சனி, 13 டிசம்பர், 2014

பெண் கல்விக்கும் முன்னேற்றத்திற்கும்தான் எத்தனை எத்தனை தடைகள்

வரதட்சணைக் கொடுமைகள் அதிகமான போது பெண் சிசுக்கொலைகளும் அதிகமானது.

நாடகக் காதல் திருமணங்கள் மூலம் பெண்கள் ஏமாற்றப்பட்டதோடு; பிளாக்மெயில் செய்து பெண்ணின் பெற்றோரிடம் லட்சங்களும் கோடிகளும் பேரம் பேசுவதைத் தொழிலாகக் கொண்ட கும்பலால் - பெண்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. பெண்களைப் பெற்றோரும் மிகவும் பாதிக்கப் பட்டனர்.

எருதின் வலி காக்கைக்குத்தெரியுமா? என்பது போல - ஊடகங்கள் தங்களது முற்போக்கினைக் காட்டிக் கொள்ள இதுதான் எளிய வழி என்பது போல - 

நாடகக் காதலை ஆதரித்துப் பக்கம் பக்கமாகக் கதைகள் எழுதுகின்றன.

நாடகக் காதலை நடத்தும் கும்பல் பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் கிரிமினல் நடவடிக்கைகள் குறித்து எந்த ஊடகமும் ஆய்வு செய்து எழுதவுமில்லை; கண்டிக்கும் துணிவும் எந்த ஊடகத்துக்கும் இல்லை.

இதனால் - 

எதற்குப் பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கும் கல்லூரிக்கும் அனுப்புவானேன்; கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிதத லட்சங்களையும் கோடிகளையும் பிளாக் மெயில் கும்பலுக்கு கொட்டி அழுவானேன்? என்ற எண்ணம் ஏராளமான பெற்றோரிடம் எழுந்தது.

இதனால் பெண்கல்வி முன்னேற்றம் பெருமளவு இல்லை என்றாலும் கணிசமான அளவு தடைபட்டது.

வக்கீல்கள் தங்கள் அறைகளில் நடந்ததாக வழங்கும் போலி திருமண சான்றிதழ்களால் பெண்கள் பாதிக்கப் படுகிறார்கள். இதனால் பொதுத் தளங்களில் பெண்கள் இயங்க அச்சம் ஏற்படும். இதுவும் தனிப்பட்ட பெண்களைப் பாதிப்பதோடு; பெண்களின் சுதந்தரமான பொதுத்தள இயக்கத்தைப் பாதித்து பெண்கள் முன்னேற்றத்திற்குத் தடைக் கற்களாக அமையும்.

  •  வரதட்சணைக் கொடுமை ஒருபுறம் 
  •  நாடகக் காதல் பிளாக்மெயில் பணப்பறிப்பு ஒருபுறம்
  •  இப்போது வக்கீல்கள் செய்து வைக்கும் திருமண மோசடி ஒருபுறம்
  •  இதில்லாமல் தனிநபர்கள் ஏமாற்றி பல பெண்களைத் திருமணம் செய்வதால் ஏற்படும் மோசடிகள் ஒருபுறம் - என


நாலாபக்கமும் இந்த திருமண மோசடி தீயாய் சுடர்விட்டு எரிய - நடுவில் மெழுகு பொம்மையாய் பெண்கல்வி முன்னேற்றம்; பெண்களின் சமூக முன்னேற்றம் என்பதெல்லாம் உருக்குலைந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டுமானால்; மேற்கண்ட தீமைகள் கருணை இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக