வெள்ளி, 7 நவம்பர், 2014

தன் குடிசையைத் தானே கொளுத்திக் கொண்ட தலித் கைது



கொடுக்கூரில்
தன் வீட்டைத்  தானே கொளுத்திக் கொண்டு
சேர்மேன் பிரபாகரன் மீது
பொய்ப் புகார் கொடுத்த தலித் கைது

ஜெயங்கொண்டம் வட்டம் கொடுக்கூர் கிராமத்தில் தன் வீட்டைத் தானே கொளுத்திக் கொண்டு அதிமுக முன்னாள் ஒன்றியத் தலைவர் பிரபாகரன் கொளுத்தி விட்டார் எனப் பொய்ப்புகார் கொடுத்த திருமாவளவன் கட்சியைச் சேர்ந்த அழகுதுரை என்பவர் கைதாகியுள்ளார். இது தொடர்பாக 2.10.2014 அன்று அச்சமில்லை ஆசிரியர் குழு நேரில் சென்று விசாரித்ததில் வெளிப்பட்ட உண்மை விபரம் வருமாறு :

கொடுக்கூர் பேருந்து நிலையத்தில்- பொதுமக்கள் புழங்கும் இடத்தில் -

படைத்த கடவுளே வந்தாலும்
பறையனை ஒன்னும் பண்ண முடியாது.
படையாட்சியாலும் எந்த  சிறியாட்சியாலும்
ஒன்னும் பண்ண முடியாது.
படைத்த கடவுளுக்கே பறையன்
பயப்படமாட்டான்
By

AA

என்ற வாசகம் எழுதப் பட்டிருந்தது. இதைப்படித்த பலரும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்கள். இதை எழுதியது யார் என்று விசாரித்ததில் தலித் அழகுதுரை மகன் அன்பு என்ற செய்தி அதிமுக முன்னாள் ஒன்றியத் தலைவர் பிரபாகரனுக்குத் தெரியவரவே - 

அழகுதுரையை அழைத்து உன் மகன் இப்படி செய்கிறானே நீ கண்டிக்கக் கூடாதா? என்று கேட்டிருக்கிறார்.


தன் மகன் இப்படி செய்யவில்லை பெருமாள் பேரன் மணிகண்டன்தான் இதை எழுதி இருக்கிறான் என சொல்லிவிட்டுப் போய்விட்டார் அழகுதுரை. 

மணிகண்டனை இதுபற்றி விசாரிக்கக் கூப்பிட்டபோது வரவில்லை. அவனை அழகுதுரையே மறைத்து வைத்து விட்டு- 

மணிகண்டனை முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பிரபாகரன் கடத்தி விட்டார் என ஊர் பூராவும் பொய்ப் பிரச்சாரம் செய்துவிட்டார்.

இந்த செய்தி பிரபாகரனுக்குத் தெரியவரவே மீண்டும் அழகுதுரையைக் கூப்பிடடு ஏன்டா இப்படி தப்புக்கு மேல தப்பா செய்து கொண்டு இருக்கிற? எனக் கேட்டதற்கு - எதுக்கெடுத்தாலும் என்னையே எதுக்கு விசாரிக்கிறே என மரியாதைக் குறைவான வார்த்தைகளை அழகுதுரை பேசியதால் கோபப்பட்டு அறைந்து விடுகிறார் பிரபாகரன்.

இதை மனதில் கரம் வைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு எதிரில் காலியாய் இருந்த பறையர் சமூக வண்ணார் (புதிரை வண்ணார்) குடிசையைத் தானே கொளுத்தி விட்டு -
பிரபாகரன் ஆள் வைத்து கொளுத்தி விட்டார் என போலீசில் புகார் கொடுத்து விட்டார் அழகுதுரை.

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸ். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களைக் கூப்பிட்டு விசாரித்தபோது அழகுதுரைதான் கொளுத்தினார் என்று உண்மையை சொல்லிவிட்டார்கள்.

இதன்பிறகு-

போலீஸ் நிலையத்துக்கு அழகுதுரையை அழைத்து விசாரித்தபோது கொளுத்தியது பிரபாகரன்தான் என சாதித்திருக்கிறார். போலீஸ் அவர்கள் விசாரிப்பு முறையில் நாலு சாத்து சாத்தி விசாரித்ததும் நான்தான் கொளுத்தினேன் என ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்தது புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டார். குடிசையைக் கொளுத்தியது பொய்ப்புகார் கொடுத்தது ஆகிய குற்றங்களுக்காக அழகுதுரை மீது வழக்குப் பதிந்து கைது செய்து காவலில் வைத்து விட்டது போலீஸ்.

தற்போது ஜாமீனில் வெளியே வந்த அழகுத்துரையை கூப்பிட்டு திமுக ஊராட்சித் தலைவரான எழில்நிலவன்-

உன்னை பிரபாகரன் அடித்ததற்காக அவர்மீது வன்கொடுமைச் சட்டத்தில் புகார் கொடு எனத் தூண்டி விட்டுள்ளார்.


இப்போது பிரபாகரன் மீது அழகுதுரையை அடித்ததற்காக வன்கொடுமைச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது.

இப்படி தங்கள் குடிசைகளைத் தாங்களே ஆட்களைத் தூண்டி விட்டு எரித்துக் கொள்வதும்; அதன் பிறகு ன்னியர்களைக் குச்சிக் கொளுத்திகள் என பத்திரிகைகளையும்; டி.விக்களையும் கூட்டி வைத்து கள்ள ஒப்பாரி வைப்பதும் திருமாவளவனுக்கு கைவந்த கலை.

இதே போல்-

தருமபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் காவல்நிலையத்துக்கு உட்பட்ட அத்தூரானஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்; சேகர் என்ற வன்னியர் நிலத்தில் சட்டத்துக்குப் புறம்பாக குடிசைகள் போட்டுவிட்டு; அதையும் தாங்களே கொளுத்திக் கொண்டு சேகர் மீது புகார் கொடுத்து விட்டார்கள். காவல்துறை நில உரிமையாளர் சேகரை சிறையில் அடைத்துவிட்டது.

பிறகு- 

மாவட்டக் காவல்துறை அதிகாரி அஸ்ரா கர்க் தானே நேரடி விசாரணை நடத்தியதில்-

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த-

ராஜகோபால், பி.முருகன், கே.நாகராஜ், கே.கோவிந்தராஜ், என்.பழநி, எம்.மாசாமணி, எம்.முத்துசாமி, ஜி.பெருமாள் ஆகிய எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு வன்னியர் சேகர் விடுதலை செய்யப்பட்டார்.

குச்சி கொளுத்திகள் விடுதலைச் சிறுத்தைகளேஎன்ற தலைப்பில் பிப்ரவரி 2014 அச்சமில்லை இதழில் இதனை வெளியிட்டிருந்தோம்.

இப்படி - தொடர்ந்து சேரிகளில் எரியும் ஒவ்வொரு குடிசைகளையும் திருமாவளவன் கும்பலே கொளுத்துகிறது.

குச்சுக்கொளுத்திகள் என்ற பழியை மட்டும் வன்னியர் சமூகம் சுமக்கிறது.

சேரிகளில் எரியும் ஒவ்வொரு குடிசை தொடர்பாகவும் அஸ்ரா கர்க் போன்ற நேர்மையான அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்தினால்-

எரியும் ஒவ்வொரு குடிசை தொடர்பாகவும் சிறைக் கம்பிகளை திருமாவளவன் கும்பல் எண்ண வேண்டிவரும்.

இந்த நேரத்தில்-

எழில்நிலவன் போன்ற வன்னியர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
உங்கள் உறவினர் பிரபாகரனுக்கும் உங்களுக்கும் பகையிருந்தால் அதை தலித்துக்களைப் பயன்படுத்தி தீர்த்துக் கொள்ள நினைக்காதீர்கள். அது கேவலம். இந்த சமூகத்துக்கே அவமானம்.

நீங்கள் தீட்டிக் கொடுத்த கத்தி
ஒருநாள் உங்களையே கூர்பார்த்துவிடும்.

ஒற்றுமை இல்லாததால் இந்த சமூகம் சீரழிந்தது போதும். அதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

- நீலமேகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக