சனி, 13 ஏப்ரல், 2013

14 வயது பள்ளி மாணவி கல்யாணி கடத்தல் மீட்கப் போன பெரியப்பா அடித்துப் படுகொலை...

தர்மபுரி கள்ள ஒப்பாரி சண்டாளர்களே! இந்த கொலைகளையும் கொடுமைகளையும்
உங்கள் கண்கள் பார்க்காதோ? உங்கள் வாய்கள் பேசாதோ?


கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியில் உள்ள வன்னிய சமூகத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி கடத்தல். அவரை மீட்கப் போன மாணவியின் பெரியப்பாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அடித்துக் கொலை. இதனால் தருமபுரியை அடுத்த தளி பகுதியிலும் சாதி கலவரம் மூளும் அபாயம் என்ற பத்திரிகைச் செய்தியைப் படித்து அதிர்ந்தோம்.

இதே பிழைப்பாக அலைகிறார்களே இதற்கொரு முடிவில்லையா என்ற வருத்தம் மேலிட்டது,

இதுபற்றி விவாதித்த அச்சமில்லை ஆசிரியர் குழு தளி பகுதிக்கு நேரில் செல்வது என முடிவெடுத்தது.

இதன்படி -
2013 பிப்ரவரி 17ஆம் தேதி அச்சமில்லை ஆசிரியர் இறைவன் பொறியாளர் ஜீவநாதன்; வேலூர் சிவா; தருமபுரி பிரபாகரன்; வழக்கறிஞர் ரகுபதி; வன்னியர் மகாசங்கத் துணைத்தலைவர் பொன்.ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய குழு தளிக்கு சென்றது.

தளியிலிருந்து உடன் வந்த கிருஷ்ணகிரி மாவட்ட பாமக செயலாளர் டாக்டர் கந்தாசமி; ஓசூர் சேட்டு; திரிசங்கு மற்றும் ஓசூர் அதியமான் சமூக நலச் சங்கத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஆகியோருடன் தளி கொத்தனூருக்குச் சென்று, விடுதலைச் சிறுத்தைகளால் கொலை செய்யப்பட்ட மாதேசன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
14 வயது மாணவி கடத்தல் மற்றும் பெரியப்பா மாதேசின் கொலை குறித்து - மாணவி கல்யாணியின் தந்தை வெங்கடேசப்பா பின்வரும் விபரங்களைத் தெரிவித்தார்.

எனக்கு இந்த தளி கொத்தனூர்தான் சொந்த ஊர். என் மகள் கல்யாணி தோட்டணப்பள்ளி என்ற ஊரில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கிறாள். எங்கே செய்தாலும் கூலி வேலை தானே; மகள் படிப்புக்கு வசதியாக தோட்டணப்பள்ளிக்கு அருகில் உள்ள குளிவாமனப் பள்ளிக்கு குடும்பத்தோடு போய் தங்கிக் கொண்டு அவளைப் பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

நானும் என் மனைவி மாரியம்மாவும் கூலி வேலைக்குப் போய்விடுவதால்; மகள் மட்டும் பள்ளிக்கூடம் இல்லாதபோது வீட்டில் இருப்பாள்.
கல்யாணி வீட்டில் தனியாக இருப்பதைத் தெரிந்துகொண்டு நாங்கள் இல்லாத போது அடிக்கடி தொந்தரவு கொடுத்திருக்கிறான் அதே பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த திம்மராயப்பா என்பவரின் மகன் மஞ்சுநாத். இதை எங்களிடம் சொன்னால் பெரிய சண்டையாகப் போய்விடும் என்பதாலேயே எங்களிடம் கல்யாணி சொல்லவில்லை.

இதைப் பயன்படுத்திக்கொண்டு-
கடந்த 3ஆம் தேதி என் மகள் தனியாக இருக்கும் சமயம் பார்த்து மஞ்சுநாத் தன் கூட்டாளிகளோடு வந்து என் மகளைக் கடத்திக்கொண்டு போய்விட்டான். நானும் என் சொந்தக்காரர்களும் சேர்ந்து தேடிக்கொண்டிருந்தபோது - கர்நாடகப் பகுதியில் மாரவாடி என்ற ஊரில் உள்ள ஆசிரமத்துக்கு ஒரு பையனும் பெண்ணும் வந்து போவதாக செய்தி கிடைத்தது. அங்கு சென்றோம்.
எங்களைப் பார்த்ததும் கதறி அழுத என் மகள்‡ தன்னை வலுக்கட்டாயமாகக் கடத்தி வந்து தனியாக ஒரு வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்துவதாகக் கூறினாள்.
பிறகு மகளையும்; அவளைக் கடத்திய மஞ்சுநாத்தையும் போலீசில் ஒப்படைக்கும் நோக்கத்தோடு அழைத்துக்கொண்டு பைக்குகளில் திரும்பி வந்துகொண்டிருந்தோம். இதனை எப்படியோ தெரிந்துகொண்டு தளிக்கு பக்கத்தில் நாங்க வந்தபோது, வெள்ளை டாட்டா சுமோ காரில் வந்த-
ஜெயந்தி காலனியைச் சேர்ந்த மஞ்சுராஜ்; சீனிவாசன்; கார் ஓட்டுநர் அம்ரீஷ் ராஜப்பா; ஆனந்த் ஆகியோர் எங்களை வழிமறித்து தாக்கினார்கள். சுமோவில் இருந்த உருட்டுக்கட்டைகளை எடுத்து என் அண்ணனை தாக்கியதில் பலமான காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துவிட்டார். நாங்கள் கூச்சல் போட்டோம். அவர்கள் டாட்டா சுமோவிலும் மோட்டார் பைக்கிலும் ஏறி ஒடிவிட்டனர்.
பலத்த காயமடைந்த அண்ணனை தேன்கனிக்கோட்டை மருத்துவ மனையில் சேர்த்தும்; சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார்.
எங்கள் அண்ணனை நம்பி வாழ்ந்த அவரின் குடும்பம் என்னால் இப்போது அநாதையாக நிற்கிறது என்று கண்கலங்கினார் வெங்கடேசப்பா.
*
தருமபுரி கலவரத்தில் எரிக்கப்பட்ட வீடுகள் 40 என்று - தருமபுரியில் பாதிக்கப்பட்ட காலனிகளை நேரில் பார்த்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையமே அறிக்கை தந்த பிறகும் -
268 வீடுகள் எரிக்கப்பட்டதாக பொய் அறிக்கை தந்த மாவட்ட ஆட்சியர் லில்லியின் அறிக்கை படி 268 குடும்பங்களுக்கு தமிழக அரசு ஒவ்வொரு வீட்டுக்கும் 55ஆயிரம் ரூபாய் கொடுத்ததோடு -
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எலிபத் தர்மாராவ் - தர்மபுரியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏழரை கோடி நிதி உதவி செய்ய உத்தரவிட்டதை அடுத்து - அந்த 268 பேர்களுக்கும் சுமார் 3லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது.

இதில்லாமல் தொண்டு நிறுவனங்கள் ஆளாளுக்கு அள்ளிக் கொடுத்தன.
எப்படி பார்த்தாலும் - குடும்பம் ஒன்றுக்கு ரூ 5 லட்சம் அளவுக்கு நிதி சேர்ந்துள்ளதால் - நாங்க நினைச்சே பார்க்காத அளவுக்கு இந்த கலவரத்தாலே எங்களுக்கு பணம் கொட்டு கொட்டுன்னு கொட்டி விட்டது என்ற கூறி தர்மபுரி கலவர பகுதி தலித்துகள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.

இது போதாது என்று தமிழக அரசு பாதிக்கப்பட்ட 99 பேருக்கு வீடுகட்டித் தர நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த உதவிகள் எல்லாம் -
தலித் அல்லாத சமூகப் பெண்களை கடத்தி கற்பழிக்க தமிழக அரசும்; உயர்நீதி மன்ற உத்தரவும் கொடுத்த லைசென்சாகவே கருதி அநீதியில் துணிந்து இறங்குகிறது திருமாவளவன் கும்பல்.

தலித்துக்கள் செய்த கொலையில் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மாதேசன் குடும்பம் அநாதையாக பரிதவித்து நிற்கிறது.
இந்த கொலைகாரர்களை தண்டிததால் மட்டும் போதாது; பரமக்குடி கலவரங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கியதைப் போல - மாதேசன் குடும்பத்திற்கும் நிதியுதவி அளிக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

(அச்சமில்லை ஏப்ரல் 2013)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக