சனி, 15 பிப்ரவரி, 2014

நாயுடு கட்சியிலிருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வேண்டுகோள்! ந.இறைவன்

விஜயகாந்த் நாயுடு கட்சியிலிருந்து அக்கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் விலகிவிட்டார் என்ற செய்தி அப்பாடா தப்பி விட்டார் என்ற மகிழ்ச்சி.

2006 தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் முன்னிலையில் தினமணி பத்திரிகையாளரை அடித்தார் இந்த நாயுடு.

2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பெரும் பணம் செலவழித்து இவருக்காக சேலத்தில் பெரிய மாநாடு ஒன்றை நடத்தினார் நாயுடு கட்சியின் சேலம் மாவட்ட செயலாளரான மோகன்ராஜ். அவர் ஒரு வன்னியர். அவர் வீட்டில் தங்கி இருந்த போது - மூச்சு முட்ட குடித்துவிட்டு மோகன்ராஜை அடித்து அவர் வீட்டு டிவியையும் உடைத்தார் என்ற செய்தியை பத்திரிகைகளில் படித்தோம்.

2011 சட்டமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் நாயுடு கட்சி வேட்பாளர் பாஸ்கரன். வன்னியர்.


தருமபுரி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது குடி போதையில தள்ளாடிய விஜய காந்த் நமது கட்சி வேட்பாளர் பாண்டியனை ஆதரியுங்கள் என உளறி இருக்கிறார். கூட்டம் கொல்லென சிரித்திருக்கிறது. உடனே நாயுடு கட்சி வேட்பாளரான பாஸ்கரன் எழுந்து அவர் காதருகில் போய் அய்யா என் பெயர் பாஸ்கரன் என்று சொல்லி இருக்கிறார்.

அவ்வளவுதான் - தேர்தல்களத்தில் எதிரணி டிவி கேமராக்கள் தன்னைச் சூழ்ந்தி ருக்கிறது என்ற உணர்வு கூட இல்லாமல் ஆயிரக்கணக்கான பொது மக்கள் முன்னிலையில் ஒரு மாட்டை அடிப்பதைப் போல அடிக்கிறார்.

இதுபற்றி பத்திரிகைகள் நாயுடுவை நாறு நாறாகக் கிழித்தபோது - என் கட்சிக்காரனைத் தானே அடிக்கிறேன்.


என் கையால் அடி வாங்குகிறவன் நாளை மகாராஜா ஆவான் என்று முச்சந்தியில் நின்று வேடிக்கை காட்டும் மோடி மஸ்தானைப் போல் பேசுகிறார். (அச்சமில்லை 2011 இதழில் இது குறித்து விரிவாக செய்தி வெளியிட்டிருக்கிறோம்.)

அடுத்ததாக - மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏவான பார்த்திபனை பளார் பளார் என அறைந்தார் என்ற செய்தி நக்கீரனில் வெளியாயிற்று.

இவர் வீரவன்னியர் பேரவையில் பொறுப்பில் இருந்தபோது ‡ மேடைக்கு மேடை “என் இதயத்தில் தங்க சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறான் தம்பி பார்த்திபன்” என்று சொல்லி விட்டுத்தான் வீர வன்னியர் பேரவைக் கூட்டத்தில் பேச ஆரம்பிப்பார் அதன் நிறுவனத் தலைவர் ஜெகத்ரட்சகன்.

விஜயகாந்திடம் அடி வாங்கிய -

மோகன் ராஜ் எம்.எல்.ஏ.,

பாஸ்கரன் எம்.எல்.ஏ.,

பார்த்திபன் எம்.எல்.ஏ.,

ஆகிய மூவரும் வன்னியர்கள். அப்போதெல்லாம் எங்கள் நெஞ்சு படபடக்கும்; பண்ருட்டி ராமச்சந்திரனையும் கூட இந்தப் பாவி ஒரு நாள் அடித்து விடுவானோ என்று.

அதனால்தான் - பண்ருட்டியார் அக்கட்சியில் இருந்து விலகி விட்டார் என்றபோது அப்பாடா தப்பித்து விட்டார் பண்ருட்டியார் என்ற ஆறுதலும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.


இவர் விஜயகாந்த் கட்சியில் சேர்ந்த போது நாங்கள் 2006 அச்சமில்லை இதழில் வெளியிட்ட கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே வெளியிடுகிறோம்.

தமிழ்நாட்டில் அதிக காலம் அமைச்சர் பதவியை வகித்தவர் பட்டியலில் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

ஆனால் - வன்னியர்களில் அதிக காலம் அமைச்சர் பதவி வகித்தவர் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரனே.

வன்னியர் யாரையும் வளரவிடாமல் வெட்டி வீழ்த்துவதில் வெறியோடு செயல்பட்டு வரும் திராவிடக் கட்சிகளில் இப்படியயாரு சாதனையை வேறு ஒரு வன்னியர் படைக்க வாய்ப்பில்லை.

தனது அரசியல் சாணக்கிய தனத்தாலும், தனது அறிவாலும் இந்த சாதனையைப் படைத்த ஒரே வன்னியர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் மட்டுமே!
இதனாலேயே இவரை வன்னியத் தலைவராக மற்ற சாதி அரசியல்வாதிகள் மதிக்கிறார்கள்.

ஆனாலும் - இவர் ஒரு வன்னியத் தலைவரென வன்னியர்கள் நினைககும் அளவுக்கு இவர் வன்னிய அரசியலை ஒரு நாளும் முன்னெடுத்ததே இல்லை.

இதுவே - இவருக்கு பலமாகவும் இருந்திருக்கிறது! பலவீனமாகவும் இருந்திருக்கிறது.

எம்.ஜி.ஆரை திமுக கட்சியை விட்டு கருணாநிதி நீக்கியபோது,

ஒரு கட்சியின் பொருளாளராக இருந்து கொண்டு கணக்கு வழக்கை பொது மேடையில் கேட்டது ஒழுங்கீனமானதுதான்! அதற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுத்து எம்.ஜி.ராமச்சந்திரனை திமுகவிலிருந்து நீக்கியதும் நியாயமானதுதான்!

ஆனால் - அவர் கேட்ட கேள்வி தப்பான தல்லவே. நியாயமானதுதானே? அந்த நியாயமான கேள்விக்கு இன்றுவரை தலைவர் பதில் சொன்னாரா? இப்படிஒரு கட்சியின் வரவு செலவு அக்கட்சியின் பொருளாளருக்கே தெரியாமல் மறைப்பது கட்சி ஆதிக்கம் ஒரு தனிநபர் கைக்குள் முடங்கிப் போய் கட்சி வளர்ச்சியைப் பாதிக்கும்தானே?

என்று பேசிப் பேசி...


அப்போது திமுகவிலிருந்த துடிப்பான எம்.எல்.ஏக்களில் 26 பேர்கள் இளந்துருக்கியர்கள் என்ற பெயரில் கருணாநிதிக்கு எதிராக கேள்வி கேட்கத் தயார்படுத்தி விட்டார் ஒருவர் என்றால் ‡ அது சாதாரணமானதா?


இதனை சாதித்தவர் வேறு யாருமல்ல. பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன்தான் என்பது பலருக்கும் புதிய செய்தி.

இந்த செய்தியைக் கேள்விப்பட்டு அலறித் துடித்து அரண்டு போனார் கருணாநிதி என்பதும்,
இதற்குப் பிறகும் - அந்த எம்.எல்.ஏக்களை உருட்டி மிரட்டி கருணாநிதியால் அந்த இளந்துருக்கியர் அமைப்பைக் குலைக்க முடிந்ததே தவிர - இவர்களை ஒருங்கிணைத்த பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கும் துணிவு கருணாநிதிக்கு கடைசிவரை வரவே இல்லை.

இந்த இளம் துருக்கியர்கள் எல்லாம் வன்னிய எம்.எல்.ஏக்களா என்றால் இல்லை. இவர்கள் அனைவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏக்கள் என்பதுதான் இதன் சிறப்பே.

தாம் சொல்கிற கருத்தை எதிரில் இருப்பவர் ஆம் போட்டு தலையாட்ட வைத்து விடுமளவுக்கு கைதேர்ந்தவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன்.

இதன் மூலம் கருணாநிதிக்கு பிடிக்காதவராக இருந்தார் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் எம்.ஜி.ராமச் சந்திரனையே வெளியேற்றிய கருணாநிதியால் இவரை கடைசி வரை திமுகவை விட்டு நீக்க முடியாதவராகவும் இருந்தார்.

இதனால் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு வேண்டியவரானார் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன். அந்த எம்.ஜி.ராமச்சந்திரனே கூட இவரது அறிவுக் கூர்மை காரணமாக இவரை நெருக்கத்தில் வைத்துக் கொள்ள பயந்தவராகவே இருந்தார்.

ஜெயலலிதாவும் அப்படித் தான் இவரை ஒதுக்கினார்.


டாக்டர் ராமதாசும் அப்படித் தான் இவரை ஒதுக்கினார்.


இவருக்கு பலமாக இருந்த இவரது அறிவுக் கூர்மையே இவருக்கு பலவீனமாகிப் போனதும் இப்படித்தான்.


இவரும் கூட தான் ஒரு அறிவாளி என்ற நீங்கா நினைப்போடு எப்போதும் இருந்து பழக்கப்பட்டு போனதன் காரணமாக மக்களோடு ஐக்கியமாக முடியாமல் தனித்து தனிமரமாகிப் போனவர்.
தனித்து தனி மரமாகிப் போன நிலையிலும் தான் ஒரு தோப்பு என்ற நினைவோடு வாழ்ந்து எட்ட வேண்டிய உயரங்களை எட்டாமல் போனவர்.

தனது அறிவையும் தனது அரசியல் சாணக்கியத்தனத்தையும் நேசித்த அளவுக்கு இவர் வன்னிய மக்களை நேசித்து, தன் அறிவுமீதும் அரசியல் சாணக்கியத்தனத்தின் மீதும் நம்பிக்கை வைத்த அளவுக்கு வன்னிய சமூகத்தின் மீது நம்பிக்கையும் வைத்து அரசியலில் செயல்பட்டிருந்தால்...


பண்ருட்டி ராமச்சந்திரனின் அரசியல் அறிவிற்கு தமிழக முதல்வர் பதவி ஒன்றும் எட்டாக் கனியாகி இருந்திருக்காது.

வன்னியகுல விரோதியான விஜயகாந்த் நாயுடு துவக்கியிருக்கும் கட்சி தமிழகத்திலும் ஒரு அரசியல் மாற்றத்தை உண்டு பண்ணும் என்றும், டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் எந்த மக்களை வைத்து அரசியல் பண்ணுகிறார்களோ அந்த மக்கள் விஜயகாந்த் பக்கம் இருக்கிறார்கள் என்றும் - இனிமேல் விஜயகாந்திடம் இவர்கள் பாட்சா பலிக்காது என்றும் வன்னிய மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் டாக்டர் ராமதாசையும் திருமாவளவனையும் புறக்கணித்து விடுவார்கள் என்றும் 21.9.2005 ஜூனியர் விகடனில் பேட்டி அளித்தார்.

இந்த தமிழர்களை வீழ்த்தி தெலுங்கன் விஜய்காந்தை வளர்ப்பதில் தமிழன் பண்ருட்டிக்கு அப்படி என்ன அக்கறை?

விஜயகாந்த் நாயுடு அப்படி என்ன வன்னிய மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ரட்சகனா?
தன் படங்களில் - நாடாராய், தேவராய், சின்ன கவுண்டராய், நாயுடுவாய் கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கும் விஜயகாந்த் நாயுடு - நடிப்புக்காக கூட வன்னிய அடையாளத்தோடு கூடிய பாத்திரத்தில் நடிக்க மறுத்த ஆதிக்க சாதி வெறி கொண்ட நடிகன் விஜயகாந்த் நாயுடு.

மறுமலர்ச்சி திரைப்பட கதாபாத்திரத்தின் பெயரான ராசு படையாட்சியில் உள்ள படையாட்சி என்ற சாதி அடையாளத்தை எடுத்தால் மட்டுமே நடிக்க முடியும் என்றும் ‡
தனது சொந்த தயாரிப்பில் உருவான வல்லரசு திரைப்படத்தில் ராமதாசு உருவம் போல் ஒப்பனை செய்யப்பட்ட சாதி சங்கத் தலைவரை உதைத்து ரத்தம் சிந்த வைத்து ஜாதி சங்க எதிர்ப்பு வசனம் பேசி ஜாதி ஒழிப்பு வீரனாகத் தன்னை தமிழ்நாட்டில் அடையாளப்படுத்திக் கொண்ட இந்த நாயுடு.

அதே வல்லரசு படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டபோது அப்படத்திற்கு நாயுடு தி கிரேட் என்று பெயரிட்ட நாயுடு சாதி வெறியன் விஜயகாந்த்!

எல்லா சாதிகளும் குறிப்பா வன்னிய சாதியும், தாழ்த்தப்பட்ட சாதியும் ஒழிய வேண்டும். நாயுடு ஜாதி மட்டும் வாழவேண்டும் என்பதுதானே இதற்கு அர்த்தம்? இப்படிப்பட்ட நாயுடு ஜாதி பாசிஸ்ட் மனம் கொண்ட விஜயகாந்த் கட்சியில் எப்படி வன்னியர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் செயல்பட முடியும்?


விஜயகாந்த் நாயுடு வன்னிய சமூகத்தின் பகையாளி.


இந்த விபரம் தெரியாமல் / புரியாமல் வன்னியர் யாராவது விஜயகாந்த் பக்கம் தலைகாட்டினால் கூட அவனைத் தடுத்து நிறுத்தி நல்வழி காட்ட வேண்டியதல்லவா வன்னியர்களில அதிக காலம் மந்திரி பதவி வகித்தவரான பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற அறிவாளிகளின் கடமை?


ராமதாசோடு பண்ருட்டிக்கு இருப்பது பங்காளிப் பகை.
பங்காளியை எதிர்த்துத் தோற்பது ஒரு தோல்வியும் அல்ல.

பங்காளிப் பகையை பகையாளியின் காலில் வீழ்ந்து வெல்வது ஒரு வெற்றியும் அல்ல.
பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் சிந்தித்து இந்த அவலத்திலிருந்து மீள வேண்டும். நாயுடு ஜாதி வெறிகொண்ட விஜயகாந்தின் முகத்திரையை கிழிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்பதே வன்னியர்களின் எதிர்பார்ப்பு.

இது நாம் அப்போது எழுதியது.


இப்போது ஜூனியர் விகடன் என்ன எழுதுகிறது?


23.12.2013 கழுகார் பதில் பகுதியில் கேட்கப்பட்ட கேள்வி இது.

பண்ருட்டியார் அதிமுகவில் சேர்வாரா?

இதற்கு கழுகாரின் பதில் இது:


அவரது அரசியல் கடந்த காலத்தை உணர்ந்தவர்களுக்குத் தெரியும், அவர் எந்தக் கட்சியிலும் சேரலாம்.

முதலில் திமுகவில் இருந்தார்.

எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோதும் திமுக விலேயே இருந்து சில ஆண்டுகள் கழித்துதான் அதிமுகவில் இணைந்தார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சி ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிரிந்தபோது ஜெயலலிதா அணியில் இயங்கினார்.

ஜெயலலிதாவுடன் முரண்பட்டு நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, அரங்கநாயகம் ஆகியோருடன் பணியாற்றினார். இதற்கு அந்தக் காலத்தில் நால்வர் அணி என்று பெயர்.

மறுபடியும் அதிமுகவில் போய்ச் சேர்ந்தார்.


அங்கிருந்து திருநாவுக்கரசு போன்றவர்களுடன் விலகி, அண்ணா புரட்சித்தலைவர் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.பு.மு.க சார்பில் போட்டியிடாமல் சுயேச்சையாக நின்றார்.

ஆனால் அவரைப் பா.ம.க ஆதரித்தது. உடனே பா.ம.க. எம்.எல்.ஏ வாக மாறினார்.
அந்தக் கட்சியிலிருந்து விலகி மக்கள் உரிமைக் கழகம் தொடங்கினார். எஸ்.டி.சோமசுந்தரம், புரட்சித் தலைவர் அண்ணா திமுக என்ற கட்சியைத் தொடங்கியபோது அதில் இணைப் பொதுச் செயலாளராக பண்ருட்டியார் ஆனார்.

பிறகு, அதில் இருந்து விலகி, மீண்டும் மக்கள் உரிமைக் கழகம் தொடங்கினார்.
அதனைக் கலைத்து விட்டுத்தான் தேமுதிகவில் சேர்ந்தார்.


இப்போது சொல்லுங்கள் பண்ருட்டியார் என்ன செய்வார் என்று யாராவது உறுதியாகச் சொல்ல முடியுமா?

பண்ருட்டியார் நாயுடு கட்சியில் சேர்ந்த போது ஏற்பட்ட வருத்தமும் வலியும்; ஜூ வியின் இந்த பதிலைப் படிக்கும் போதும் ஏற்படுகிறது.

எனவே - வேண்டாம் பண்ருட்டியார் அவர்களே, உங்களுக்கு இனி அரசியல் வேண்டாம்.

இதுவரை அரசியலில் இருந்து சாதிக்காத எதை இனி அதிமுகவிலோ வேறு கட்சியிலோ சேர்ந்து சாதிக்கப் போகிறீர்கள்?

சமுதாயப் பணிக்கு வாருங்கள்.

தமிழக கட்சிகள் வன்னியர் அரசியலை எப்படியயல்லாம் குழி தோண்டிப் புதைத்தது என்பதை மற்ற யாரைவிடவும் அனுபவ ரீதியாக உணர்ந்தவர் நீங்கள்.
வன்னியர் சமூகம் வஞ்சிக்கப் பட்டதை வரலாறாக எழுதுங்கள்.

கடந்த கால அரசியல் வரலாற்றை அறியாமல் - இருளில் தவிக்கும் வன்னியர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கும் வகையில் அந்த வரலாற்றை எழுதுங்கள் என அழைக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக