செவ்வாய், 11 நவம்பர், 2014

ஊழல் அரசியல்வாதிகளின் பதவிகள் பறிபோகக் காரணமான லில்லி தாமசுக்கும் வி.என்.சுக்லாவுக்கும் நன்றி சொல்வோம்



ஊழல் அரசியல்வாதிகளின் பதவிகள் பறிபோகக் காரணமான
லில்லி தாமசுக்கும்
வி.என்.சுக்லாவுக்கும்
நன்றி சொல்வோம்

ஊழல் வழக்கில் தண்டனைப் பெற்றவர்களின் அரசியல் பதவிகள் உடனடியாக பறிபோகவும்; அடுத்த  6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்கவுமான  சட்டம்  2013இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பிறகே நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தத் தீர்ப்பின்படி இதுவரை பதவி இழந்தவர்களின் பட்டியல் இது :-

1. ரUத் மசூத் - காங்கிரஸ் கட்சியின் மேலவை எம்.பி.

இவர் வி.பி.சிங் அமைச்சரவையில் 1990-91இல் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர். அப்போது திரிபுரா மாநிலத்தில் எம்.பி.பி.எஸ் இடம் வழங்குவதில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ. வழக்கு தொடுத்தது.

கடந்த செப்டம்பர் 9, 2013இல் இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 4 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இதனை அடுத்து அவர் வகித்த மேலவை எம்.பி பதவி பறிபோனது. இந்தச் சட்டத்தின் கீழ் பதவி இழந்த முதல் நபர் இவர்.

2. லல்லுபிரசாத் யாதவ் - மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 21.10.2013இல் எம்.பி. பதவியை இழந்தார்.

3. ஜகதீஷ் சர்மா - லல்லு பிரசாத் கட்சியைச் சேர்ந்தவர். அவரும் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் எம்.பி., பதவியை இழந்தார்.

4. டி.எம்.செல்வகணபதி - ஊழல் வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றம் 17.4.2014இல் தீர்ப்பு வழங்கியது. மேலவை எம்.பி., பதவியை இழந்தார்.

5. ஜெ.ஜெயலலிதா - சொத்துக் குவிப்பு வழக்கில் 27.9.2014 இல் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக எம.எல்.ஏ பதவியையும் முதல்வர் பதவியையும் இழந்தார்.

இது தொடர்பாக-

2013இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

நாடாளுமன்ற;   சட்டமன்ற; சட்ட மேலவை உறுப்பினர்கள் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றால் அவர்கள் வகிக்கும் உறுப்பினர் பதவியை இழப்பது பற்றி -

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8.வது பிரிவில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட சட்டப் பிரிவில் அடங்கியுள்ள உட்பிரிவு 1, 2, 3 ஆகியவற்றில்

தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே தண்டனைபெற்றவர் வகிக்கும் அரசியல் பதவியை இழப்பதோடு தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

எனினும்-

மேற்கண்ட சட்ட விதி 8இன் உட்பிரிவு (4)இல் -

விசாரணை நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்டதிலிருந்து அடுத்த 90 நாட்களுக்குள் தண்டனையை எதிர்த்து மேல் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை இழக்க மாட்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த சட்டப் பிரிவு தந்த பாதுகாப்பில் தண்டனை பெற்றவர்கள் எல்லோரும் தங்கள் எம்.பி., எம்.எல்.ஏ பதவிகளைத் தொடர்ந்து அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில்-

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8(4) பிரிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி 2005ஆம் ஆண்டு -
லில்லி தாமஸ் என்பவரும்

எஸ்.என்.சுக்லா என்பவரும்

உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் 10.7.2013 அன்று -

மக்கள் பிரதிநிதித்துவச்  சட்டம்  8(4) பிரிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனவே இந்த சட்டப்பிரிவு செல்லாது என்று பிரகடனம் செய்தது.

இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாகவே தற்போது ஊழல் அரசியல்வாதிகளின் பதவிகள் உடனடியாகப் பறிபோகின்றன.

இந்த தேசத் தொண்டை செய்த லில்லி தாமசுக்கும்; எஸ்.என்.சுக்லாவுக்கும் நாடு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக