சனி, 15 பிப்ரவரி, 2014

திண்டுக்கல் கரியாம்பட்டி கலவரம் காவல்துறை அராஜகத்தைக் கண்டித்து 98 பட்டி கிராம வன்னியர்கள் உண்ணாவிரதம்

சன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த ஒரு பெண் ஊழியர் சன் தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராஜா என்பவர் மீது பாலியல் புகார் கொடுக்கிறார். எந்த விசாரணையும் இன்றி இரவோடு இரவாக ராஜாவை கைது செய்து சிறையில் அடைக்கிறது ஜெயலலிதா அரசு.

கேப்டன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த ஒரு பெண் ஊழியர் சம்பளப் பிரச்சனை தொடர்பாக பணி நீக்கம் செய்யப்படுகிறார். இதற்குப் பிறகு அந்த பெண் ஊழியர் அந்த தொலைக் காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் தினேஷ்குமார் மீது பாலியல் புகார் கொடுக்கிறார். தினேஷ் குமாரையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கிறது ஜெயலலிதா அரசு. இதெல்லாம் சரிதான்.

ஆனால் - பள்ளி மாணவிகளையும்; இளம் பெண் களையும் கடத்துவது; கற்பழிப்பது; பிளாக்மெயில் செய்து பெற்றோர்களிடம் பணம் பறிப்பது என்பதையே தொழிலாகக் கொண்டு கொழுத்து திரியும் சமூக விரோதக் கும்பல் தமிழ் நாட்டையே கலவரக் காடாக்கிக் கொண்டிருக் கிறதே! அதை ஒடுக்க ஜெயலலிதா அரசு இந்த வேகத்தை; இந்த அக்கறையை எப்போதாவது காட்டியதுண்டா?

முதல்வர்களுக்கு வேண்டாதவர்களை ஒடுக்குவது மட்டும் தான் தமிழகக் காவல்துறையின் வேலையா?


தமிழகத்தைக் கலவரக் காடாக்கிக் கொண்டிருக்கும் இந்தக் காமக் கொடூரன்களை ஒடுக் குவதில் ஜெயலலிதா அரசுக்கு அக்கறை இல்லையா?

இவர்கள் மீது புகார் கொடுத்தால அதன் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு‡
புகார் கொடுத்தவர்களுக்கு எதிராக ‡தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தைக் கேடயமாக்கிக் கொண்டு இந்த சமூக விரோதக் கும்பல் கொடுக்கும் பொய்ப்புகார்கள் மீது நடவடிக்கை என்ற பெயரால் - பாதிக்கப் பட்டவர்களையே தங்கள் பங்குக்கு அடித்து நொறுக்கி அராஜகம் செய்வதுதான் காவல்துறையின் வேலையா?

பயிர்களை அழித்துவிட்டு களைகளுக்கு உரமிட்டு வளர்க்கிறதே தமிழக அரசு?

ஜெயலலிதா அரசாக இருந்தாலும், கருணாநிதி அரசாக இருந்தாலும் இதுதான் நடக்கிறது.
இதனால்தான் தருமபுரி கலவரம். இதற்கு இந்த சமூக விரோதக் கும்பல் மட்டும் காரணமில்லை. 


இந்தக் கும்பலை ஒடுக்கத் தவறிய கருணாநிதி; ஜெயலலதா அரசுகளும் தான் காரணம்.

இப்போது திண்டுக்கல்லில் ஒரு கலவரம். இதற்கு என்ன காரணம்?

திண்டுக்கல் மாவட்டத்தில் வன்னியர்கள் அதிக அளவில் வாழும் ஊர் கரியாம்பட்டி. இதனை ஒட்டி சக்கிலியர் சமூக மக்கள் வாழும் ஊர் நடுப்பட்டி. அமைதியாக இருந்த ஊர்கள் இவை.

கடந்த ஜூன் மாதத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் வன்னிய சமூக இளைஞர்களுக்கும்; சக்கிலிய சமூக இளைஞர்களுக்கும் இடையே சின்னத் தகராறு.


ஜூலை மாதத்தில் - நடுப்பட்டி இளைஞர்கள் ஒண்டி வீரன் படத்தைப் போட்டுப் பார்த்துவிட்டு ஒண்டி வீரன் படம் போட்ட பனியன்களைப் போட்டுக் கொண்டு - சாது மிரண்டால் காடு கொள்ளாது.

சக்கிலியன் மிரண்டால் இந்த ஊரு கொள்ளாது என்ற முழக்கத்தோடு - வன்னியர் குடியிருப்புப் பகுதிகளில் வந்து ஆபாச சைகையோடு குத்தாட்டம் போடுகிறார்கள்.

கரியாம்பட்டியைச் சேர்ந்த வர்கள இதையயல்லாம் உங்க நடுப்பட்டியில் போய் வைத்துக் கொள்ளுங்கள் எங்கள் வீடுகளின் முன்பு இப்படி ஆடக்கூடாது என்று சொல்லி அனுப்புகிறார்கள்.

மறுநாள் வயல்வெளிகளுக்குப் போன இரண்டு இளைஞர்களை சக்கிலிய சமூக இளைஞர்கள் தகராறு செய்து அடித்து விட்டு - முன்னெச்சரிக்கையாக - காவல்நிலையத்துக்குச் சென்று 21 பேர்கள் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகார் கொடுக்கிறார்கள்.

இது தெரிந்தவுடன்; கரியாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்துக்குச் சென்று கலவரத்தைத் தூண்டும் நடுப் பட்டியைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுக்கிறார்கள்.


காவல்நிலையத்தில் கரியாம் பட்டியினர் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றவுடன் - மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து முறையிடுகிறார்கள்.

தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த் தைக்குழு போடுகிறார், மாவட்ட ஆட்சித் தலைவர்.


அமைதிப் பேச்சுவார்த்தைக்குழு நிலக்¼ காட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வெளியூர் ஆட்களும்; மதுரை எவிடென்ஸ் கதிரின் வெளியூர் ஆட்களும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

வெளியூர் ஆட்கள் இந்த அமைதிப் பேச்சு வார்த்தைக் கூட்டத்தில் கலந்து கொள் வதற்கு கரியாம் பட்டியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரி வித்ததால் - நாங்கள் வெளியேறுகிறோம் என அவர்கள் அனைவருமே வெளியேறி விட்டனர்.


இதனால் அமைதிப் பேச்சு வார்த்தை நடக்க வில்çலை.

அடுத்ததாக ம்.யூ.நு. தலைமையில் பேச்சுவார்த்தை நடத் தும்படி கலெக்டர் உத்தரவிட்டதன் பேரில் - நத்தத்தில் இந்தக் கூட்டம் நடந்தது.


“அமைதிப் பேச்சுவார்த்தை என்பது அரசு நடத்தும் கட்டப் பஞ்சாயத்து” என எவிடென்ஸ் கதிர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப் பட்டது. இருந்தும் பேச்சு வார்த்தை நடந்தது.

அமைதிக்குழுக் கூட்டத்தில்

* சாதித் தலைவர்கள் படம் போட்ட பனியன்களை அணிந்து கொண்டு மற்றவர்கள் பகுதிகளுக்குள் போய் ஆட்டம் போடக்கூடாது.

* இரு ஊர்களுக்கும் பொதுவில் ஒரு புறக்காவல் நிலையத்தை அமைப்பது. கண்காணிப்புக் கேமரா பொருத்துவது என்ற பொதுக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதோடு தங்களுக்கு கழிப்பறைகள் கட்டித் தர வேண்டும் என்ற நடுப் பட்டிக் காரர்களின் பொருளாதாரக் கோரிக்கையையும் ஏற்று உடனடியாக 5 லட்ச ரூபாய் நிதியையும் ஒதுக்குகிறது மாவட்ட நிர்வாகம்.

நியாயமாகப் பார்த்தால் இரு கிராமங்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் முடிந்து இருக்க வேண்டும்.

நடுப்பட்டி கிராம மக்கள் மட்டுமாக இருந்திருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும்.

பிரச்சனை முடிய விடக் கூடாது. வளர்த்து கலவரத்தை பெரிதாக்க வேண்டும் என்பதற்காகவே நடுப் பட்டிக்கு வந்து முகாமிட்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் ஆதித் தமிழர் பேரவைகளைச் சேர்ந்த வெளியூர் ஆட்கள் கிராமங்கள் அமைதியாக இருக்க விட்டு விடுவார்களா என்ன?

விடுதலைச் சிறுத்தைகளும்; ஆதித்தமிழர் பேரவையினரும் பெண்களைச் சீண்டினால் தான் கலவரம் வெடிக்கும் எனத் திட்டம் தீட்டிக் கொடுத்தது.

21.11.2013 மாலை 3 மணி அளவில் வெள்ளத்தான்பட்டியில் இருக்கும் தன் தாத்தா வீட்டிற்கு போய்விட்டு கரியாம்பட்டிக்கு நடுப்பட்டி வழியாக வந்தார் +2 மாணவி ஒருவர்.

நடுப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல்; நாகராஜன்; அழகுபாண்டி; மாரிபாண்டி; அழகுராஜ்; கண்ணன் ஆகிய 6 இளைஞர்களும் அந்த மாணவியை வழிமறித்து; வாடி... வாடி.. வந்து பாருடி பாருடி.. என வேட்டி; ஜட்டிகளை அவிழ்த்துக் காட்டி ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.

அந்த மாணவி அவமானப்பட்டு அழுது கொண்டு ஓடி கரியாம்பட்டியில் தன் வீட்டாரிடம் கதறி இருக்கிறார்.

இதைப் பார்த்து கோபப்பட்ட கரியாம்பட்டி இளைஞர்களில் சிலர் நடுப்பட்டிக்குப் போய் மாணவியிடம் ஆபாசமாக நடந்து கொண்ட சக்திவேல் கும்பலில் நான்கு பேர்களைப் பிடித்துவந்து புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்கள்.

இதைக் கேட்டவுடன் நடுப்பட்டிக்காரர்கள் திரண்டு வந்து புறக்காவல் நிலையத்தில் இருந்த சக்தி வேலையும் மற்றவர்களையும் இழுத்துக் கொண்டு போய் விடுகின்றனர்.

இந்த செய்தியையும் கேள்விப் பட்ட கரியாம் பட்டிக்காரர்கள் - இதை இப்படியே விட்டால் நாம் மானத்தோடு வாழ முடியாது ஊரைக் கூட்டி முடிவெடுப்போம் என ஒலிபெருக்கி மூலம் ஊர் கூட்டத்திற்கு அழைப்பு விடுகிறார்கள்.

இந்த செய்தியை அறிந்தவுடன் - முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக பயனில்லாதிருக்கும 20 குடிசைகளுக்கு தாங்களே தீ வைத்து எரித்து விட்டு; கரியாம்பட்டிக்காரர்கள் எங்கள் வீடுகளை எரிக்கிறார்கள். எங்களைக் காப்பாற்றுங்கள் என மாவட்ட காவல்துறையிடம் தொலைபேசியில் அழுதிருக் கிறார்கள்.

உடனடியாக விரைந்து வந்த போலீஸ் படை நடுப்பட்டி காட்சிகளைப் பார்த்துவிட்டு - கரியாம்பட்டிக்குப் போய் கண்மண் தெரியாமல் கண்டபடி அடித்து நொறுக்குகிறது. பெண்கள்; 


முதியவர்கள் மாணவர்கள் என கையில் கிடைத்தவர்களை எல்லாம் அடித்து நொறுக்கி ரத்தக் களறியாக்குகிறார்கள். இரண்டு பெண்களுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டக் கொட்ட போலீஸ் வேனில் தூக்கிப் போடுகிறார்கள். ஒரு இளைஞனின் காலை ஒடித்து நடக்க முடியாமல் வீழ்ந்து கிடந்த அவனையும் வண்டியில் ஏற்றுகிறார்கள்.

எதிர்த்து கேள்வி கேட்ட நிறைமாத கர்ப்பிணி ஒருவரை காவல்துறை வண்டியில் ஏற்றுகிறார்கள். மற்ற பெண்கள் அவருக்காக பரிந்து பேசும் போது, நாங்களே பிரசவம் பார்த்து விடுகிறோம். நீங்கள் போங்கள் என்று கேவலப்படுத்தி இருக்கிறார்கள்.

(பின்னர் காவல் நிலையம் சென்றுஅந்த பெண் மீட்கப் பட்டார்)
51 பேர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

இதில் 3 பேர் மாணவர்கள், 10 பேர் பெண்கள், 6 பேர் அரசு ஊழியர்கள்.

மேலும் 150 பேர்கள் மீது வழக்குப் பதிந்து - தேடி வருவதால் எல்லோரும் தலைமறைவாகி விட்டனர். 144 தடையுத்தரவு போட்டு போலீஸ் படை முற்றுகை இட்டு இருப்பதால் ஊரே வெறிச்சோடி கிடக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட மாடுகளும் கன்றுக் குட்டிகளும் தண்ணீர், தீனி இல்லாமல் இறந்து போய்விட்டன.


போலீஸ் தாக்கியதில் ஓய்வு பெற்ற ஓட்டுநர் ஆச்சிமுத்து இறந்து போனார்.

இந்த ஒரு மாத காலத்தில் மேலும் இரு முதியவர்கள் மருத்துவ, பராமரிப்பு வசதிக்கு ஆளில்லாததால் இறந்து போயிருக்கின்றர்.

இறந்த மூன்று பேர்களையும் அடக்கம் செய்யக்கூட ஊரில் ஆண்கள் இல்லாததால் - பெண்களே தூக்கிச் சென்று அடக்கம் செய்திருக்கிறார்கள்.


மேலும் பாதுகாப்புக்கு என்ற பெயரில் ஊரில் முற்றுகை இட்டிருந்த போலீஸ்காரர்கள் ஊரில் இருந்த ஆடு; கோழி; அத்தனையும் பிடித்து தின்று விட்டார்கள்.


ஊரில் இருந்த அனைத்து இருசக்கர வாகனங்கள்; சிறிய வகை வேன்கள்; டிராக்டர்கள் அனைத்தையும் போலீசார் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டனர்.

வெளியில் என்ன நடக்கிறது என்பதை ஊரில் இருப்பவர்கள் அறிய முடியாமலும்; ஊருக்குள் என்ன நடக்கிறது என்பதை வெளியில் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள முடியாமலும் ஒரு மாதத்திற்கு மேல் ஊரே தனித் தீவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த போலீஸ் அராஜகத்தைக் கண்டித்து திண்டுக்கல் மாவட் டத்தில் உள்ள 98 பட்டிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த ஆரம்பித்த உடன் - மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இறங்கி வந்து இனி யாரையும் கைது செய்ய மாட்டோம்;

கரியாப்பட்டிக்குள் செல்வதைத் தடுக்க மாட்டோம் என உறுதியளித்ததை அடுத்து - உண்ணாவிரதத்தில் இருந்தவர் களோடு கலந்து பேசி உண்ணா விரதம் விலக்கிக் கொள்ளப் பட்டிருக்கிறது.

கரியாம்பட்டி கிராமத்தில் இத்தனை கொடுமைகள் நடந்திருக்கும் நிலையில் - மார்க்சிய கட்சித் தவைர் ராமகிருஷ்ணனும்; 


திண்டுக்கல் எம்.எல்.ஏ., பாலபாரதியும் -

* கரியாம்பட்டி சாதிவெறி கொடு மைக்கு எதிராகப் போராட்டம்.

*கரியாம்பட்டி சாதி வெறியர்களைத் தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்.


* தலித் மக்கள் மீது தாக்குதலுக்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பு என உண்மைக்குப் புறம்பாக அறிக்கை விட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கிறார்கள்.

இந்த ராமகிருஷ்ணனையும் பாலபாரதியையும் பார்த்து முகம் சுளிக்கும் பொதுமக்கள் -

“இவங்க பொண்ணுங்க முன்னாடி வேட்டிய அவிழ்த்துக் காட்டினா இவங்க சும்மா இருப்பாங்களா?”

“அநியாங்களுக்கு ஒரு கட்சித் தலைவரும்; ஒரு எம்.எல்.ஏவும் துணை போறது அசிங்கமா இருக்கு?”

“பொண்ணுங்களை அவமானப்படுத்தும் பொறுக்கி கும்பலுக்கு ஆதரவா பேச இவங்களுக்கு வெக்கமா இல்லையா?”

“எங்க தொகுதி (ரிசர்வ்) எம்.எல்.ஏ ராமசாமியே எதுவும் சொல்லாமல் சும்மா இருக்கும்போது இந்த பாலபாரதி எதுக்கு இங்க வந்து கூத்துக் கட்டுது?”

என்றெல்லாம் கேட்கிறார்கள்.

கபோதி கம்யூனிஸ்டுகளுக்கு இதெல்லாம் எங்கே புரியப் போகிறது?

இவர்கள் பின்னால் போக இவர்கள் நிழல் கூட வெட்கப்பட்டு ஒதுங்கிப் போகும் காலம் நெருங்கிக் கொண்டுதானிருக்கிறது.

-


மத்திய மாநில அரசுகளையும் அமைச்சர்களையும் தன் காலின் கீழ் கட்டிப் போட்டிருந்த ஆசாராம் பாபு என்ற சாமியார் பாலியல் குற்றச் சாட்டில் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.

- தன் பத்திரிகை பலத்தால் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாய் விளங்கிய பத்திரிகை ஆசிரியர் தேஜ்பால் பாலியல் குற்றச்சாட்டில் ‡ விசாரணைக் கைதியாகித் தவிக்கிறார்.

- உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக்குமார் கங்குலி பாலியல் குற்றச்சாட்டால் விசாரணைக் கைதியாகப் போவது நிச்சயம் என்ற நிலையில் தலைகவிழ்ந்து நிற்கிறார்.

ஆனால் - மாணவிகளையும்; இளம் பெண்களையும்; கடத்தி கற்பழித்து பிளாக்மெயில் செய்து பணம் பறித்து கடிவாளம் இல்லாமல் திரியும் இந்த சமூக விரோதக் கும்பலுக்கு மட்டும் ஒரு முடிவு வராமலா போகும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

முசாபர் நகர் கலவரத்தின் போது ராணுவமும் தான் வரட்டுமே... அதையும் சந்திக்க தயாராகத்தான் இருக்கிறோம் என உத்திரப் பிரதேச ஜாட் சமூகத்தினர் போராளிகளாய் மாறி மூர்க்கமாகி நின்றதைப் பார்த்தோம்.


தமிழக சமூகங்களும் அப்படி மாறாமல் இருக்க வேண்டியதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவிடம் தான் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக