சனி, 15 பிப்ரவரி, 2014

என் மகள் காதலை திவ்யா காதலோடு ஒப்பிடவேண்டாம் என்கிறார் சேரன்

ஏன் சேரன் ஏன்?
----------------------------
சினிமாவில் காதல் புரட்சிகளை உருகி உருகி படமெடுத்துக் காட்டியவர் சேரன். தன் வீட்டிற்குள் காதல் நுழைந்தவுடன் அலறுகிறார்; துடிக்கிறார்; அழுகிறார்.


காவல் நிலையத்தில் மகளின் காலில் விழுந்து கதறுகிறார். இது ஒரு தந்தையின் வலி என்கிறார்கள் அவரது சக இயக்குநர்கள். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்களே சும்மாவா?

பெரியார் பிறந்த மண்ணில் ; பாரதிதாசன் பிறந்த மண்ணில் சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பா?

தருமபுரி கலவரத்தினை வைத்து மேடைகளில் இப்படிப் பேசிக் கைத்தட்டு வாங்கியவர்கள் ஏராளம்.

பெரியார் வீட்டிலும் சாதி மறுப்புத் திருமணம் நடந்ததில்லை. பாரதிதாசன் வீட்டிலும் சாதி மறுப்புத் திருமணம் நடந்ததில்லை. இவர்களைப் பேசி மேடையில் கைத்தட்டல் வாங்குகிறார்களே அவர்கள் வீட்டிலும் சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்ததில்லை.

பெரியார் அண்ணன் மகன் சம்பத். அவருக்கு நாயுடு வீட்டில் தான் பெண். சம்பத் மகன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெரியாரின் பேரன் அவர் தன்னை ஆந்திரத்தின் மருமகன் என்று சொல்லிக் கொள்பவர். அவரது மனைவி ஆந்திரத்து நாயுடு பெண்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன்; பெரியாரின் கொள்ளுப் பேரன் பெயரே ஈவெரா பெரியார் அவருக்கு பாண்டி பஜார் நாயுடு ஹால் உரிமையாளர் வீட்டில்தான் பெண்.

இதிலே பெரியார் பிறந்த மண் என்ற பேச்சுக்கு மட்டும் குறைச்சலில்லை.

இனி சேரன் விவகாரத்தைப் பார்ப்போம்

நான் சந்துருவைக் காதலிக்கிறேன். என் அப்பா சேரன் எங்களைப் பிரிக்கப் பார்க்கிறார். ரோட்டுல எத்தனையோ ஆக்சிடென்ட் நடக்குது தெரியுமில்லே என்று சொல்லி சந்துருவை கொன்று விடுவதாக மிரட்டுகிறார் எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். என்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் 2.8.2013 அன்று திரைப்பட இயக்குநர் சேரன் மீது அவரது மகள் தாமினி புகார் கொடுத்திருக்கிறார்.

மறுநாள் சந்துரு நல்லவனில்லை. ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றி இருக்கிறான். பல வழக்குகள் இருக்கிறது. அவனிடமிருந்து என் மகளைக் காப்பாற்றுங்கள் என சேரனும் புகார் கொடுக்கிறார்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி போலீஸ் விசாரணை நடக்கிறது.





அவன் நல்லவன் இல்லம்மா அவன் வேண்டாம்மா என்று தன் மகள் காலில் விழுந்து கதறி இருக்கிறார் சேரன்.

போலீசும் எவ்வளவோ அறிவுரை சொல்லி இருக்கிறது. சேரனின் கதறலையோ; காவல்துறை அறிவுரைகளையோ காதில் வாங்கவே இல்லை தாமினி.


தன்னை தன் காதலனோடு சேர்த்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் தாமினி. அவனுடன் அனுப்பவே கூடாது என சேரனும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

சுமூகமான முடிவு ஏற்படாததால் மைலாப்பூர் பெண்கள் காப்பகத்துக்கு தாமினியை அனுப்பி வைத்திருக்கிறது போலீஸ்.

சேரன் போலீசில் மகளை சந்துருவிடமிருந்து காப்பாற்றும் படி புகார் கொடுத்ததைப் போலவே நாகராஜன் தன் மகளை இளவரசனிடமிருந்து மீட்டுத் தருமாறு கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

சேரன் திரைப்பட இயக்குநர் என்பதால் அவரது மகளைப் பிரித்து பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி இருக்கிறது காவல்துறை.

நாகராஜ் சாதாரண விவசாயி என்பதால் - கிருஷ்ணாபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருந்த பெருமாள் ஒரு போலீஸ் அதிகாரி போல் நடந்து கொள்ளாமல் - எங்க ஆளுங்களோட சேர்ந்தா உன் பொண்ணுக்கு புள்ள பொறக்காதா? போய்யா.. பெருசா புகார் கொடுக்க வந்துட்ட.. மானம் போச்சுன்னு நினைச்சா போயி செத்துத் தொலை என ஒரு பொறுக்கியைப் போல பேசி இருக்கிறான்.

சேரனின் கோரிக்கையை ஏற்று தாமினியைப் பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்ததைப் போல -

நகராஜின் புகாரை ஏற்று திவ்யாவை அழைத்து அறிவுரை கூறி விசாரணை முடியும் வரை பெண்கள் காப்பகம் ஒன்றில் இரு என தங்க வைத்திருந்தால் - நாகராஜ் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். தருமபுரி கலவரமும் நடந்திருக்காது.

இதற்கெல்லாம் காரணமான அந்த காக்கிச் சட்டைப் பொறுக்கி மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

சேரன் போலீஸ் ஸ்டேன்ல அவரது பொண்ணு காலுல விழுந்து கதறினார். ஒரு தகப்பன் தன் பிள்ளைகிட்ட மானப் பிச்சைக் கேட்கும் காட்சியை அங்குதான் பார்த்தேன் என்கிறார் திரைப்பட இயக்குநர் அமீர்.

திவ்யாவை கடத்திப் போய் ஒளித்து வைத்து விட்டார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நந்தன் திவ்யாவை ஒப்படைக்க 5 லட்சம் கேட்டதாகவும்; திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் சர்க்கரை 2 லட்சம் கொடுங்கள் நான் ஒப்படைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

பணம் குறைவாக இருக்கிறதே என திமுக சர்க்கரையிடம் பணத்தைக் கொடுத்திருக்கிறார் நாகராஜ். நாம் பேசிய பேரத்தை இந்த ஆள் கெடுத்துவிட்டானே என்று ‡ பெண்ணை ஒப்படைக்க விடாமல் தடுத்திருக்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர்.

இந்த நிலையில் போலீஸ் ஸ்டேசனுக்கு புகார் போய் விட்டதை அறிந்த சர்க்கரை - நான் உங்க பெண்ணை காட்டுகிறேன் நீங்க வந்து பேசி அழைத்துக் கொண்டு போங்க என நாகராஜ் மனைவிக்கு போன் செய்திருக்கிறார். ஆம்பளைங்க யாரும் வரக்கூடாது; பொம்பளைங்க மட்டும் தான் வர வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.

இந்த செய்தியை நாகராஜிடம் தேன்மொழி சொல்லிவிட்டு; நாங்கள் போய் அழைத்து வந்து விடுகிறோம் எனக் கூறி இருக்கிறார். காவல்துறை பொறுக்கி பெருமாளால் காயப்பட்டு வந்த நாகராஜ் வாய் வார்த்தை பேசாமல் - தலையசைத்திருக்கிறார்.

தேன்மொழியும் அவரது உறவினர் பெண்கள் மூவரும் சர்க்கரையைப் போய்ப் பார்த்திருக்கறார்கள். அவர்களை ஒரு ஷேர் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு தொப்பூர் வனப் பகுதிக்குள் போய் நிறுத்தி இருக்கிறர்கள்.

வனத்துக்குள்ளிருந்து திடீரென வந்த 30 பேர் கொண்ட கும்பல் ‡ உங்கள் செல்போன்களை எல்லாம் அணைத்து விடுங்கள் எனக் கட்டளை இட்டிருக்கிறார்கள்.

இவர்கள் செல்போன்களை அணைத்து விட்டு சிறிது நேரம் காத்திருந்தபின் - திவ்யாவும் இளவரசனும் ஒரு வண்டியில் காட்டுக்குள் இருந்து வந்து இறங்கி இருக்கிறார்கள்.

தேன்மொழி மகளைப் பார்த்தவுடன் கதறி அழுதபடி ஓடி கட்டிப் பிடிக்கப் போயிருக்கிறார். அங்கிருந்த கும்பல் தடுத்து நிறுத்தி இருக்கிறது.

பிறகு தேன்மொழி திவ்யா காலில் விழுந்து கதறி இருக்கிறார்.

சித்தப்பிரமைப் பிடித்தவளைப போல பயத்திலிருந்த திவ்யா... என்னை விட்டு விடுங்கள் உங்களோடு வந்தால் என்னை எரித்துக் கொன்று விடுவீர்கள் என அழுதிருக்கிறார். அப்படி மிரட்டி வைத்திருக்கிறார்கள்.

சரி சரி அதான் உங்கள் மகளே வரமாட்டேன் என்று சொல்லி விட்டாளே போங்க போங்க என தேன்மொழி உள்ளிட்டோரை ஷேர் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி விட்டார் சர்க்கரை.

இவர்களை அனுப்பியபின் - நாகராஜனுக்கு போன் செய்து உங்கள் மகள் வரமாட்டேன் என சொல்லி விட்டாள் என்று சொல்லி இருக்கிறார் சர்க்கரை.

தேன்மொழி வீட்டிற்கு வருவதற்குள் நாகராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தேன்மொழி தன் மகள் திவ்யா காலில் விழுந்து கதறியதும் தன் பிள்ளையிடம் மானப்பிச்சை கேட்ட காட்சி தான் அமீர்..

சேரன் தேன்மொழி மட்டுமல்ல - காதல் என்ற பிரச்சனைக்கு உள்ளான ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் பிள்ளைகளிடம் மானப் பிச்சைக் கேட்கும் காட்சிகள் வீட்டுக்கு வீடு வீட்டுக்குள்ளேயே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதிலே தன் மகள் காதலை திவ்யா காதலோடு ஒப்பிடாதீர்கள் என்கிறாரே சேரன். அதுதான் ஏன் என்று புரியவில்லை நமக்கு?

சினிமா இயக்குநர் மகள் காதல் என்றால் உயர்ந்தது. விவசாயி நாகராஜ் மகள் காதல் என்றால் தாழ்ந்தது என்ற நினைப்போ?

நாகராஜ் இறந்த செய்தி கேட்டவர்கள் ‡ நாளைக்கு நமக்கும் இதுதானே கதி என உணர்ந்தபோது நிகழ்ந்தது தருமபுரி கலவரம்.

போலீஸ் நிலைய விசாரணைக்கே சினிமாத்துறை ஆட்கள் படையாக திரண்டு வருகிறார்கள் என்றால் - நாகராஜ் இறந்து போனதற்காக கிராம மக்கள் திரள மாட்டார்களா?

போலீஸ் விசாரணைக்கே போலீஸ் நிலையத்துக்கு சினிமாத்துறை ஆட்கள் படையாகத் திரண்டார்கள் என்றால் - சேரனுக்குஏதாவது ஒன்று ஆகியிருந்தால் - சினிமாத்துறை ஆட்கள் சென்னையில் வெறும் தருமபுரி கலவரத்தை மட்டும் தான் நடத்தி இருப்பார்களா?




இதை - தருமபுரி கலவரம் குறித்து பக்கம் பக்கமாக மாதக்கணக்கில் எழுதிக் குவித்த பத்திரிகைகளும்; மாதக்கணக்கில் காட்சிகளாகவும் விவாதங்களாகவும் நடத்திய தொலைக்காட்சிகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மயிலாப்பூர் பெண்கள் காப்பகத்தில் தாமினியை சட்ட விரோதமாக அடைத்து வைத்திருக்கிறார்கள். அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து விசாரிக்க வேண்டும் என சந்துரு அம்மா சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்கிறார்.

ஆகஸ்ட் 4, 5 தேதிகளில் நீதிபதி அறைகளில் வைத்து விசாரணை நடந்த போதும்; தாமினி தன் குடும்பத்தினரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

வழக்கை ஆகஸ்ட் 21க்கு ஒத்தி வைத்த நீதிபதிகள் - அதுவரை தாமினி படித்த தனியார் பள்ளியான தியாகராய நகர் (சென்னை) புனித வேளாங்கன்னி மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் தாளாளரான பி.கே.கே. பிள்ளையின் வீட்டில் தங்கவைக்கப் படுகிறார்.

சேரனும் பிள்ளை சமூகத்தவர். தாளாளரும் பிள்ளை சமூகத்தவர் என்பதால் அல்ல ‡ தாமினி விருப்பப்படி என்று சொல்லிக் கொள்ளலாம்.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி நீதிபதி முன் ஆஜரான தாமினி தன் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.

இது எனக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. பிள்ளைகளைப் பெற்ற எல்லா பெற்றோருக்கும் கிடைத்த வெற்றி என்று கூறி - என் நன்றியை அவர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று நெகிழ்ந்த சேரன் உயர்நீதிமன்ற வளாகத்திலேயே விழுந்து கும்பிட்டு நன்றி கூறுகிறார்.

இது அப்பா சேரனின் வலி என்று எழுதுகிறது ஜூனியர் விகடன்.

ஜூனியர் விகடனுக்கு ஒரு கேள்வி -

இது அப்பாவாக சேரனின் வலி என்று எழுதுகிறீர்களே -

ஒரே ஒரு வரி விடுதலைச் சிறுத்தை கும்பலாலும்; போலீஸ் உடை அணிந்த பொறுக்கி பெருமாளாலும நாகராஜ் ஒரு அப்பாவாகப் பெற்ற வலி என்று எழுதியது உண்டா?

மாறாக - தமிழருவி மணியன் என்ற மனிதரை வைத்து; இளவரசன் திவ்யா காதல் லைலா மஜ்னு காதல் என்பது போல எத்தனை போலி கட்டுரைகளை எழுதிக் குவித்தது ஜூ.வி.?

இப்போது - சேரன் மகள் விவகாரம் வீதிக்கு வந்தபிறகுதானே -

ஊர் முழுவதும் வி­க்காற்று பெற்றோர்களே உஷார் என்று கட்டுரை வெளியிட தோன்றுகிறது உங்களுக்கு?

சேரன் மகள் காதல் மூலமாகவாவது இந்த வி­க்காற்று ஜூவியின் மூக்கைத் தொட்டிருக்கிறதே - அதற்காக சேரன் மகள் தாமினிக்கு நாகராஜ் போன்றே வலியால் வதங்கிக் கிடக்கின்ற எண்ணற்ற ஏழைப் பெற்றோர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக