வெள்ளி, 12 ஏப்ரல், 2013

அடைக்கலம் கொடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தையே அழித்துக் கொண்டிருக்கிறான் ஒரு தலித் கிரிமினல்..

வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்தவன் கதையாக..

அடைக்கலம் கொடுத்த
புதுக்கூரைப்பேட்டை கிராமத்தையே
அழித்துக் கொண்டிருக்கிறான்
ஒரு தலித் கிரிமினல்..
-------------------------------------------------------------

மதுரையில் உள்ள சமூகநீதி வழக்கறிஞர்கள் நடுவம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ‘தமிழ்நாடு அரசு அரசியல் சட்டத்தைச் சிதைக்கிறதா?’ என்று தலைப்பிட்ட நான்கு பக்க துண்டறிக்கையும்;

கடலூர் மாவட்ட தலித் எழுத்தாளரான இமையம் என்பவர் எழுதிய பெத்தவன் என்று நெடுங்கதையும்;

சற்றேறக் குறைய ஒரே நேரத்தில் - நடிசம்பர் 2012 இறுதியில் அச்சமில்லை ஆசிரியர் குழுவின் பார்வைக்கு கிடைத்தன.
காட்டுமிராண்டித்தனமான சாதி வெறியர்கள் வன்னியர்கள் என துண்டறிக்கை பாய்கிறது.

இமையம் எழுத்தாளர் அல்லவா? 32 பக்க நெடுங்கதையில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் வி­ஷ செறிவூட்டி வன்னியர் சமூகத்திற்கு எதிராக வி­ ஊசிகளை இறக்கி இருக்கிறார்.

இரண்டுமே -
புதுக்கூரைப்பட்டு கண்ணகி முருகேசன் காதல் மரணம் குறித்தே பேசுகின்றன. இவர்களின் மரணம் குறித்து துண்டறிக்கை சொல்லும் செய்தியும்; பெத்தவன் நெடுங்கதை சொல்லும் செய்தியும் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கின்றன.

அப்படியானால்-
இவர்கள் மரணம் குறித்த உண்மை செய்திகள்தான் என்ன? என்பதை அறிவதற்காக 2013 ஜனவரி திங்களில் புதுக்கூரைப்பட்டு கிராமத்திற்குச் சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டியது நமது ஆசிரியர் குழு. அதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களும் கிடைத்துள்ளன.

புதுக்கூரைப்பட்டு கண்ணகி - முருகேசன் மரணம் குறித்து வழக்கறிஞர்கள் நடுவம் சொல்வது என்ன? பெத்தவன் நாவல் சொல்வது என்ன? புதுக்கூரைப்பட்டு மக்கள் சொல்வது என்ன? விரிவாகப் பார்ப்போம்.

வழக்கறிஞர்கள் நடுவத்தின் துண்டறிக்கை என்ன சொல்கிறது?
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் புதுக்கூரைப்பேட்டை என்ற ஊரில் வாழ்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான முருகேசனும்; வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கண்ணகியும் காதலித்து ரகசியமாக திருமணத்தை பதிவு செய்தனர்.
பாதுகாப்பாக வாழ கண்ணகியை முருகேசன் அவரது சித்தப்பாவின் மாமனார் வீட்டில் (திருவண்ணாமலையில்) சேர்த்திருந்தார்.
கண்ணகியை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடினர். கடைசியாக மீட்டு வந்து சுடுகாட்டுக்கு அருகில் இருவரையும் அடித்து வி­ம் ஊற்றிக் கொன்று தனித்தனியாக எரித்துவிட்டனர் கண்ணகியின் உறவினர்கள். இந்த காட்டுமிராண்டித் தனமான சாதி வெறிக்க் கொடுமை 8.7.2003 அன்று நடந்தது.

சில நாட்கள் கழித்து இந்த காட்டுமிராண்டித் தனமான கொலைபற்றிய விபரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன. சென்னை வழக்கறிஞர் குழு 20.7.2003 அன்று முருகேசன் ஊர் சென்று விபரம் திரட்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கிட்டனர். மத்திய புலனாய்வுத் துறையிடம் வழக்கை ஒப்படைக்க உத்தரவும் பெற்றனர்.

முருகேசனது சித்தப்பா அய்யாசாமி மற்றும் குணசேகரன் என்ற உறவுக்காரர் ஆகியோரை இந்த கொலையில் தொடர்புடையவர்கள் என பொய்யாக வாக்குமூலங்கள் தயாரித்து; சிபிஐ துணைக் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர்கள் மொத்தமாக 15 பேர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

சாட்சிகளது வாக்கு மூலங்களை தமிழில் தயாரிக்காது ஆங்கிலத்தில் தயாரித்துவிட்டனர். இது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கே.என்.பாட்சா விசாரணை நடத்தி ஆங்கிலத்தில் உள்ள சாட்சிகளின் வாக்குமூலத்தை தமிழ்ப்படுத்தி வழங்க உத்தரவிட்டார்.
அப்போதுதான் சி.பி.ஐ. அதிகாரிகள் செய்துள்ள கூடுதல் மோசடிக்கள் தெரியவந்தன.
இதுதான் வழக்கறிஞர்கள் நடுவத்தின் துண்டறிக்கையில் கண்டுள்ள செய்திகள்.

இமையத்தின் பெத்தவன் நெடுங்கதை என்ன சொல்கிறது?

பெத்தவன் நெடுங்கதை முருகேசன் கண்ணகி பேன்ற இன்னொரு தலித் மாணவனுக்கும் - வன்னிய மாணவிக்கும் இடையில் நடந்ததாக கதை சொல்லப் பட்டாலும்-

கதைக்குள் கதையாக புதுக்கூரைப் பேட்டை என்ற பெயரையும்; முருகேசன் கண்ணகி பெயரையும் கதைக்காக மாற்றி எழுதி இருந்தாலும் இது புதுக்கூரைப் பேட்டை கண்ணகி முருகேசன் கதைதான் என்பதை படித்தவர்கள் எல்லாரும் உணரும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

பெத்தவன் கதையில் வரும் கண்ணகி முருகேசன் காதல் மரணச் செய்தி இதுதான்.

"... நம்ப பழனி மவமாரியே நல்லூருல நம்ம எனத்துப் பொண்ணு சிதம்பரத்துல படிக்கப் போச்சி. அந்த ஊர் கீழ்ச்சாதி பையனும் அங்க படிச்சியிருக்கான். அந்தப் பொண்ணுக்கும் பயனுக்கும் எப்படியோ சேர்மானமா ஆயிப்போச்சி. கீதா ரவின்னு பேரு. பெத்தவங்க மத்தவங்க என எம்மானோ சொல்லிப் பாத்திருக்காங்க. அந்த நாயி ரெண்டும் கேக்குல. ஊர் பஞ்சாயத்து சாதி பஞ்சாயத்திலேயும் கட்டடயல. ரெண்டு தெருவுக்கும் கைகலப்பு வெட்டுகுத்துன்னு நடந்திருக்கு. அவங்க ரெண்டு பேராலயும்தான் ஊருல சண்டையும் சச்சரவுமா இருந்திருக்கு. ஊரு நல்ல படியா இருக்கணும்னா அவங்க ரெண்டு பேத்து கதையயும் முடிக்கனுமுன்னு ஊருல முடிவாச்சி.
அதுக்கு ரெண்டு பெத்தவங்களும் சம்மதம் சொன்னாங்க.. அந்த பயலும் அந்த குட்டியும் அதுக்கு ஒத்துக்கிட்டாங்க.

ஆயிரம் ரெண்டாயிரம் பேரு கூட்டமா கூடி நின்னு ரெண்டுபோரு காதுலயும் மருந்த ஊத்தி பட்ட பகல்ல கொன்னுபுட்டாங்க.
பொணத்த அவுங்கவுங் தெருவுக்கு எடுத்துகிட்டுப் போயி அவுங்கவுங்க சுடுகாட்டுல புதைச்சிப்பிட்டாங்க.

மூணு நாலு கழிச்சி விசயம் வெளியே தெரிஞ்சி போச்சு. போலீசு வந்து ஊரசுத்தி வளைச்சிக்கிச்சி. இங்கே நுறு பேரு... அங்க நூறு பேருன்னு ஆளுவளப்ப புடிச்சிக்கிட்டு போயிட்டாங்க....... பொணத்தைத் தோண்டி எடுத்தாலும் ஊரே ஒன்னா நின்னதால சாட்சியில்லன்னு வழக்கு தள்ளுபடியாயிப் போச்சி"

இதுதான் பெத்தவன் கதை மூலமா இமையம் சொல்லும் கண்ணகி முருகேசன் மரணச் செய்தி.

புதுக்கூரைப்பட்டு மக்கள் சொல்வது என்ன?

1.முருகேசன் குடும்ப வரலாறு என்ன?

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சுமார் இரணடு கிலோமீட்டர் தூரத்தில் புதுக்கூரைப்பட்டு கிராமம் இருக்கிறது. அதன் பக்கத்து ஊரான குப்பநத்தம்தான் முருகேசனின் சொந்த ஊர்.
குப்பநத்தம் கிராமத்தில் சாமிக்கண்ணு என்ற ஆதிதிராவிடர். சிண்டாட்டி என்று அழைப்பார்கள் அந்த பெயராலேயே சாமிக்கண்ணுவின் குடும்பம் என்று சிண்டாட்டி குடும்பம் என்று அழைக்கப்பட்டது. சாமிக்கண்ணு என்கிற சிண்டாட்டி; மாயவன்; அய்யாசாமி; இளையபெருமாள் ஆகிய நான்குபேர் அண்ணன் தம்பிகள். அந்த குடும்பம்தான் குப்பநத்தம் சேரியிலேயே வசதியான குடும்பம்.

இந்த குடும்பத்தின் தொழில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதும் விற்பதும். அடுத்த தொழில் விருத்தாசலம் மண்டல வேளாண்மை நிலைத்துக்கு சொந்தமான முந்திரி மற்றும் இதர பொருட்களைத் திருடி விற்பது.
ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவரை கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக காவல்துறையாலோ; வேளாணமை ஆராய்ச்சி நிலையத்தில் திருடுவதற்காக வேளாண் அதிகாரிகளாலோ கையும் களவுமாக பிடித்தாலும் கூட தண்டிக்க முடிவதில்லை.
தண்டிக்க முடியாததற்கு காரணம் - என்னை சாதி பெயரைச் சொல்லி திட்டினார்கள் என அதிகாரிகள் மீதே முந்திக்கொண்டு பொய்ப்புகார் கொடுத்துவிடுவார்கள்.

இப்படி திருட்டு தொழில் செய்வதற்கும்; சாராயம் காய்ச்சி விற்பதற்கும் தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தையே கேடயமாகப் பயன்படுத்தி வசதியைப் பெருக்கி வாழ்ந்த குடும்பம் சிண்டாட்டி குடும்பம்.

சட்டவிரோத செயல்கள் மூலம் பணம் சேர்த்து செழித்தவர்கள் அந்த காலணிக்குள் ளேயே ஜமீன்தார் சேட்டைகளோடு கூடிய மைனர் வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பித்தார்கள்.
வயசுக்கு வந்த காலனி பெண்களையும்; திருமணமாகி வந்த பெண்களையும் முதலில் நாங்கள் தான் அனுபவிப்போம் என்று தப்பாட்டம் ஆடத் தொடங்கியது சிண்டாட்டி குடும்பம்.
இதற்கு காலனிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஒரு பக்கம் சிண்டாட்டி குடும்பம்; எதிர்ப்பக்கம் சிண்டாட்டி குடும்பத்திற்கு எதிர்ப்பு என காலனியே இரு கூறாகப் பிரிந்து நின்றது. சிண்டாட்டி குடும்பத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் "தேவர்' (தலித்) என்பவர் தலைமையில் திரண்டு நின்றனர்.

இதனால் சிண்டாட்டி குடும்பத்தின் ஆதிக்கம் ஆட்டம் காணத்தொடங்கியது. சிண்டாட்டி குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் ஒன்று கூடி சரிந்து வரும் தங்கள் செல்வாக்கைத் தூக்கி நிறுத்தவும்; எதிரணிக்குத் தலைமை தாங்கும் தேவரைக் கொலைக் குற்றத்தில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பவும் சதி செய்தார்கள்.
நான்கு சகோதரர்களில் மூத்தவரான மாயவன் என்பவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் முருகன் போலியோ நோய் தாக்குதலுக்கு உள்ளாகி தரையில் தவழ்ந்து தவழ்ந்துதான் போக முடியும். அவன் இருப்பதையே தங்கள் குடும்பத்திற்கு அவமானமாக கருதிய சிண்டாட்டி குடும்பம் அவன் இருப்பதை விட இல்லாதிருப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்தனர்.

ஒருநாள் நள்ளிரவில் அவனை எதிரணிக்கு தலைமை தாங்கிய தேவர் என்பவரின் மின் மோட்டார் கொட்டகைக்கு தூக்கிச் சென்று துண்டு துண்டாக வெட்டிக் கொன்றுவிட்டு -

முன்விரோதம் காரணமாக என் மகனை தேவரும் அவரைச் சேர்ந்தவர்களும் வெட்டிக் கொன்று விட்டார்கள் என காவல் நிலையத்தில் தங்களை எதிர்த்த தேவரோடு சேர்த்து 20 பேர்கள் மீது புகார் அளித்து வழக்கும் பதிய வைத்து விட்டார்கள்.
இதனால் கொதிப்படைந்த குப்பநத்தம் காலணியைச் சேர்ந்த மொத்த பேருமே இவர்களுக்கு எதிராகக் கிளம்பி விட்டனர். இதனால் சிண்டாட்டி குடும்பத்தைச் சார்ந்த அண்ணன் தம்பி நான்கு பேருக்கும் உயிர் பயம் ஏற்பட்டுவிட்டது. குப்பநத்தம் காலணியை விட்டு தலைமறைவாகி வேறு ஊர்களில் வாழ்விடம் தேடஆரம்பித்து விட்டார்கள்.

இவர்கள் தங்கள் சாதிக்கே விரோதமாக செயல்பட்டவர்கள் என்பதால் சுற்று வட்டாரத்தில் எந்த சேரியிலும் இடம் கொடுக்க ஆதிதிராவிடர்களே மறுத்து விட்டனர். இதனால் இவர்களின் உயிர்பயம் மேலும் வலுத்துவிட்டது.
இந்த சமூக விரோத, சட்டவிரோத, சொந்த மகனையே ஊனமுற்றவன் என்பதற்காக கொன்ற கொலை பாதகக் குடும்பத்தில் சாமிக்கண்ணுவின் மகனாகப் பிறந்தவன்தான் முருகேசன்.
கண்ணகியின் குடும்ப வரலாறு என்ன?
தங்கள் ஆதிதிராவிட சமூகமே தங்களை எந்த ஊரிலும் தங்க அனுமதிக்க மறுத்துவிட்ட இந்த நிலையில்‡
விருத்தாச்சலம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கருணை மனு போட்டுவிட்டு; அவர்களை அடிக்கடி சந்தித்து புதுக்கூரைப்பட்டு கிராமம் தான் தங்களுக்கு ஓரளவு பாதுகாப்பான ஊர் அங்கு தங்க உதவ வேண்டுமெனவும் நச்சரிக்க ஆரம்பித்து விட்டனர்.

இவர்களின் நச்சரிப்பு தொல்லை தாங்க முடியாத வட்டாட்சியரும்; காவல்துறை கண்காணிப்பாளரும் கூடிப் பேசி புதுக்கூரைப்பேட்டை ஊராட்சித் தலைவராக இருந்த சி.துரைசாமியை அழைத்து எப்படியாவது புதுக்கூரைப்பேட்டை காலணியில் சிண்டாட்டிக் குடும்பத்தை தற்காலிகமாக தங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

ஊராட்சி மன்றத் தலைவர் துரைசாமி அதிகாரிகளின் வற்புறுத்தலை மறுக்க முடியாமல் -
புதுக்கூரைப்பட்டு காலணியைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவரை அழைத்து சிண்டாட்டி குடும்பத்தினர் தங்க உதவும்படி கேட்டபோது ‡ சிண்டாட்டி குடும்பத்தினரின் உறவினராக இருந்தும் அவர்களது சமூக விரோத செயல்களை அறிந்தவர் என்பதால் முதலில் மறுத்து விட்டார்.
துரைசாமி நல்லவர் என்பதாலும்; ஊராட்சித் தலைவராக இருக்கிறார் என்பதாலும் அவரது வற்புறுத்தலுக்கு இணங்கி சிண்டாட்டி குடும்பம் தங்க பின்னர் கண்ணதாசன் அரைமனதோடு ஒப்புக் கொண்டார்.
இந்த செய்தியைக் கேள்விப்ப்ட்ட-
புதுக்கூரைப்பட்டு காலனி மக்களும்; ஊர் மக்களும் சேர்ந்து இவர்களை இங்கே தங்கவிடக்கூடாது என ஊராட்சித் தலைவரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருதரப்பு மக்களின் எதிர்ப்புகளையும் மீறி ஊராட்சி மன்றத் தலைவர் இந்த குடும்பத்தை கண்ணதாசன் குடும்பத்தில் தங்கிக் கொள்ள அனுமதித்தார்.

புதுக்கூரைப்பட்டு கிராமத்தில் பயந்து பயந்து தங்கி இருந்தாலும்; இவர்களது கொடூர வக்கிரபுத்தி மாறவே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக கோஷ்டி சேர்த்துக்கொண்டு வந்த இடத்திலும் கோஷ்டித் தகராறை ஆரம்பித்து விட்டனர்.

ஒரு கட்டத்தில் -

புதுக்கூரைப்பட்டு ஒட்டு மொத்த கிராமமும் சேர்ந்துபோய் ஊராட்சித் தலைவர் துரைசாமியைச் சந்தித்து - இதற்கு மேலும் இவர்களை நம் கிராமத்தில் தங்க வைத்தால்; ஒட்டு மொத்த கிராமத்தையும் எதாவது பெரிய வில்லங்கத்தில் மாட்டிவிட்டு விடுவார்கள் எனவே இவர்களை உடனடியாக ஊரை விட்டு அனுப்பி விட வேண்டும் என எதிர்ப்பும் எச்சரிக்கையும் செய்ய ஆரம்பித்தனர்.
காலணி மற்றும் ஊரில் உள்ள மொத்த பேருமே ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அதனை மீறி இரக்கப்பட்டு அவர்களை அங்கேயே தங்க அனுமதித்தார் துரைசாமி.
துரைசாமி சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சூது வாது தெரியாத கிராமத்து பெரிய மனிதன். வன்னியர், இவருக்கு ஒரு மகன் நான்கு மகள்கள். இவரது இரண்டாவது மகள் தான் கண்ணகி. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தாள்.

கண்ணகியைப் போலவே சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தான் சிண்டாட்டியின் மகன் முருகேசன். தங்கள் குடும்பம் புதுக்கூரைப்பட்டு கிராமத்தில் ஒண்டியிருக்க உதவி செய்த துரைசாமியின் மகள் தான் கண்ணகி எனத் தெரிந்தவுடன் நல்ல குடும்பத்தை சேர்ந்தவனாக இருந்திருந்தால் ஒதுங்கிப் போயிருப்பான். இவன்தான் தங்கள் மகனையே எதிரியைப் பழி தீர்க்க வெட்டிப் பலியிட்ட கொலைபாதகக் குடும்பத்தைச் சேர்ந்தவனாயிற்றே - நன்றியுணர்வும் நற்பண்பும் எப்படி இருக்கும்?

கண்ணகியை தினம் தினம் விரட்டி விரட்டி தொந்தரவு தருவதையே வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறான். ஏதோ ஒரு கட்டத்தில் அவன் வலையில் வீழ்ந்திருக்கிறாள் கண்ணகி.
இந்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் கசியத் தொடங்கியவுடன் -

கொலைகார சமூகவிரோதக் குடும்பம் என்பதால் பெண்ணின் குடும்பமும்;

ஒண்டவந்த இடத்திலும் வில்லங்கம் என்பதால் ஏற்பட்ட உயிர் பயத்தாலும் முருகேசன் குடும்பமும்-
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஜூலை 2003இல் ஒருநாள் ஊரைவிட்டே ஓடி விட்டனர்.
சமூகவிரோத; சொந்த மகனையே கொன்ற கொலைபாதகக் குடும்பத்தை இந்த ஊரில் தங்க விடக்கூடாது என ஒட்டு மொத்த ஊரும் காலணியும் சேர்ந்து எதிர்த்தபோதும் இரக்கப் பட்டு கருணை காட்டியவர் துரைசாமி. வரம் கொடுத்தவன் தலையிலேயே கைவைத்து சோதிக்க நினைத்தவன் கதையாக, அவர் மகளையே இழுத்துக் கொண்டு ஓடி விட்டது பார் இந்த நன்றி கெட்ட நாய் என ஊரும் சேரியும் திட்ட ஆரம்பித்து விட்டது.

இரண்டு தரப்பு பெற்றோரும் அவமானத்தால் கூனிக் குறுகிக் கிடந்தனர்.

இரண்டு தரப்பு பெற்றோரும் சேர்ந்து தேடி; கண்டுபிடித்து; ஊருக்கு அழைத்து வந்தபோது-
ஊரே கூடி நின்று அவனையும் அவளையும் வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தது.

ஊரில் தலைகாட்டி நடமாட முடியாத அவமானத்தால் அவரவர்கள் வீட்டில் வி­ம் குடித்து இறந்துவிட்டனர் என்றும் -
பெற்றோர்கள் வற்புறுத்தி வி­ம் குடிதற்கொலை செய்துகொள்ள வைத்து விட்டனர் என்றும்-

முதலில் கண்ணகி வி­ம் குடித்து இறந்து விட்டாள். இதைக் கேள்விப்பட்ட முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி நீயும் வி­ம் குடித்து இறந்துபோ இல்லாவிட்டால் ஊரே திரண்டு வந்து சேரி சனங்களை கொன்று குவித்து விடுவார்கள் என பயமுறுத்தி முருகேசனை வி­ம் குடித்து இறந்துபோக நிர்ப்பந்தித்து விட்டார் என்று சொல்லியவர்கள்‡
அய்யாசாமியின் மனைவியோடு முருகேசன் தகாத உறவு கொண்டிருந்ததால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு முருகேசனின் கதையை அவனது சித்தப்பனே முடித்து விட்டான் எனவும் விபரம் தெரிவித்தனர்.

*
அய்யாசாமியையும் இந்த கொலையில் தொடர்புடையவர் என இந்த வழக்கை விசாரித்த சிபிஐ; அய்யாசாமி மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதால் அய்யாசாமி குடும்ப விவகார பகையே முருகேசன் கொலைக்கு காரணமென ஊரார் சொல்வது உண்மைதான் என தெரியவருகிறது.

சமூகவிரோத கொலைகார குடும்பத்தைச் சேர்ந்த முருகேசனுக்கு எந்த ஆதிதிராவிட பெற்றோரும் கூட தங்கள் பெண்ணை கொடுக்க சம்மதிக்க மாட்டார்கள். என்ற நிலையில் - வேறு சமூகத்தைச் சேர்ந்த எந் பெற்றோர்தான் இந்த படுகுழியில் தள்ள சம்மதிப்பார்கள் என்ற வாதம் 100க்கு 100 சரியே என்றாலும் -

இவ்விருவரின் மரணமும் துயரமானதே.
இரண்டு பேரின் உடல்களையும் இரண்டு பேரின் குடும்பமும் அவரவர்கள் சுடுகாட்டில் வைத்து எரித்து இறுதி சடங்கை முடித்து விட்டனர்.

இரக்கப்பட்டதால் புதுக்கூரைப்பேட்டை கிராமம் சந்தித்து வரும் இழப்புகள்.

முருகேசனின் அப்பா சாமிக்கண்ணுவும்; கண்ணகியின் அப்பா துரைசாமியும் காவல்துறையில் எந்தப் புகாரும் கொடுக்காத நிலையில் -

பத்திரிகை செய்தியைப் பார்த்து; கிராம நிர்வாக அதிகாரி மூலம் புகார் பெற்று; வழக்குப் பதிந்து இரண்டு தரப்பையும் சேர்ந்த எட்டு பேர்கள் மீது கொலைக்குற்றம் சாட்டி கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. ஊராட்சித் தலைவர் துரைசாமிதான்; இரண்டு தரப்பையும் சேர்ந்த இந்த எட்டு பேர்களையும் சொந்த செலவில் ஜாமீனில் வெளியே கொண்டு வந்தார்.
ஆனால் வெளியே வந்ததும் -

விடுதலைச் சிறுத்தைகளின் தூண்டுதலின் பேரில் - சிண்டாட்டி குடும்பம் துரைசாமியிடம் பல லட்சம் பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

உங்களால்தானே நானும் என் குடும்பமும் இவ்வளவு அசிங்கப்பட்டு நிற்கிறோம். என்னிடமே பணம் கேட்கிறீர்களே என்ன நியாயம்? பணமெல்லாம் கொடுக்க முடியாது என்று மறுத்து விடுகிறார் துரைசாமி.

எரியும் வீட்டில் சுருட்டியது ஆதாயம் என சுருட்டியே ருசிகண்டு சுகம் அனுபவிக்கும் கும்பல் சும்மா விடுமா?
புதுக்கூரைப் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் எல்லாம் சேர்த்து என் மகன் முருகேசனைக் கொன்று கொலையை மூடி மறைத்து விட்டார்கள். இதன் மீது சிபிஐ விசாரணை வேண்டும் என பொய் கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் சிண்டாட்டி குடும்பத்தை தூண்டி வழக்குப் போட வைத்தனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலித் சமூக நீதிபதியான அசோக்குமார் முன்பு விசாரணைக்கு வருகிறது. வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எற்று உத்தரவிடுகிறார் அசோக்குமார்.

வழக்கை விசாரித்த சிபிஐ இந்த கொலையில் 15 பேர்கள் தொடர்புடையவர்கள் எனக்கூறி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த 15 பேரில் முருகேசனின் சித்தப்பா அய்யசாமியும்; குணசேகரன் என்கிற மற்றொரு தலித்தும் இருக்கிறார்கள்.
சிபிஐ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேர்களில் தலித்துகளை நீக்கிவிட்டு - தலித் அல்லாத வன்னியர்களான 11 பேர்களது சொத்தையும் முடக்க வேண்டும் என மேலும் ஒரு வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கிறார்கள்.
அதற்கு தடையாணை வாங்கி தடுக்கப்பட்டிருக்கிறது.

*
மகளை இழந்து; தலைவர் பதவியை இழந்து; கைதாகி சிறையில் அடைபட்டு; பொய்வழக்குகளுக்காக செலவுக்கு மேல் செலவு செய்து நடைபிணமாக நலிந்து கிடக்கிறார் துரைசாமி.
எதற்காக -

மகனையே கொன்ற கொலைபாதக சமூகவிரோதக் கும்பல் என்பதைத் தெரிந்தும் அதற்கு தஞ்சம் அளித்த ஒரே பாவத்திற்காகத்தான் துரைசாமி இத்தனை துன்பங்களையும் துயரங்களையும் அனுபவிக்கிறார்.

அவர் மட்டுமா அனுபவிக்கிறார்?
அவரது சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றத்திற்காக புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த பல பேர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் என அலைந்து அலைந்தே அழிந்து கொண்டிருக்கிறார்கள். இதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
இத்தனையும் மூடி மறைத்து விட்டு -

வன்னியர்கள் காட்டுமிராண்டித்தனமான சாதி வெறியர்கள் என போலிக் கூச்சலிடுகிறார்கள் சமூக நீதி நடுவத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்.

வன்னியர்கள் இந்த காதலர்களைக் கொன்றார்கள்; அந்த காதலர்களைக் கொன்றார்கள்; என கதை எழுதி வார்த்தைக்கு வார்த்தை விஷ­ம் கக்குகிறார் தலித் எழுத்தாளரான இமையம்.

இந்த அராஜகக் கும்பலின் தாக்குதல்களை எதிர்கொள்ள நாம் எப்போது ஒருங்கிணையப் போகிறோம் என்பதற்கான பதிலில்தான் - வன்னியர்களின் எதிர்கால பாதுகாப்பு அடங்கி இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக