வெள்ளி, 28 ஜூன், 2013

மரக்காணம் கலவரம் பரப்பப்பட்ட பொய்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்...

மாமல்லபுரத்தில் சித்திரைவிழா எடுப்பதற்கான முயற்சியில் ராமதாசு இறங்கிவிட்டார் என்று தெரிந்தவுடன்;
மரக்காணத்தை வன்னியர்கள் ரத்தம் குடிக்கும் கொலைக்களமாக்கும் சதித்திட்டத்தில் திருமாவளவன் தீவிரமாகிவிடுகிறார்.

இதனால்தான்-
ஒவ்வொரு சித்திரைத் திருவிழாவின்போதும் மரக்காணம் கொலைக்களமாகிறது. வன்னியர்களின் மரண ஓலங்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

இந்த ஆண்டு -
மரக்காணத்தில் கட்டுக்கடங்காத கூட்டமென பத்திரிகைகள் எழுதியது சிறப்பல்ல.
எந்த ஆண்டும் இல்லாத நிகழ்வாக-
திருமாவளவன் கும்பலின் பாலியல்; பெண்கடத்தல்; பிளாக்மெயில் கொள்ளை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட-
முக்குலத்தோர்; கொங்கு வேளாளர்; நாடார்; நாயுடு; ரெட்டி; பிராமணர் போன்ற அனைத்து சாதிப் பிரமுகர்களும் மாமல்லபுரம் விழாமேடை ஏறி; திருமாவளவன் கும்பலின் அராஜகங்களால் தங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்புகளையும்; தங்களது பாதுகாப்பற்ற நிலைகளையும் முழங்கியதுதான் சிறப்பு.

எந்த ஆண்டை விடவும்; இந்த ஆண்டு மரக்காணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அராஜகங்கள் அதிகமானதற்கு இதுவும் ஒரு காரணம்.
-
ஏப்ரல் 25ஆம் தேதி மதியமே -
தேவனாஞ்சேரி விவேக்; வெண்மான் கொண்டான் செல்வராஜ்; இருவரின் உயிரையும் குடித்துவிட்டார்கள் இந்த அரக்கர்கள்.
நூற்றுக்கணக்கான இளைஞர்களையும் வெட்டி ரத்தம் சிந்த வைத்துவிட்டனர்.
நானூறு ஐநூறு வாகனங்களையும் எரித்து சாம்பலாக்கி விட்டனர்.
இத்தனை அராஜகங்களையும் செய்த கும்பலின் தலைவனான திருமாவளவன் 26ஆம் தேதியே-
மரக்காணம் கட்டையன் காலனியில் எரிந்து கிடந்த 7 குடிசைகளில் ஒன்றில் போய் நின்று கொண்டு -
“25ஆம் தேதி மதியத்திலிருந்து இரவு வரை தலித் குடிசைகளை வன்னியர்கள் கொளுத் தினார்கள்” என போட்டோ எடுத்து பத்திரிகை களிலும் டிவியிலும் கொடுத்து ஒளிபரப்பி தன் அராஜகங்களை மறைத்து வன்னியர்களை வன்முறையாளர்களாக்கும் கள்ள ஒப்பாரியை ஆரம்பித்துவிட்டார்.
‡தமிழக அரசியல் பத்திரிகையில் கட்டையன் காலனியின் எரிந்த குடிசைகள் ஏழு என்று எழுதியுள்ளது. இந்த ஏழு குடிசைகளையா மதியத்திலிருந்து இரவு வரை கொளுத்தினார்கள் என புளுகப்பன் திருமாவளவனை யாராவது கேட்டார்களா?

-எரிந்து போன குடிசையில் செத்துப் போன ஒரு மாட்டைக் கொண்டுவந்து போட்டுப் படமெடுத்து பொய்யைப் பரப்பும் புதிய தலைமுறை டிவியிலும்; புதிய தலைமுறை இதழிலும் வெளியிட வைத்து தன் கள்ள ஒப்பாரி நாடகத்துக்கான சீன் செட்டிங்கை அமைத்துக் கொண்டார்.
தீப்பற்றி எரிந்த குடிசைக்குள் சிக்கி இந்த மாடு இறந்திருக்குமானால், மாட்டின் மயிர் கருகாமல் இருக்கிறதே அது எப்படி என்றோ?

தீப்பற்றி எரிந்த குடிசைக்குள் சிக்கி இந்த மாடு எரிந்து இறந்திருககுமேயானால் மாட்டின் தலையும்; கால்களும் விறைத்துக் கிடக்குமே? ‡ திருமாவளவன் சீன் செட்டிங்கில் மாட்டின் தலை திருகிக் கிடக்கிறது; கால்கள் மங்கிக் கிடக்கிறதே என்று புதிய தலைமுறை டிவிக்காரனும்; புதிய தலைமுறை பத்திரிகை ஆசிரியர் மாலனும் கேள்வி கேட்டார்களா? கேட்கத்தான் செய்வார்களா?

வன்னியர்களை வன்முறையாளர்கள் என சித்தரிக்க எந்த மோசமான காட்சியானாலும் செட்டப் செய்; நாங்கள் வெளியிடுகிறோம்; ஒளிபரப்புகிறோம் என்று செயல்படுகிறவர்கள் அவர்கள்.
தன் கள்ள ஒப்பாரி நாடகத்துக்கான இந்த சீன் செட்டிங்குகளை செய்து முடித்துவிட்டு -

கருணாநிதி; வைகோபால்சாமி நாயுடு; விஜயகாந்த் நாயுடு; ஞானதேசிகன் போன்ற அரசியல்தலைவர்களிடம் போய் தன் புதிய கள்ள ஒப்பாரி நாடகத்தில் நடிக்க வாருங்கள் என சால்வை போர்த்தி அழைத்த போது‡
தர்மபுரி தொடர்பான உன் கள்ள ஒப்பாரிக்கு வாயசைத்த குற்றத்திற்கே எங்களை மக்கள் தீண்டத்தகாதவர்களாகப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
உன் மரக்காணம் கள்ள ஒப்பாரிக்கும் வாயசைத்தால் எங்களைப் பார்வைத் தீட்டில் கொண்டு போய் நிறுத்தி விடுவார்கள் என ஒதுங்கிக் கொண்டார்களாம்.

இதனால் தலைவர்கள் சந்திப்பு வெறும் ஆல்பம் தயாரிக்க மட்டுமே உதவியதாம்.
-
இருந்தாலும் வீராப்பாய்-
நீங்க வராவிட்டால் என்ன?
என் நாடகத்தில் கள்ளபார்ட் வே­ம் போட காத்துக் கிடக்கும் நல்லகண்ணு; வீரமணி; சுபவீரபாண்டியன்; ராமகிருஷ்ணன் போன்றோரை வைத்து ‡ வீரமணி திடலில் 7.5.2013 அன்று தன் மரக்காணம் களள ஒப்பாரி நாடகத்தின் முதல் ஷோவை நடத்தி முடித்து விட்டார் திருமாவளவன்.
இப்படி -

அனைத்து வன்முறைகளையும் தாங்களே செய்து விட்டு, வன்னியர் மீது வன்முறையாளர்கள் பட்டம் கட்டி தங்கள் கள்ள ஒப்பாரி நாடகங்களை இடைவிடாது நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் -
இந்த வி­மத்தனமான பிரச்சாரத்தை முறியடிக்க பாமக என்ன செய்கிறது?
பதற வைக்கும் கொலைகள் உட்பட மரக்காணத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அராஜகங்கள் பற்றிய செய்திகள் உடனுக்குடன் ராமதாசுக்கும்; குருவுக்கும்; அன்புமணிக்கும்; கோ.க.மணிக்கும் தெரிவித்திருப்பார்கள் நிர்வாகிகளும் தொண்டர்களும்.

இதைக் கேட்டவுடன்-

இவர்களில் இரண்டொருவர் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்க வேண்டும். அப்படி போயிருந்தால் இவர்கள் மாநாட்டில் பேசி சாதித்ததை விட ‡ இவர்களின் மனிதாபிமான செயல் காரணமாக இவர்களுக்கு மரியாதையும்; செல்வாக்கும் கூடியிருக்கும்.

இதே போன்றதொரு சூழலில ராமசாமிப் படையாட்சியார் எப்படி நடந்து கொண்டார் என்பதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
30.8.1976 அன்று வன்னியர் தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி திட்டக்குடியில் மாநாடு நடக்கிறது. 200க்கும் மேற்பட்ட வாகனங்களின் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநாட்டிற்கு வந்துள்ளனர். மாநாட்டிற்கு தஞ்சை மாவட்டம் சுந்தரபெருமாள் கோவிலிலிருந்து வந்து கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளாகி அதிலிருநத ராமநாதன்; தமிழரசன்; கணேசன் ஆகிய மூவரும் இறந்து விட்டனர் என்ற செய்தி வந்தவுடன்; தீர்மானத்தை முன்மொழிந்து விட்டு, மாநாட்டை நீங்கள் நடத்துங்கள் நான் விபத்து நடந்த இடத்துக்கு போய் அவர்களைப் பார்க்கிறேன் எனக் கூறிவிட்டு சம்பவ இடத்திற்கு போய் விடுகிறார். படையாட்சியார் மனிதாபிமானத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

விழா மேடையை விட்டு போக உங்களுக்கு மனம் இல்லை என்றாலும் ‡
விழா முடிந்த அடுத்த நாள் - 26ஆம் தேதியாவது ‡ கொலையுண்டவர்களின் குடும்பங்களுக்கு நேரில் போய் ஆறுதல் சொல்லிவிட்டு ‡ கொலை எப்படி நடந்தது என்பதை தெரிந்து கொண்டிருக்க வேண்டாமா? அந்த குடும்பங்களுக்கு உடனடியாக நிதி உதவி செய்திருக்க வேண்டாமா?
பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி இறந்து போன குடும்பங்களின் அவலங்களையும்; வெட்டுப் பட்டுக் கிடப்போர் பட்டியலையும்; எரித்தும் அடித்து நொறுக்கியும் சேதம் விளைவிக்கப்பட்ட வாகனங்களின் விபரங்களையும் அவர்களிடம் கொடுத்து - விடுதலைச் சிறுத்தைகளின் அராஜகங்களை அம்பலப்படுத்தி இருக்க வேண்டாமா?

என்ன செய்தார்கள்: வன்னியர் சங்கத் தலைவரும்: பாமக தலைவரும்?
கட்டுக்கடங்காத கூட்டமென பத்திரிகைகள் எழுதி விட்டன என்ற மயக்கத்தில் கும்பகர்ணத் தூக்கத்தில் இவர்கள் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு..
குடிசைகளை கொளுத்தி விட்டார்கள்...

கொள்ளை அடித்து விட்டார்கள் என்று பொய்ப்பிரச்சாரத்தை இடைவிடாது நடத்தி வன்னியர்கள் தான் குற்றவாளிகள் என்று அனைவரையும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதிரிகளின் இந்த சூழ்ச்சிகளை முறியடிக்காமல்.
2016இல் நமது ஆட்சி; 2016இல் நமது ஆட்சி என்று கூண்டுக் கிளி போல் சொல்லிக் கொண்டிருப்பதால் என்ன பயன்?

அக்கா அக்கா
என்றழைத்தால் 
அக்கா வந்து தருவதற்கு 
சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே
என்ற பாரதிதாசன் கவிதைவரிகளே  நினைவுக்கு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக