சனி, 15 பிப்ரவரி, 2014

வன்னிய குல சத்திரிய மகாசங்கம் 125-ஆம் ஆண்டு நிறைவு விழா மாநாடு

அன்புள்ள வன்னிய குல உறவுகளே!
வணக்கம்.

வன்னியகுல சத்திரிய மகா சங்கம் 1888‡ல் தோற்றுவிக்கப் பட்டு கடந்த டிசம்பரோடு 125 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. நம் சமூகத்தின் பழம்பெரும் அடையாளம் இது.

ஆண்ட பரம்பரையாக இருந்த நாம் வீழ்ச்சியுற்று; தாழ்ச்சியுற்ற போது நம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி; கல்வியில், சமூக - பொருளாதாரத்தில் தோள் கொடுத்து 
தூக்கி நிறுத்துவதற்காக நம் குல சான்றோர்கள் கூடி தோற்றுவித்த சங்கம் இது.

இன்றைக்கு நம் சமூகத்திற்காக பல்வேறு சங்கங்களும் அமைப்புகளும் தோன்றுவதற்கும் -
வரலாற்று ஆய்வு அறிஞர்களான சதாசிவ பண்டாரத்தார்; மயிலை சீனி.வேங்கடசாமி;

நடன.காசிநாதன் போன்றோர் நாம் ஆண்ட பரம்பரை என்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டதற்கும் - உணர்வுகளின் ஊற்றுக் கண்ணாய் இருப்பது நமது தாய்சங்கமான வன்னிய மகா சங்கமே.

இந்த சங்கத்தின் 125வது ஆண்டு விழாவை நாம் எல்லோரும் ஒன்று கூடி பெரும் விழாவாக எடுக்க வேண்டியது இச்சங்கத்தை தோற்றுவித்த நம் குலத் தலைவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.


இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்; நம் சமூக ஒற்றுமையைப் பறைசாற்றவும் நம் சமுதாய தலைவர்கள் அனைவரையும் அழைக்க இருக்கிறோம்.

நமக்குள் ஆயிரம் பேதங்கள் இருந்தாலும் - அனைத்தையும் ஒதுக்கி வைத்து ஒரு மேடையில் இருப்பதன் மூலம் நம் பலத்தை உணர்த்துவோம்.

இந்த மாநாட்டில் - வரலாற்றில் வன்னியர் மகா வம்சம் என்ற தலைப்பில்

ஐவன்னியர் சமூகத்தின் வரலாற்றுப் பெருமைகளையும்;

வன்னியர் மகா சங்கம் தோற்றுவித்த நம் குலத் தலைவர்கள் வரலாற்றையும் ஒரு தொகுதியாக ஆவணப் படுத்துகிறோம்.

1920 -1950 காலங்களில் வன்னியர் சங்கம்;

அரசர்குல வாலிபர் சங்கம் ஆகியவை வன்னியர் விழிப்புணர்வுக்காக நடத்திய மாநாடுகள்;

தலைவர்கள் நிகழ்த்திய உரைகள் ஒரு தொகுதியாக ஆவணப் படுத்துகிறோம்.

* அத்திப்பட்டு வெங்கடாசல நாயகர்; சூளை சோமசுந்தர நாயகர்; நாவலர் சோமசுந்தர பாரதியார்;

தி.வே.சதாசிவப் பண்டாரத்தார்; மயிலை சீனி.வேங்கடசாமி; பொன்னம்பலனர் போன்ற அறிஞர்களின் வாழ்வையும் பணியையும் ஆவணப் படுத்துகிறோம்.

ஐநாகப்பன் படையாட்சி; அஞ்சலையம்மாள்; ஜமதக்னி; அர்ததநாரீசவர்மா; செல்லான் நாயகர்; அன்சாரி துரைசாமி போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள்.

சமூக நீதிக்கான சாலைமறியல் போராட்ட தியாகிகள்;

உடையார் பாளையம் வேலாயுதம்; சிதம்பரம் பழநிவேல் போன்ற சமுதாய தியாகிகள் வரலாறுகள் ஒரு தொகுப்பாக ஆவணப் படுத்தப் படுகின்றன.
இதிலேயே புலவர் கலிய பெருமாள்;

தமிழர் விடுதலைப் படை தலைவர் தமிழரசன் போன்ற போராளிகள் வரலாறுகளும் - அடக்குமுறைக்கு எதிர்வினை ஆற்றிய வன்னிய வீரர்களான - கொடுக்கூர் ஆறுமுகப் படையாட்சி; மலையூர் மம்பட்டியான்; சந்தனக்காடு வீரப்பன் உள்ளிட்டோர் வரலாறுகள் தொகுக்கப்படுகின்றன.

கல்வி வள்ளல்கள் பி.டி.லீ செங்கல்வராய நாயகர் அறக்கட்டளை பச்சையப்பன் அறக்கட்டளையிலிருந்து மீட்ட வரலாறு ‡ கோவிந்தப்ப நாயகர் அறக்கட்டளையை மீட்க நடக்கும் வழக்கு விபரம்; கந்தசாமி கண்டர்; புன்னமை தியாகராய நாயகர், எட்டியப்ப நாயகர் போன்ற கல்வி வள்ளல்களின் வரலாறு

நமது படைப்பாளிகள் சிந்தனையாளர் விந்தன்; திருச்சி தியாகராஜன் போன்றோரின் வரலாறுகளுடன்; வாழும் படைப்பாளிகளின் சுருக்க வரலாறு;

ஐகாளி என்.ரத்தினம்; கர்ணன் தொடங்கி இன்று வரையிலான திரைப்படக் கலைஞர்கள் வரலாறு
மணி நாகப்பா போன்ற சிற்பிகள்; காவிரிப்பட்டினம் ஓவியர் சூரிய மூர்த்தி மாமல்லபுரம் சிற்பி பாஸ்கரன்; ஓவியர் வீரசந்தனம் உள்ளிட்டோர் வரலாறுகள் அடங்கிய தொகுப்பு

என 7 தொகுதிகளுக்கான தொகுப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இவைகள் நம் கடந்த கால வரலாறுகள்.

நம் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகள்.

நிறைய பொருட்செலவில் நடை பெற்று வரும் இப்பணிகளுக்கான செலவினத்தை ஈடு கட்ட விளம்பரங் களையும்;

நன்கொடைகளையும் வழங்கி மகாசங்க மாநாடு சிறக்க ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
உ.பலராமன்
தலைவர்.
வன்னியகுல சத்திரிய மகா சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக