சனி, 15 பிப்ரவரி, 2014

தமிழ்த் தேசிய வாதிகள் அறிந்ததும் அறியாததும்

உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் தஞ்சையை அடுத்த விளாரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவில் பேசிய க.ப.அறவாணன் - தமிழன் ஒன்றுக்கும் உதவாதவன். 

தமிழ்நாட்டில் ஏற்பட்ட இழப்புகளுக்கும் இன்னல்களுக்கும் தமிழர்களே காரணமென பேசினாராம்.

தமிழ்நாட்டில் தமிழர்கள் 40 விழுக்காடு என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா பேசினாராம்.

இந்த இரண்டு பேச்சுக்களும் அருகோவுக்கு சினத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவிலேயே 84 விழுக்காடு மாநிலமொழியான தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இருக்கும் ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான் எனக்கூறி பாரதிராஜாவை மறுக்கிறார் கண்டிக்கிறார் அருகோ.

இது சரிதான்; ஆனால் 84 சதவிகிதம் தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்தும் அவனால் தமிழ்நாட்டிடை ஆள முடியவில்லை என்றால் - தமிழன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்வதில் என்ன தப்பு?

தமிழ்நாட்டில் ஏற்பட்ட இழப்புகளுக்கும்; இன்னல்களுக்கும் தமிழர்களே காரணம் என்று சொன்னதில் என்ன தப்பு?

மராட்டியத்தில் மராட்டியர் அல்லாத எவரும் முதலமைச்சராக வர முடிந்திருக்கிறதா? மராட்டியத்தின் ஆளுமை மராட்டியரிடம் தானே உள்ளது என்கிறார் அருகோ.

இது எல்லா தமிழ்த்தேசிய வாதிகளும் அறிந்தது.


ஆனால் மராட்டியத்தில் முதல்வர்களாக வந்தவர்களில் 95 சதவீதம் மராட்டா சாதியைச் சேர்ந்த மராட்டியன் என்ற உண்மை தமிழ்த்தேசியவாதிகள் அறியாதது.

தமிழ்நாட்டில் தமிழன் முதலமைச்சராக வர முடியாமல் போனதற்கு - இங்கே கீழை ஆரிய சனாதனமும்; மேலை ஆரிய அழிப்புகளும்; திராவிட ஜமீன்தாரியமுமே காரணம் என்கிறார் அருகோ.

இது பெரியார் பித்தத்தின் பாதிப்பு.

இந்த கீழை மேலை ஆரிய சனாதனமும் அழிப்பும் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறதா? ஆந்திராவில்; கேரளாவில்; மகாராஷ்டிரத்தில்; மற்ற மற்ற மாநிலங்களில் இல்லையா? அங்கெல்லாம் அதை மீறி அந்தந்த மாநில மக்கள் ஆட்சிகள் எழுந்திருக்கின்றனவே?

நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல் இன்னும் எத்தனை காலத்துக்கு ஆரிய சனாதனத்தால் அழிந்தோம் என்று புலம்பி; பிதற்றித் திரிவது?


இங்கே இருக்கும் நூற்றுக் கணக்கான தமிழ்த் தேசிய அமைப்புகளால் தமிழுணர்வை வளர்த்து தமிழன் ஆட்சியைக் கொண்டு வர முடியவில்லையே ஏன்?

செல்லாக்காசுகளின் சில்லறைச் சத்தங்களாகி கிடக்கின்றன தமிழ்த் தேசிய அமைப்புகள். ஏன்?

2004-ல் மகாராஷ்டிர மாநிலத்தில் விலாஸ்ராவ்தேஷ்முக் என்பவர் காங்கிரஸ் முதலமைச்சர்; ஆர்.ஆர்.பட்டேல் துணை முதல்வர், தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர்; சிவசேனாக கட்சியை சேர்ந்த நாராயண ரானே எதிர்க்கட்சித் தலைவர்.

இவர்கள் மூவருமே மராட்டா சாதியினர்.

இது மட்டுமல்ல - 40 அமைச்சர்களில் 20 அமைச்சர்கள் மராட்டா சாதி. 288 எம்.எல்.ஏக்களில் 160-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் மராட்டா சாதியினர் என்ற உண்மை எந்த தமிழ்த்தேசியவாதிக்காவது தெரியுமா? 


மகாராஷ்டிராவில் மராட்டா சாதி 31 சதவிகித மக்களை கொண்ட பெரும்பான்மை சாதி.

தமிழ்நாட்டில் வன்னியர் 25 சதவிகிதம் கொண்ட பெரும் பான்மைச் சாதி.

வன்னியனை ஒழிப்பதில் பெரியாருக்கும் காங்கிரஸ் காரனுக்கும் திமுக காரனுக்கும்; அதிமுக காரணுக்கும் தமிழ்த்தேசியவாதிகளுக்கும் ஒரே முகம்.

மராட்டா சாதியினரைப் போல் இங்கே வன்னியர் ஆட்சிக்கு வந்தால், இங்குள்ள தமிழ்த்தேசிய வாதிகள் அத்தனை பேரும் ஒரே நேரத்தில் மாரடைப் பால் செத்துப் போவார்கள். அந்த அளவுக்கு தமிழ்த்தேசிய வாதிகளுக்கு வன்னியர் மீது காழ்ப்புணர்ச்சி.

வந்தேறிகளான வைகோபால்சாமியும்; விஜயகாந்தும்; தமிழ்நாட்டை நாங்கள் ஆள்வோம் என்று சொல்லும்போது - தமிழ்த்தேசிய வாதிகள் ஊமைகளாய் முடங்கி ஆமைகளாய் ஒடுங்கிக் கிடக்கிறார்கள்.


ஆனால் வன்னியன் ஒருவன் நாங்கள் ஆள வேண்டும் என்று சொன்னால் ஆட்சிக்கு வர சாதிதான் தகுதியா என்று குதியோ குதி என்று குதிக்கிறார்கள்.

என்றைக்கு தமிழ்த் தேசியத்துக்கும் தமிழக அரசியலுக்கும் வன்னியன் ஒருவன் தலைவனாக வருகிறானோ அன்றைக்குத்தான் தமிழ்நாட்டில் தமிழன் ஆட்சி எழும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக