வெள்ளி, 28 ஜூன், 2013

சிந்தனையாளன் இதழ் முகிலன் முதலியாரின் பகுத்தறிவுப் பயங்கரவாதம்

சிந்தனையாளன் இதழ் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருப்பவர் க.முகிலன் சிந்தனையாளனில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர். 2013 ஜனவரி 2013 இதழில் இவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

“ஆந்திரத்தில் ஒரு தருமபுரி”

என்பது அக்கட்டுரையின் தலைப்பு. ஆந்திர மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட சமூகமான மாலா சமூகத்தின் மீது நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்கள் குறித்து கட்டுரை விவரிக்கிறது.

தாக்குதல் 1:

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் லட்சுமிப் பேட்டை என்ற ஊரில் நிலத்தில் பயிரிடுவது தொடர்பான தகராறு காரணமாக கடந்த ஜூன் 12 அன்று துர்ப்பு காப்பு என்னும் சாதி இந்துக்கள் மாலா எனப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் தாழ்த்தப்பட்டவர்களில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் குழந்தைகள் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தர்.

தாக்குதல் 2:

ஜூன் 12 அன்று காலை இலட்சுமிப் பேட்டையில் இருந்த காப்புகளும் சுற்றுப்புற ஊர்களில் இருந்த காப்புகளும் டிராக்டர், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றில் கும்பலாக  சென்று மாலாக்களைத் தாக்கினர். இதில் பெண்களும் சிறுவர்களும் இருந்தனர்.

காப்பு  ஆண்கள் அடித்து வீழ்த்திய தாழ்த்தப்பட்ட மாலா சாதியினரை காப்பு சாதி பெண்கள் கோடாரியாலும் பிற ஆயுதங்களாலும்  பலரின் கால்களைத் துண்டித்தனர். மண்டைகளை உடைத்தனர். நான்கு மணி நேரம் இக்கொடிய தாக்குதல் மாலாக்கள் மீது நிகழ்த்தப்பட்டது.
---
தாழ்த்தப்பட்டவர்களை காப்பு சாதி ஆண்கள் அடித்து வீழ்த்திக்கொண்டே போவார்களாம். காப்பு பெண்கள் அடித்து வீழ்த்தப்பட்ட தாழ்த்தப் பட்டவர்களின் கால்களைக் கோடாரியாலும் பிற ஆயுதங்களாலும் துண்டிப்பார்களாம். இது என்ன கதை? நம்பும்படியாகவா இருக்கிறது?
மாலாக்களின் கால்களை காப்பு ஆண்களால் கோடாரி கொண்டு துண்டிக்க முடியாதா?

அடித்துப் போட ஆண்கள். கோடாரியால் கால்களைத் துண்டிக்க பெண்கள். குளிக்கிறவன் தலைக்கொரு சீயக்காய்; தாடிக்கொரு சீயக்காய் போடுவானா என்ன?

சாண்டில்யன் நாவல்களில் பக்கம் பக்கமாக வரும் வருணனைகளைப் போல கட்டுரையில் ஜோடனைகளைப் புகுத்தி எழுதியிருக்கிறார் முகிலன் என்றே தோன்றுகிறது.

அதுதான் செய்திக்கான ஆதராம் என்று குறிப்பு கொடுத்திருக்கிறாரே என்று கேட்கலாம்.
சொல்றவன் சொன்னா? கேட்கிறவனுக்கு புத்தி எங்கே போச்சு என்பது கிராமிய வழக்கு. கிராமத்து பாமரனுக்கு இருக்கும் இந்த தெளிவு பகுத்தறிவாளன் என்று சொல்லிக்கொள்ளும் முகிலனுக்கு இருக்க வேண்டாமா?
---
கரும்புத் தோட்டத்தில்தான் கரும்பை ஆண்கள் வெட்டிச் சாய்த்துக் கொண்டே போவார்கள். பின்னாலேயே பெண்கள் கருப்பந் தோகைகளை கழித்துப் போட்டுவிட்டு கரும்பின் நுனியைத் துண்டித்துக் கொண்டு போவார்கள்.
லெட்சுமிப் பேட்டை என்ற ஊரில் நடந்தது சாதிக்கலவரமா இல்லை லெட்சுமிப் பேட்டை கரும்புத் தோட்டத்தில் நடந்த கரும்பு அறுவடையா?
முகிலன் முதலியார் என்ன பகுத்தறிவாளனோ என்ன எழவோ.
---
மேற்குறித்த தாக்குதல்கள் இரண்டும் இருவேறு காரணங்களுக்காக நடந்தவை.

லட்சுமிப் பேட்டை என்ற ஊரில் குறிப்பிட்ட 60 ஏக்கர் நிலத்தை யார் பயிரிடுவது என்பது தொடர்பாக நடந்தது ஒரு கலவரம்.
அதே லட்சுமிப் பேட்டை ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஒரு தலித் பெண் வருவதா என்ற காப்பு சாதியினரின் மனக்கொதிப்பால் நடந்தது இரண்டாவது கலவரம்.

லட்சுமிப் பேட்டை என்ற ஒரே ஊரில்; ஜூன் 12 என்ற ஒரே நாளில் எப்படித் தனித்தனியாக இரு தாக்குதல்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடக்க முடியும்?
முகிலன் முதலியார் தான் கண்ட கனவை கட்டுரையாக எழுதி விட்டாரா?
--
கட்டுரை எழுதிய முகிலன் தருமபுரி கலவரத்தற்கு என்ன காரணம் சொல்கிறார்?

கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் நாயக்கன் கொட்டாய் ஊரில் வன்னியர் வகுப்புப் பெண்; தலித் ஆணைத் திருமணம் செய்து கொண்டதன் விளைவாக சாதி இந்துக்கள் ஒன்று திரண்டு தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் குடியிருப்பைத் தாக்கினர்.
ஒரு வன்னியப் பெண் ஒரு தலித் ஆணைத் திருமணம் கொண்டதற்காகத்தான் கலவரம் நடந்தது என்றால் வன்னியர் வகுப்பினர் மட்டுமோ பெண்ணின் உறவினர் மட்டுமோதானே கலவரத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்?

சாதி இந்துக்கள் ஒன்று திரண்டு தாக்க வேண்டிய அவசியம் என்ன?

இத்தகைய திருமணங்கள் எத்தனையோ நடக்கின்றன. அங்கெல்லாம் சதி இந்துக்கள் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்தாமல் ‡ தருமபுரியில் மட்டும் சாதி இந்துக்கள் ஒன்று திரண்டு தலித்துகள் மீது தாக்குதல் நடத்த என்ன காரணம்?
“குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்ற சமூக இளம் பெண்களைக் குறி வைத்து காதல் வலையில் வீழ்த்திப் பணம் பறிப்பதாக தருமபுரி மாவட்டம் முழுக்க நீண்ட காலமாக ஒரு விவகாரம் புகைகிறது.
காதல் திருமணம் செய்யும் இளைஞர்கள் அந்த பெண்ணோடு சில வாரம் குடும்பம் நடத்துவார்களாம். உடனே பெண்ணின் பெற்றோரைப் பார்த்துப் பேசும் உள்ளூர் சாதிப் பிரமுகர்கள்; தம்பதிகளைப் பிரித்து ஒப்படைக்க லட்சக்கணக்கில் பணம் கேட்பார்களாம். லட்சங்கள் கைமாறினால் பெண்ணைப் பெற்றோரிடம் ஒப்படைத்து விடுவார்களாம்.

காதல் மணம் புரிந்த அந்த இளைஞருக்கும்; வருமானத்தில் பங்கு கொடுப்பதோடு அதே பாணியில் அடுத்த பெண்ணை மயக்குவதற்கு ஊக்கம் தருவார்கள். பணத்துக்கும் பெண்ணுக்கும் ஆசைப்பட்டு சில இளைஞர்கள் இந்த காதல் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படி பணத்தை நோக்கமாக வைத்து கடந்த காலங்களில் அரங்கேறிய காதல் சம்பவங்களின் வலியும் இந்த வெறியாட்டத்திற்கு காரணம் என்கிறார்கள்”

ஜூனியர் விகடன் தருமபுரி கலவரத்திற்கு சொல்லும் காரணம் இது.
---
ஒரு பகுத்தறிவாளன் சிந்திக்க வேண்டிய வி­யமில்லையா இது?
சிந்திக்கவில்லை.. கள ஆய்வு மேற்கொள்ளும் யோக்கியதையும் இல்லை. ஜூனியர் விகடன் கள ஆய்வில் கண்டு சொன்னதை உண்மையா பொய்யா என பகுத்தறிந்து பார்க்கும் அறிவுமா இல்லாமல் போனது?

உங்கள் மகளையோ பேத்தியையோ காதல் வலையில் வீழ்த்தி சில வாரம் குடும்பம் நடத்திவிட்டு, பிறகு உங்களிடமே பெண்ணை ஒப்படைக்கிறோம் ஒரு லட்சம் கொடு, ரெண்டு லட்சம் கொடு என்று உங்களிடம் பேரம் பேசினால்தான்ங ஜூனியர் விகடன் குறிப்பிடும் அந்த வலி உங்களுக்கு ஏற்படுமா மிஸ்டர் முதலியார்?

பிறன் வலியைத் தன் வலியாக உணர்ந்து அந்த வலிக்கு காரணமான கயவர்களை எதிர்த்து எழுதுபவன்தான் பேனா பிடிக்க தகுதியானவன் அவன் தான் சிந்தனையாளன். அவன்தான் பகுத்தறிவாளன். தருமபுரி கலவரத்தில் உண்மை நிலை எதுவாக இருந்தாலும் அதை மூடி மறைத்துவிட்டு தலித்தை ஆதரித்து எழுதினால்தான் முற்போக்காளன் என்ற மூட நம்பிக்கையோடு; உண்மையை மறைத்து; தலித் ஆதரவு கட்டுரை எழுதுபவன் சிந்தனையாளனுமல்ல, பகுத்தறிவாளனுமல்ல..

தாழ்த்தப்பட்டோரில்-
5 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட-
20க்கும் மேற்பட்டோர் படுகாயப் படுத்தப்பட்டு ரத்தம் சிந்த வைக்கப்பட்ட‡
பலரது கால்களைக் கோடாரியால் கொடூரமாக வெட்டித் துண்டித்து ஊனமாக்கப்பட்ட-
ரத்தவாடை வீசும் ஆந்திர மாநில கலவரத்தை விட,
தலித்துகளின் சிறு மயிருக்கு கூட சேதாரம் ஏற்படுத்தாத தருமபுரி கலவரம் கொடியது என்பது போல் ஆந்திரத்தில் ஒரு தருமபுரி எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரையை பகுத்தறிவாளன் எனச் சொல்லிக் கொள்ளும் க.முகிலன் எழுதலாமா? இதுதான் பகுத்தறிவுப் பயங்கரவாதம்.

ஐயா ஆனைமுத்து கவனத்திற்கு

பொங்கல் மலரில் திருநாவுக்கரசு
ஜனவரி 2013 இதழில் க.முகிலன்
மார்ச்சு 2013 இதழில் வேலு சந்தானம் ஆகியோர் தருமபுரி கலவரம் குறித்த தங்கள் பொய்ப்பிரச்சார அரிப்பை பதிவு செய்ய சிந்தனையாளன் இதழைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக சிந்தனையாளன் இதழின் நம்பகத்தன்மை குலைந்திருககிறது என்பதை வருத்தத்துடன் ஐயா ஆனைமுத்துவுக்கு கவனப்படுத்துகிறோம்.

- சிற்றரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக