சனி, 15 பிப்ரவரி, 2014

2014 நாடாளுமன்றத் தேர்தல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனைத்து வன்னிய அமைப்புகளுக்கும் வடதமிழ்நாடு மக்கள் இயக்கத்தின் வேண்டுகோள்

ஆட்சி அதிகாரத்தில் இல்லாத இனங்கள் அழியும் என்பது வரலாறு கற்பிக்கும் பாடம்.

இதற்குஉதாரணம் தமிழ் நாட்டில் தமிழினம்.

ஆட்சி அதிகாரத்தில் இல்லாத சமுதாயங்கள் அழியும் என்பதற்கு- பொருளாதாரத்தில் , கல்வியில், வேலைவாய்ப்பில், சமூக நிலையில் தாழ்ந்து தாழ்ந்து கொண்டிருக்கும் வன்னிய சமூகமே உதாரணம்.

ஜனநாயகத்தில் பெரும்பான்மைச் சமூகம் தான் அரசியலிலும் கட்சிகளிலும் ஆதிக்கம் பெற்றிருக்க வேண்டும். அப்படி ஆதிக்கம் பெற்றிருந்தால் தான் அது ஜனநாயகம்.

அப்படி இல்லாமல் - சிறுபான்மை ஆதிக்கம் பெற்றிருந்து அந்த சிறுபான்மைகளிடம் பெரும்பான்மை உத்தியோகங்களுககு கையேந்தி நிற்பதற்கு பெயர் ஜனநாயகம் அல்ல. சர்வாதிகாரம்.

அந்த வகையில்- தமிழ் நாட்டின் அரசியலில்; ஆட்சியில் ஆதிக்கம் பெறுவதற்கான முதல் உரிமை - தமிழ்நாட்டின் பெரும் பான்மைச் சமூகமான வன்னிய சமூகத்திற்கே உரியது. அரசியலில்; ஆட்சியில் அதிகாரத்தில் நமக்கான உரி மையை நாம் பெற்றிருக்கிறோமா?

வருவது நாடாளுமன்ற தேர்தல் என்பதால் - இதுவரை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் நாம் பெற்ற எம்.பி பதவிகள் எத்தனை? மத்திய அமைச் சரவையில் நாம் பெற்ற மந்திரி பதவிகள் எத்தனை? என்பது குறித்துப் பார்ப்போம்.


இதுவரை நடந்த 15 நாடாளுமன்ற தேர்தல்களில்; வன்னியர் சமூகம் பெற்ற எம்.பிக்கள் எத்தனை, மற்ற சமூகங்கள் பெற்ற எம்.பி. க்கள் எத்தனை என்பதை விளக்கு வதற்காக பட்டியல் 1-ல் வெளியிட் டுள்ளோம்.

ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் வன்னியர் சமூகம் பெற்ற எம்.பிக்கள் எத்தனை என்பதை விளக்க பட்டியல் 2‡ல் வெளியிட்டுள்ளோம்.

மத்திய அமைச்சரவைகளில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெற்றுள்ளவர்கள் யார் யார்? அவர்கள் எந்தெந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காக பட்டியல் 3-ல் வெளியிட்டுள்ளோம்.

இந்தப் பட்டியல்கள் அடிப் படையில் தமிழ்நாட்டின் நம்பர் 1 பெரும்பான்மைச் சமூக மான நாம்; நமக்கான உரிமைகளைப் பெற்றிருக்கிறோமா? விரிவாக ஆராய்வோம்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் - வன்னியர்கள் பெற்றது - 73 எம்.பிக்கள்

முக்குலத்தோர் பெற்றது - 81 எம்.பிக்கள்

கொங்கு வேளாளர் பெற்றது - 71 எம்.பிக்கள்

நாடார்கள் பெற்றது - 49 எம்.பிக்கள்

முதலியார்கள் பெற்றது - 52 எம்.பிக்கள்

தமிழரல்லாத நாயுடு ரெட்டிகள் பெற்றது - 82 எம்பிக்கள்

தென்தமிழ்நாட்டில் மட்டுமே அதிக அளவில் வாழும் முக்குலத்தோர்; நாடார்; கொங்கு வேளாளர் ஆகிய மூன்று சமூகங்களின் ஒட்டு மொத்த மக்கள் தொகைக்கு சற்றேறக்குறைய சமமானதே வன்னியர் சமூக மக்கள் தொகை.

மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் கொங்கு வேளாளர்; முக்குலத் தோர்; நாடார் சமூகங்கள் அளவுக்கு அதாவது சுமார் 200 எம்பிக்களை வன்னியர் சமூகம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் வன்னியர் சமூகம் வெறும் 73 எம்.பி பதவிகளை மட்டுமே பெற்றிருப்பதற்கு வன்னியர் சமூகத்திற்கு அரசியல் கட்சிகள் செய்த துரோகங்களே காரணங்கள் ஆகும்.

வடதமிழ்நாட்டு எல்லைக்கு அப்பால் எந்த வன்னியனையும் எந்த அரசியல் கட்சிகளும் எம்.பி ஆக்கவில்லை.

ஆனால் - முக்குலத்தோர் 13 பேர்களை யும்; கொங்கு வேளாளர் 10 பேர் களையும் நாடார்கள் 2 பேர்களை யும் வட தமிழ்நாட்டில் நிறுத்தி எம்.பி ஆக்கி இருக்கின்றன அரசியல் கட்சிகள். இந்த 25 எம்.பி பதவிகளும் வன்னியர்கள் பெற்றிருக்க வேண்டியவை.


முதலியார்கள் வடதமிழ்நாட்டில் மட்டும் 45 எம்.பிக்களைப் பெற்றிருக் கிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் இவர்களுக்கு 5 தொகுதிகளுக்கு கூட உரிமை இல்லை. எனவே இவர்கள் அதிகம் பெற்ற 40 எம்.பி பதவிகள் வன்னியருக்குரியது.

தமிழரல்லாத நாயுடு ரெட்டி போன்றோருக்கு வடதமிழ் நாட்டில் 29 எம்.பி பதவிகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. இதில் 25 எம்.பி பதவிகள் வன்னிய ருக்கு கொடுக்கப் பட்டிருக்க வேண்டியவை.

இவைகளையும் நாம் பெற்ற 73 எம்.பி பதவிகளையும் கூட்டிப் பார்த்தால் 163 வருகிறது.

1998ல் நடந்த தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இதுவரை நடந்த 15 தேர்தல்களிலும் இதே அளவு வெற்றி பெற்றிருந்தால் கூட 150 எம்.பி பதவிகளுக்கும் மேல் வன்னியர்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதால் மேற்கண்ட 163 எம்பிக்கள் நமக்குரியது என்பது நியாயமான கோரிக்கையே.

73-க்கு மேற்பட்ட எம்பிக்களை நாம் பெற முடியாமல் போனதற்கு யார் காரணம்?

காமராஜ நாடாரும் கருணாநிதியுமே முக்கிய காரணம்.

இவர்களுக்கு நாம் என்ன கொடுமைகளைச் செய்தோம்?
நாம் உட்கார வேண்டிய முதல்வர் நாற்காலியில் இவர்களை உட்கார வைத்து இவர்களுக்கு முதல்வர் என்ற முகவரியைத் தந்தோமே அதுதான் நாம் செய்த தவறு?

காமராஜ நாடாருக்கும்; கருணாநிதிக்கும் முதல்வர் என்ற முகவரியைக் கொடுத்தது வன்னிய சமூகமா?

இப்படி சிலர் கேட்கக்கூடும் - அவர்களுக்காக இந்த விளக்கம்.

வெள்ளையனே வெளியேறு என்பதற்கான போராட்டத்தில் அதிகப் பங்காற்றியவர்களும்; அதிக சிறை தண்டனைகளைப் பெற்றவர்களும் வன்னியர்களே என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் ஏராளமிருக்கின்றன.

1940இல் விடுதலை இயக்கமான தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு காமராஜ நாடார் தலைவர் ஆனார்.


தலைவரானவுடன் தேச விடுதலைக்காகப் போராடி சிறைக் கொடுமைகளை அனுபவித்த வன்னிய தியாகிகளை எல்லாம ஒதுக்கி ஓரம்கட்டிவிட்டு - கள்ளுக்கடை நடத்தியவர் களுக்கு கதர் சொக்காயை மாட்டிவிட்டு காங்கிரஸ் பிரமுகர் ஆக்கினார் காமராஜ நாடார் என்கிற குற்றச்சாட்டுகள் - அந்தக் காலகட்டத்தில் வன்னியர் சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட பல்லவநாடு இதழில் பக்கம் பக்கமாக வெளியிடப்பட்டுள்ளன.

வெள்ளையனை வெளியேற்றுவதற்காக தோற்று விக்கப்பட்ட காங்கிரஸ் இயக் கத்தை; வன்னியனை வெளியேற் றுவதற்கான இயக்கமாக உருமாற்றி சிறுமைப் படுத்தியவர் காமராச நாடார்.

இதன் உச்ச கட்டமாக - சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் - சட்ட மன்றத்திற்கான இரண்டு தொகுதிகளை மட்டுமே வன்னி யருக்கு ஒதுக்க முடியுமென அறிவித்தார்.


காமராச நாடாரின் இந்த வன்னிய விரோத ஒடுக்கு முறைக்கு எதிராக உதய மானதுதான் எஸ்.எஸ்.ராமசாமி படை யாட்சியார் தலைமையிலான தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும்; மாணிக்கவேல் நாயகரின் தலைமையிலான பொதுநலக்கட்சி என்கிற காமன்வீல் கட்சியும்.

இக்கட்சிகள் 1952 பொதுத் தேர்தலில் மொத்தம் 25 எம்.எல்.ஏ பதவிகளைப் பெற்றன.
இதனால் முதல் பொதுத் தேர்தலிலேயே காங்கிரஸ் இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது சென்னை மாகாணத்தில் மட்டுமே.

இதனால் - தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவரான காமராசரை நம்பிப் பயனில்லை எனக் கருதிய நேரு - அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்த ராஜாஜியை அழைத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்படி வேண்டினார். இதனால் 1952ல் மாணிக்கவேல் நாயகரின் ஆதரவைப் பெற்று சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியானார் ராஜாஜி.

காமராசரின் வன்னிய விரோதப் போக்குக்கு - காமராசருக்கு வன்னிய சமூகம் கொடுத்த முதல் மரண அடி இது.

குலக்கல்வி எதிர்ப்பு என்ற போர்வையில் காமராசரின் தூண்டுதலில் முதல்வர் பதவியிலருந்து ராஜாஜி ராஜினாமா செய்தார்.

இதன் பிறகு பெரியார் மூலம் ராமசாமி படையாட் சியாருக்கு தூது அனுப்பி அவரது ஆதரவைக் கெஞ்சிக் கூத்தாடிப் பெற்று 1954ல் காமராச நாடார் முதல்வரானார்.

காமராச நாடாரால் 1952ல் முதல்வராக முடியாமல் போனதற்கும் ‡ பிறகு 1954ல் அவருக்கு முதல்வர் என்ற முகவரி கிடைத்ததற்கும் வன்னியர் சமூகமே காரணம்.


இந்த உண்மைகளைத் தெரிந்தவர்கள் - காமராச நாடாருக்கு முதல்வர் என்ற முகவரியைத் தந்தது வன்னிய சமூகமே என்பதை மறுக்க மாட்டார்கள்.

1940 முதல் காமராச நாடார் வன்னியர் அரசியலை வேரறுத்து வெந்நீர் ஊற்றிய துரோகங்களை நினைவில் வைத்து - முதல்வராவதற்கு நாங்கள் ஆதரவு தர மாட்டோம் என்று வன்னியர் கட்சிகள் உறுதியாக நின்றிருந்தால் - 1954 இல் காமராச நாடாருக்கு முதல்வர் என்ற முகவரி கிடைத்திருக்காது. தமிழக அரசியல் வரலாறே மாறி; பின்னர் காமராசர் முதல்வர் என்ற முகவரியைப் பெற முடியாமலே போயிருக்கும் என்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

இதேபோல் - திமுகவிற்கு 1967இல் ஆளும் கட்சி அந்தஸ்தை தந்தவர்களும்- இதன் மூலம் -
அண்ணாதுரைக்கும் கருணாநிதிக்கும் முதல்வர் என்ற முகவரியைத் தந்தவர்களும் வன்னியர்களே!

திமுக போட்டியிட்ட 1957 தேர்தலில் ‡ வெற்றி பெற்ற 15 தொகுதிகளில் 14 தொகுதிகளின் வெற்றி வன்னியர் பெரும்பான்மையில் வாழும் வடதமிழ்நாட்டிலிருந்தே கிடைத்தது.

திமுக 1962வது தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டபோதும் கூட- திமுக வெற்றி பெற்ற 48 தொகுதிகளில் 39 தொகுதிகளின் வெற்றியைத் தந்ததும் வடதமிழ் நாடே.
இந்த இரு தேர்தலிலும் ‡ தென் தமிழ்நாட்டவர்களைப் போலவே வடதமிழ் நாட்ட வர்களும் திமுகவை ஆதரிக் காமல் போயிருந்தால் திமுக என்ற கட்சி முளையிலேயே கருகி காணாமல் போயிருக்கலாம்.


இந்த இரு தேர்தல்களிலும் வன்னியர் பூமி தந்த அபரிமித ஆதரவால்தான் 1967இல் திமுக ஆளும் கட்சி அந்தஸ்தைப் பெற்றது;

இதன் காரணமாகத்தான் அண்ணாதுரையும், கருணா நிதியும் தமிழகத்தின் முதல்வர் கள் ஆனார்கள்.


இந்த வரலாறுகளை அறிந்தவர்கள் - திமுகவுக்கு ஆளும் கட்சி அந்தஸ்தை தந்தவர்களும்; அண்ணாதுரைக்கும்; கருணா நிதிக்கும் முதல்வர்கள் என்ற முகவரியை தந்தவர்களும் வன் னியர்களே என்ற உண்மையை மறுக்க மாட்டார்கள். மறுக்க வும் முடியாது.

இதற்கு நன்றிக்கடனாக - காமராஜ நாடாரும் காங்கிரசும்; கருணாநிதியும்; திமுகவும்; வன்னியருக்கு செய்தது என்ன?


“நாட்டு இலக்கணப்படி எந்த நாட்டிலும் மைனாரிட்டி சமுதாயம்; மைனாரிட்டி மதம்; மைனாரிட்டி கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ செல்வாக்கோ ஏற்படுமானால் அது அந்த நாட்டின் நலத்திற்கு; பொதுவளரச்சிக்கு கேடாகவே முடியும்.


மைனாரிட்டிக்கு அளிக்கும் சலுகையும்; உரிமையும் துரோகம்; பச்சைத்துரோகம் எனற குழந்தைகளைத்தான் ஈனும்; ஈன்று வருகிறது. இது இயற்கைப் பண்பு.
இவ்வளவு எழுதப்பட்டதன் காரணம்‡ மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பது நாட்டுக்கு; நாட்டு பெருவாரி மக்கள் சமூகத்திற்கு கேடு என்பதை விளக்கவேயாகும்.”
இது பெரியார் ஈ.வெ.ரா வாக்கு.

நாம் இருக்க வேண்டிய ஆட்சி பீடத்தில் சிறுபான்மைச் சமூகத்திலிருந்து வந்த காமராஜ நாடாரையும்; கருணாநிதி யையும் உட்கார வைத்தோம்.
அதற்கு நன்றிக்கடனாக காமராச நாடாரின் காங்கிரசும் கருணாநிதியின் திமுகவும் நமக்குப் பச்சைத் துரோகங்களை மட்டுமே பரிசாகத் தந்தார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் வன்னியர் துரோகம்

இதுவரை நடந்த தேர்தல்களில் இந்தக் கட்சி 30 எம்.பி பதவிகளைப் பெற்றுள்ளது.
இதனை எந்தெந்த சமூகங்களுக்குக் கொடுத்துள்ளது?


1.முக்குலத்தோருக்கு 5
2.கொங்கு வேளாளருக்கு 5
3.முதலியாருக்கு 3
4.நாடாருக்கு 2
5.பார்ப்பனருக்கு 1
6.தாழ்த்தப்பட்டோருக்கு 7
7.தமிழரல்லாத நாயுடு ரெட்டி ஆகியோருக்கு - 7

தமிழ்நாட்டின் நம்பர் 1 பெரும்பான்மைச் சமூகமாக இருக்கிற வன்னியர் ஒருவருக்குக் கூட எம்.பி பதவி அளிக்கவில்லை என்பது கம்யூனிஸ்டு கட்சிகள் வன்னியர் சமூக விரோதக் கட்சிகள் என்பதற்கான ஆதாரமாகும்.

எனவே கம்யூனிஸ்டு கட்சிகள் வடதமிழ்நாட்டில் எங்கு போட்டியிட்டாலும் அதனைத் தோற்கடிக்க வேண்டியது நம் முதல் கடமை என ஒவ்வொரு வன்னியனும் சபதமேற்க வேண்டும்.

இது மட்டுமல்ல - வன்னியர் ஆதரவு வேண்டுமென்றால் ‡ இந்தக் கட்சிகளை வடதமிழ்நாட்டில் போட்டியிட தொகுதிகளை ஒதுக்காதீர்கள் என இக்கட்சிகளின் கூட்டணியில் சேர்க்கும் கட்சிகளுக்கும்; அனைத்து வன்னிய அமைப்புகளும் வேண்டுகோள் வைக்க வேண்டும்.

கருணாநிதி திமுகவின் வன்னியர் துரோகம்

இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சி பெற்ற எம்.பி பதவிகள் மொத்தம் 143.

இதில் 96 பதவிகளை வடதமிழ் நாட்டிலிருந்தும் 46 பதவிகளை தென்தமிழ் நாட்டிலிருந்தும் பெற்றிருக்கின்றது.

தென்தமிழ்நாட்டில் பெற்றதற்கு இருமடங்குக்கு மேலான பதவிகளை வடதமிழ் நாட்டில் பெற்றதற்கு இக்கட் சிக்கு தொடர்ந்து அளித்துவரும் வன்னியர்களின் அபரிமித ஆதரவே காரணம்.

தென்தமிழ்நாட்டில் இக்கட்சி 43 பதவிகளை மட் டுமே பெற்றதற்கு அங்குள்ள நாடார்கள்; கொங்கு வேளாளர்; முக்குலத்தோரின் ஆதரவு திமுகவுக்கு இல்லாததே முக்கிய காரணம்.

இதற்காக - கருணாநிதி வன்னியருக் நன்றியுடையவராக நடந்து கொண்டிருக்கிறாரா?

தென்தமிழ்நாட்டைப் போல் இருமடமங்குக்கு மேலான எம்.பி. பதவிகளைக் கொடுத்த வன்னிய சமூகத்திற்கு எத்தனை எம்.பி, பதவிகளைக் கொடுத்தார்?

வெறும் 11 எம்.பி பதவிகளை மட்டுமே கொடுத்தார்.


சிறுபான்மை களுக்கு எத்தனை பதவிகளைக் கொடுத்தார்? 22 பதவிகளைக் கொடுத்தார். இவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த துரோகிçயா? இந்தப் பாவியையா இன்னமும் நம் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்?

என்று திமுக வன்னியன் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேணடும்.

கருணாநிதியின் வன்னிய துரோகத்தை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள பட்டியல் 2‡ஐ பாருங்கள்.
1957 முதல்1991 வரை திமுக 9 தேர்தல்களில் போட்டி யிட்டுள்ளது. இந்த 9 தேர்தல் களின் மூலம் வன்னியர்களுக்கு எத்தனை எம்.பி பதவிகளைக் கொடுத்தது திமுக?

இரண்டே இரண்டு எம்.பி பதவிகளை மட்டுமே கொடுத்தார் கருணாநிதி.

1977 முதல் 1991 வரை 5 தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்டுள்து அதிமுக அக்கட்சி வன்னியர்களுக்கு எத்தனை எம்.பி பதவிகளைக் கொடுத்தது?
திமுகவைப் போல் மூன்று மடங்காக 6 எம்.பி பதவிகளைக் கொடுத்திருக்கிறது.

இதுவரை 10 தேர்தல்களில் போட்டியிட்ட அதிமுக 10 எம்.பி.க்களையும் - 14 தேர்தல் களில் போட்டி யிட்ட திமுக 11 எம்.பிக் களையும் வன்னியருக்கு கொடுத்திருக்கிறது.

இத்தனைக்கும் திமுகவுக்கு நாம் கொடுத்த ஆதரவில் பாதி ஆதரவைக் கூட அதிமுகவுக்கு நாம் கொடுக்கவில்லை.

வடதமிழ்நாட்டில் பெற்ற 96 எம்.பி பதவிகளில் 11 பதவிகளை மட்டுமே வன்னியருக்கு கொடுத்த திமுகவையும்;

வடதமிழ்நாட்டில் அதிமுக பெற்ற 34 எம்.பி பதவிகளில் அக்கட்சி வன்னியருக்கு 10 எம்.பிக்களை கொடுத்திருப் பதையும் ஒப்பு நோக்கினால் தான் கருணாநிதி எவ்வளவு பெரிய வன்னியர் துரோகி என்பது பளிச்செனப் புரியும்.

கருணாநிதியின் துரோகம் இதோடு முடிந்ததா?


இதுவரை மத்திய அமைச் சரவையில் 23 அமைச்சர்களைப் பெற்றிருக் கிறது திமுக.
இதை எந்தெந்த சமூகங் களுக்கு கருணாநிதி கொடுத் திருக்கிறார்?

வன்னியரில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லாத கருணா நிதியின் இசைவேளாளர் சாதிக்கு 9 எம்.பி பதவிகளை கொடுத்ததோடு 7 பேர்களை மத்திய அமைச்சராகவும் ஆக்கி இருக்கிறார்.

வன்னியரில் 3இல் ஒரு பங்கு கூட இல்லாத முக்குலத்¼ தாருக்கு 23 எம்.பி பதவி களையும் அதில் 5 பேர்களுக்கு மத்திய அமைச்சர் பதவியும் கொடுத்திருக்கிறார்.
வன்னியரில் பத்தில் ஒரு பகுதி கூட இல்லாத முதலியார் களுக்கு 20 எம்.பி பதவிக ளையும் ஒருவருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்திருக்கிறார்.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு - 3 மந்திரி பதவிகள்.

திமுகவுக்கு 9 எம்.பி பதவிகளையும் அதிமுகவுக்கு 19 எம்.பி பதவிகளையும் கொடுத்த கொங்கு வேளாளர்களுக்கு 2 அமைச்சர் பதவிகளைக் கொடுத்திருக்கிறார்.

நாயுடு ரெட்டி போன்ற தமிழரல்லாதவர்களுக்கு 22 எம்.பி பதவிகளையும் 2 அமைச்சர் பதவிகளையும் கொடுத்திருக்கிறார்.

திமுகவுக்கு 7 எம்.பி பதவிகளையும் அதிமுகவுக்கு 9 எம்.பி பதவிகளையும் கொடுத்த நாடார் சமூகத்திற்கு ஒரு அமைச்சர் பதவி.

வெறும் 0.1 சதவீதம் மட் டுமே உள்ள நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்திற்கு ஒரு எம்.பி பதவியும்; ஒரு அமைச்சர் பதவியும் கொடுத்த கருணாநிதி 96 எம்.பி பதவிகளை திமுக பெறக் காரணமான வன்னியர் சமூகத்திற்கு எம்.பி பதவி கொடுப்பதிலும் துரோகம். 55 வருடம் கழித்து - 2009ல் ஜெகத்ரட்சகனுக்கு துக்கடா மந்தரி பதவியைக் கொடுத்தார். 


ஜெகத் ரட்சகனுக்கு கொடுத்த அமைச்சர் பதவி கூட அவர் வன்னியர் என்பதற்காக அல்ல - என்பது ஊரறிந்த ரகசியம். ஜெகத்ரட்சகன் அல்லாமல் வேறு ஒரு வன்னியனால் திமுகவில் மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றிருக்கவே முடியாது.

கருணாநிதியின் இத்தனைத் துரோகங்களையும் பார்த்த பிறகுதான் - முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்தவரான எல்.கணேசன் - தொடர்ந்து துரோகம் செய்யும் திமுகவைத் தூக்கிச் சுமக்கும் வன்னியர் களைப் பார்க்காதவரை - முக்குலத்தோர்தான் முட்டாள் கள் என்று நினைத்திருந்தேன் என்று சொன்னார்.

திமுகவின் அழிவில்தான் வன்னியர் எழுச்சி சாத்தியம் என்பதற்கான ஆதாரங்கள் இவை.

திமுகவை அழித்து வன்னிய எழுச்சிக்கு வழிவகுக்கப் போகிறோமா? வன்னியத் துரோகமெனும் குஷ்ட ரோகத்தால் சீழ்வழியும் திமுகவை தூக்கிச் சுமந்து - முட்டாள்களாகவே இருக்கப் போகிறோமா?


முடிவெடுக்கும் இறுதிக் கட்டத்திற்கு வந்திருக்கிறது வன்னியர் சமூகம்.

அதிமுகவின் வன்னியர் துரோகம்

இந்தக் கட்சி கடந்த 10 நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு 96 எம்.பி பதவிகளைப் பெற்றிருக்கிறது.

இதில் - வடதமிழ்நாட்டில் 34 பதவிகளையும் தென்தமிழ் நாட்டில் 62 எம்.பி பதவிக ளையும் பெற்றிருக்கிறது.


வடதமிழ்நாட்டை விட தென் தமிழ்நாட்டில் சற்றேறக் குறைய இருமடங்கு எம்.பி பத விகளை இக்கட்சி பெற்றிருக்கிறது.

தென்தமிழ்நாட்டில் குறிப் பிடத்தக்க பெரும்பான்மைச் சமூகங்களான முக்குலத்தோர்; கொங்குவேளாளர்;

நாடார் ஆகிய சமூகங்கள் - நாம் நம் பகுதியில் அதிமுகவுக்கு கொடுத்த ஆதரவைக் காட்டிலும் இரு மடங்கு ஆதரவை இக்கட்சிக்கு கொடுத்திருக்கின்றன என்பதே உண்மை.

எனவே இச்சமூகங்களுக்கு ஜெயலலிதா அதிகப் பதவிகள் கொடுத்திருக்கிறார் என்பதை விமர்சிக்கும் தார்மீக உரிமை நமக்கில்லை.

தன்னை ஆதரித்த சமூகங் களைத் தூக்கிப் பிடிப்பது ஜெயலலிதாவின் பண்பு.
தன்னை ஆதரித்த சமூகத்தை வேரோடு அழிப்பது கருணாநிதியின் பண்பு .

கருணாநிதி கட்சி தமிழரல்லாத நாயுடு ரெட்டி போன்ற சமூகங்களுக்கு 22 எம்.பி பதவிகளையும்;

ஜெயல லிதாவின் அதிமுக 6 எம்.பி பதவிகளையும் மட்டுமே கொடுத்திருக்கிறது என்ற உண்மை நானே தமிழினத் தலைவன் என்று கொட்டி முழக்கிக் கொண்டிருந்த கருணாநிதியின் சுயவிளம்பர மேளத்தை நாறு நாறாகக் கிழித்தெறிந்து விடுகிறது.


அதிமுக இதுவரை 6 மத்திய அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளது.

தாழ்த்தப்பட்டோர்; உடையார்; கொங்கு வேளாளர்; முக்குலத்தோர்; நாடார்; பார்ப்பனர் என்ற ஆறு சமூகங்களுக்கு ஒவ்வொரு அமைச்சர் பதவியைக் கொடுத்திருக்கிறது.

ஜெயலலிதாவும் வன்னியர் ஒருவரை மத்திய அமைச் சராக்கவில்லை என்பது நாம் குறித்துக் கொள்ள வேண்டிய ஒன்றே தவிர ‡ கருணாநிதியை தூக்கி சுமந்த நமக்கு - ஜெயலலிதா மந்திரி பதவி தரவில்லை எனக் குறை சொல்லும் உரிமை இல்லை.

சரி இதற்காக வன்னியர் சமூகம் ஜெயலலிதாவை ஆதரிக்கச் சொல்லிவிடலாமா என்றால் தர்மபுரியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பள்ளி மாணவர்கள் உட்பட 250 பேரை வேட்டையாடி சிறை யில் அடைத்த கொடுமையும் அந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வன்னிய ஆண்கள் யாரும் நுழையக்கூட முடியாமல் தலைமறைவு வாழ் வுக்குத் தள்ளிய காவல்துறை அராஜகங்களையும் வன்னிய சமூகம் மறக்காது.

சித்திரை முழுநிலவு விழாக் கூட்டத்திற்கு வந்தவர்களில் இரண்டு வன்னியர்களை வெட்டிக் கொன்ற எந்த தலித் மீதும் நடவடிக்கை எடுக்காமல்; அது கொலை அல்ல, நெரிசலில் சிக்கியதால் ஏற்பட்ட விபத்து மரணமென நெஞ்சஞ்சாமல் சட்டமன்றத்தில் ஜெயலலிதா செய்த பொய்ப் பிரச்சாரத் தையும் வன்னிய சமூகத்தால் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.


இரண்டு கொலைகளுக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப் போன ராமதாசையும்; குருவையும்; அன்புமணியையும் கைது செய்தது போல - தென்தமிழ்நாட்டில் 2011 லும்; 2012லும் நடந்த சாதிக் கலவரங்களுக்கும் கொலைக ளுக்கும் கண்டனக் கூட்டம் நடத்தியதற்காக அந்த சமூகங் களைச் சேர்ந்த யாரையும் கைது செய்யவில்லையே ஏன்?

வன்னியர் பகுதிகளில் ஒவ்வொருவரையும் வன்னியரா என விசாரித்து, கலவரங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி ஆயிரக்கணக்கானவரை கைது செய்து; 134 வன்னியர்கள் மீது குண்டர் சட்டமும் தேசிய பாதுகாப்பு சட்டமும் போட்டு சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தியதைப் போல - வேறு எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களையாவது கைது செய்து சிறைப்படுத்த முடியுமா ஜெயலலிதாவால்?


இதை எல்லாம் பார்க்கிற போது கருணாநிதி நெஞ்சில் மட்டுமே பொங்கி வழிந்த வன்னிய விரோத நஞ்சு ஜெயலலிதா நெஞ்சிலும் குறைவாகப் பொங்கவில்லை என்ற முடிவுக்கும்‡
ஜெயலலிதாவும் வன்னியர் ஒடுக்குமுறையில் மற்றுமோர் கருணாநிதியே என்ற முடிவுக் குமே வர வேண்டியுள்ளது.

இந்த இருதலைக் கொள்ளி களில் எந்தக் கொள்ளியும் நமக்கு ஏற்புடையதல்ல. இந்த இரு கொள்ளிகளையும் அணைக்கிற போதுதான் வன்னியரின் அரசியலில் நமக்கு உரிய இடத்தைப் பெற முடியும்.

காமராஜர் காங்கிரசின் வன்னியர் துரோகம்

இதுவரை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கட்சி 284 எம்.பி பதவிகளைப் பெற்றிருக்கிறது.


இதில் - வடதமிழ் நாட்டிலிருந்து 130 எம்.பி பதவிகளையும்; தென்தமிழ் நாட்டிலிருந்து 154 பதவிகளையும் பெற்றிருக்கிறது.

இந்தக்கட்சிதான் வன்னிய ருக்கு எம்.பி பதவி களைக் கொடுத்திருக்கிறது. ஒப்பீட்ட ளவில் திமுகவை விடவும் அதிமுகவை விடவும் கூடுதல் பதவிகள் கொடுத்திருக்கிறது என்பது மட்டுமல்ல; இரு திராவிடக் கட்சிகளும் சேர்ந்து கொடுத்த எம்.பி பதவிகளை விடவும் காங்கிரஸ் கூடுதலாகக் கொடுத்திருக்கிறது என்பதும் உண்மையே.

காமராச நாடார் ஆதிக்கத்தில் இருந்த காலம் வரை - அதாவது 1971 தேர்தலுக்கு முன் வரை நடந்த தேர்தலில் திமுகவைப் போலவே இரண்டே இரண்டு பதவிகளைத்தான் இக்கட்சியும் வன்னியருக்குக் கொடுத் திருக்கிறது.

கருணாநிதிக்கு குறையாத வன்னியர் துரோகியாகவே நாடாரும் இருந்திருக்கிறார் என்பதற்கான ஆதாரமிது.


காமராச நாடார் பிடியி லிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கை நழுவிய பிறகுதான் ‡ திமுக அதிமுகவை விட கூடுதலான எம்.பிக்களை வன் னியருக்கு கொடுத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.

இதேபோல் - 1971க்கு முன்பு தமிழகத் திலிருந்து 40க்கும் மேற்பட்ட வர்கள் மத்திய அமைச்சர வையில் மந்திரிகளாகி இருக்கிறார்கள். காமராசர் பிடியிலிருந்த இந்த கால கட்டத்தில் வன்னியர் யாரையும் மத்திய அமைச் சாராக்க அவர் அனுமதித்ததே இல்லை.


காமராசர் காங்கிரசிலிருந்து விலகிய பிறகுதான் 1991ல் அமைந்த நரசிம்மராவ் மந்திரி சபையில் முதல் முறையாக மந்திரியாக்கப்பட்டார் வாழப்பாடி ராமமூர்த்தி.

காங்கிரசில் எந்த சாதியை விடவும் அதிக எம்.பிக்களைப் பெற்ற வன்னியர் சமூகத்திற்கு சுதந்திரம் பெற்று ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வன்னியர் ஒருவர் மத்திய அமைச்சராகி இருக்கிறார். இது காங்கிரசின் வன்னியர் துரோகம்.

எந்த திராவிடக் கட்சியும் எந்த வன்னியரையும் அக்கட்சிகளின் தலைவராக விட்டதில்லை.
ஆனால் காங்கிரஸ் கட்சி ஒன்றுதான் - எம்.பி.சுப்ரமணியம்; வாழப் பாடி ராமமூர்த்தி; திண்டிவனம் ராமமூர்த்தி; எம்.கிருஷ்ணசாமி ஆகிய நான்கு வன்னியர்களைத் தலைவராக்கியுள்ளது.


இதெல்லாம் வன்னியர் களின் நன்றிக்குரிய சிறு சலுகை தான் என்றாலும் இதற்காகவெல்லாம்
கொடியவன் ராஜபக்சேவின் முகமூடியணிந்து லட்சக் கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து ரத்தக்கறை படிந்த கட்சியான சோனியாவின் காங்கிரசை நாம் ஆதரித்து விட முடியாது.

வன்னிய அமைப்புகளுக்கு வேண்டுகோள்


இப்படி எல்லா கட்சிகளுமே வன்னியருக்கு துரோகம் செய்யும் கட்சிகளாகவோ வன்னியர் விரோதக் கட்சிகளாகவோ இருக்கும் நிலையில் - வரும் 2014 தேர்தல் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது ஒரு முக்கிய கேள்வியாக இருக்கிறது.


இந்த கட்சிகளுக்கு எதிராக உடனடியாக நாம் எதையும் செய்து விட முடியாது.

திமுகவுக்கு எதிரான அமைப்புகள்
அதிமுகவுக்கு எதிரான அமைபபுகள்
பாமகவுக்கு எதிரான அமைப்புகள் என வகைவகையான சிந்தனை களோடு கூடிய வன்னிய அமைப் புகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன.


இப்படிப்பட்ட அமைப்பு களுக்கு தனிப்பட்ட காரணங்கள் எதுவாக இருந்தாலும்- எல்லா வன்னிய அமைப்புகளுக்கும் பொதுநோக் கமாக இருப்பது - வன்னியர் முன்னேற்றம் ஒன்றே என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

இந்தப் பொதுநோக்கம் வெற்றிபெற வேண்டுமானால் அனைத்து அரசியல் கட்சி களுக்கும் அனைத்து வன்னியர் அமைப்புகளும் கீழ்க்கண்ட விண் ணப்பத்தை உடனடியாக அனுப்ப வேண்டும் என்பதே வடதமிழ்நாடு மக்கள் இயக்கத்தின் வேண்டு கோள்.

“வடதமிழ்நாட்டில் உள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் (புதுச்சேரி உட்பட) வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழ்கி றார்கள். இதில் 15 பொதுத் தொகுதிகள்.


நாடார்; முக்குலத்தோர்; கொங்கு வேளாளர் பெரும் பான்மையாக உள்ள தொகுதி களில் இந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்களை மட்டுமே அரசியல் கட்சிகள் வேட்பாளர் களாக நிறுத்துகின்றன. இது மட்டுமல்லாமல்‡ வன்னியர் பெரும் பான்மையாக உள்ள வட தமிழ்நாட்டுத் தொகுதிகளிலும் இவர்களையே வேட்பாளர் களாக நிறுத்தி வெற்றி பெற வைக்கின்றன.

இதனால் வன்னியர்கள் அரசியல் ரீதியாக அனைத்து கட்சிகளாலும் வஞ்சித்து ஒடுக்கப் பட்டிருக்கிறார்கள். இதுவரை யிலான இந்த இழப்புகளை ஈடு செய்ய முடியாது என்றாலும்‡
கடந்த காலத்தில் நடந்தவை‡ நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவையாகிலும் நல்ல வையாக இருக்கட்டும் என்ற நல்லெண் ணத்தோடு கீழ்க்கண்ட கோரிக் கையை வைக்கிறோம்.

1.நாடார்; கொங்கு வேளாளர்; முக்குலத்தோர் போன்ற தென்தமிழ் நாட்டவரை வடதமிழ்நாட்டில் வேட்பாளராக நிறுத்தாதீர்கள்.

2.வடதமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மைச் சாதிகளைக் கூட அவர்கள் மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு மேல் வேட்பாளர்களாக நிறுத்தாதீர்கள்.

3.குறைந்தது 12 நாடாளுமன்ற தொகுதிகளில் உங்கள் கட்சிகளில் உள்ள வன்னியர்களை வேட்பாளர்களாக நிறுத்துங்கள்”

இந்த இந்த வேண்டுகோளை திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அனுப்பி விட்டு அதன் நகலை அச்சமில்லைக்கு அனுப்ப வேண்டுமென அனைத்து வன்னிய அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறோம்.

நூற்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் வைக்கும் இந்த குறைந்த பட்சக் கோரிக்கையை எந்த அரசியல் கட்சியும் அவ்வளவு சுலபமாகப் புறக்கணித்து விட முடியாது.


அப்படிப் புறக்கணிக் குமானால்; புறக்கணிக்கும் கட்சிகளுக்கு எதிராய் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தேர்தல் நேரத்தில் கூடி முடிவெடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக