வெள்ளி, 21 நவம்பர், 2014

சிலம்பூரில் ஐயனார் கோவிலை வைத்து கலவரத்தை உருவாக்க விடுதலைச் சிறுத்தைகள் சதி

சிலம்பூரில் 
ஐயனார் கோவிலை வைத்து கலவரத்தை உருவாக்க விடுதலைச் சிறுத்தைகள் சதி


மனிதனின்  நாகரிகத்தைப்போன்றே இறை வழிபாடும் பல்வேறு கால கட்டங்களில் மாறி வந்துள்ளது. ஆதிமனிதன் இயற்கையை வழிபட்டான். அடுத்து வந்தவர்கள் தங்கள் மூதாதையர்களையும், சிறு தெய்வங்களையும், தங்கள் குலத்துக்கு உரித்தான தெய்வங்களையும் வழிபட்டனர். சிறு தெய்வ வழிபாட்டில் போரில் வீர மரணம் அடைந்தவர்களையும், குடும்பத்தில் அகால மரணமடைந்தவர்களையும் தெய்வமாகக் கருதி வழிபடும் வழக்கமும் உண்டு.

காலப்போக்கில் எங்கும் நிறைந்த எல்லாவற்றையும் படைத்த பரம்பொருள் ஒன்றை கண்டுகொண்டு, அத்தெய்வத்தை வழிபடுவதற்கான வழிமுறைகளை முறைப்படுத்தினர். இப்படியாக பெருந்தெய்வ வழிபாடு பிறந்து வந்து நிலைத்துவிட்ட காலத்திலும்;
   சிறுதெய்வ வழிபாடும் மக்களின் வாழ்வியலோடு ஒன்றியதாக வளர்ந்து வந்தது.

மன்னர்கள் ஒரு நாட்டின்மீது படையயடுத்துச் செலலும்போது, தம் வெற்றியின் அடையாளமாக அந்த நாட்டு அரசகுலப் பெண்களை வாரிசுகளை, வீரர்களை சிறையயடுத்துத் திரும்புவது உண்டு.

அப்படி கொண்டு வரப்பட்டவர்கள் வந்த இடத்திலேயே தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். மன்னர்களால் இவ்விதம் நாடுவிட்டு நாடு கொண்டு வரப்பட்டவர்களுக்கு கொண்டி மக்கள் எனப் பெயர். பின்னர் இவர்கள் கொண்டியார் எனும் பெயரில் ஒரு
  சமூகமாகத் திரண்டனர். தமிழகத்தில் சென்னை, சேலம், விழுப்புரம், திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர் உட்பட பல மாவட்டங்களில் கொண்டியர் இன மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் எங்கே வாழ்ந்தபோதும் தம் குலதெய்வமான ஐயனாரை மறப்பதில்லை. அரியலூர் மாவட்டம், சிலம்பூர் கிராமத்தின் ஏரிக்கரையையயாட்டி அருள்பாலித்துவரும் கொண்டி ஐயனார், இவ்வின மக்கள் தேடிவந்து வழிபடும் ஆற்றல்மிகு தெய்வமாக விளங்குகிறார்.

இப்படித்தான் பூரணி பொற்கலையயன ஐயனார் எங்க காவல் தெய்வமானார். வீரனார், கருப்பையா, பச்சையம்மாள், முத்தையா இவங்களோடு சேர்த்து கருமுனி, செம்முனி, வேதமுனி, வாமுனி, நாதமுனி, முத்துமுனி, வேங்கைமுனின்னு ஏழு முனிகளும் தங்கள் ஐயனாருக்கு ஏவல் தெய்வங்களா இருக்காங்க" என்று நீண்ட வரலாறு சொன்னார்கள் அச்சமூகத்தின் தலைவர்கள்.

நீங்கள் என்னை வழிபட்டு எனக்கான பூஜைகளைச் செய்யுங்கள். நான் உங்கள் தேவைகளை நிறைவேற்றுகிறேன் என்பது போலுள்ளது கொண்டி ஐயனாரின் தோற்றம். ஐயனாருக்கு பணி செய்வதாக வேண்டிக் கொண்டவர்களுக்கு வெற்றிகள் வந்து சேரும், குறைவில்லா வாழ்வு கூடும் என்பது ஐயனார் அருள் பெற்றவர்களின் அனுபவப் பூர்வமான வார்த்தை.

விருத்தாச்சலம் - நெடுஞ்சாலையில், ஆண்டிமடத்திலிருந்து மேற்கே ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கொண்டி ஐயனார் கோவில்.
   பஸ், கார் முதலிய போக்குவரத்து வசதிகளுண்டு.

சென்னையில் எங்கள் இன மக்கள் குடியேறிப் பெருகிய இடமே கொண்டித்தோப்பு. இந்தக் கோவில் எங்கள் சமூகத்துக்குப் பாத்தியப்பட்டது. இங்கே கோவில் பூசாரியிலிருந்து கணக்கு வழக்குவரை எங்க சமூகத்தவங்கதான். மூத்தவரும் முன்னாள் மணியக்காரருமான சிதம்பரக் கொண்டியார் கோவிலை நிர்வாகம் பண்றார்." என்கிறார்கள் சிலம்பூர் பிரமுகர்களான சுயப்பிரகாசம், முத்துசாமி, வரதராஜன், சக்கரவர்த்தி, சசிக்குமார், செல்வராசு, சிங்கு, சுப்பு, ராமலிங்கம் ஆகியோர்.
சிலம்பூரில் கொண்டியார் இன மக்கள் போலவே வந்து குடியேறிய இன்னொரு குடி பல்லவராயர் இனமக்கள். ஊரின் மேல்பாதியில் பல்லவராயர் இன மக்களும், கீழ்பாதியில் கொண்டியார் இன மக்களும் வசிக்கின்றனர். இரு இனத்தாரும் மாமன் மைத்துனர் உறவுகொண்டாடி அன்யோன்யமாக வாழ்கின்றனர். பல்லவராய மக்கள் பெரிய நாயகியையும் ஓம் சக்தியம்மனையும் தம் குல தெய்வமாக வணங்குகின்றனர்.


கொண்டி இனமக்கள் அசைவம் சாப்பிடுவதில்லை. முன்பெல்லாம் பல்லவராய இனமக்கள் பெரியநாயகியம்மனுக்கு பலி, பூஜை நடத்தி படையலிடும்போது இவர்கள் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வர மாட்டார்களாம். இப்போது அதுபோல் இல்லையயன்றாலும், அசைவம் சாப்பிடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

சமீபத்தில் ஐயனாருக்கு கும்பாபிசேகம் நடத்தியிருக்கும் இம்மக்கள் கொண்டி இனத்தார் எங்கிருந்தபோதும் தங்கள் குல தெய்வத்தைத் தெரிந்து கொண்டு இங்கு வரும்படி அழைப்பு விடுக்கின்றனர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுமார் 200 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்


அமைதியாக இருக்கும் ஊர்களில் அமைதியைக் குலைத்து -
கலவரத்தை உருவாக்குவதன் மூலமே தங்கள் இன மக்களை ஒருங்கிணைத்து கட்சியை வளர்க்க முடியும் என்ற திட்டத்தோடு செயல்படுகிறது திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

அமைதியாக இருக்கும் சிலம்பூரை மட்டும் விட்டு விடுமா?

காலம் காலமாக சிலம்பூர் ஐயனார் கோவில் பராமரிப்பு; கோவில் விரிவாக்கம்; கோவில் பூசாரி என எல்லாமும் கொண்டியார் இன மக்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கிறது.

மற்ற
  சமூக மக்களுக்கும் இந்தக் கோவிலில் வழிபட வருவார்கள். அப்படி வரும் கொண்டியார் அல்லாத சமூகத்தவர்கள் கூட கொண்டியார் சமூகப் பூசாரி மூலம்தான் வழிபாடு செய்து கொடுக்கச் சொல்லிப் பிரசாதத்தைப் பெற்றுக் கொள்வார்கள்.

இப்படிப்பட்ட நிலையில்
கடந்த ஆடி மாதம் அதே ஊரைச் சேர்ந்த திருமாவளவன் கட்சியினர் இந்த ஐயனார் கோவிலில் எங்களுக்கும் உரிமை உண்டு எனக் கூறியதோடு ஐயனார் கோவிலின் உள்ளே கருப்புசாமி சிலை வைக்கப்போகிறோம் என அறிவித்து சாதி மோதலை உருவாக்க முயன்று வருகின்றனர்.

இதற்கு கொண்டியார் சமூக மக்கள் மட்டுமல்லாமல் - அந்த ஊரில் உள்ள எல்லா சமூக மக்களும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

உடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.

உண்மை நிலவரம் என்ன என்று தெரியாமலே ஊரில் உள்ள 14 பேர் மீது வழக்கு பதிந்துள்ளது காவல்துறை.

இந்த வழக்கை எதிர்த்து ஊர்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கப் போவதாக அறிவித்ததை அடுத்து -

நிலைமை விபரீதமாவதை உணர்ந்து ஜெயங்கொண்டம் கோட்டாட்சியர் கருணாகரன் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அந்த பேச்சு வார்த்தையின்போது கோவில் தங்கள் சமூகத்திற்கு மட்டுமே சொந்தமானது என்பதற்கான ஆதார ஆவணங்களை கொடுத்திருக்கின்றனர் கொண்டியார் சமூகப் பிரமுகர்கள். ஆவணங்களைப் பார்வையிட்ட ஜெயங்கொண்டம் கோட்டாட்சியர் கருணாகரன்.

கோவில் கொண்டியார் சமூகத்திற்கு மட்டுமே சொந்தமானது. அவர்கள் அனுமதித்தால் மட்டுமே நீங்கள் வழிபடலாம். அவர்கள் அனுமதிக்காவிட்டால் அதைமீறி நீங்கள் செல்ல உரிமை இல்லைஎன அறிவித்து -
எழுதி இரு தரப்பினரிடமும் கையயாப்பம் பெற்றுள்ளார்.

இதையயல்லாம் தெரியாமல் -

காவல்துறை சிலம்பூரைச் சேர்ந்த 14 பேர் மீது வழக்கு போட்டிருக்கிறது.

வன்னிய இன மக்கள் வாழும் ஊர்களைக் குறிவைத்து திருமாவளவன் கும்பல் சாதி மோதலை உருவாக்குவதை திட்டமிட்ட செயலாகச் செய்து
வருவதால் - வன்னிய இன மக்களும் மற்ற சமூக மக்களும் இதனை  சட்டபூர்வமான வழிகளில் எதிர்கொள்ள ஒற்றுமையாக இருப்பது அவசியம். 
  - சிவசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக