சனி, 15 பிப்ரவரி, 2014

தலையங்கம்

எப்போதும் இல்லாத அளவிற்கு சமீபகாலமாக சாதிக்கலவரங்கள் அதிகரித்து வருகின்றன. கிராமங்கள் தோறும் இது அன்றாட நிகழ்வுகளாகவும் ஆகி வருகின்றன.

99 சதவீத கலவரங்களுக்கு மாணவிகளையும் இளம்பெண்களையும் சீண்டுதலும் கடத்தலுமே காரணங்களாகும்.

தருமபுரி கலவரத்திற்கும் பாச்சராப்பளையம்; திண்டுக்கல் கலவரங்களுக்கும் இதுதான் காரணம். 36 உயிர்களைப் பறித்த உத்திரப்பிரதேச முசாபர்நகர் கலவரத்திற்கும் இதுவேதான் காரணம்.

இதுகுறித்து - இந்த உண்மைகளை எழுதுவதற்கு பதிலாக இரு வகுப்புகளுக்கு இடையே சாதிமோதல் என்று பத்திரிக்கைகள் எழுதுகின்றன. சாதி மோதலா இது?

இரு வகுப்பாருக்கு இடையே மோதல் என்றால் -

ஐயருக்கும் பிள்ளைக்கும் இடையே மோதலா?

ரெட்டிக்கும் நாயுடுக்கும் இடையே மோதலா?

வன்னியருக்கும் முதலியாருக்கும் இடையே மோதலா?

எந்த சாதிக்குக்கும் எந்த சாதிக்கும் இடையே மோதல் என்று மோதிக்கொள்ளும் சாதிகளின் பெயர்க்குறிப்பிட்டு எழுதுவதற்கு என்ன தடை?

பெண்கள் சீண்டலால் சாதிக்கலவரம் என்றால் ஒவ்வொரு கலவரத்திலும் பெண்களைச் சீண்டும் சாதி எது?

அதை எதிர்த்து கலவரத்தில் ஈடுபட்ட சாதி எது என எழுத வேண்டாமா?

தருமபுரி கலவரம் குறித்து ஜூனியர் விகடன் என்ன சொன்னது?

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்ற சமூக இளம் பெண்களை குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிப்பதாக தருமபுரி மாவட்டம் முழுக்க நீண்டகாலமாக ஒரு விவகாரம் புகைகிறது. காதல் திருமணம் செய்யும் இளைஞர்கள் அந்தப் பெண்ணோடு சில வாரம் குடும்பம் நடத்துவார்களாம்; பிறகு பெண்ணின் பெற்றோரைப் பார்த்து பேசும் அந்த இளைஞரின் சாதிப் பிரமுகர்கள் பெண்ணைப் பிரித்து ஒப்படைக்க லட்சக்கணக்கில் பணம் கேட்பார்களாம். பணம் கைமாறினால் பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைப்பார்களாம்.

இது என்ன சாதாரண குற்றமா?

இதை செய்யும் சமூக விரோத பிளாக்மெயில் பொறுக்கி கும்பல் எந்த சமூகத்தைச் சேர்ந்தது என அடையாளப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் ஜூவிக்கும் மற்ற பத்திரிகைகளுக்கும் இல்லையா?

பத்திரிகைகள் எதற்காக இந்த சமூக விரோதக் கும்பலை முகமூடி போட்டுக் காப்பாற்றுகிறது?

இந்த சமூக விரோதக் கும்பல் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என ஒவ்வொரு நிகழ்விலும் பெயர் குறிப்பிட்டுஎழுத வேண்டாமா? ஐயர் சமூகத்து இளைஞர்களா பெண்களைக் கடத்துகிறார்கள்? பிள்ளைமார் சமூக இளைஞர்களா பெண்களைக் கடத்துகிறார்கள்?

வன்னியர் சமூக இளைஞர்களா பெண்களைக் கடத்துகிறார்கள்?

ஒவ்வொரு மோதலுக்கும் காரணமான சாதிகளைக் குறிப்பிட்டு குற்றவாளி சமூகம் எது என அடையாளப்படுத்தாதவரை தருமபுரி கலவரங்களும்; முசாபர்நகர் கலவரங்களும் ஓயாது. தொடரவே செய்யும்.

பெண் சீண்டலையும் பெண் கடத்தலையும் காதல் என்றும்; அதனை எதிர்ப்பவர்களை காதலுக்கு எதிரிகள் என்றும் வேலை வெட்டி இல்லாத தமிழருவி மணியன் போன்றதுகளை வைத்து கட்டுரை எழுத வைப்பது;

சமூக விரோதக் கும்பலுக்கு உரமிட்டு வளர்க்கவும் சாதி மோதல் தீக்கு எண்ணெய் ஊற்றி எரிய விடவுமே உதவும் என்பதை ஜூனியர் விகடன்கள் புரிந்து கொள்ள வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக