சனி, 15 பிப்ரவரி, 2014

குச்சுக் கொளுத்திகள் விடுதலைச் சிறுத்தைகளே..!

தங்கள் குடிசைகளை தாங்களே கொளுத்திக் கொண்டு வன்னியர்கள் கொளுத்தி விட்டதாகப் புகார் கூறிய விடுதலைச் சிறுத்தைகள் 8 பேர் மீது

பெண்களைக் கடத்திப் பணம பறிப்பது.

தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தைக் கேடயமாக்கிக் கொண்டு கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது

தங்கள் குடிசைகளைத் தாங்களே எரித்துக் கொண்டு கள்ள ஒப்பாரி வைப்பது

இவற்றைத் தொழிலாகவே செய்து பிழைத்து வந்த ஒரு கும்பலுக்கு முதல்முறையாக தர்மபுரியில் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அஸ்ராகர்க் மரண அடி கொடுத்திருக்கிறார்.

தருமபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் அத்தூரணஹள்ளி. இந்த ஊரில் உள்ள சேகர் என்கிற வெங்கடசாமிக்கு சொந்தமான நிலத்தை தலித்துகளுக்கு வீடு கட்டும் மனைகளாகப் பிரித்து கொடுப்பதற்காக தமிழக அரசு அரசுடைமையாக்கியது 1994இல். தலித்துகளுக்கு மனைப்பட்டாவும் வழங்கப்பட்டது.

தலித்துகளுக்கு மனைப்பட்டா வழங்கப்பட்டதே தவிர - நிலத்தை வீட்டு மனைகளாகப் பிரித்து 2002 வரை எட்டு ஆண்டு காலம் ஆகியும் யாருக்கும் கொடுக்கவில்லை.

அங்கே யாரும் வீடு கட்டவும் இல்லை.

இந்த நிலையில் - நில உடைமையாளர் சேகர் தனது நிலத்தை அரசுடைமை ஆக்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கினை விசாரித்த நீதிமன்றம் - நிலத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என 2006 இல் தீர்ப்பு வழங்கியது.

இந்த விபரத்தை தெரிவித்து ஆதிதிராவிடர் நலத்துறை - பட்டா வழங்கப் பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனாலும் பட்டா வழங்கியதை நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் ரத்து செய்யவில்லை.

இதை வைத்து - தலித்துகளைத் தூண்டி தங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட நிலத்தில் குடிசைகளைப் போட வைத்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால் என்பர். குடிசைகளைப் போட்ட அன்று இரவே அவைகளைத் தீ வைத்து கொளுத்தி விடும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.

அவர்களே வைத்த தீயில் குடிசைகள் எரிந்து கொண்டிருக்கும் போதே மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் - தங்கள் குடிசைகளை சேகர் எரித்து விட்டதாக பொய் புகார் கொடுத்து வழக்குப் பதிய வைத்து விட்டார்கள்.

இந்த பொய்ப் புகார் அடிப்படையில் நில உரிமையாளர் சேகரையும்; அவரோடு மற்றொரு வரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டது காவல் துறை. இவர்கள் வன்னியர்கள்.

இந்த நிலையில் - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் குடிசைகள் எரிக்கப்பட்டது தொடர்பாக தானே விரிவான விசாரணை நடத்தியபோது - குடிசைகளை எரித்தது சேகர் அல்ல - குடிசைகளைப் போட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ராஜகோபாலும் மற்ற தலித்துகளும் தான் என்ற உண்மை தெரிந்தவுடன் - நில உரிமையாளர் சேகரையும் அவரோடு கைது செய்யப்பட்ட மற்றொருவரையும் விடுதலை செய்தது மாவட்ட காவல்துறை.

உண்மையான குச்சிக் கொளுத் திகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த - 1.ராஜகோபால் 2.பி.முருகன் 3.கே.நாகராஜ் 4.கே.கோவிந்தராஜ் 5.என்.பழநி 6.எம்.மாசாமணி 7.எம்.முத்துசாமி 8.ஜி.பெருமாள் ஆகிய எட்டு பேர் மீதும் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்துள்ளது தருமபுரி மாவட்ட காவல்துறை.

இவர்கள் மீது - தீவைப்பு மற்றும் வெடிமருந்துகளுடன் வீடுகளை அழிக்க முயன்றது.

ஆபாசமான பாட்டுக்களைப் பாடிக்கொண்டு ஆடியது.

சட்ட விரோதமாக கலகம் ஏற்படுத்தும் நோக்கமுடன் கூட்டமாகக் கூடியது.

இரண்டு சமூகங் களுக்கிடையே பகையை உருவாக்கத் திட்டமிட்டது.

அத்து மீறி பிறருக்கு உரிமையான இடத்தில் புகுந்தது.

மற்றவர்க்கு தீங்கு செய்யும் நோக்கோடு பொய்ப் புகார் கொடுத்தது.

ஆகிய கிரிமினல் விதிகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அஸ்ரா கர்க் போன்ற 10 நேர்மையான காவல்துறை அதிகாரிகள் இருந்தால் - திருமாவளவன் கும்பலின் பாலியல் மற்றும் சட்டவிரோத செயல்களால தமிழ்நாட்டில் ஏற்படும் அராஜகங்களுக்கு முடிவு ஏற்பட்டுவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக