வியாழன், 6 நவம்பர், 2014

இடையாக்குறிச்சியில் சாதிக் கலவரத்தை காவல்துறை டி.எஸ்.பியும் இன்ஸ்பெக்டருமே தூண்டும் கொடுமை




(அரியலூர் மாவட்டம் இடையாக்குறிச்சி சம்பவம் தொடர்பான பொய் வழக்குகள்;  போலீஸ் அராஜகம் ஆகியவற்றைக் குறித்து நேரில் விசாரணை மேற்கொள்ள -

அச்சமில்லை ஆசிரியர் குழு சார்பாக .இறைவன்; வேதாரண்யம் வாசு; வன்னிய குல சத்திரியர் மகாசங்கத் துணைத்தலைவர் பொன்.ஆறுமுகம்; அரியலூர் மாவட்ட வடதமிழ்நாடு மக்கள் இயக்கப் பொறுப்பாளர் நீலமேகம்; அச்சமில்லை வாசகர் வட்ட அமைப்பாளர் நின்னியூர் ராஜேந்திரன்; மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி ஒன்றியச் செயலாளர் சேடக்குடிகாடு சீனிவாசன்; பெரியாக்குறிச்சி தமிழ்ச்செல்வன்; வீராசாமி ஆகியோர் 2.10.2014 அன்று இடையாக்குறிச்சிக்கு நேரில் சென்று விசாரித்தனர்.

இடையாக்குறிச்சியைச் சேர்ந்த பாமக ஒன்றிய செயலாளர் தங்க ராமசாமி,   தர்மகர்த்தா முத்து பரமசிவம்; முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னையன் மற்றும் ரெங்கநாதன்; சொசைட்டி தலைவர் சகாதேவன்; ரமேஷ்; தேவேந்திரன்; நக்கீரன்; வேல்முருகன்; கைதான மணிகண்டன்; குழந்தைவேல்; .முருகன்; கொத்தனார் சந்தோஷ்; வி.வேல்முருகன்; ரவி; தங்கமணி மற்றும் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஓம் சக்தி கூடத்தில் கூடியிருந்தனர். அவர்களிடம் விசாரித்து அறிந்த விபரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.)

இடையாக்குறிச்சியில் சுமார் 2500 வன்னியர்  குடும்பங்களும்; கோனார்; முதலியார்; வண்ணார்;  நாவிதர் முதலிய சமூகங்களைச் சார்ந்த சுமார் 20 குடும்பங்களும்,பறையர் சமூகத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களும்   இருக்கின்றன.

இதற்கு முன்பு -

இந்த சமூகங்களுக்கிடையே எந்த சமூகப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. காவல்துறையில் சமூகப் பிரச்சனை தொடர்பாக வழக்கு எதுவும் இல்லை.

அமைதியாக இருக்கும் ஊர்களை அமைதியாக  இருக்க விடுவதில்லை எனத் திட்டமிட்டுக் கலவரத்தை உருவாக்கும் திருமாவளவன் கும்பலால் பிரச்சனை முளைத்து விட்டது.

வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மணிகண்டன் தன் அக்காவைப் பத்து நாட்களாகக் காணவில்லை என ஊர்ப் பெரியவர்களிடம் முறையிட்டிருக்கிறார். பறையர் சமூகத்து இளைஞனான சிவா என்பவனையும் காணவில்லை என்றறிந்த ஊர்ப் பெரியவர்கள்-

பறையர் சமூகப் பெரியவர்களை அழைத்து நமக்குள் இதுவரை எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை. இதனால் பிரச்சனை வேண்டாம். பெண்ணை ஒப்படைத்து விடுங்கள் என்று பேசி அனுப்பி இருக்கிறார்கள். அவர்களும் பெண்ணை ஒப்படைத்து விடுவதாகக் கூறிவிட்டு நேரே போலீஸ் ஸ்டே­னுக்குப் போய் எங்களை ஊர்க்காரர்கள் மிரட்டுகிறார்கள் பாதுகாப்பு கொடுங்கள் என எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். இது நடந்தது 24.8.2014 பகல். அன்று இரவே  25 போலீசார் காவலுக்கு வந்து விட்டார்கள்.

காவலுக்கு வந்த போலீசார் மணிகண்டனைக் கூப்பிட்டு-

உன் அக்காவைக் காணவில்லை என புகார்  கொடு என கேட்டு எழுதி வாங்கி இருக்கிறார்கள்.

இதற்கிடையில்-

அந்தப் பெண்ணுக்கும் அந்தப் பையனுக்கும் இடையிலான அந்தரங்க உறவுகளை வீடியோ படம்  எடுத்து செல்போன்களில் பரப்பி விட்டுள்ளனர்.

வன்னிய இளைஞர்கள் செல்போன்களுக்கு அந்த வீடியோ காட்சிகளை அனுப்பிவிட்டு -

நாங்க எவளோடும் படுப்போம். எவன்டா கேட்கிறவன். வாங்கடா மோதிப்  பார்ப்போம்  என வம்புக்கு இழுத்திருக்கிறார்கள். இதுவும்,

 வன்னியர் என்றால் அக்னி, அக்கினியை சிறுத்தை மூத்திரம் விட்டு அணைக்கும் விடுதலைச் சிறுத்தைகள் - திருமா

  என்று தலித் சுடுகாட்டில் அவர்கள் எழுதி இருந்த வாசகமும் வன்னிய இளைஞர்களைக் கொதிப்படைய வைத்திருக்கிறது. ஊர்ப் பெரியவர்களைக் கூட்டி இந்த அநீதியைத் தட்டிக் கேட்க வேண்டும் என்று இளைஞர்கள் கொதித்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ காட்சி தொடர்பாக சைபர் கிரைமில் வழக்கு தொடுக்கக் கூறி புகார் கொடுக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்கள்.

நிலைமை தீவிரமாவதை அறிந்த எதிர்த்தரப்பு -

வன்னியர் குடியிருப்புப் பகுதியை ஒட்டியுள்ள ராமலிங்கம் என்பவரது வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர், முந்திரி கொட்டைமூட்டை, முக்கிய  பாத்திர பண்டங்களை எல்லாம் எடுத்து வெளியே வைத்துவிட்டுக் குடிசைக்குத் தீவைத்து எரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்குள் காவல்துறை வந்து விட்டது.

பெரிய கலவரம் நடந்து விட்டதாகவும் வீடுகள் எரிக்கப்பட்டு விட்டதாகவும் எஸ்.பி., டி.எஸ்.பி., சர்க்கிள் இன்ஸ்பெக்டர் என எல்லோருக்கும் போன் போட்டு சொல்லி மறுநாள் காலையிலேயே நூற்றுக்கணக்கான காவல்துறையினர் வந்து குவிந்து விட்டனர்.

டி.எஸ்.பி. ஸ்ரீதரும் இன்ஸ்பெக்டர் ஆறுமுகமும்  தலித் சமூகத்தவர்கள். இவர்கள் தலைமையில் போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

ஓடிப்போன தலித் பையனின் சித்தப்பா வீரபாண்டியன் ஆசிரியர். இவர்தான் பொய்வழக்குப் போடுவது எப்படி என்று தலித் சமூக மக்களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருப்பவர். இவர் ஆள்காட்ட-

டி.எஸ்.பி. ஸ்ரீதரும், இன்ஸ்பெக்டர் ஆறுமுகமும் ஊருக்குள் புகுந்து -

தேடிப்போன ஆள் வீட்டில் இல்லை என்றால் வீட்டில் இருக்கும் பெண்களிடம் ஏட்டில் எழுத முடியாத வார்த்தைகளால் திட்டி  ஒம் புருசன் வந்தான்னா அந்த நாயை ஸ்டேசனுக்கு வரச்சொல்லுடி... வரலைன்னா உங்க ரேசன் கார்டுல இருக்குற எல்லாரையும் கே போட்டு உள்ள தள்ளி உங்க குடும்பத்தையே நாசம் பண்ணிடுவேன் என்று அராஜகம் செய்திருக்கிறார்கள்.

சக்கரவர்த்தி என்பவரின் மனைவி எழிலரசி (30). அவங்க வீட்டுக்குப் போன ஆறுமுகம்,  எங்கடி ஒம்புருசன் எனக் கேட்டிருக்கிறார்.  மரியாதையா பேசுங்க. எதுக்கு இப்படி பேசுறீங்க?” எனக் கேட்டிருக்கிறார்.

உனக்கு என்னடி மரியாதை? அவளை இழுத்துப் போட்டு மிதிங்கடா எனக் கத்தியிருக்கிறார் ஆறுமுகம். உடனே ஒரு போலீஸ்காரன் எழிலரசியை இழுத்துத் தள்ளி பூட்ஸ் காலால் எட்டி எட்டி உதைத்திருக்கிறான்.
பாமக ஒன்றியச் செயலாளர் தங்க. ராமசாமி. அவர் வீட்டில் இல்லை என்றவுடன் அவரது தம்பி பன்னீர்செல்வத்தை போலீஸ் வேனில் ஏற்றியிருக்கிறார்கள். முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மறைந்த கிருஷ்ணமூர்த்தி. அவரது மனைவி தனலெட்சுமி தற்போது அதிமுக மாவட்ட சேர்மேனாக இருக்கிறார்.

இவர்களது மகன் ராமச்சந்திரன் இவரையும் போலீஸ் வண்டியில் ஏற்றி இருக்கிறார்கள்.
தெருவில் இருந்த பெண்கள் திரண்டு வந்து போலீசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த பிறகே அவர்களை விடுவித்துச் சென்றிருக்கிறார்கள்.

இதன்பிறகு -

1.மணிகண்டன் - காணாமல் போன பெண்ணின் தம்பி
2.குழந்தைவேல் - பழம் காய்கறி வியாபாரி
3. வேல்முருகன் - .சி. டிப்ளமோ படித்துக் கொண்டிருப்பவர்.
4.சந்தோஷ் - காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்தவர். இடையாக்குறிச்சியில் கொத்தனார் வேலைக்கு வந்தவர்.
5.ரவிச்சந்திரன் - கலியபெருமாள்
6.தங்கமணி - ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்ப்பவர்.
7.வேல்முருகன் - ஊராட்சி மன்றக் கவுன்சிலர்

ஆகிய ஏழு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டார்கள். முதலில் தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்திலும்; ட்ரான்ஸ்பார்மரை நிறுத்தி விட்டு கலவரத்தில் ஈடுபட்டதாக இரண்டாவதாக ஒவ்வொருவர் பேரிலும் இரண்டு இரண்டு வழக்குகள்.

காவல்துறையின் பகல் கொள்ளை
30.8.2014 அன்று முதல் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் இடையாக் குறிச்சியில் தங்கி இருந்த ஏழெட்டு நாட்களில் - அந்த ஊர் வழியாகச் செல்லும் இருசங்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் மடக்கி -

ஹெல்மெட் அணியவில்லை; ஓவர் ஸ்பீடு; குடித்துவிட்டு வண்டி ஓட்டினாய் அது இது என்று எல்லா வண்டிகளிடமும் சகட்டு மேனிக்கு ரூ.500 வசூலித்தனர். இதன் மூலம் மொத்தம் 2 லட்சத்து ஐம்பதாயிரம் வரை வசூலித்து எங்கள் தாலியை அறுத்தார்கள் என்று ஊர்மக்கள் புலம்புகிறார்கள்.
பாமக மாவட்ட செயலாளர் வைத்தி வந்து பேசிய பிறகு, காவல்துறையின் அராஜகமும் வசூல் வேட்டையும் ஓரளவு குறைந்துள்ளது என்றும் சொல்கிறார்கள்.

சிறையில் அடைத்த பிறகே  இரண்டாவது வழக்கு  போட்டிருக்கிறது காவல்துறை.

ஒவ்வொருவருக்கும் இரண்டு  இரண்டு பெயில் பெட்டிசன்  போட்டு அவர்களை 15 நாட்கள்  கழித்து வெளிக்கொண்டு  வந்திருக்கிறார்கள்.

  கைதானவர்களில் -

பெண்ணைக் காணவில்லை எனப்  புகார் கொடுத்த பெண்ணின் தம்பி  மணிகண்டனையே கைது  செய்திருக்கிறது என்றால் இந்த  காவல்துறையின் என்ன  நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?

சந்தோஷ் கொத்தனார்  :  காட்டுமன்னார் கோவிலைச்  சேர்ந்தவர். இடையாக்குறிச்சியில்  கொத்தனார் வேலை செய்ய  வந்தவர். இரவு 9 மணிக்கு வேலை  முடிந்து ஓட்டலில்  சாப்பிட்டுக்  கொண்டிருந்தவரை -காவல்துறை கைது செய்திருக்கிறது. நான் இந்த ஊர் இல்லீங்க.. இங்கு வேலை செய்ய வந்தவன் என்று சொல்லியும் கேட்காமல் - வன்னியர் தானே.. எந்த ஊரா இருந்தா என்ன ஏறு வண்டியில என மிரட்டி ஏற்றி இருக்கிறார்கள்.

தேவேந்திரன்  :  சந்தையில் எல்லோரும் பொருள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது தலித் பெண் ஒருவர் இந்த பையன் என்னை பொருள் வாங்க விடாமல் தடுத்தான் என . பொருள்களை பை நிறைய வைத்துக் கொண்டே சொன்னவுடன் எந்த கேள்வியும் கேட்காமல் அந்த பையனையும் கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டது.

குழந்தைவேலு  :  3வது வார்டு ஊராட்சி மன்ற  உறுப்பினர். திருச்சி சென்று காய்கறி; பழங்கள் வாங்கி வந்து வியாபாரம் செய்பவர். வியாபாரி என்பதால் எல்லா போலீசுக்கும் பழக்கமானவர். அதிகாலையில் டாடா ஏஸ் வண்டியில் படுதா அவிழ்த்துக் கொண்டிருந்தபோது ஐயா கூப்பிடுறார் ஸ்டேசனுக்கு வா எனக் கூட்டிக்கொண்டு போய் வழக்கு போட்டு சிறையில் தள்ளி விட்டனர்.

வேல்முருகன்  :  .சி..டிப்ளமோ படித்துக் கொண்டிருக்கும் 20 வயது மாணவன். இளைஞன்.  பாலிடெக்னிக் பள்ளி விடுமுறை என்பதால் ஊருக்கு வந்தவன். வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். நான் எந்த பிரச்சனைக்கும் போகாதவன். படித்து முடித்து வேலைக்குப் போக வேண்டியவன். என் மீது வழக்குப் போட்டால் யார் வேலை தருவார்கள் என்று அழுத போது, நீயெல்லாம்  வேலைக்குப் போகக் கூடாது என்பதற்காகத்தானே உன்னை மாதிரி ஆட்களை கைது செய்திருக்கிறோம் என்று போலீஸ் அதிகாரியே கூறி இருக்கிறார்.

இத்தனை அராஜகமும் நடந்த பிறகு கோட்டாட்சியர் தலைமையில்  8.9.2014 அன்று அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார்கள். இத்தனை அராஜகங்களுக்கும் காரணமான காவல்துறை அதிகாரி டி.எஸ்.பி. ஸ்ரீதரும்; இன்ஸ்பெக்டர் ஆறுமுகமும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில்குடிசையை நாங்கள் கொளுத்தினோம் என வழக்குப் போடப்பட்டுள்ளது.

  கும்பலா போனவங்க -

ஒரு குடிசையை மட்டும் தான் கொளுத்துவாங்களா? அவங்க கேஸ் சிலிண்டர்; முந்திரிக் கொட்டை மூட்டை; பண்ட பாத்திரங்களா எடுத்து வெளிய வச்சிட்டா கொளுத்துவாங்க?” என்று ஒருவர் கேட்டவுடன்..

இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஒரு கான்ஸ்டபிளைப் பார்த்ததும் அவர் எழுந்து-
எரியும் வீட்டில் நுழைந்து நாங்கள் தான் அந்தப் பொருட்களை வெளியே கொண்டு வந்தோம் என்கிறார்.

அதனை மறுத்துச் சொல்ல வன்னியர் தரப்பில் ஒருவர் எழுந்தவுடன்.. போதும் போதும் நீ உட்கார் எனக் கூறிவிட்டு ஒரு தலித் இளைஞனைப் பெயர் சொல்லி அழைத்து நீ சொல்லு என்கிறார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்.

உடனே அந்த இளைஞன் கும்பலா வந்தாங்க; வீட்டைக் கொளுத்துனாங்க; வீடுகளை அடித்து நொறுக்குனாங்க எனக் கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பிக்கிறான்.

அதற்கு மறுப்பு சொல்ல ஒருவர் எழுந்தவுடன் நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். எங்களுக்கு எல்லாம் தெரியும். உட்கார் என முறைக்கிறார் டி.எஸ்.பி. ஸ்ரீதர்.

இப்படி -

அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் ஊர்தரப்பு நியாயத்தை சொல்ல விடாமல் தடுத்து போலீஸ் ஸ்டேசன் விசாரணை மாதிரி செய்து விட்டார்களே என்ற வருத்தம் இருந்தாலும்.

பிரச்சனை ஓய்ந்தால் போதும் என்ற எண்ணத்தோடு இரு தரப்பினரும் அவரவர் பணிகளை மேற்கொள்வது; ஒருவர் மற்றவர் பிரச்சனையில் தலையிடுவதில்லை என அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் எழுதிக் கையயாப்பமிட்டு வந்து விட்டோம்.


ஆனாலும் பிரச்சனை ஓயவில்லை.

ரேசன் கடைகளில் எங்களுக்குப் பொருள் கொடுப்பதில்லை என - அந்தக் கடைகளில் பொருள்  வழங்கும் பொருப்பிலிருக்கும் பணியாளர்கள் மீது வன்னியர் என்பதால் புகார் கொடுத்தார்கள். பதிவேடுகளையும் புகார் கொடுத்தவர்கள் ரேசன்  கார்டுகளையும் வாங்கிப் பார்த்துவிட்டு அதான் பொருட்கள் வாங்கியிருக்கிறீர்களே. எதற்கு இப்படி பொய்ப் புகார்களை கொடுக்கிறீர்கள் எனக் கேட்டுவிட்டு, ரேசன் கடை மேலதிகாரிகள் புகார்களைத் தள்ளுபடி செய்துள்ளனர். இதில் ரேசன் கடை ஊழியருக்கு எவ்வளவு மன உளைச்சல்?

பொய்ப் புகார் கொடுத்தவர்களுக்கு தண்டனை கொடுத்தால் ஒழிய இந்த தொல்லைக்கு முடிவு ஏது?
  * 

எங்களுக்கு கடைகளில் பொருட்கள் கொடுக்க  மறுக்கிறார்கள்... டீக்கடைகளில் டீ கொடுக்க மறுக்கிறார்கள் என புகார் கொடுக்கப்பட்டு 20க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் மீது சி.ஆர்.பி.சி. 107இன்  கீழ் வழக்குப் பதிவு செய்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.

இதுபற்றி ஊர் மக்களிடம் கேட்டபோது -

ஏற்கனவே தலித்துக்களுக்கு பொருள் கொடுத்த வகையில் கடைக்காரர்களுக்கு  2 லட்சம் ரூபாய் வரையில் பாக்கி இருக்கிறது. அதைக் கேட்டால் -

சாதியைச் சொல்லி திட்டியதாகப் பொய்ப்புகார் கொடுப்பார்கள்; விசாரிக்காமலேயே அதன்மீதும் தீண்டாமை வன்கொடுமை பொய்வழக்குப் போடுவார்கள் எனப் பயந்து சும்மா இருக்கிறோம்.

இதை வசூலித்து தரும்படி போலீசைக் கேட்டால் இதான் எங்க வேலையா என விரட்டுகிறார்கள்.

ஆனால் -

பொருள் கொடுக்க மறுத்தால் மட்டும் சி.ஆர்.பி.சி 107இன் கீழ் வழக்குப் பதிந்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். இது என்ன நியாயம்?

கொடுத்த பொருளுக்கு காசு கேட்டால் கூட காசா கேட்கிற? உன்னை என்ன செய்கிறேன் பார் எனச் சொல்லிவிட்டுப் போய் . பொருள் கொடுக்க மறுத்து விட்டார்கள் என பொய்ப்புகார் கொடுக்கிறார்கள்.

உண்மை என்ன என விசாரிக்காமலே போலீசும் எங்கள் மீது வழக்குப் பதிகிறது.

நாங்கள் எதற்குத்தான் அலைந்து சாவது?
  * 


  * 

     கடத்தப்பட்ட பெண்ணுக்கும் கடத்திய பையனுக்கும் இடையிலான அந்தரங்க உறவை வீடியோ படம் எடுத்து வெளியிட்டவர்கள் மீது சைபர் கிரைமில் நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்து ஒரு மாதம் ஆகிறது. அமைதிப் பேச்சு வார்த்தையில் நடவடிக்கை எடுப்பதாகச்   சொன்னதோடு சரி. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் அவர்கள் தரப்பு பொய்ப் புகார்கள் மீது மட்டும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சி.ஆர்.பி.சி 107இன்படி சம்மன் அனுப்புகிறார்கள். 
  * 
அவர்கள் தெருவிலேயே மளிகைக் கடைகள் இருக்கின்றன. டீ கடை இருக்கின்றது.

அங்கே போய் வாங்கிக் கொள்வது தானே. அதை விட்டு விட்டு-

வம்புக்கென்று இங்கே வருகிறார்கள். பொருள் கொடுக்க மறுத்துவிட்டார்கள் என பொய்ப்புகார் கொடுக்கிறார்கள்.

இப்படி இப்படி புகார் கொடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என ஸ்ரீதர் டிஎஸ்பியும்; ஆறுமுகம் இன்ஸ்பெக்டரும் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஊரின் அமைதி அழிந்து கொண்டிருக்கிறது.

அமைதியை அழித்துக் கொண்டிருக்கும் இந்தக் கள்ள வேலிகளை இங்கிருந்து அகற்றாமல் ஊர் அமைதி அடையாது.

- ஆசிரியர் குழு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக