வெள்ளி, 19 டிசம்பர், 2014

கல்வியால் உயர்ந்த நம்மவர்கள்..



கல்வியால் உயர்ந்த
நம்மவர்கள்..

அரசுப் பதவிகளில் கல்வியால் உயர் நிலையை அடைந்த நம்மவர்கள் பற்றிய விபரங்களைத் தொகுத்துள்ளோம்.

நீதிபதிகள் என்றால் குறைந்தது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

..எஸ் அதிகாரிகள் என்றால் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அல்லது தமிழக அரசு செயலகத்தில் செயலாளர் பதவி வகித்தவர்கள் -
 
ஐபிஎஸ் அதிகாரிகள் என்றால் காவல்துறை இயக்குநர்கள் அல்லது காவல்துறை கூடுதல் இயக்குனர் பதவி வகித்தவர்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்றால் அதன் தலைவர் பதவி வகித்தவர்கள். 

மருத்துவர்கள் என்றால் மருத்துவத்துறைத் தலைவர் பதவி அல்லது அத்துறையில் சிறப்பு நிலை எய்தியவர்கள்.

 
இதுபோன்ற அளவுகோல் அடிப்படையில் -

நம்மவர்கள் பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

இவர்களின் வாழ்க்கை விபரங்களைப் படிப்பவர்கள்  நாமும் இத்துறையில் உச்ச நிலைகளை எட்ட வேண்டும் என்ற எண்ணம் பெற வேண்டும்; முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இதற்கான நோக்கம்..

எதிர்காலத்தில் இதுபோன்ற பதவிகளுக்கு வருபவர்கள் மிகவும் பின்தங்கிய இந்தச் சமுதாயத்திற்குப் பாதிப்பு ஏற்படும்போது அரணாக நின்று தடுத்தாட் கொண்டாலே போதும் என்பதே நமது எதிர்பார்ப்பு.
*       
நானே தத்திக் குத்தி மேலே வந்திருக்கிறேன். சமுதாயத்தவர் பாதுகாப்புக்குப் போய்  நான் பாதிக்கப்பட்டால் எனக்கு என்ன பாதுகாப்பு எனச் சிலர் கேட்கிறார்கள்.

உச்சம் தொட்ட  நமக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது என்றால் இந்த சமுதாயத்தில் பிறந்ததாலேயே பாதுகாப்பு அற்றுப் போனவர்கள் நிலை என்ன என்பதை நினைத்துப் பார்த்தாலே போதும்.

இந்த சமுதாயத்தின் பாதுகாப்பு அரணாக மட்டுமல்ல இந்த சமுதாயத்தின் பாதுகாப்புக்கான போராளியாகவே ஆக வேண்டிய அவசியம் புரியும்.

இனி ஒவ்வொரு துறையாகப் பார்ப்போம்.

நீதித்துறை :
இந்திய உச்சநீதிமன்றத்தில் நம் சமுதா யத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் நீதிபதிகளானதில்லை. நீதிபதிகளாகவே வரவில்லை என்றால் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பற்றிய கனவை நாம் எப்படிக் காண முடியும்?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 60 நீதிபதி பதவிகள் இருக்கின்றன. இதுவரை பல்லாயிரக் கணக்கானோர் நீதிபதிகளாகியுள்ளனர். நூற்றுக் கணக்கானோர் தலைமை நீதிபதிகளாகியும் உள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி நம் கனவில் கூட வந்ததில்லை.

நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் -

முதன் முதலில்  1983இல் தான் கே.எம்.நடராசன் உயர்நீதிமன்ற நீதிபதியானார். அதன் பின்னர் 31 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை மொத்தம் 9 பேர்கள் தான் நீதிபதியாகி உள்ளனர். இதில் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உயர்நீதிமன்ற நீதிபதியானவர்கள் 3 பேர் மட்டுமே. மற்றவர்கள் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பதவிகளில் இருந்து பதவி உயர்வு மூலம் உயர்நீதிமன்ற நீதிபதியானவர்கள்.

இதுவரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனவர்கள் :

1. கே.எம்.நடராசன்
2. .தங்கவேல்
3. .குலசேகரன்
4. மெ.தணிகாசலம்
5. கே..கே.சம்பத்குமார்
6. கே.வீரராகவன்
7. .கிருபாகரன்

ஆனால்

தலித்  சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நீதிபதிகளாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள்  சமுதாய உணர்வோடும் செயல்படுகிறார்கள்

அவர்களை விட நீதித்துறையில் நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதை ஒப்பிட்டுப் பார்க்கும் தகுதி கூட நம் சமுதாயத்திற்கு இல்லை.

நம்  சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் இல்லையா? உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும்; உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் இதுவரை ஒருவரும்  தகுதி அடிப்படையில் துணைவேந்தர்கள் வர முடியாததற்கு என்ன காரணம்?

நம்மவர்களில் 50 வயதைக் கடந்தவர்களே உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்கப் படுகிறார்கள். நம் அரசியல் தலைவர்களின் அக்கறை இன்மையும்; ஆளும் கட்சித் தலைவர்களின்  சதியும்; உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் பிற சமூக நீதிபதிகளின் சாதி சார்ந்த போக்குகளுமே இதற்குக் காரணம்.

ஆந்திர அரசியல்வாதிகளும்; கர்நாடக அரசியல்வாதிகளும் தங்கள் சமூகத்தவர்களில் இளம் வயதுடையோரை உயர்நீதிமன்ற நீதிபதி ஆக்குவதில் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றனர். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் உயர் உயர்நீதிமன்ற நீதிபதி பதவியில் அமர்ந்தால்தான்; உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியையும்; உச்சநீதிமன்ற நீதிபதி பதவியையும் எளிதாக அடைய முடியும் என உணர்ந்து இளம் வயதினரை உயர்நீதிமன்ற நீதிபதி ஆக்குகிறார்கள். வாய்ப்பு ஏற்படுமானால் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் ஆக முடியும்.
*       
ஆந்திரா; கர்நாடகா அரசியல் தலைவர்களுக்கு இருக்கும் இந்த தெளிவும்; அறிவும்; நம் சமூகத் தலைவர்களுக்கு என்றைக்கு ஏற்படுகிறதோ அன்றைக்குப் பிறகுதான் - உயர்நீதிமன்ற நீதிபதி; உச்சநீதிமன்ற நீதிபதி போன்ற பதவிகளை நம்மவர்கள் அடைவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் :
தமிழகத்தில் தற்போது 21 அரசுப் பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன.

1988இல் லலிதா காமேஸ்வரன் மருத்துவப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகிறார். இவர் வன்னிய வம்சா வழியைச் சேர்ந்தவர் என்பது தெரியாமலேயே தப்பித்தவறி துணைவேந்தராக்கப்பட்டவர்.

சென்னைப் பல்கலைக் கழகம்  1857இல் தோற்றுவிக்கப்பட்ட தமிழகத்தின் பழம் பெரும் பல்கலைக் கழகம். இதில்  1999இல்தான் முதன் முதலாக பொற்கோ துணைவேந்தராகிறார்.

அதாவது 142 ஆண்டுகளுக்குப் பிறகு

ஏன் நம்மவர்களில் இதற்கான கல்வித் தகுதியுடையோர் இதற்கு முன்பு யாருமே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் இல்லையா?

ஏராளமான தகுதியானவர்கள் இருந்தார்கள். தகுதி அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கும் நேர்மையானவர்கள் இல்லை என்பதே இந்தப் புறக்கணிப்புக்குக் காரணம்.

நமது துணைவேந்தர்கள் பட்டியல் இது :-

1. டாக்டர் லலிதா காமேஸ்வரன்
2. முனைவர் தெ.ஜெயக்குமார்
3. முனைவர் பொற்கோ
4. முனைவர் அண்ணாவி சுசீலா திருமாறன்
5. முனைவர் .ஜானகி
6. முனைவர் மு.தங்கராசு
7. முனைவர் இரா.தி.சபாபதி மோகன்
8. முனைவர் துரை.விஸ்வநாதன்
9. முனைவர் .முருகேசபூபதி
10. முனைவர் .வணங்காமுடி
11. முனைவர் .விஸ்வநாதன்

அரசு செயலாளர்கள் :
தமிழக அரசின் கீழ் தலைமைச் செயலகத்தில் தற்போது  32 துறைகள் இருக்கின்றன.  32 செயலாளர்களும் இருக்கிறார்கள்.

இதில்

சட்டமன்றத் துறை மற்றும் சட்டத் துறை ஆகிய ஆகிய இரண்டு துறைகளுக்கும் ..எஸ். அல்லாதவர்கள் செயலாளர்களாக வருகிறார்கள். இந்த இரு துறைகளில் கூட இதுவரை நம்மவர்கள் யாரும் செயலாளர்களாக ஆனதில்லை.

மீதமுள்ள  30 துறைகளுக்கும் ..எஸ் தகுதி பெற்றவர்களே செயலாளர்களாகின்றனர். இத்தனை ஆண்டு காலத்தில் பல்லாயிரக் கணக்கானோர் அரசு செயலாளர்களாகி இருக்கிறார்கள். இதில் நம்மவர்கள் இதுவரை  5 பேர் மட்டுமே செயலாளர்களாகி இருக்கின்றனர்.

செயலாளர்கள் பட்டியல் :-

1..பி.ராயப்பா
2. நா.ஆதிமூலம்
3. கோ.சந்தானம் ..எஸ்
4. கி.தனவேல்   ..எஸ்
5. ஜெயந்தி   ..எஸ்

தலித்துக்கள் ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் செயலாளர்களாக இருந்திருக்கிறார்கள்..

நம்மவர்களில் .பி.ராயப்பா மட்டுமே தலைமைச் செயலாளராக ஆனவர். இவர் வன்னிய கிறிஸ்தவர் என்பது தெரி யாததாலேயே இவரை கிறிஸ்தவர் எனக் கருதியே கருணாநிதி தலைமைச் செயலாளராக்கினார். வன்னியர் என்று தெரிந்த பிறகு அவரை ஒழித்துக் கட்டி என்ன பாடு படுத்தினார் என்பது இதுவரை எந்த ஒரு தலைமைச் செயலாளரும் அனுபவிக்காத கொடுமை.

தலித் சமுதாயத்தைச் சேர்ந்த .பத்மனாபன்; .பி.முத்துச்சாமி ஆகிய இருவர் தலைமைச் செயலாளர்களாகப் பதவி வகித்துள்ளார்கள்.

நமது நிலை தலித்துக்களை விட எவ்வளவு தாழ்ந்து கிடக்கிறது என்பதற்கு அரசுத் துறை செயலாளர்கள் பதவி ஒரு உதாரணம்.
*       
தமிழ்நாட்டு ..எஸ். கேடரில் நேரிடையாக ..எஸ். தேர்வு பெற்றவர்கள் இதுவரை நம் சமூகத்தவர் யாருமில்லை என்பது நமக்குத் தலைகுனிவான விஷயம் என்பதை நம்மவர்களும் உணர்ந்து உழைக்க வேண்டும்.

காவல்துறை இயக்குநர் பதவி :
காவல்துறை இயக்குநர் பதவியை எட்டியவர் .ராஜ்மோகன் ஒருவர்தான்.

மருத்துவர்கள் :
மருத்துவத்துறை மூலம் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர் லலிதா காமேஸ்வரன் ஒருவரே. இவர் தவிர மருத்துவத்துறையைச் சேர்ந்த - இருவர் பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார்கள்.

1. டாக்டர் பழநியப்பன்
2. டாக்டர் .ராஜசேகரன்

ஒப்பீட்டளவில் கல்வியில் எல்லாத் துறைகளிலும் நாம் தலித்துக்களை விட பின்தங்கியே இருக்கிறோம் என்பதைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ள வேண்டும். என்பதற்காகவே கல்வியில் உயர்ந்த இவர்களின் பட்டியல்.

இந்தப் பதவிகளுக்காகத் தகுதிப் படுத்திக்கொள்ள வேண்டியது வன்னிய சமூகத்தினரின் கடமை. தகுதி படைத்தோர் புறக்கணிக்கப்படும்போது பாதுகாப்பு அரணாக இருந்து வன்னியர்களை அந்தப் பதவியில் அமர்த்த வேண்டியது வன்னிய சமூக அரசியல் மற்றும் சமுதாயத் தலைவர்களின் கடமை.
*       
                                                                                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக