செவ்வாய், 11 நவம்பர், 2014

பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் - இறையன்பு ஐ.ஏ.எஸ்.ன் அரைவேக்காட்டு ஆய்வு.



பல்லவர்கள்
தமிழர்கள் அல்லர்

இறையன்பு ஐ.ஏ.எஸ்.ன் அரைவேக்காட்டு ஆய்வு

“வையத் தலைமை கொள்” என்ற பொதுத்தலைப்பில் புதிய தலைமுறை வார இதழில் ஒரு கட்டுரைத் தொடரை எழுதியுள்ளார் இறையன்பு.

மேற்கண்ட பொதுத்தலைப்பின் கீழ் வாரம் ஒரு உள் தலைப்பில் வெவ்வேறு பொருட்களில் கட்டுரைகளை எழுதுகிறார்.

எச்சத்தால் எழுந்து நில் என்ற உள் தலைப்பில் பல்லவ மாமன்னர்களின் மாமல்லபுரம் சிற்பங்களின் சிறப்புகள் குறித்து  12.6.2014  நாளிட்ட புதிய தலைமுறை இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையில் –
 
இறையன்பு ஐ.ஏ.எஸ் 
“ பல்லவர்கள் தமிழர் அல்லர். வின்ஸண்ட் ஸ்மித் பல்லவர்கள் பஹ்லவர் என்ற பாரசீக மரபினர் என்றும்; தென் இந்தியர் தான் என்றும் மாறி மாறிக் குறிப்பிட்டுள்ளார்.

ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர் பஹ்லவர் மரபினர் பல்லவர் என்றும் குறிப்பிடுகிறார்.

ஆனால் பல்லவர் காலத்தில் சமஸ்கிருத வளர்ச்சியை ஊக்குவித்ததைப் பார்க்கும்போது அவர்கள் தமிழர்கள் அல்லர் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்கிறார் இறையன்பு.

அப்படியானால் –

இந்தப் பல்லவர்கள் யார்?

வின்யஸண்ட் ஸ்மித்  . ரைஸ் இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் இவர்கள் பாரசீக மரபினர் என்றாகிறது.

இதுதான் இறையன்பின் கருத்தா?

பல்லவர்கள் பாரசீகர்கள் என்றாலும் ஒரு கேள்வி எழுகிறது.

அவர்கள் பாரசீக மொழியை வளர்க்க ஊக்கம் கொடுக்காமல்  சமஸ்கிருத மொழியை வளர்க்க ஏன்   ஊக்கம் கொடுத்தார்கள்?

சமஸ்கிருத மொழியை வளர்க்க ஊக்கம் கொடுத்ததால் பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் என்பது தெளிவாகத் தெரிகிறது இறையன்புவிற்கு என்றால்-

சமஸ்கிருத மொழியை வளர்க்க ஊக்கம் கொடுத்ததால்- பல்லவர்கள் பாரசீகராகவும் இருக்க முடியாது என்ற தெளிவு இறையன்புக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமே?

ஆமாம் பல்லவர்கள் பாரசீகராகவும் இருக்க முடியாதுதான் என இறையன்பு சொல்வாரானால்-

பிறகு எதற்கு வின்யஸண்ட் ஸ்மித்தையும்; ரைஸையும் வெட்டித்தனமாகக் குறிப்பிட வேண்டும்?

பாமரர்களை மிரட்டி மேதாவி பட்டம் பெறுவதற்காகவா?

வன்னியர்கள் பல்லவர்கள் மரபினர் எனச் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு நாதேறிக்கூட்டம்; பல்லவர்கள் தமிழர்கள் இல்லை எனக்கூறுவதன்மூலம் வன்னியர்களைத் தமிழர் அல்லர் என்றாக்கி விடலாம் என்ற  நப்பாசையில் தமிழகத்தில் அலைந்து கொண்டிருக்கிறது.

பல்லவர்கள் தமிழர்கள் அல்ல என்று சொல்லித் திரியும் அந்த  நாதேறிக் கூட்டத்திற்கு புதிய தலைவராகப் பார்க்கிறாரா இறையன்பு?

இந்த  நாதேறிக் கூட்டத்தின் முதல் தலைவர் செத்துப்போன பேரா.ராஜமாணிக்கனர். அவர்தான்–

60 ஆண்டுகளுக்கும் முன்பே- அவர் எழுதிய பல்லவர் வரலாறு என்ற நூலில் முதன் முதலில் பல்லவர் தமிழர் அல்லர் எனக்கூறி . பல்லவத் தமிழர் பெருமைகளை அந்நியர் பெருமையாக்க முயன்று தமிழினத்துக்கு துரோகம் செய்த முதல் நபர் அவர்.

இதே-

வின்ஸெண்ட் ஸ்மித்தின் பல்லவர் - பஹ்லவர் - பாரசீகர் தியரியைக் காட்டியும்;

பல்லவர்களின் சமஸ்கிருத ஆதரவுக் காரணத்தைக் காட்டியும்-

பல்லவர்கள் தமிழர் அல்லர் எனக்கூறி தமிழினத்திற்கு துரோகம் செய்தார்.

அவரது இந்த அபத்த ஆய்வு முடிவை- அவரது பெயரைக் குறிப்பிடாமலே களவாடி- இறையன்பு தன் ஆய்வு முடிவுபோல் புதிய தலைமுறையில் கட்டுரை எழுதி இருக்கிறார்.

பல்லவர்கள் தமிழர் அல்லாதவர் எனக்கூறி-

தமிழினத்தின் இரண்டாவது துரோகி பட்டத்திற்கு தலையை நீட்டிக் கொண்டு நிற்கிறார் இறையன்பு.

முதல் துரோகத்தைக் கண்டித்து எழுதிய கட்டுரை ஒன்று “வரலாற்றில் வன்னியர் மகாவம்சம்” என்ற நூலில் வெளிவர இருக்கிறது. அந்தக் கண்டனக் கட்டுரையையே இறையன்பின் தமிழினத் துரோகத்திற்கான கண்டனமும் ஆகும் என்பதால் அதனை முன்கூட்டியே வெளியிடுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக