வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

சாதி அரசியலில் நீதி மன்றங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? (தலையங்கம்)

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவ் தண்டிக்கப் பட்டிருப்பதை வைத்து அவரை ஊழலின் icon என்றும்-

லல்லு; முலாயம்சிங் யாதவ்; கருணாநிதி; தேவகவுடா; ராமதாஸ் போன்ற பிற்பட்ட வகுப்புத் தலைவர்கள் குடும்ப வாரிசு அரசியலில் குறுகி விட்டார்கள் என்றும்-
தன் முகநூலில் தகவல் வெளியிட்டிருக்கிறார் புதிய தலைமுறை ஆசிரியரான மாலன்.
---

லல்லு பிரசாத் யாதவ் தண்டிக்கப்பட்டுள்ள அதே மாட்டுத் தீவன ஊழல் வழக்கில்தான்; காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்; காங்கிரஸ் சார்பாக பீகார் மாநிலத்துக்கு மூன்று முறை முதல்வரானவரும்; ஒரு முறை மத்திய அமைச்சராக இருந்தவருமான ஜெகநாத் மிஸ்ராவும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

இவர் மாலனின் கண்களுக்கு ஊழலின் ஷ்உலிஐ ஆக தெரிய மாட்டார். ஏன் எனில் ஜெகநாத் மிஸ்ரா மாலனின் சாதிக்காரர்.

லல்லு; முலாயம்சிங் யாதவ்; கருணாநிதி; தேவகவுடா; ராமதாஸ் இவர்கள் மட்டும்தான் குடும்ப வாரிசு அரசியலால் குறுகி விட்டார்களா?

குடும்ப அரசியலில் உலகளவு பிரசித்தி பெற்றது நேரு குடும்ப வாரிசு அரசியல்தான். நேரு; இந்திரா; ராஜிவ்; ராகுல் என நான்காவது தலைமுறையாக குடும்ப வாரிசு அரசியலில் கொடிகட்டிப் பறப்பது நேரு குடும்ப வாரிசு அரசியல்தான்.

இவர்கள் குடும்ப வாரிசு அரசியலால் குறுகி விட மாட்டார்கள். ஏன் என்றால் இவர்கள் மாலனின் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள்.

---

தன் சாதிக்காரர்கள் ஊழல் செய்தாலோ;

தன் சாதிக்காரர்கள் குடும்ப அரசியல் நடத்தினாலோ

கண்களை இறுக்க மூடிக்கொள்வதையும் -

பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவர்களின் பேனை எடுத்து பெருமாளாக்குவதையும் கலையாகக் கற்றவர்கள் மாலன் சாதியினர்.

மாட்டுத் தீவன ஊழல் தொகை 37.7 கோடி. இந்த வழக்கு தொடர்பாகத் தண்டிக்கப்பட்டிருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் உட்பட 45 பேர்கள். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவர்கள் (மிஸ்ராவையும் சேர்த்துதான் சொல்கிறோம்) 45 அதிகாரிகளுடன் சேர்ந்து போலி பில் கொடுத்தா கருவூலத்திலிருந்து தொகையை எடுப்பார்கள் என்ற விவஸ்தை கூட இல்லாமல் லல்லுவும் மிஸ்ராவும் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் சாதி அரசியலில்-

நீதிமன்றங்கள் மட்டும் விதிவிலக்காக இருந்துவிட முடியுமா என்ன என்ற கேள்வியைத் தவிர்க்க முடியாததாக்கி இருக்கிறது இந்த வழக்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக