வெள்ளி, 28 ஜூன், 2013

மதுரையில் கண்ணகி இட்ட நெருப்பும்..நாயக்கன் கொட்டாயில் பெண்களைப் பெற்றோர் இட்ட நெருப்பும்... மக்கள் நடத்திய தரும யுத்தங்களே!

மாணவிகளைக் கடத்துவது; கற்பழிப்பது; லட்சங்களும் கோடிகளும் கேட்டு பிளாக்மெயில் செய்வது ஆகியவற்றை தொழிலாகச் செய்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டு தாவூத் இப்ராகிம் கும்பலின் சமூக விரோதச் செயல்களை சாதாரண சமுகப் பிரச்சனைகள் போல் எழுதி தமிழ்நாட்டு தாவூத் இப்ராகிம் கும்பலுக்கு வக்காலத்து வாங்கி - தமிழருவி மணியன் 21.4.2013 நாளிட்ட ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரைக்கும் -
சாதி வெறியர்களை ஒருங்கிணைக்கும் நாடக அரசியல் என்ற தலைப்பில் 28.4.2013 நாளிட்ட ஜூனியர் விகடனில் திருமாவளவனின் கள்ள ஒப்பாரி கட்டுரைக்கும்-
நாம் மறுப்பு எழுதி 30.4.2013 அன்றே ஜூவிக்கு அனுப்பினோம்.
தமிழருவி மணியனின் போலித்தனமான எழுத்தையும்; திருமாவளவனின் கோயபல்ஸ் பிரச்சார எழுத்தையும்; பொய்யயன்று தெரிந்தே வெளியிட்ட ஜூனியர் விகடன் நமது மறுப்பினை வெளியிட மறுத்து விட்டது.

நாம் வேறு வேலைகளைச் செய்வோம் என்று எண்ணினாலும்; தருமபுரியை அணையா நெருப்பாக்கி வியாபாரம் செய்யும் கள்ள ஒப்பாரிக் கும்பலும்; ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகளும் நம்மையும் தருமபுரிக்கே இழுத்து வந்து நிறுத்துவதாலேயே இக்கட்டுரை.

கணவனை இழந்த கண்ணகியின் வலி 
மதுரையை எரித்தது.


தன் கணவன் கோவலனைத் திருடன் என பொய்க்குற்றஞ்சாட்டி கொன்ற மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்க அரண்மனைக்குப் போகிறாள் கண்ணகி..

"அறிவு சிறிதும் இல்லாத,
அற உணர்வு இல்லாத
அரசநீதி கெட்ட அரசனின் வாயில் காவலாளியே...
கணவனை இழந்தவள் நீதிகேட்டு வந்து வாயிலில் நிற்கிறாள் என்று உன் மன்னனிடம் போய்ச் சொல்.." என்கிறாள் கண்ணகி.

பதறி அடித்து ஓடுகிறான் காவலாளி..
"மன்னா.. மகிஷாசுரன் தலையை வெட்டி கீழே போட்டு ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும் அந்த தலையின் மீது ஒரு காலை வைத்து நிற்கும் காளி மாதிரி ஒருத்தி நிற்கிறாள். தன் கணவனை இழந்ததற்கு நீதி கேட்க வேண்டுமாம்" என்கிறான்.

"வரச் சொல்" என்கிறான் மன்னன்.

வாயில் காப்போன் அழைத்துவர-
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் வடிவாய் மன்னன் முன் கோபம் கொப்பளிக்க நிற்கிறாள் கண்ணகி.

"கண்ணீர் ஒழுக நிற்கும் நீ யாரம்மா?" என்கிறான் மன்னன்.

"ஆராய்ந்து பார்க்கும் அறிவில்லாத அரசனே கேள் உன்னால் கொல்லப்பட்ட கோவலனின் மனைவி கண்ணகி என்பது என் பெயர்"

"கள்வனைக் கொல்வது அரச நீதிதானே?" என்கிறான் மன்னன்.

அதுகேட்டுக் கொதித்த கண்ணகி..
"அறவழி தவறி கொலைவழி போன மதுரையின் அரசனே" என விளித்து..
தன் கையில் வைத்திருந்த சிலம்பை தரையில் அடித்து உடைத்து தன் கணவன் கள்வன் அல்ல என நிரூபிக்கிறாள்.

தன் தவற்றை உணர்ந்த மன்னன்..
"பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட நானே கள்வன்" எனக்கூறி மயங்கி சரிந்து உயிர்விடுகிறான்.

தன் தவறுக்கு தண்டனையாக மன்னன் உயிர்விட்ட பிறகாவது கணவனை இழந்த வலி தீர்ந்ததா?

நான் பத்தினி என்பது உண்மையானால்..
மன்னனோடு சேர்த்து மதுரையையும் எரித்து அழிப்பேன் என சபதம் செய்துவிட்டு அரண்மனையை விட்டு வெளியேறிய கண்ணகி..
உடனே மதுரையை எரித்தாளா? இல்லை.

மதுரை வாழ் பெண்களே, ஆண்களே. தவம் செய் பெரியோரே கேளுங்கள்..
என் கணவனைக் கொன்ற மன்னனின் தலைநகர் மீது நான் கோபம் கொண்டுள்ளேன். ஆகையால் மதுரையை எரித்து அழிக்கப் போகிறேன். இது குற்றமல்ல.. அக்கிரமம் செய்த மன்னனின் தலைநகர் மீது நான் தொடுக்கும் தர்மயுத்தம் என்று அறிவித்து-

மதுரையை மூன்றுமுறை சுற்றி வந்து - மதுரையை தீமூட்டி எரித்து சாம்பலாக்குகிறாள்.
மதுரையை எரித்தது குறித்து மதுரை தாய்க்குலம் என்ன சொல்கிறது?
"கணவனை இழந்து
சிலம்பின் வென்ற சேயிழை நங்கை
கொங்கைப் பூசல் கொடிதோ அன்றென்ப
பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர்"
தன் கணவனைக் கொன்ற மன்னனை சிலம்பால் வென்று; கொங்கைப் போர் கொடியது அல்ல (தர்ம யத்தமே) என்று சொல்லி கொழுந்து விட்டு எரியும் நெருப்பை வணங்கினார்கள் மக்கள். கண்ணகியையும பாராட்டினார்கள் என்கிறது சிலப்பதிகாரம்.

----

கணவன் இழந்த கண்ணகியின் வலி, மதுரையை எரித்தது.
நாயக்கன் கொட்டாயை எரித்தது எந்த வலி?

---
பறையர் சாதியைச் சேர்ந்த இளைஞர்கள்..
மற்ற சாதிகளைச் சேர்ந்த இளம் பெண்களைக் குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தி...
அந்தப் பெண்ணக் கடத்தி சில வாரம் குடும்பம் நடத்துவார்கள்..
பிறகு தங்கள் சாதி பிரமுகர்களை அனுப்பி.. உங்கள் மகளைப் பிரித்து ஒப்படைக்கிறோம் என பெண்ணின் பெற்றோரிடம் பேச வைப்பார்கள். அதற்கு பெண்ணின் பெற்றோரிடம் லட்சம் கொடு. கோடி கொடு என பேரம் பேசி பிளாக் மெயில் செய்வார்கள்.

கேட்ட லட்சங்களும்; கோடிகளும் கைமாறினால் பெற்றோர்களிடம் அந்தப் பெண்ணை ஒப்படைப்பார்கள்.
காதல் மணம் புரிந்த அந்த இளைஞர்களுக்கு பிளாக்மெயில் செய்து கொள்ளையடித்த இந்தப் பணத்தில் பங்கு கொடுப்பதோடு அதே பாணியில்‡
வேறு பெண்களையும் மயக்க ஊக்கம் தருகிறார்கள்.
பணத்துக்கும் பெண்ணுக்கும் ஆசைக்பட்டு; அந்த இளைஞர்கள் மீண்டும் மீண்டும் இந்த காதல் விளையாட்டில் ஈடுபடுவார்கள்.
இப்படி பணத்தை நோக்கமாக வைத்து-
கடந்த காலங்களில் அரங்கேற்றப்பட்ட காதல் சம்பவங்களின் வலியும் -
நாயக்கன் கொட்டாய் தீ வைப்புக் காரணம்.

----
ஜூனியர் விகடன் வெளிக்கொணர்ந்த உண்மைகள் தான் இவை.
ஜூ.வி. சொல்லும் இந்த உண்மைகளை மூடிமறைத்துவிட்டு; திருமாவளவன் கும்பலின் பெண்களைக் கடத்தி பணம் பறிக்கும் செயலை சாதி ஒழிப்பு என்றும்; புனிதக் காதல் என்றும்;
திருமாவளவன் கும்பலின் இந்த பாலியல் அராஜகங்களை எதிர்ப்பவர்களை சாதிவெறியர்கள் என்றும் -
கருணாநிதி; நல்லக்கண்ணு; தா.பாண்டியன்; ராமகிருஷ்ணன்; வீரமணி; தமிருவி மணியன் போன்றவர்கள் பிரச்சனையைத் திசைதிருப்பி திருமாவளவன் கும்பலின் சமூகவிரோத செயலுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள்.

ஒரு புலனாய்வுப் பத்திரிக்கைக்கு தெரிந்த இந்த உண்மைகள் உளவுத்துறைப் பட்டாளத்தையே கையில் வைத்திருக்கும் தமிழக அரசுக்கு தெரியவில்லை என்பது; தமிழக அரசுக்கும் அதன் உளவுத்துறைக்கும் அவமானம்.
தெரியும் ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது அதைவிடப் பெரிய அவமானம்.
---
கண்ணகி என்ற ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட வலிக்காக கண்ணகி பாண்டிய நாட்டின் தலைநகரையே தீயிட்டு எரிக்கிறாள்.
ஆயிரக்கணக்கான பெண்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் ஏற்பட்ட வலிக்காக.. இவர்கள் இட்ட தீ.. நாயக்கன் கொட்டாயில் 10, 20 தென்னங்கீற்றுப் பந்தல்களை மட்டுமே எரிக்கிறது. இது மிகக் குறைந்த எதிர்வினையே.
கண்ணகியின் வலி - ஒரு நாட்டின் மன்னனையே பலிகொள்கிறது. ஆயிரக்கணக்கான பெற்றோர்களின் வலி -
இந்த வலிக்குக் காரணமான சமூகவிரோத கும்பலின் ஒரு சொட்டு ரத்தத்துக்கோ, ஒரு சிறு மயிருக்கோ கூட சேதாரம் விளைவிக்காத அறவழிப் போராட்டம்.
---
தன் கணவனைக் கொன்ற அநீதிக்கு எதிராய் கண்ணகி மதுரையை எரித்த போர் (கொங்கைப் பூசல் என்பது சிலப்பதிகார மொழி) குற்றமுடையதல்ல என்கிறார்கள் மதுரை வாழ் கற்புடை மகளிர்.
10, 20 தென்னங்கீற்றுப் பந்தல்கள் நாயக்கன் கொட்டாயில் எரிந்து போனதை, இங்குள்ள டிவிக்களும்; பத்திரிகைகளும் உலகில் எங்குமே நடக்காத வன்முறையயனப் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றன.
வன்முறையாளர்களை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென அரசியல் தலைவர்கள் அறிக்கை விடுகிறார்கள்.
10, 20 பந்தல்களை 500 பேர் கூடி நின்று கொளுத்தினார்கள் என 500 பேர்களைக் கைது செய்வோம் எனக்கூறி 250 பேர்களை கைது செய்து சிறையில் அடைத்து; மீதி பேர்களை இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறது காவல்துறை.
---
கண்ணகிக்கு ஏற்பட்ட வலி மதுரையை எரித்தது. பெற்றோருக்கு ஏற்பட்ட வலி நாயக்கன் கொட்டாயை எரித்தது. இரண்டுமே அதர்மத்திற்கு எதிராய் நடத்தப்படட தர்மயுத்தங்களே.
---
பாண்டியன் இறந்தவுடன்; பாண்டியன் மரணத்திற்கு காரணமானவள் கண்ணகி எனக்கூறி; பாண்டிய மன்னனின் மந்திரிகளோ படைத்தளபதிகளோ கண்ணகியைச் சிறையில் அடைத்திருக்கலாம்..
ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

தர்மயுத்தம் நடத்திய போராளியான கண்ணகியைத் தண்டிக்க முனையவில்லை.
---
ஜெயலலிதா அரசு என்ன செய்கிறது?
பெண்களைக் கடத்தி கற்பழித்து; பிளாக்மெயில் செய்து லட்சங்களையும் கோடிகளையும் கொள்ளையடிக்கும் கயவர்களை விட்டுவிட்டு ‡
அவர்களை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியவர்களை வேட்டையாடி தண்டிக்கிறது.
---
இதனால் இனி இதுபோன்ற கலவரங்களே நடக்காது என ஜெயலலிதா அரசு நம்புமானால் - இதைவிடப் பெரிய முட்டாள்தனம் வேறில்லை.
திருமாவளவன் கும்பலின் அராஜகங்களை இனியும் சகிக்க முடியாது என்ற நிலைக்கு துரத்தப்பட்ட அனைத்து சமூகப் பெற்றோர்களின் வலியின் வெளிப்பாடுதானே தருமபுரிக் கலவரம்?

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இந்த பிரச்சனையின் ஆழத்தை உணர்ந்து; இதற்கு காரணமான கயவர்களை அடக்கி ஒடுக்கி தண்டித்து; இந்தப் பிரச்சனையின் ஆணிவேரை அறுத்தழிக்காதவரை -
அங்கங்கே தருமபுரிகள் வெடித்துக் கிளம்புவதை தடுக்க முடியாது.
---
வன்னியர்கள் மீது வன்முறையாளர்கள் என்று பழிபோட்டு வன்னியர்களை சிறையில் அடைத்து விடுவதால் மட்டும் இந்த பிரச்சனை ஓய்ந்து விடுமா?
வன்னியர் பகுதியில் இல்லை என்றால் நாளை முக்குலத்தோர் பகுதியில் ஒரு தருமபுரி வெடித்துக் கிளம்பும். முக்குலத்தோர்களை அடக்கி ஒடுக்கிவிட்டால்.. கொங்கு வேளாளர் பகுதியில் ஒரு தருமபுரி வெடித்துக் கிளம்பும்.. அவர்களையும் ஒடுக்கி விட்டால், நாடார் பகுதியில் கிளம்பும்...
எனவே-
கலவரங்களை ஒழிக்க கலவரத்துக்கு காரணமான கயவர்களை ஒழிக்க வேண்டுமேயல்லாது... நீதிக்காக போராடும் போராளிகளை ஒடுக்குவதில் பயனில்லை என்பதை ஜெயலலிதா அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
---
தருமபுரி கலவரத்துக்கு பிறகாவது-
கலவரத்திற்கு காரணமான திருமாவளவன் கும்பலின் அராஜகம் அடங்கியதா?
*கடலூர் மாவட்டம் பாச்சராப்பாளையத்தில் இளம் பெண்ணின் சடையைப் பிடித்து இழுத்ததால் பிரச்சனை ஏற்பட்டது தருமபுரிக்குப் பிறகுதான்.

*புதுவை மாநிலம் கொத்தபுரி நத்தம் கிராமத்தில் 17 வயது பள்ளி மாணவியைக் கடத்தி மயக்க மருந்து கொடுத்து மூன்று பேர் - கூடிக் கூட்டுக் கற்பழிப்பு நடத்தியது - தருமபுரிக்குப் பிறகுதான்.

*கடலூர் மாவட்ட கச்சிபெருமாள் நத்தம் என்ற ஊரைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியைக் கடத்திக் கற்பழித்துக் கொன்றது தருமபுரிக்குப் பிறகுதான்.
ஷ்கிருஷ்ணகிரி - தளி பகுதியில் கொத்த னூரைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியைக் கடத்தியதும்; மீட்கப் போன பெரியப்பாவை அடித்துக் கொன்ற அராஜகமும் நடந்தது தருமபுரிக்குப் பிறகுதான்.

*அரியலூர் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த பெண்ணை நகையோடும் பணத்தோடும் கடத்தி திருமாவளவன் தலைமையில் திருட்டுத் தாலி கட்டி ‡ குடும்பம் நடத்தி, பின் கேட்ட பணத்தை பெற்றோர் கொடுக்காததால் அந்தப் பெண்ணை மண்ணெண்னை ஊற்றி எரித்துக் கொன்ற அரக்கச் செயல் நடந்ததும் தருமபுரிக்குப் பிறகுதான்.

*தருமபுரி பாப்பாரப்பட்டி கடை ஒன்றில் வேலை பார்க்கும் பெண்ணைக் கடைக்குள் புகுந்து கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ததும், இதனை கண்டித்து கடையடைப்பும்; சாலை மறியலும் நடந்ததும் தருமபுரிக்குப் பிறகுதான்.
ஷ்செங்கல்பட்டு வெங்கடாபுரம் கிராமத்தில் வாய் பேசக்கூசும் வார்த்தையைக் கூறி தன் மகளை வம்புக்கு இழுத்தவர்களைப் பார்த்து ஏன்டா இப்படி அநியாயம் செய்றீங்க  எனக் கேட்ட 60 வயது அர்ச்சகரை நடுரோட்டில் பட்டப் பகலில் இரும்பு பைப்பால் அடித்துக் கொன்ற அராஜகம் நடந்ததும் தருமபுரிக்குப் பிறகுதான்.

இப்படி நித்தம் ஒன்றெனத் தொடரும் இந்த அக்கிரமங்கள் தொடர்ந்தால் - பாதிக்கப் பட்டவர்கள் ஒன்று கூடி இன்னொரு தரும புரியை நடத்த மாட்டார்களா?

இந்த அக்கிரமங்களைச் செய்ய திருமாவளவன் கும்பலுக்கு லைசென்சு வழங்கி விட்டு;

இதை எதிர்த்துப் போராடியவர்களை வேட்டையாடி பலநூறு பேர்களைச் சிறையில் அடைப்பது -
வினாசகால
விபரீதப் புத்தி என்பதற்கான அடையாளமே என்பதை ஜெயலலிதா அரசு புரிந்து செயல்பட வேண்டும்.
இல்லையேல் 40 நாடாளுமன்றத் தொகுதியும் நமக்கே என கண்டு கொண்டிருக்கும் கனவில் மண் விழுந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக