இந்தக் கேள்விகளை டாக்டர் ராமதாசிடம் கேளுங்கள்.

தருமபுரி கலவரத்துக்குப் பின்னும். மரக்காணம் கலவரத்துக்குப் பின்னும் என் வாழ்நாள் எல்லாம் தலித்து களுக்காக பாடுபடுவேன் என்கிற டாக்டர் ராமதாஸ் வன்னியத் தலைவரா? தலித் தலைவரா என்பதைக் கேட்டுத் தெளிய வேண்டியது மிகவும் முக்கியம்.

இல்லையேல் - துரியோதனனும், சகுனியும் நம்மை வனவாசத்தில் தள்ளியது போதாது என்று‡
இந்த நம் சகோதர தருமனும் நம்மை வைத்து சூதாடி மற்றும் ஒரு வனவாசத்துக்குள் தள்ளிவிடுவார் எனக்கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
அனைத்து சொந்தங்களுக்கும் வணக்கம்.


நம் குடும்பங்களின் முன்னேற்றமே நம் சமூகத்தின் முன்னேற்றம்

மகாசங்கத் தலைவர் உ.பலராமன் பேச்சு


வள்ளல் அதியமான் சமூக நல சங்கத்தின் சார்பில் இந்த முப்பெரும் விழாவைச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிற நண்பர்களே,

அரசன் அதியமான் பெயரில் இந்த சங்கத்தை தொடங்கும் உங்கள் அறிவு சார்ந்த செயலை நான் நெஞ்சாரப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.



நமது வன்னியகுல சத்திரிய மகா சங்கம் தொடங்கி 125 ஆண்டுகள் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. 


அதற்கான விழா வரும் டிசம்பர் திங்களில் சென்னையில் நடைபெறுகிறது. அந்த விழாவிற்கு நீங்கள் எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மகா சங்கத்தின் சார்பில் உங்களை அழைக்கிறேன்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்து சிறிய தொழில் செய்வோரும்; பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்வோரும் ஆகிய 800க்கும் மேற்பட்ட நம் சமூகத்தவர்கள் இணைந்து இந்த சங்கத்தை ஆரம்பித்துள்ளீர்கள். நீங்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள் என்றாலும் நம் சமூகச் சிந்தனையோடு கூடி இந்த சங்கம் ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பெங்களூருக்கு அடுத்த வளர்ச்சியடையும் ஊர் ஓசூர். இது மேலும் வளரும் முன்பு இப்போதே சிறுக சிறுக சேமித்து முதலில் சொந்த மனை வாங்கி வீடு கட்டுங்கள். இங்கே தொழில் செய்வது வளர்ச்சிக்கான வழி. இங்கே சொந்த வீடு வைத்திருப்பது உங்களது மரியாதையைக் கூட்டும். நீங்கள் பெறும் மரியாதை இந்த சமூகம் பெறும் மரியாதை ஆகும்.

ஒரு காலத்தில் நானும் பட்டறை நடத்தி சிறு தொழில் செய்து நஷ்டப்பட்டு பட்டறையை மூடி விட்டவன் என்ற முறையில் என் அனுபவம் உங்களுக்குப் பயன்படும் என்பதால் அது பற்றிய என் அனுபவத்தை சொல்கிறேன்.


டி.வி.எஸ் கம்பெனி பற்றி உங்களுக்குத் தெரியும். சிறிய சிறிய உதிரி பாகங்களை உங்களைப் போன்ற சிறுதொழில் செய்பவர் களிடமிருந்துதான் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

சிறிய சிறிய உதிரி பாகங்களை பெரிய கம்பெனிகள் தயாரிக்கக் கூடாது. சிறுதொழில் செய்பவர்களிடமிருந்துதான் வாங்க வேண்டுமென 1967க்கு முன்பு ஒரு சட்டம் இருந்தது. அதனல் உதிரிபாகங்களை சிறுதொழில் செய்பவர்களிடம் இருந்து டி.வி.எஸ்.போன்ற பெரிய கம்பெனிகள் வாங்கி வந்தன. இப்போது அந்த சட்டம் இல்லை.

அப்போது டி.வி.எஸ். கம்பெனியில் வேலை பார்த்த கண் காணிப்பாளர்கள் மேலாளர்கள் போன்ற பதவிகளில் வேலை பார்த்தவர்களுக்கு ஒரு ஆசை வந்தது.


ஆளாளுக்கு ஒரு பட்டறை வைத்திருப்பது போல பினாமிகள் பெயரில் லெட்டர் பேடு அடித்து வைத்துக் கொண்டு - சிறு தொழில் செய்யும் நம்மவர்களிடம் நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொள்வார்கள்.

ஒரு பொருளின் உற்பத்தி விலை ரூ 5/- என்றால் ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ லாபம் கொடுத்து வாங்கிக் கொண்டு; அதே பொருளை பினாமி போலி கம்பெனிகள் பெயரில் ரூ25/-க்கு தங்கள் டி.வி.எஸ். கம்பெனிக்கு விற்பார்கள்.

இப்படி நம் ஏமாளித்தனத்தை; ஏழ்மையை;

ஒற்றுமையின்மையை பயன்படுத்தி கொள்ளை அடித்தவர்கள் எல்லாம் முதலாளியாகி விட்டார்கள். பட்டறைகள் நடத்திய நம்மவர்கள் நஷ்டப்பட்டு பட்டறைகளை மூடி விட்டார்கள்.

எனவே சிறுதொழில் உற்பத்தியாளர்களாகிய நீங்கள் - ஒரு பொருளின் உற்பத்தி விலை ரூ 5 என்றால் இரண்டு ரூபாய் லாபம் போதும், 3 ரூபாய் லாபம் போதும் என்று 7, 8 ருபாய் என விலை நிர்ணயிக்கக் கூடாது.

மின்சாரம் இல்லாததால் வேலை இல்லாமல் வீணான நாட்கள்.

மூலப்பொருள் இல்லாததால் வேலை இல்லாமல் வீணான நாட்கள்..

ஆட்கள் வேலைக்கு வராததால் வேலை நடைபெறாமல் வீணான நாட்கள்

வார விடுமுறை நாட்கள்

எனக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருடத்தில் நான்கு ஐந்து மாதங்கள் வேலை நடக்காது.

வேலை செய்ய முடியாத, உற்பத்தி இல்லாத இந்த நாலைந்து மாதங்கள் பட்டினியா கிடக்க முடியும்? இதை எல்லாம் கூட்டி உற்பத்தி விலை 5 என்றால் விற்பனை விலை 25 என்று நீங்கள் நிர்ணயித்தால்தான் தொழிலை தொடர்ந்து நடத்தி முன்னேற முடியும். அதற்கு தொழில் செய்வோரிடம் ஒற்றுமை இருக்க வேண்டும். அதற்கு இத்தகைய நலச்சங்கத்தினர் கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும். இப்படி நம் உழைப்பை பிறர் சுரண்டி கொழுக்க விடாமல் தடுத்தாலே நாம் முன்னேறி விடலாம்.

நம் குடும்பங்களின் முன்னேற்றம் தான் நம் சமூக முன்னேற்றம்.

இந்த சங்கத்தில் 800 பேர்கள் இருக்கிறீர்கள். உங்கள் வருமானத்தில் மாதம் 1000 ரூ சேமிக்க முயற்சி செய்தால் - இந்த சங்கத்தின் மாத நிதியே 8 லட்சமாகும். ஒரு வருடத்தில் ஒரு கோடி சேர்ந்து விடும். முதலில் ஒரு 5 ஏக்கர் நிலம் வாங்குங்கள். அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஒரு பள்ளிக்கான கட்டிடத்தைக் கட்டுங்கள். ஒரு பள்ளியை இந்த சங்கத்தின் பெயரில் துவங்குங்கள்.

இது - உங்களுக்கு மிகப் பெரிய சமூக கெளரவத்தையும் அங்கீ காரத்தையும் பெற்றுத் தரும்.

சின்ன பட்டறை நடத்து பவர்களுக்கு என்ன பிரச்சனை? சிறு வணிகம் செய்பவர்களுக்கு என்ன சிக்கல்? சிறு சிறு வியாபாரிகளுக்கு என்னென்ன தொல்லைகள்?

என்பதைப் பற்றி சிந்திக்கிறவர்கள் ஆட்சியிலும் இல்லை. அதிகாரத்திலும் இல்லை.

சிறு பட்டறை தொழில் செய்பவன் தொழில் வரி கட்ட வில்லை என்றால் அவனை கைது செய்யத் தயங்காத இந்த அரசாங்கம்...

1000 கோடி, 2000 கோடி முதலீடு செய்கிற கம்பெனிகளுக்கு எத்தனை சலுகைகளை; எவ்வளவு மானியங்களை இந்த அரசாங்கங்கள் கொட்டிக் கொடுக்கிறது தெரியுமா?

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்‡

போர்டு கம்பெனி என்ற வெளிநாட்டு கம்பெனி நம்ம ஊருக்கு வந்தது- அதற்கு 30 ஆண்டுகளுக்கு விற்பனை வரி கிடையாது.

தண்ணீர் இலவசம்; தொழில் வரி கிடையாது.
24 மணிநேரம் தடையில்லா மின்சாரம்;
இங்கே உங்களுக்கு மின்சாரம் எப்போ வரும் என்று உங்களுக்கே தெரியாது.

24 மணி நேரம் தண்ணீர் தொழில் பாதுகாப்பு
இவ்வளவு சலுகைகளையும் வசதிகளையும் கொட்டிக் கொடுப்பதால் அரசுக்கு ஏற்படும் இழப்புகள் அத்தனையும் நம் தலையில்தான்.

இந்த 1000 கோடி, 2000 கோடி முதலீட்டாளர்களால் எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு என்றால் 1000 பேருக்கு, 2000 பேருக்கு தான்.

இதே 1000 கோடி முதலீட்டை சிறு தொழில்களில் செய்தால் குறைந்தது ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தலாம்.

ஏன் நமது ஆட்சியாளர்கள் வெளநாட்டு கம்பெனிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்... ஏன் சிறு தொழில் முனைவோரை ஊக்குவிக்க உதவுவதில்லை?
போர்டு கம்பெனிக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நம் விவசாயி களிடமிருந்து சென்ட் 20 ரூபாய்க்கு வாங்கினார்கள். அதை போர்டு கம்பெனிக்கு 2000க்கு விற்றார்கள். இந்த கொள்ளைப் பணத்தை அரசியல்வாதிகள் பங்கு போட்டுக் கொண்டார்கள்.
இதில் நான் விரிவாக உள்ளே போக விரும்பவில்லை.

இப்படி - நமது விவசாயிகளுக்கு துரோகம் செய்கிற, ஏமாற்றுகிற வஞ்சிக்கிறவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமரும்போது, நீங்கள் தொழில் செய்தால் மட்டும் போதாது. கொஞ்சம் அரசியலையும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்த தொகுதியில் எங்கள் கட்சிக்காரர்தான் எம்.எல்.ஏவாக இருந்தார். சட்டசபைக்கே வரமாட்டார். ஏன் என்றால் அவருக்கு தமிழே பேச வராது.
தெலுங்கிலாவது பேசுவாரா என்றால் அதிலும் பேசமாட்டார்.

ஆங்கிலத்திலாவது பேசத்தெரியுமா என்றால் ஆங்கிலமும் தெரியாது.

அப்புறம் எதற்கு அவரை எம்.எல்.ஏ ஆக்கியது காங்கிரஸ் கட்சி?

எங்கள் கட்சியில் பேசத் தெரியாதவனை எல்லாம் தலைவனாக்குவார்கள்.

கொஞ்சம் பேசத் தெரிந்தவர்களை எல்லாம் கையிலே மஞ்சள் பையை கொடுத்து பேச்சாளனாக்கி விடுவார்கள்.

மற்ற கட்சிகளிலும் இதுதான் நிலைமை. சொன்னால் சண்டை போடுவார்கள் என்பதால் எங்கள் கட்சியைப் பற்றிச் சொன்னேன்.

ஒரு தொழில் நகரத்துக்கு இப்படிப்பட்ட ஆட்கள் எம்.எல்.ஏவாக வந்தால் தொழில் எப்படி வளரும்?
உங்கள் பிரச்சனைகள்; சிக்கல்கள்; தேவைகள் எப்படித் தீரும்?

எனவே தான்...
உங்கள் பிரதிநிதிகளை தேர்ந் தெடுப்பதில் உங்களுக்கு அரசயல் கவனமும் தேவை எனக் கூறினேன்.

இறுதியாக - நம் சமூகத்துக்கே உள்ள குணம்.. பற்றி சில வார்த்தைகள்.

குடும்பத்தில் - கணவன் - மனைவி அமர்ந்து பேசாத ஒரு குலம் உண்டு என்றால்; ஒரு சாதி உண்டு என்றால் அது நம்ம சாதிதான்.

கணவன் மனைவி; தாய் மகள்; தந்தை மகன் என உட்கார்ந்து பேசுங்கள். குடும்பப் பிரச்சனைகளை குடும்பத்தின் எதிர்காலத் திட்டங்களை குழந்தை களின் எதிர்கால நலங்களை நாட்டு நடப்பை எல்லாவற்றையும் உட்கார்ந்து பேசுங்கள். பேசினால் தானே உறவு? இப்படிப் பேசாததால் தானே தருமபுரிகள்?

பொருளாதார மேம்பாட்டிற்கு நேரம் ஒதுக்குவதைப் போலவே குடும்ப மேம்பாட்டிற்கும் நேரம் ஒதுக்கி பேசுங்கள் நன்றி வணக்கம்.



1 கருத்து:

  1. வள்ளல் அதியமான் சமூக நலச்சங்க நிர்வாகத்தின் சார்பாக நன்றி !!!நன்றி !!!

    பதிலளிநீக்கு