சனி, 15 பிப்ரவரி, 2014

இளவரசன் தற்கொலையைக் கொலை என்றாக்க எத்தனை சதிகள்? எத்தனை அராஜகங்கள்?

தன் கையில் கத்தியால் அறுத்துக் கொண்டு சென்னை விடுதி ஒன்றில் மயங்கிக் கிடந்த இளவரசனை விடுதிக் காவலர்கள் (ரூம்பாய்ஸ்) பார்த்துவிட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று காப்பாற்றி இருக்கிறார்கள் என்பது பத்திரிக்கை செய்தி. கையில் கட்டுப் போட்ட படம் இந்தியா டுடேயிலும் வெளி வந்துள்ளது. இது இளவரசனின் முதல் தற்கொலை முயற்சி.

நீ என்னோடு வராவிட்டால் நான் உயிரோடு இருக்க மாட்டேன். என் மரணம் கோரமானதாக இருக்கும் என தொலைபேசியில் திவ்யாவோடு பேசியதற்கான பதிவினை போலீஸ் வெளியிட்டுள்ளது.

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதற்கான முன் முடிவினை இளவரசன் எடுத்துவிட்டான் என்பது மேற்கண்ட செய்திக்குப் பிறகு யூகிக்க முடியாத ஒன்றல்ல.

என் மரணத்திற்கு வேறு யாரும் காரணமல்ல. இது நானே எடுத்த முடிவு எனக் கடிதம் எழுதி வைத்தபின் நிகழ்ந்திருக்கிறது இளவரசன் தற்கொலை.

இந்தக் கடிதத்தில் இருப்பது இளவரசனின் கையயழுத்து அல்லவென முதலில் மறுத்த இளவரசனின் பெற்றோர் 


தமிழக அரசின் தடயவியல் துறை ஆய்வு செய்து இளவரசனின் கடிதம் அவர் கைப்பட எழுதப்பட்டதே என அறிவித்தபின் அமைதியானார்கள்.

இந்த கடிதம் இளவரசனின் மரண வாக்குமூலம் ((Dying declaration)) போன்றது என்கிறார்கள்.

இளவரசனின் மரணம் தற்கொலை என்பதற்கான தடயமாக இருப்பது இந்தக் கடிதம். வன்னியர்கள் மீது பழிபோட்டு வசைபாட தடங்கலாக இருப்பதும் இந்தக் கடிதம் தான்;

என்பதைத் தெரிந்து கொண்டு இதைத் திருடி மறைத்து சதி செய்தது திருமாவளவன் கும்பல்.

பாமக வன்னியர்களும்; வன்னியர் சங்க வன்னியர்களும் தான் இளவரசனைக் கொலை செய்தார்கள்.

அவர்களைக் கைது செய்ய வேண்டும். தண்டிக்க வேண்டும் என சில நாட்கள் ஒப்பாரி வைத்தார்கள்.

இழித்தும் பழித்தும் வசை பாடினார்கள். அசிங்கமாகத் திட்டி போஸ்டர் ஒட்டினார்கள்.

காவல்துறை இந்தக் கடிதத்தைக் கைப்பற்றிய பிறகு தான் திருடனுக்கு தேள் கொட் டியது போல மூச்சுப் பேச்சற்று இவர்களின் தப்பாட்டங்கள் ஓய்ந்தன.

ஆனாலும் - ஒரு தற்கொலைப் பிணத்தை வைத்து இவர்கள் செய்த அரசியல்; இவர்கள் சாதித்த சாதனைகள் இந்திய வரலாற்றில் வேறு எந்த சாதியினரும் சாதிக்காதது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு தற்கொலைப் பிணத்திற்கு - நீதி விசாரணை, காவல்துறை விசாரணை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை வரவழைத்து மறு பிரேதப் பரிசோதனை...

வேறு எந்த சாதி தற்கொலைப் பிணத்திற்கு கிடைக்கும் இந்த ராஜ மரியாதை?

விரிவாகப் பார்ப்போம்.

எத்தனை எத்தனை மருத்துவர்கள் ஆய்வு?

4.7.2013

இளவரசனின் மரணம் தற்கொலை அல்ல. அவரது உடலை ஒரு தனி மருத்துவர் பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது. மருத்துவர் குழு அமைத்தே பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். பிரேதப் பரிசோதனை நடைபெறும்போது எங்கள் தரப்பில் ஒருவர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் உடலை இங்கிருந்து எடுக்க விடுவோம் என்கிறார்கள்.
கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் பட்டது.

5.7.2013 

தருமபுரி மருத்துவமனை தடயவியல் துறை நிபுணர் தண்டர் சீப் தலைமையில் டாக்டர்கள் சுதீஷ்குமார்; ரவிக்குமார் அடங்கிய மருத்துவக் குழு அமைத்து பிரேதப் பரிசோதனை நடந்தது. இளவரசனின் தந்தை உடனிருக்க அனுமதிக்கப் பட்டார். பிரேதப் பரிசோதனை வீடியோ பதிவும் செய்தார்கள்.

இதற்கிடையில் 4.7.2013 அன்றே பிரேதப் பரிசோதனையை கோவை மருத்துவமனையிலோ;

சென்னை மருத்துவமனையிலோ தான் நடத்த வேண்டும் என்றும் - நாங்கள் குறிப்பிடும் இரண்டு மருத்துவர்கள் முன்னிலையில்தான் அந்தப் பிரேதப் பரிசோதனை நடக்க வேண்டுமென உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்திருந்தார்.

அந்த வழக்கு 5.7.2013 அன்று காலை 11.30 க்கு விசாரணைக்கு வருவதற்குள் தருமபுரியில் பிரேதப் பரிசோதனை முடிந்து விட்டது என நீதி மன்றத்தில் சொல்லப் பட்டதற்கு இளவரசன் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால் - இளவரசன் தரப்பு எதிர்ப்பை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்:

ஏற்கனவே நடந்த பிரேதப் பரிசோதனை வீடியோ பதிவை 9.7.2013 அன்று இந்த நீதிமன்றம் பார்வையிடும்.


மனுதாரர் குறிப்பிடும் டாக்டர் டெகல் உடனிருக்கலாம்


ராஜிவ்காந்தி மருத்துவமனை தடயவியல் துறைத் தலைவரும்; புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தடயவியல் நிபுணரும் இந்த வீடியோ பதிவைப் பார்வையிட்டு கருத்துரைக்க வேண்டும்.

என உத்தரவிட்டு வழக்கை 9.7.2013 க்கு ஒத்தி வைக்கிறார்கள்.

9.7.2013

பிரேதப் பரிசோதனை வீடியோ பதிவைப் பார்வையிட்ட பிறகு; இளவரசன் தரப்பு டாக்டர் டெகல் மட்டும் மறு பிரேதப் பரிசோதனை வேண்டும் என்கிறார்.

மற்ற இரண்டு நிபுணர்களும் தேவையில்லை என்கின்றனர்.

இதற்கிடையில் பிரதமர் ராஜிவ்காந்தி உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர் சந்திரசேகர் தலைமையில் குழு அமைத்து இளவரசன் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென திருமாவளவன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேலும் ஒரு வழக்கைத் தொடுக்கிறார்.

இந்த வழக்கும் ஏற்கப்பட்டு ­ அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது நீதிமன்றம்.

10.7.2013

எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் கே.தங்கராஜூம் ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் சம்பத் குமாரும் - இளவரசன் உடலைப் பரிசோதித்து; 


மறுபரிசோதனை தேவையா என கருத்துரைக்க வேண்டும் என உத்தரவிடுகிறது நீதிமன்றம்.

இளவரசனின் உடலை ஆய்வு செய்த இவ்விரு டாக்டர்களும் மாறுபட்ட கருத்தை தெரிவிக்கிறார்கள். இதன் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 டாக்டர்கள் இளவரசன் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து அறிக்கை தர வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

13.7.2013

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையைச் சேர்ந்த பரத்வாஜ் மில்லோ டாமின்; சுதீஷ்குமார் குப்தா ஆகிய மூவரும் தருமபுரி வந்து 13.7.2013 பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை ‡ 3 மணி நேரம் பிரேதப் பரிசோதனை செய்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அளித்துள்ளனர்.

13.7.2013 மாலை 6 மணிக்கு பிணத்தை பெற்றுக் கொண்ட இளவரசன் பெற்றோர் 15.7.2013 அன்று அடக்கம் செய்துள்ளனர்.

இளவரசனின் மரணம் ரயிலில் அடிபட்டதால் தான் ஏற்பட்டுள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கை கொடுத்திருப்பதாக 17.7.2013 தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

அப்பாடா- இங்கிலாந்து இளவரசி டயானா உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த அதே டாக்டர்கள் வந்து எங்கள் தருமபுரி இளவரசனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என யாரும் வழக்கு தொடரும் முன்பு இளவரசனின் பிரேத நல்லடக்கத்திற்கு வழி வகுத்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் களுக்கு நன்றி சொல்வோம்.

பிரேதப் பரிசோதனையில் மட்டும்தான் இத்தனை கோரிக்கைகளா? காவல்துறை விசாரணையில் இவர் வேண்டாம் அவர் வேண்டாம் என்ற கோரிக்கைகள் எதுவுமில்லையா?
இல்லாமலா?

போலீஸ் விசாரணையில் எத்தனை கோரிக்கைகள்?

ரயில்வே போலீஸ் விசாரணை வேண்டாம்.

வழக்கமாக - ரயில் மோதி ஏற்படும் விபத்துகள் குறித்தும்; ரயிலில் பாய்ந்து ஏற்படும் தற்கொலைகள் குறித்தும் ரயில்வே போலீஸ் விசாரிப்பதுதான் நடைமுறை.

இளவரசன் மரணம் குறித்து ரயில்வே போலீஸ் விசாரிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தார்கள்.
கோரிக்கை ஏற்கப்பட்டு ‡ தருமபுரி காவல்துறைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

டி.எஸ்.பி. சம்பத்குமார் விசாரணையை ஏற்க மாட்டோம்.

வழக்கு ரயில்வே போலீசிடமிருந்து தருமபுரி மாவட்ட காவல்துறைக்கு மாற்றப்பட்டதும் - அரூர் டி.எஸ்.பியான சம்பத் குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப் பட்டது.

டி.எஸ்.பி. சம்பத் குமார் தலித்துகளுக்கு எதிரானவர் - எனவே அவர் தலைமையிலான விசாரணையை ஏற்க மாட்டோம் எனக்கூறி விசாரணையைப் புறக்கணித்தனர்.

அவர்களது இந்த கோரிக்கையும் ஏற்கப்படுகிறது.


வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப் படுகிறது.


சி.பி.சி.ஐ.டி யும் வேண்டாம்

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென இளவரசனின் பெற்றோரும்; உறவினரும்; வழக்கறிஞர்களும் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டனர்.

இதுவும் ஏற்கப்பட்டால்

சிபிஐ விசாரணை வேண்டாம் - ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரணை வேண்டுமென போரா டினாலும் போராடுவார்கள். தலித் சக்தி சாதாரணமானதா?

காவல் துறை விசாரணையில் தான் இத்தனை கோரிக்கைகளா? நீதி விசாரணையில் இவர் வேண்டாம் அவர் வேண்டாம் என்றகோரிக்கை இல்லையா?
இல்லாமலா?

நீதிபதி சிங்காரவேலு வேண்டாம்.. நீதிபதி சந்துரு வேண்டும்..

நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான விசாரணையை ஏற்க மாட்டோம்.

வைகோபால்சாமி; திருமாவளவன்; கம்யூனிஸ்ட் கட்சி ராமகிருஷ்ணன் ஆகியோர் இளவரசன் மரணம் குறித்து நீதி விசாரணை கேட்டார்கள்.

மரக்காணம் கலவரத்தில் செல்வராசு; விவேக் என்ற இரு வன்னியர்களை திருமாவளவன் கும்பல் கொடூரமாக வெட்டிக் கொன்றது. இந்த படுகொலைக்கெல்லாம் வைகோபால்சாமியும் ராமகிருஷ் ணனும் நீதிவிசாரணை கேட்க மாட்டார்கள். ஆனால் தலித் தற்கொலைகளுக்கு கூட நீதி விசாரணை கேட்பார்கள்.

மரக்காணம் கொலைகளுக்கு நீதி விசாரணை கேட்கப் போன ராமதாசைக் கைது செய்து சிறையிலடைத்த ஜெயலலிதா -

அந்த வன்னிய படுகொலைகளுக்கு நீதி விசாரணை ஆணையம் அமைக்காத ஜெயலலிதா

இளவரசன் தற்கொலை மரணத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்; மனவேதனை அடைந்தேன் என்ற பில்டப்போடு - நீதிபதி சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தர விட்டார் ஜெயலலிதா.

சிந்தப்படுவது வன்னிய ரத்தம் என்றால் ஜெயலலிதாவுக்கு அவ்வளவு அலட்சியம்? அவ்வளவு இளக்காரம்?

தருமபுரி டாக்டர்கள் பிரேதப் பரிசோதனையை ஏற்க மாட்டோம் என்றதைப் போலவே அரூர் டி.எஸ்.பி சம்பத்குமார் விசாரணையை ஏற்கமாட்டோம் என்றதைப் போலவே, கடந்த காலங்களில் தலித்துகளுக்கு எதிராகச் செயலாற்றியதாகப் பல்வேறு புகார்கள் உள்ளதால் நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான விசாரணை ஆணையத்தையும் ஏற்க மாட்டோம் என்று அறிவித்து விட்டார்கள்.

அது மட்டுமல்ல - நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


விசாரணைக் கமி­ன் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைப்பதைத்தான் பார்த்திருக்கிறோம்...


இன்னார் தலைமையில் விசாரணை கமி­ன் வைக்க வேண்டும் என கோரிக்கை வைப்பதை இப்போதுதான் பார்க்கிறோம்.

ஒரு தற்கொலைப் பிணத்தினை பெரிய பெரிய மருத்துவ மேதைகள் ஆய்வு செய்யவும்; பெரிய பெரிய மருத்துவ மேதைகள் மறு பிரேதப் பரிசோதனை செய்யவும்;

ஒரு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு - இந்திய வரலாற்றிலேயே வேறு முன் உதாரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

தலித் அல்லாத வேறு எந்தச் சாதிக்கும் இவைகளைப் பற்றி கனவு காணக் கூட உரிமை இல்லை.
ஒரு தற்கொலையைக் கொலை என்று சாதிக்க எத்தனை பகீரத முயற்சிகள்? எத்தனை சதிகள்? எத்தனை அராஜகங்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக