புதன், 24 டிசம்பர், 2014

கூலித் தொழிலாளி பழநியை சுட்டுக் கொன்றுவிட்டு உடலுறுப்புகளை வெட்டிச் சிதைத்த வனத்துறையினரின் கொடூரம்



கூலித் தொழிலாளி பழநியை
சுட்டுக் கொன்றுவிட்டு
உடலுறுப்புகளை வெட்டிச் சிதைத்த
வனத்துறையினரின் கொடூரம்

வீரப்பன் மரணத்திற்குப் பிறகு தமிழர்களுக்கு எதிராக கர்நாடக வனத்துறையினரின் அராஜகங்கள் நாளுக்கு நாள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன.

பாமக தலைவர் கோ.க.மணியின் சொந்த ஊரான கோவிந்தப்பாடி கிராமத்தை ஒட்டி கூப்பிடு தூரத்தில் உள்ள குக்கிராமம்தான் செட்டிப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த விவசாயக் கூலியான பழநியைத்தான் கர்நாடக வனத்துறையினர் சுட்டுக் கொன்று; அவரது உடல் உறுப்புகளை வெட்டிச் சிதைத்தும் தங்களது கோர முகத்தைக் காட்டி இருக்கிறார்கள் கர்நாடக வனத்துறையினர். தமிழர்களுக்கு எதிரான கர்நாடக வனத்துறையினரின் எல்லை மீறிய அராஜகத்திற்கான சமீபத்திய உதாரணம் இது.

இது குறித்துக் கள ஆய்வு செய்து விபரங்களைக் கண்டறிவதற்காக அச்சமில்லை ஆசிரியர் குழுவைச் சேரந்த பெ.பழநிசாமி; நீலமேகம்; காசிவிஸ்வநாதன்;  தமிழ்வாணன்; சுதாகர் ஆகியோர் 2.11.2014 அன்று செட்டிப்பட்டிக்குச் சென்று பழநியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு; மக்களிடம் விசாரித்து அறிந்து வந்த உண்மைகள் இங்கே பதிவாக்கப்பட்டுள்ளது.

*       

பழநி மீன் பிடிக்கப் போனபோது - காலையில் கிடைக்கும் மீன்களை விற்று தீபாவளிப் பண்டிகைக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வருவதாகக் கூறிச் சென்றிருக்கிறார். அடிப்பாலாறு என்பது கர்நாடக வனப்பகுதியை ஒட்டிய தமிழகப் பகுதி.

இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது - கர்நாடக வனத்துறையினர் திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பித்திருக்கிறார்கள். ராஜாவும் முத்துசாமியும் குண்டடி காயங்களோடு ஓடி தப்பித்து விட்டார்கள். பழநி மட்டும் வனத்துறையினரிடம் சிக்கிக்கொண்டிருக்கிறார்.

மறுநாள் -

செட்டிப்பட்டிக்குத் தப்பி வந்த  ராஜாவும் முத்துசாமியும்  நாங்கள் குண்டு காயங்களோடு தப்பிவிட்டோம்; பழநி என்ன ஆனார் என தெரிய வில்லை  என்று கிராமத்திற்கு சென்று சொல்லி இருக்கிறார்கள்.

பழநியின் மனைவி பேரதிர்ச்சியடைந்து தேட ஆரம்பித்திருக்கிறார். தீபாவளியன்றும்; மறுநாளும் எங்கு தேடியும் கிடைக்காததால் 23.10.2014 அன்று மாதேஸ்வரன் மலை காவல் நிலையத்தில் கணவனைக் காணவில்லை என புகார் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் -

24.10.2014 அன்று மாதேஸ்வரன் மலைக்கு அருகில் அடிபாலாறு பகுதியில் பழநியின் சடலம் கிடப்பதாகச் செய்தி வரவே -

பழநியின் குடும்பத்தினரும் ஊர் மக்களும் திரண்டு போய்ப் பார்த்திருக்கிறார்கள்.

கால் வெட்டி துண்டாக்கப்பட்டும்; ஆண் உறுப்பு வெட்டி எரியப்பட்ட நிலையில் பல வெட்டுக் காயங்களுடன் கிடந்த பழநி உடலின் கோரக் காட்சியைக் கண்டு கூட்டமே கொதித்து கதறியிருக்கிறது. இதற்குள் காவல்துறையினர் அங்கு வந்து சடலத்தை நெருங்க விடாமல் விரட்ட ஆரம்பித்துவிட்டனர்.

கர்நாடக வனத்துறையினரின் இந்த அராஜகத்தைக் கண்டு கொதித்துப் போன ஊர் மக்கள் - கர்நாடக சோதனைச் சாவடிக்குச் சென்று அதனைக் கொளுத்திவிடடு; வனத்துறை அலுவலகத்துக்குள் புகுந்து அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். வனத்துறை காவலர்கள் தப்பித்து சிதறி ஓடி இருக்கிறார்கள். நாங்கள் கிடைத்திருந்தால் எங்களையும் எரித்திருப்பார்கள் என்கிறார் ஒரு வனத்துறை அதிகாரி.

இவ்வளவு கொடூரங்களைச் செய்த வனத்துறை வெறி  நாய்களை எப்படி எரிக்காமல் தப்பிக்க விட்டார்கள்?’ என்பதே பழநியின் உடல் கிடந்த கோரத்தைப் பார்த்தவர்களின் கேள்வி.

இது குறித்துக் காவேரிபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தங்கவேலு :

பழநி;  ராஜா; முத்துச்சாமி மூன்று பேரும் விவசாயக் கூலி வேலைக்குப் போவாங்க. வேலை இல்லாதப்ப மீன் பிடிக்கப் போவாங்க.

அப்படி மீன் பிடிக்கப் போனவங்களைத்தான் - 
மான் வேட்டையாடினாங்கன்னு பொய் சொல்லி சுட்டுருக்காங்க. இதிலே பழநி மட்டும் அவங்க கையில சிக்கிக்கவே சித்திரவதை செய்து சுட்டுக் கொன்னுருக்காங்க. உடலில் பாய்ந்த குண்டுகளை எடுத்துவிட்டு நாங்க சுடலைன்னு சாதிப்பதற்காக  உறுப்புகளை வெட்டி குண்டை எடுத்துருக்காங்க. உயிர் நாடியையும் வெட்டி எறிஞ்சிருக்காங்க ஆவேசப்பட்டார்.

மான் வேட்டை ஆட வந்தவங்களை எங்க  ஆட்கள் விரட்டினப்ப; எங்க ஆட்களை அவங்க சுட்டாங்க. எங்க ஆட்கள் பதிலுக்கு சுட்டாங்க. ஆனா யாரும்  சாகலை. தப்பிச்சுட்டாங்க. இப்ப பிரச்சனையைத் திசை திருப்ப பழநியை நாங்க சுட்டுக் கொன்னுட்டதா பழி போடுறாங்கஎன்பது வனத்துறை அதிகாரிகளின் குற்றச்சாட்டு.

மீன்பிடிப்பு காரணமோ, மான்வேட்டை காரணமோ எது எப்படி இருந்தாலும்; ஒரு மனித உயிரை சுட்டுக் கொல்வதற்கு இதில் எதுவுமே போதுமான காரணமில்லை.

விவசாயக் கூலிங்க. வீடில்லாதவங்க. நிலமில்லாதவங்க. ஓலைக் குடிசை. அதுவும் மழைக் காலத்துல குடியிருக்க லாயக்கில்லாத ஓட்டைக் குடிசையில் வாழறவங்க. தினக்கூலி வந்தாத்தான் அடுப்பு எரியும். வறுமையின் உச்சத்தில் இருக்கும் இவர்கள் எங்கடா போவான் மான் வேட்டையாடும் துப்பாக்கிக்கு?

ஒரு ஏழையை சுட்டுக் கொன்னதுமில்லாம; உறுப்புகளை வெட்டி உடலை சிதைத்ததுமில்லாம இப்படி வேற பொய் பேசும் வனத்துறை நாய்களின் நாக்கை அறுத்தாலும் பாவமில்லை. எரிச்சுக் கொன்னாலும் பாவமில்லை என்ற எண்ணம் எழுகிறதே? அதை எப்படித் தடுக்க?

இந்த கொலைக்காக இந்த ஊர்க்காரரும் பாமக தலைவருமான கோ.க.மணி என்ன செய்தார்?
*       
உங்களுக்கு ஓட்டுப் போட்டு எம்.எல்.ஏ ஆக்கியவன். உங்கள் ஊர்க்காரன்; நெருங்கிப் பார்த்தால் சொந்தக்காரனாகக் கூட இருப்பான். அவனைச் சுட்டுப் பொசுக்கி; வெட்டி சிதைத்த வனத்துறை வெறிநாய்களுக்கு எதிராக கர்நாடக வனத்துறை  நடுங்க ஒரு போராட்டம்  நடத்த முடியாதா கோ.க.மணி உங்களால்?

இந்த வெட்கக்கேட்டால்தான் -

திருமாவளவன் கும்பல் பின்வரும் நாடகத்தை நடத்தியிருக்கிறது.

கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பழநி வீட்டுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றோம். இங்குள்ள கோவிந்தப்பாடி பாமக தலைவர் கோ.க.மணியின் சொந்தக் கிராமம். அங்கு எங்களை வழிமறித்த டி.எஸ்.பி ரவிக்குமார்; இந்த கிராமத்திற்குள் நீங்க வரக்கூடாது என்று வன்னியர்களும்; பாமகவினரும் கூறியிருக்கிறார்கள் என்றார்.

பாதிக்கப்பட்டவர் தமிழர். அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் செல்வோம் என்றோம்.

அதற்குள் ஊர் மக்களோடு சேர்ந்து வந்த பாமக ஒன்றிய செயலாளர் ஒருவர்; அண்ணா நாங்க அப்படி சொல்லவில்லை. இந்த அநீதியை உங்களால் மட்டும் தான் தட்டிக் கேட்க முடியும். எங்க வீட்டிலே தங்கி போராடலாம் வாங்கண்ணா என்று அழைத்துச் சென்றார்.
கடந்த ஒரு வருட காலமாக தமிழகம் முழுவதும் ராமதாசு செய்த தலித் வெறுப்புப் பிரச்சாரம் அந்தக் கட்சித் தலைவரின் சொந்த கிராமத்திலேயே உடைந்து போனதுஎன்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் ஊடகத் தொடர்பாளர் வன்னியரசு.

இது ஜூனியர் விகடன் வெளியிட்டிருக்கும் செய்தி.

கொளத்தூர் பாமக ஒன்றியச் செயலாளர் எம்.சி.மாரியப்பனிடம் உங்களால் மட்டும்தான் இந்த அநீதியைத் தட்டிக் கேட்க முடியும் என்று வன்னியரசிடம் சொன்னதாக ஜூவியில் செய்தி வந்துள்ளதே இது உண்மையா அப்படி யாரையும் நான் சந்திக்கவுமில்லை. அப்படி சொல்லவுமில்லை என்று மறுத்துவிட்டார்.

சரி விடுதலைச் சிறுத்தைகளின் பொய் நாடகத்தில் இதுவும் ஒரு காட்சி என்று விட்டுவிடுவோம். ஒரு பாமக செயலாளரே தன் வீட்டிலிருந்து போராட விடுதலைச் சிறுத்தைகளை அழைத்த பிறகும் - அவர் வீட்டிலிருந்து பழநிக்கு வீர வணக்கம் செலுத்தாமல்.

கன்னியாகுமரியில் செத்தவனுக்கு காஷ்மீரிலே போய் ஒப்பாரி வைத்தவன் கதையாக -

இறந்த பழநியின் செட்டிப்பட்டி கிராமத்திலிருந்து 90 கி.மீ. தொலைவிலிருக்கும்  ஈரோடு, வீரப்பன் சத்திரத்தில் போய் நின்று பழநிக்கு வீரவணக்கம் செலுத்தியது எதற்காக?

இந்தக் கேள்விக்கு வன்னியரசு விளக்கம் சொல்ல முடியாது என்பது நமக்குத் தெரியும்.

இந்தக் கேள்வியைக் கேட்காமல் இந்தச் செய்தியை ஜூனியர் விகடன் வெளியிட்டிருப்பதால் -

திருமாவளவனுக்கு இத்தகைய இலவச விளம்பரம் தர வேண்டும் என்பது ஒப்பந்த அடிப்படையிலானதா? இல்லை இது  paid  செய்தியா என்ற கேள்விகளை ஜூனியர் விகடனிடம் கேட்பது தவிர்க்க முடியாததாகிறது.

கோ.க.மணிகள் தூங்கினால் திருமாவளவன்கள் இப்படித்தான் நாடகங்கள் நடத்துவார்கள்.

-ஆசிரியர் குழு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக